என்னடா! இது வம்பாப் போச்சேன்னு போய் கூப்பிட்டா, நீங்க மட்டும் தனியா எழுதறேங்கல்ல, நாங்க உங்க ஆட்டத்துக்கு வல்ல அப்படின்னு மக்கர் பண்ணர்றாங்க.
பெ அ: இனி மேல நாந்தான் அறிமுகப்படுத்துவேன்
சரி போடுண்ணா போடுறேன் தோப்புக்கரணம்ன்னு சொல்லி ஒத்து கிட்டேன் . அதனால இந்த பதிவு முழுவதும் மகளிருக்கு உரியது.
சி. அ : முதல்ல நாம அறிமுகப்படுத்தப்போறது ஷைலஜா ஆன்டியைத்தானேம்மா?
அவங்களேதான், கற்றது கை மண் அளவுன்னு அடக்கமா சொல்லற அவங்க எவ்வளவு பெரிய தத்துவங்களை எல்லாம் சொல்லறாங்க தெரியமா?
எண்ணிய முடிதல் வேண்டும்
சி. அ : இதுல இவங்க பூ, கடிகாரம், பஞ்சவர்ணக்கிளி அத்தனையும் அருமை. கண்ணன் பாடல்ல 100 பாடலை இவங்களும் பாடியிருக்காங்க அல்லம்மா?
பெ அ :ஆமா இவ்ங்க, KRS, குமரன் இவர்களோட கூட்டணி ஒரு நல்ல கூட்டணி.
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவவகை செய்தல் வேண்டும் "என்னுங்கற கொள்கையோட
எல்லோரடயும் சேர்ந்து தமிழ்ச்சங்கம் வேற நடத்துறாங்க.
ஒரு ஆச்சிரியமாக "காசேதான் கடவுளடான்னு "இவங்க
பல விதங்களில் எழுதி சேவை செய்யும் ஷைலஜாவிற்கு நன்றிகள்.
----------------------------
பெ. அ : துளசி டீச்சரைப் பத்தித்தான் நாம அடுத்து சொல்லணும் இது என்னோட ஆர்டர்.
சி அ: ஏம்மா அவங்க நெசமாவே டீச்சராம்மா? எந்த பாடம் நடத்தறாங்க?
பெ அ: ஆமா, அவங்க பெரம்ப எடுத்தா வலைப்பதிவர்கள் அத்தன பேருமே நடுங்குவாங்க
அதனாலதான் அவங்களுக்கு பேரு டீச்சர்.
சி. அ : அவங்க ஒரு யாணைத்தலைவி. இல்ல இல்ல தானைத்தலைவி. அவங்க யாணை , பூணை அனிமேஷன் அத்தனையும் சூப்பரோ சூப்பர், அதைப் பாக்கறதுக்காகவே நான் அவங்க பதிவை படிப்பனாக்கும்.
"நினைத்தது, கண்டது, கேட்டதுன்னு" எல்லாத்தையும் நகைச்சுவையா தன்னோட துளசி தளம் வலைப்பூவுல எவ்வளவு அருமையா எழுதுறாங்க துளசி கோபால் அம்மா.
இந்த அம்மா எப்படி இவ்வளவு நகைச்சுவையா எளிமையா எழுதறாங்கண்ணு ஆச்சிரியப்பட வைக்கற எழுத்து அவங்களோடது.
பெ. அ : இவரோட ஒரு நல்ல குணம், எந்த புதிய பதிவர் எழுதுனாலும் அதைப்படிச்சு பார்த்துட்டு அதுல பின்னூட்டமும் இட்டு அவங்கள் உற்சாகப்படுத்தறதுதான்.
சி. அ : எல்லாருக்கும் புதுப் புது பேரு கொடுக்கறதுல இவங்க சூப்பர் இல்லம்மா?
