"இறைவா அனைவரையும் காப்பாத்துண்ணு"
சி. அ : அதுல வர பட்டாம்பூச்சி சூப்பரா இருக்குதல்லப்பா.
பெ அ: அதுவுவல்லாம மழலை உலகம் ங்கற வலைப்பூவுல குழந்தை வளர்ப்பு பத்துன நல்ல செய்திகளை சேகரிச்சு கொடுக்கறாங்க.
சி. அ : மழலை உலகத்துல தலைப்புப்படம் சிறப்பு.
அப்ப நல்ல சேவை செய்யறாங்கண்ணு சொல்லறீங்களா
பெ. அ: உண்மையிலேயே அருமையான சேவைதான்.
அன்புத்தோழியே உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.
---------------------------------------
பெ அ: வலைச்சரத்தில் புயலாக வீசிய ஒரு தென்றல்தான் புதுகைத்தென்றல் அம்மிணி.
சி அ: ஒரு வாரத்துல வலைச்சரத்துல 45க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதி ஒரு பெரிய சாதனையே செய்திருக்காங்க இந்த ஆன்ட்டி.
"வீசும் போது நான் தென்றல் காற்று", "காற்றுக்கென்ன வேலின்னு" வீசுற இவங்க பெண்களூக்கு மிகவும் வேண்டிய Husbandologyல கணவனை எப்படி கைக்குள் வைத்துக் கொள்றதுன்னு சொல்லித்தர அன்பு உள்ளம் கொண்டவங்க.
பெ அ : இவங்களோட வலைப்பூக்கள் ஏராளம் அதுல ஒன்னுதான் புதுகைத்தென்றல்/
பேரன்ட்ஸ் கிளப்ல
நந்து f/o நிலா
இவங்களோட சேர்ந்து குழந்தை வளர்ப்பது எப்படின்னு இவங்களும் சொல்லித்தர்றாங்க.
இன்னும் நன்றாக தென்றல் வீசிட வாழ்த்துக்கள்
-----------------------------------------
சி. அ: அடுத்த நாம பார்க்கப்போற பதிவர் இனியவள் புனிதா ஆன்ட்டி.
பெ.அ : கவிதைகளை மழையாக பொழிகின்றார் இவர். அனைத்தும் உருக்கமான கவிதைகள்.
"நினைவுகள் என்றும் மனதின் பாரங்கள்" என்று என்று இயம்பும் இவர், அந்த ஈரமான நினைவுகள், மயிலிறகாய் வருடிய, தென்றலாய் தழுவிய, மின்னலாய் தீண்டீன என்கிறார்.
ஜில்லென்று ஒரு மலேசியா இவருடைய மற்றொரு குழுப்பதிவு இவருடன் சேர்ந்து மலேசியாவை நமக்கு அறிமுகப்படுத்தும் மண்ணின் மைந்தர்கள்
VIKNESHWARAN"
::மை ஃபிரண்ட் ::
மற்றும் துர்கா அவர்கள் ( இவர் அறிமுகம் கிட்டவில்லை)
பெ அ: இதிலிருந்தே இவர் கவிதைகள் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று அனைவரும் உணரலாமே.
அப்பாவுக்காக என்று இவர் இயற்றிய கவிதை சூப்பர்.
சி. அ: கவிதை மட்டுமல்ல , அக்கவிதைகளுக்கு இவர் போடற படங்களும் சூப்பரோ சூப்பர்.
எங்கிருந்து இவ்வளவு அருமையான படங்களை இவர் தரவிறக்கம் செய்கின்றார் என்று கேட்கத் தோன்றுகிறது.
சி. அ : இவரின் கவிதை ஒன்றை தருகின்றோம் சாம்பிளாக
கொஞ்சும் தமிழே
உன்னிடன் கெஞ்சும்...
மிஞ்சும் உன் அழகை - நல்ல வேளை
கண்ணதாசன் பார்க்கவில்லை
இல்லை
உன் தாசனாகி போயிருப்பான்.
----------------------------------------------
இப்பதிவில் வ்டக்கு மற்றும் கிழக்கு முகம் இனைந்த கோலத்தையும் பிரம்மா தன் மனதிலிருந்து உருவாக்கிய மானசரவோர் ஏரியின் சில தோற்றங்களையும் தரிசனம் செய்யுங்கள் அன்பர்களே.
திருககயிலாய தரிசனம் கண்டு மானசரோவரில் நீராட 21 தலைமுறையினர் முக்தி பெறுவர் என்பது ஐதீகம்.
Waves sparkling like diamond during noon
மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.
பெண் பதிவர்களை அறிமுகப் படுத்தும் விதம் அருமை. இனியவள் புனிதாவின் பதிவிற்கு சுட்டி கொடுக்கலாமே !
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நன்றி சீனா ஐயா, சரி செய்து விட்டேன் தவற்றை. மறுபடியும் பாருங்கள் ஐயா.
ReplyDelete