Monday, August 25, 2008

குல்மால் (அ) டக்கால்ட்டீ

நேத்து ரொம்ப காண்டு ஆகிட்டீங்களா? "இன்னைக்கே இம்புட்டு அல‌ம்பல் பண்ணிட்டு நாளைக்கு மனச கல்லாக்கிட்டு வர சொல்லிட்டான்"னு நினைச்சீங்களா? அது சும்மா லுல்லலாய்க்கு. நான் காதல் காதல்னு போட்ட மொக்கை போதும்னு நினைக்கிறேன். இன்னைக்காவது ஒரு முக்கியமான விஷயத்தை பாக்கலாமே. வேற ஒண்ணும் பெருசா இல்லைங்க வாழ்க்கை தான். நிறைய நிகழ்வுகள் வாழ்க்கையை பசுமையா வெச்சிக்க உதவும். அதை பதிவா போட்டுக்கிடே இருக்காங்க கொஞ்ச பேரு அவர்களுக்கு நடந்த சுவாரசியமான விஷயங்களை நகைச்சுவையா பதிவிட்டிருக்காங்க. இன்னைக்கு கொஞ்சம் ஜாலியா சிரிக்கலாமே!

*

அருட்பெருங்கோ கவிதை படிச்சிட்டு இருந்திருப்பீங்க அவர் நல்லவர்னு நம்பிக்கிட்டு இருக்குறவங்க கண்ணை திறக்குற பதிவுங்க இது. அவர் கல்லூரியில அட்டகாசம் பண்ணதெல்லாம் பாவமன்னிப்பு கேக்குறா மாதிரி நிறைய பதிவு இருக்கு அதுல ஒன்னு தான்

ஆத்தா நான் Physics ல பாசாகிட்டேன்!!!

*

கல்லூரி நாட்களில் எப்பவும் ஒரு மொக்கைச்சாமி எல்லாருக்கும் சிக்கிடுவான் அவனை வெச்சே 4 வருசம் ஓட்டிடுவோம் அதுலையும் அவன் கொஞ்சம் கேணையனா இருந்துட்டா கேக்கவெ வேணாம் நம்ம போதைக்கு அவன் தான் ஊறுகாய். இங்க இவருக்கு சிக்குன கோழி செஞ்ச கதை எல்லாம் கோழியின் அட்டகாசம் என்கிற தலைப்புல எழுதி இருக்காரு. படிச்சி நாள் முழுக்க சிரிச்சேன். ஏனோ இதை போன வருசத்தோட நிறுத்திட்டார். மீண்டும் துவங்குமாறு கேட்டிக்கொள்ளுங்கள்.

*

நவீன்பிரகாஷையும் கவிஞரா பாத்திருப்பீங்க அவரோட கல்லூரி கால பதிவை அகழ்வாராய்ச்சி பண்ணி கொண்டு வந்திருக்கேன் உங்களுக்காக. இவரு பீர் குடிக்கிற பூனைங்கோவ்...

*

நம்மாளுங்களுக்கு குசும்புக்கு ஒன்னும் கொறச்சலே இருக்காதுங்க. எல்லாம் வாயிலையே வடை சுட்டு, காத்துலயே வெண்னை எடுக்குற குல்மால் பார்ட்டிங்க. இங்க ஒரு குல்மால் பார்ட்டி இருக்காரு என்னதான் பண்றாருன்னு எட்டி பாருங்க.

*

காமெடியன்னு சொன்னா உடனே அபி அப்பா தான் நியாபகத்துக்கு வருவாரு. மற்றவரை புண்படுத்தாமல் தன்னை வைத்தே நகைச்சுவையாக எழுதுவது என்னை கவர்ந்த அவரின் குணம். இது வரை அவரிடம் தொடர்பில்லை அதனால் இந்த தலைப்பின் கீழ் அவர் பதிவை இணைத்ததை தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ள வெண்டாம். அவரது பதிவில் நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு பதிவு "சங்கீதபூசனம் அபிஅப்பா". இந்த ரெண்டு வாரம் சீண்டாம இருந்தா ரொட்டிக்கு மேல வருமே அந்த பூசனமான்னு கேள்வி எல்லாம் இங்க கேக்காதீங்க அவரை போய் கேளுங்க.

*

கடைசியா நம்ம அக்கா இவங்க முன்னாடி பேமசா "அன்னைக்கு ஒரு நாளில்" அப்படின்னு அழைக்கப்பட்டார்கள். ஏன்னா நூடுல்ஸ் மாதிரி ஒரு நாள்ல பல விஷயங்களை பண்ணிடுவாங்க. ஒரு நாள் நான் (பாத்திங்களா எனக்கும் தொத்திக்கிச்சு :( ) அவங்க வலை பக்கம் போனா ஒரு நாள் ஜெயிலுக்கு போய்டோம்லன்னு ஒரு பதிவு போட்டிருந்தாங்க தூக்கி வாரி போட்டுச்சு. இதே மாத்ரி நிறைய ஒரே நாளில் பதிவுங்க இருக்கு போய் பாருங்க.

*

இது மாதிரி டக்கால்ட்டி பண்ணவங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க உங்களுக்கு பிடித்த டக்கால்ட்டி பதிவு இருந்தா பின்னூட்டமா போடுங்க. அதுக்காக என்னோட கல்லூரி கால கதைகளை சொல்லிடாதீங்கப்பு :) . நானும் டக்கால்ட்டி தான் ;)

இப்போதைக்கு எஸ் ஆய்க்கிறேன் அப்பாலீக்கா பாக்கலாம்.

நன்றீஸ் ஹை,
-ஸ்ரீ.

11 comments:

  1. பல பதிவுகள் ஏற்கனவே படிச்சிருந்தாலும், திரும்ப படிக்கறப்பவும் கலக்கலாத்தான் இருக்கு...

    ReplyDelete
  2. \
    காமெடியன்னு சொன்னா உடனே அபி அப்பா தான் நியாபகத்துக்கு வருவாரு.
    \

    :))

    ReplyDelete
  3. \
    மற்றவரை புண்படுத்தாமல் தன்னை வைத்தே நகைச்சுவையாக எழுதுவது என்னை கவர்ந்த அவரின் குணம்.
    \

    ஆமா...ஆமா...

    ReplyDelete
  4. \
    அதுக்காக என்னோட கல்லூரி கால கதைகளை சொல்லிடாதீங்கப்பு :) . நானும் டக்கால்ட்டி தான் ;)
    \

    அதுதான் எங்களுக்கு தெரியுமே...

    ReplyDelete
  5. டக்கால்ட்டி பண்ணவங்க லிஸ்ட்லே என்னையும் சேர்த்ததுக்கு நன்றி....
    இன்னும் கொஞ்சம் டக்கால்ட்டி பதிவுகள் கைவசம் இருக்கு....மீண்டும் அன்னிக்கு ஒரு நாள் அருணா ஆகுவோமில்லே!!!!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. பதிவுகள் அறிமுகம் நல்லா இருக்கு... :)

    ReplyDelete
  7. மிக்க நன்ற்றி ஸ்ரீ! என் பதிவினை பாராட்டியமைக்கும் லிங் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி!

    தமிழன் உங்களுக்கும் நன்றிப்பா!

    ReplyDelete
  8. @ தமிழன்

    டக்கால்ட்டின்னா அம்புட்டு புடிக்குமா?

    @ அருணா

    :)

    @ ப்ரேம்

    வாலே வாங்க நன்றி

    @ தமிழ் ப்ரியன்

    ரொம்ப டேங்க்ஸ்


    @ அபி அப்பா

    :D

    ReplyDelete