உலக சினிமா ஒன்றைக்காணவேண்டுமா என்று கேட்டுள்ள
சுரேஷ் கண்ணனின் பதிவுகளுக்கு நான் ரசிகன்.
TSOTSI என்ற படத்தின் பார்வையை மிகவும் அழகாக, நிதர்சனங்களுடன் சொல்லி-ஒரு வன்முறையாளனின் குழந்தைமை என்ற தலைப்புடன் கூறியிருக்கிறார்.
சத்யஜித் ரேயின் நாயக் படத்தைப்பற்றி ஒரு முழுமையான
பார்வை பார்த்திருக்கிறார். இவரது பதிவுகளைப்பார்த்தாலே , அந்தப்படத்தைப்பார்த்த திருப்தியோ, அதை உடனடியாகப்பார்க்கவேண்டுமென்ற ஆவலோ ஏற்படுவது நிச்சயம்
சற்றே திகைக்க வைத்த கொரியன் படம் என்று old boy என்ற படத்தைப்பற்றிக்கூறி கலக்குகிறார்.
இவர் நெல்லை கண்ணன் அய்யாவின் புதல்வர் என்று முதலில் நினைத்தேன். ஏனெனில், அவரும் திரைத்துறையில்தான் இருக்கிறார். பிறகுதான் அவர் வேறு, இவர் வேறு என்று தெரிந்துகொண்டேன்.
வெளிநாட்டு சினிமாக்களை அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால், இவரது வலைப்பூவுக்கு தினம் அட்டெண்டென்ஸ் கொடுப்பது நலம்.
அடுத்து...
No comments:
Post a Comment