Tuesday, October 14, 2008

மீண்டும் ஒரு முறை!!

அது ஆட்டத்தின் முக்கியமான கட்டம். அந்த கோல் தான் அந்த அணியின் எதிர்காலத்தையும் அவனுடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது.
சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அட்வைஸ். இத்தனைக்கும் அவன் தான் அந்த டீமின் பீலே என்று பெயர் வாங்கியவன். பல புதியவர்களின் வருகையால் தனது முழுத் திறமையையும் காட்டவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.

எதிர்பாராமல் கிடைத்தது தான் அந்த பெனால்டி ஷாட். கோல் போஸ்டின் நடுவே எதிர் அணியின் கோல் கீப்பர் நின்று கொண்டிருக்கிறான். அவனையும் தாண்டி உள்ளே செல்லவேண்டும் அவன் உதைக்கும் பந்து. பெனால்டி ஷாட்டில் அவனது திறமை அறிந்தே மொத்த அணியினரும் அவனை தேர்வு செய்திருந்தனர். அந்த கோலை போடவில்லை என்றால் அந்த தகுதி சுற்றிலேயே அந்த அணி வெளியேற வேண்டும்.

நொடிப்பொழுதில் சில கணக்குகள் போட்டான் அவன். பொதுவாக மனிதர்கள் வலது பக்கத்தில் உறுதியானவர்கள். கீப்பரின் இடது பக்கத்தை பயன்படுத்தி கொண்டால் இந்த கோலை போட்டுவிடலாம். இருப்பினும் அவனை திசை திருப்ப அந்த வலது பக்கத்தில் அடிப்பது போல் பாவனை செய்ய வேண்டும். அவன் அறிந்த பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.

கோல் கீப்பர் பாலை தடுக்க அவனது வலது பக்கத்தில் பறந்தான்.

பந்து அவனுக்கு போக்கு காட்டி விட்டு இடது பக்கத்தில் பறந்தது.

அது கண்டிப்பாக கோல் தான் என்று எதிர்பார்த்து அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தனர்.

பந்து பறந்து சென்று இடது பக்க கோல் போஸ்டில் அடித்தது

பந்து உள்ளே செல்லாமல் வெளியே பாய்ந்தது.

எல்லோரும் அவனை பூச்சியை பார்ப்பது போல் பார்த்து சென்றனர்.
அவனால் அவமானத்தில் அங்கே நிற்க முடியவில்லை.
எந்நேரமும் கண்ணில் அணை ஒடிந்து வெள்ளம் பெருக்கேடலாம் என்பதை உணர்ந்தான்.

தனி அறையில் வாய் விட்டே கதறினான்.

கடவுளே உன்னை எவ்வளவு நம்பினேன். என்னை கை விட்டு விட்டாயே.

உணர்ச்சி பெருக்கில் அருகில் இருந்த கத்தியை எடுத்து கை வெட்டி கொள்ள போனான்.

தீடிரென்று அந்த குரல்

"மகனே"

யார் அது?

நான் தான் கடவுள்!

எதற்காக வந்தீர்கள், நான் சாவதை பார்ப்பதற்கா!

இல்லை, இன்னும் வாழ்வு உண்டு என்று சொல்வதற்காக!

இனிமேல் என்ன வாழ்க்கை, எல்லாம் தொலைந்து விட்டதே!

அப்படி நினைக்காதே, வேண்டியதை கேள்!

மீண்டும் நான் அங்கே செல்ல வேண்டும்!

எங்கே?

அந்த கோலை நான் மறுபடியும் போட வேண்டும்!.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

என்ன?

ஏற்கனவே நீ அந்த முயற்சியை செய்திருக்கிறாய் எனற ஞாபகம் உனக்கு இருக்காது!

பரவாயில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடியும்!

சரி உன் ஆசை படியே நடக்கும்!


இப்போது மீண்டும் நீங்கள் பதிவின் முதல் பத்திக்கு செல்லலாம்

12 comments:

  1. அருமையான கதை வால்.. எப்படி எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க???

    ReplyDelete
  2. ஸ்டாக் மார்கெட்ல இன்வெஸ்ட் பண்ணினவனுங்கள பத்தி இல்லையே இந்த ஸ்டோரி?? :))))

    ReplyDelete
  3. தலைவா, நல்லா இருக்கு. சுஜாதா இதே போல ஒரு கதை எழுதி இருப்பதும் ஞாபகம் வருகிறது.

    @ வெண்பூ

    //ஸ்டாக் மார்கெட்ல இன்வெஸ்ட் பண்ணினவனுங்கள பத்தி இல்லையே இந்த ஸ்டோரி?? :))))//

    ரொம்பதான் குசும்பு உனக்கு. அவனவன் நொந்து நூலாப் போயிருக்கான்.

    அனுஜன்யா

    ReplyDelete
  4. //
    @ வெண்பூ

    //ஸ்டாக் மார்கெட்ல இன்வெஸ்ட் பண்ணினவனுங்கள பத்தி இல்லையே இந்த ஸ்டோரி?? :))))//

    ரொம்பதான் குசும்பு உனக்கு. அவனவன் நொந்து நூலாப் போயிருக்கான்.

    அனுஜன்யா
    //

    ஹி..ஹி.. இது சொந்த கதை சாரி நொந்த கதை.. நானெல்லாம் என்னோட போர்ட்ஃபோலியோவோட வேல்யூ பாக்கறத நிறுத்தியே ரொம்ப நாளாச்சி.. :(((

    ReplyDelete
  5. நன்றி வெண்பூ
    எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்
    ஸ்டாக் மார்கெட் பத்தி கடவுளுக்கே வேற ஃபியூச்சரும் இல்லை ஆப்சன் இல்லை!
    அவருக்கே ஆப்பு தான்

    நன்றி அனுஜன்யா
    இருக்கலாம் சுஜாதா தானே இம்மாதிரியான கதைகளுக்கு முன்னோடி

    ReplyDelete
  6. கலக்கல் தல.(கட்டிங்க கலக்குறத சொல்லல..கதயச் சொன்னேன் :)

    ReplyDelete
  7. நன்றி விஜய் ஆனத

    நன்றி அப்துல்லா அண்ணே

    ReplyDelete
  8. என்ன எழுதுவது என்று தெரியாமல் முழி பிதுங்கி....பழைய கதைகளை உல்டா பண்ணி எழுதுவது என முடிவுக்கு வந்தச்சு போல...

    ReplyDelete
  9. திறமையான சிந்தனை...

    ReplyDelete
  10. வால்பையனுக்கு வணக்கம்...
    வசந்தகுமாரின் சுட்டி மூலம் இங்கே வந்தேன்.வால்பையன் கதை எழுதுகிறாரா எனஒரு டவுட். ஏன்னா.. தமிழ்மணத்துல வேற பிரச்சினையிலதான் உங்க பேரப் படிச்சுருக்கேன்.இப்போதான் கதைபடிக்கிறேன்.
    கதை நல்லா இருந்ததுங்க.இதுவே நல்லாத்தான் இருக்கு.மத்ததெல்லாம் தேவை இல்லை.

    ReplyDelete