காலையில் வந்த உடனேயே அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் வாஷிங்டன் மியூட்சுவல்ஸ் வங்கியை ஜெ.பி மார்கன் வாங்கியதால் தான் இந்த பரபரப்பு.
ஒரு உயரதிகாரி எனும் முறையில் காலையிலிருந்தே விவாதங்களும், என்ன நடக்கும் எனும் ஊகங்களும், தேவையற்ற மீட்டிங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இன்றைய பொழுது வலைத்தளம் பக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்பதால்,
ஒரு வாரத்தை முழுமையாய் பயன்படுத்த முடியவில்லையே எனும் வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும்,
மனதுக்கு திருப்தி தரக்கூடிய நான்கைந்து பதிவுகளையேனும் தர முடிந்த மகிழ்வுடன் விடைபெறுகிறேன்.
இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்களுக்கும், வருகை புரிந்து ஊக்கமளித்த, வருகை புரியப் போகிற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் ஒரு வாய்ப்பில் சந்திப்போம்.
பிரிவு என்பதே
உறவுக்காகத் தான்,
ஆரம்பப் பாடம்
கருவறை வாசலிலேயே
கண்விழிக்கிறதே.
அன்புடன்
சேவியர்
me the first?
ReplyDelete//நான் பணிபுரியும் வாஷிங்டன் மியூட்சுவல்ஸ் வங்கியை//
ReplyDelete:((((
ஆண்டவனிடம் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
அருமை நண்பர் சேவியர்
ReplyDeleteபணி தான் முக்கியம் - வலைச்சரம் அப்புறம் தான் - ஒரு வார காலம் பல அருமையான படைப்புகளைத் தந்திருக்கிறீர்கள் - கவலை வேண்டாம்
எல்லாம் நல்ல படி முடிய நல்வாழ்த்துகள்
நன்றிகளும் வாழ்த்துக்களும் சேவியர் அண்ணன்....
ReplyDelete