ஆமாம்மா ஊர் ஊரா இல்ல நாடு நாடா சுத்தற (உலகம் சுற்றும் வாலிபி) இவங்க அங்க கிடைக்கற காய்கறி, பழம், பூன்னு எல்லாத்தையும் சூப்பரா போட்டோ எடுத்து தன்னோட வலைப்பூல போட்டு அருமையா புதுப் புது பேரும் கொடுத்து கலக்கறாஙக.
பெ அ : அப்ப துளசி டீச்சரோட சேவை நம்ம அனைவருக்கும் தேவைன்னு சொல்லறீங்களா?
இன்னும் இவங்களோட பெருமைகளை சொல்லிகிட்டே போகலாம் ஆனாலும் மத்தவங்களைப்பத்தியும் சொல்லனுமல்ல அதனால அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு அடுத்தவருக்கு போகலாமா?
சரி சரி
------------------------------------------
சி. அ : அடுத்தவங்க நாச்சியார் அம்மா. திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரோட பேரையே தன்னோட புணைப்பெயரா வெச்சிருக்கற இவங்க தன்னோட வலைப்பூவுக்கு வில்லிபுத்தூர் ஸ்ரீ ன்னு பேர் வெச்சிருக்காங்க இல்லம்மா?
ஆமா "வருகை தரும் புதியவர்களுக்கும் வந்தவ்ர்களுக்கும் நன்றின்னு" சொல்லி அருமையான எளிமையான எழுத்தால மகிழ்விக்கறாங்க இவங்க.
பெ அ: இவங்க எழுத்து ரெம்ப சிம்பிளாத்தான் இருக்கும், ஒவ்வொரு நிகழ்வுகளையும் இவங்க சொல்லுற அழகே அழகு.
நிழலின் அருமை,காலைக் காற்று, சூழும் இசை என்றும் வேண்டும்ன்னு இவங்க அசைபோடுற அனைத்துமே அருமை.
தங்களுக்கும் நன்றி வல்லி சிம்ஹன் அம்மா.
-------------------------------------------
ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம்
பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர்
ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸ’வோம்.
This face, faces upward and so it is difficult to witness this face from ground during the parikrama. This picture is the photo taken from helicopter.
ஐயனின் தரிசனம் கண்டோம் அம்மையின் தரிசனமும் வேண்டுமல்லவா, அன்னை கிரி ராஜ குமாரி, பர்வத ராஜ புத்ரியின் கர்ப்பகிரகம் தான் டோல்மா கணவாய் , யாத்திரையின் மிகவும் உயரமான இடம். திபெத்திய கொடிகளால் சூழப்பட்டுள்ளாள் அன்னை பார்வதி.
இந்துக்களுக்கு டோல்மா, சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ கன்யை பார்வதி தேவி, திபெத்தியர்களுக்கு அவர்களுடைய காவல் தெய்வம் தாரா தேவி.
சிவசக்தி ஸ்தலம் டோல்மா கணவாய்
Dolma Pass is the highest point in the whole yatra. It is also called as Shiv Sakthi sthal. This is considered to be the sanctum santorum of the Lord and Mother. Dolma is Tara Devi for Tibetians and Parvati for Hindus. We worship mother here. It is also the difficult point in the whole of Parikrama. Our group was lucky that we stayed here for around 30 minutes and did havan by Her Grace, as the weather was extremely good.
மூவர் சார்பிலும் நன்றி கைலாஷி.
ReplyDeleteபடங்கள் அற்புதம். வானவில்லே வந்து இறங்கினாப்போல் இருக்கே!!!!
எம்பெருமானின் தரிசன்ம் கண்டு தாங்கள் எல்லா நலங்களும் பெற வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteபூவையர் மூவரை அருமையாக அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை -- இப்பதிவு தேவையான ஒன்று.
ReplyDeleteநல்வாழ்த்துகள் கைலாஷி
இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லைதான் - ஆகவே இவர் புகழ் பாடியுள்ளேன்.
ReplyDeleteஇவர்கள் எல்லாம் நான் பார்த்து வியக்கும் சில பூவையர்கள் அதற்காகத்தான் இப்பதிவுகள்.