Thursday, October 16, 2008

இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்

நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது அதனால் எதுவும் எழுத முடியவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதிற்கு தான். இன்று ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று யோசித்த போது தோன்றியதை இங்கே கொட்டி விடுகிறேன்.


அது இருத்தலின் ரகசியம்

இது தொலைதலின் ஏக்கம்

அது இயல்பின் உண்மை

இது நிறம் மாறும் தன்மை

அது வெற்றிடமாய் நிரம்பிகிறது

இது வெற்றிடத்தை நிரப்புகிறது

அது இயல்பின் உச்சகட்டம்

இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
நம் வாழ்க்கையை போல





இது சும்மா

தோன்றலில் தோற்ற பிழை தோன்றுமாயின்
புரிதலின் புரியாமை நன்று

20 comments:

  1. வாழ்த்துக்கள் வால் & பிளீச்சிங்:)))))

    ReplyDelete
  2. //நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது அதனால் எதுவும் எழுத முடியவில்லை. //

    //அது இருத்தலின் ரகசியம்

    .....

    அது இயல்பின் உச்சகட்டம்

    இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
    நம் வாழ்க்கையை போல ///

    ஆண்டவா தினம் மழை பெய்யட்டும்!!!

    ReplyDelete
  3. //நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது அதனால் எதுவும் எழுத முடியவில்லை. ///

    //அதுவும் ஒரு வகையில் நல்லதிற்கு தான்./// இதையும் நீங்களே சொன்னா எப்படி அதை நாங்க சொல்லனும்.

    ஒருவகையில் இல்லை பலவகையில் எங்களுக்கும் நல்லதுதான்

    ReplyDelete
  4. அன்று பெய்த மழையில் - ஒரு கவிதை ப்ளீஸ்

    ReplyDelete
  5. //இது வெற்றிடத்தை நிரப்புகிறது

    அது இயல்பின் உச்சகட்டம்//

    இதைப்படிப்பது கொடுமையின் உச்சகட்டம்

    ReplyDelete
  6. //இது சும்மா

    தோன்றலில் தோற்ற பிழை தோன்றுமாயின்
    புரிதலின் புரியாமை நன்று//

    இது நிஜம்

    மழையால் இப்படி கவிதை தோன்றுமாயின் மழை பெய்தலின் பெய்யாமை நன்று

    ReplyDelete
  7. ஆண்டவா! வால்பையனிடமிருந்து எங்களை காப்பாற்று! ப்ளீச்சிங் பவுடரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!!;-))

    ReplyDelete
  8. //
    நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது
    //
    அதுவுமா?

    //
    அதுவும் ஒரு வகையில் நல்லதிற்கு தான்
    //
    எங்க நல்லதுக்குன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க..

    //
    இன்று ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று யோசித்த போது
    //
    மறுபடியும் அகலப்பட்டை மட்டையாயிடுச்சா?

    //
    இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
    //
    இல்லியே.. ரொம்ப நாளாவே நீங்க நல்ல பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்துட்டுதானு இருக்குறோம்.. :)))

    ReplyDelete
  9. அகலப்பட்டைதான படுத்துகிச்சி....டாஸ்மாக் தொறந்துதான இருந்திச்சி???அப்புறம் ஏன்ன்ன்ன்????

    ReplyDelete
  10. //குசும்பன் said...
    வாழ்த்துக்கள் வால் & பிளீச்சிங்:)))))//

    நல்லதந்தி பக்கிளுக்கை விட்டுடிங்களே

    ReplyDelete
  11. அட இதுதான் பின் நவினத்துவம் என்பதா???
    எனக்கு இத்தனை நாள் தெரியம போச்சே...

    ஒண்ணுமே புரியலயே...

    ReplyDelete
  12. //Blogger குசும்பன் said...
    வாழ்த்துக்கள் வால் & பிளீச்சிங்:)))//

    இத பாருங்களேன்

    ReplyDelete
  13. //கோவி.கண்ணன் said...
    அன்று பெய்த மழையில் - ஒரு கவிதை ப்ளீஸ்//

    இப்போ குசும்பன் அவுத்த ட்ரவுசர் இன்னும் செட்டாகவில்லை
    அதற்குள் அடுத்ததா

    ReplyDelete
  14. யோசிப்பவரே

    ஹரியும் சிவனும் ஒண்ணு
    அறியாதவங்க .................

    ReplyDelete
  15. //ரொம்ப நாளாவே நீங்க நல்ல பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்துட்டுதானு இருக்குறோம்.. :)))//

    எதிர்பாராமல் கிடைப்பது தானே இரட்டை இன்பம்!
    விரைவில் கிடைக்கும்

    ReplyDelete
  16. //விஜய் ஆனந்த் said...
    அகலப்பட்டைதான படுத்துகிச்சி....டாஸ்மாக் தொறந்துதான இருந்திச்சி???அப்புறம் ஏன்ன்ன்ன்????//

    இது உங்களுக்கு புரியலைனாலும் எனக்கு புரியுது
    டாஸ்மாக் போனா எனக்கே புரியாது

    ReplyDelete
  17. நன்றி கூடுதுறை
    இது நடு நவீனத்துவம்

    ReplyDelete
  18. வால்த்துக்கள்
    வால் :)))

    ReplyDelete