Sunday, October 12, 2008

சொல்ல விட்டுப்போகக் கூடாதவர்கள்...

அடுத்த பதிவர் பழமை பேசி !
 இவர் இந்த ஆண்டுதான் பதிவெழுத ஆரம்பித்திருந்தாலும் ஒரு அக்கறை தெரிகிறது.
 பழமைபேசி சொல்லும் எள்ளுத்தாத்தா வைத்தியம்
நன்றாக உள்ளது.


சிறப்பாக எழுதுகிறார்.
இன்னும் நிறய நிறைவாக எழுதி நம் உள்ளங்களில் இடம்பிடிக்க வாழ்த்துவோம்.

ஆங்கிலத்தில் எழுதினாலும், 
அழகாக எழுதும் இரண்டு பதிவர்களை நான் அறிமுகப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

முதலாமவர் மோகன்ராம் அவர்கள்

இவர் எல்லா நாட்களிலும்,உங்கள் வீட்டுத்தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு தொடரிலோ, ஒரு திரைப்படத்திலோ வந்துவிடுவார்.
மேலாண்மை குருவான இவர், சினிமா பற்றி மிகவும் அதிகம் தெரிந்தவர். அதிலேயே ஊறியவர்.
என் அன்பான நண்பர் !  அவரது வலைப்பூவுக்குச்சென்றால் அரிய தகவல்கள் நிச்சயம். இடையில் தமிழிலும் எழுதியிருக்கும் இவர் ...
 ரஜினிகாந்த்தைப்பற்றி எழுதியிருப்பது அனுபவப்பூர்வமாக உள்ளது.

மேலும் திரைத்துறையினருக்கு இந்திய அரசு வெளியிட்டிருக்கும் தபால்தலைகளைப்பற்றி இவர் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

சத்யராஜைப்பற்றியும் சுவாரஸ்யமாக ஒரு பதிவு ரசிக்கவைக்கிறது.

இவர் பதிவூடகத்திலும் , அனைவரது மதிப்பையும் பெற்று மென்மேலும் சிறந்துவிளங்க உளமாற வாழ்த்துவோம்.

அடுத்தவர்...
உமாகுமார்

இந்தக்கதையைப்படித்துவிட்டு எப்படி விவரிக்கிறார் என்பதிலேயே தெரிகிறது. எவ்வளவு ஆழ்ந்து வாசிக்கிறார் என்பது.!

நம்ம ஊரு ஜார்ஜ் புஷ்கள் என்று இவர் பொறுமியிருப்பது பற்றித்தெரிந்தால், இனி நீங்களும், நானும் இன்னும் கொஞ்சம் கவனமாக எரிபொருள் நிரப்புவோம்.

சிறந்த சிந்தனையாளராக , சமூக நல்லெண்ணம் கொண்டவராக , அன்பான தாயாக இருக்கும் இவர் நம் பிரபல பெண் பதிவர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

நிறைவாக....

6 comments:

  1. ஆஹா,

    கலக்குறீங்களே தல.

    தானைத்தலைவர், புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் வாழ்க வாழ்க

    ReplyDelete
  2. அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள் பல!

    பணிவுடன்,
    பழமைபேசி.

    ReplyDelete
  3. வாங்க புதுகைத்தென்றல்!

    நன்றிங்க!

    //தானைத்தலைவர், புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் //
    இது கொஞ்சம் ஓவரு!!!! :)

    வாரம் முழுக்க ஆளையே காணும்!
    அடுத்த டூர் ஆரம்பிச்சாச்சா? :)

    ReplyDelete
  4. //தானைத்தலைவர், புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் //
    இது கொஞ்சம் ஓவரு!!!! :)


    ithuthan sari :)))

    ReplyDelete
  5. வாரம் முழுக்க ஆளையே காணும்!


    கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. எனக்கும் என் கணிணிக்கும். அதான் வர முடியவில்லை. இப்ப ரெண்டு பேருமே ஃபிட்டு. :))

    ReplyDelete
  6. நன்றி சுரேகா!
    அற்புதமான அறிமுகத்திற்கு!
    உங்கள் வார்த்தைகள் உள்ளத்தைத் தொட்டு விட்டன.

    ReplyDelete