அன்பின் சக பதிவர்களே !
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
கடந்த ஒரு வார காலமாக சகோதரி அருணா - அருமையாக அழகாக பதிவுகள் இட்டு விடைபெற்றிருக்கிறார். அவர் இட்ட பதிவுகள் மொத்தம் இருபத்து நான்கு. அதிக பட்ச பதிவுகள் இட்ட பட்டியலில் பெருமையுடன் இடம் பெறுகிறார். பெற்ற மறுமொழிகளோ நூற்று இருபத்தி ஐந்து . இன்னும் மறு மொழிகள் வரும். அறிமுகப்படுத்திய பதிவர்களோ எழுபத்தி இரண்டு. அவர் வசிக்கும் ஊரான ஜெய்பூரையும் அதிலுள்ள முக்கிய இடங்களையும் அழகான பளிச்சென்ற புகைப்படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் அறிமுகப் படுத்தி உள்ளார்.
கொடுத்த பணியினை செவ்வனே செய்து - இன்னும் இருக்கிறதே நேரம் போத வில்லையே என ஆதங்கத்துடன் விடை பெறுகிறார்.
அவருக்கு வலைச்சரம் சார்பினில் நன்றியினைத் தெரிவித்து நல்வாழ்த்துகளுடன் விடை அளிக்கிறோம்.
-------------------------------------------------------
அடுத்து இவ்வாரம் - 27ம் நாள் தொடங்கும் வாரம் - தீபத் திருநாள் தொடங்கும் வாரம் - ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அருமை நண்பர் புதுகை அப்துல்லா. கடந்த ரமழான் தினத்தன்று ஜோசப் பால்ராஜ் என்னும் கிருத்துவ நண்பர் ஆசிரியராக இருந்தார். சென்ற கிருஸ்துமஸ் சமயத்தில் ஒரு இந்து நண்பர் ஆசிரியராக இருந்தார். இப்பொழுது தீபாவளி சமயத்தில் ஒரு இசுலாமியத் தோழர் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா !
அப்துல்லா புதுக்கோட்டையைச் சார்ந்தவர். சென்னையில் வசிப்பவர். ஒரு ஆண்டிற்கு அறுநூறு கோடி வணிகம் செய்யும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். வலது கை கொடுப்பது இடது கை அறியக்கூடாதென்பதில் குறியாக இருப்பவர்.
அருமையான வலைப்பூவினில் அருமையான பதிவுகள் இடுபவர். இவரை வரூக வருக என வலைச்சரம் சார்பினில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகளுடன் .... சீனா ... Cheena
நன்றி சீனா அவர்களே...
ReplyDeleteவாழ்த்துக்கள் அப்துல்லா...
அன்புடன் அருணா
நன்றி அருணா...
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே!!!ஆவலோடு காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் !
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !