நெல்லைக் கண்ணன் அய்யா!
ஐம்பது ஆண்டுகளாக தமிழில் உரை நிகழ்த்திவரும் ஒரு அற்புத மனிதர் இவர்!
'வாழ்க தமிழுடன்' என்று மனதார வாழ்த்தியபடியே தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும் தமிழ் நேசர்!
கடந்த ஏப்ரல் 8 ம் தேதி பதிவுலகத்தில் நுழைந்த அவர்இன்று வரை 452 பதிவுகள் எழுதியிருக்கிறார்.
அவர் எழுத ஆரம்பித்தாலே அது கவிதையாகிவிடுகிறது என்றுதான் நினைக்கிறேன்.அதுவும் மிகவும் எளிமையான தமிழில் புரியும்படி இருக்கிறது மிகச்சிறப்பு!
இதோ காமராஜரைப்பற்றி இப்படி ஒரு கவிதை கொடுத்து , அவர்மீது வைத்திருக்கும் நேசத்தைக்காட்டுகிறார்.
முத்தொள்ளாயிரம் என்று கேள்விதான் பட்டிருக்கிறேன். ஆனால் அதன் பாடல்களை எளிமைப்படுத்தி இங்கே அழகாகக்கொடுத்திருக்கிறார்.
பழம்பாடல் புதுக்கவிதை என்ற தலைப்பில்மட்டும் 105 பதிவுகள் இட்டு தன் தமிழ் பிரம்மாண்டத்தை நமக்கு உணர்த்துகிறார்.
நபியின் சிந்தனைகளை இப்படி யாரேனும் தமிழில் சொல்லியிருப்பார்களா என்று எனக்குத்தெரியவில்லை!
தமிழில் சிறந்த புலவர்களில் ஒருவரான காளமேகப்புலவரின் படைப்பை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்!
நடிகர் திலகம் சிவாஜியைப்பற்றி இவர் எழுதியிருக்கும் இந்தக்கவிதை சிறிதுதான் எனினும் அதனுள் இருக்கும் அவர் பற்றிய எண்ணம் எவ்வளவு பெரிதென்று படிப்பவர்களுக்கு கட்டாயம் புரியும்.
இதையெல்லாம் மீறி எனக்குள் ஒரு ஆதங்கம் எப்போதும் உண்டு.! இவரை, திறமையாகப்பார்க்காமல், தனிமனிதனாகப்பார்த்து இவரது செய்கைகளை விமர்சனம் செய்து குத்திக்கிழிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
கமல் சார் சொல்லுவார்..! ' என்னை விமர்சிப்பதை விட்டுவிட்டு, என் படைப்புகளை மட்டும் விமர்சியுங்கள்' என்று!
.இந்தத்தலைமுறையில் , இவரைப்போன்ற மனிதர் நம்முள் இல்லை! விஜய் டிவி தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் இவரது பேச்சுக்களையும் , பதில்களையும் பார்த்துவிட்டு இவருக்கு ஒரு அடாவடிச் சாயம் பூசிவிட்டார்களோ என்று அஞ்சுகிறேன். ஆனால் மிகவும் அருகாமையில் இருந்து பழகிப்பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். அவர் எவ்வளவு குழந்தை உள்ளம் கொண்டவர் என்று! உதவி செய்யும் மனோபாவம், தவறு கண்டு பொங்கும் குணம் கொண்ட இவரளவுக்கு தமிழை நேசித்து வாழ்பவர்களை அவர்கள் வாழும்நாட்களில் புரிந்துகொள்ளாமல், பின்னர் புரிந்து கொள்வதில் பிரயோஜனமே இல்லை! இவர் எந்த அளவுக்கு அடுத்தவர்களை விமர்சிக்கிறாரோ, அதே அளவுக்கு அடுத்தவர்களை ப்பாராட்டவும் செய்யும் உள்ளம் கொண்டவர்..! ஒரு சிறிய எடுத்துக்காட்டு, இவரது வலைப்பூவை உருவாக்கும் சிறு முயற்சி எடுத்த என்னையும் ஒரு பெரிய உயரத்தில் வைத்து என் மகன் என்று கவிதை எழுதியிருக்கும் இவரது அன்பைப்புரிந்துகொள்வோம்.
அடுத்து....
அருமையான பதிவரைப் பற்ரிய அழகான் பதிவு
ReplyDeleteநல்வாழ்த்துகள்
தமிழ் அழகாக விளையாடும் பதிவரைப் பற்றிய சிறந்த அறிமுகம்... நன்றி!
ReplyDeleteநல்ல அறிமுகம். சூப்பர்
ReplyDeleteஒரு சிறு க்ளிப் ஒன்று பார்த்தேன் (விஜய் ட்டிவியில) ஏதோச்சையாக அதில ஒரு முறை ஒருவர் சட்டையை அப்படி இப்படி இழுத்து விட்டுக்கொண்டே மிக லாவகமாக அழகான பேச்சில் இயற்கைசார் சீரழிவுகளை எப்படி இந்த மனித குலம் நடத்திக் கொண்டிருக்கிறது என்று பொளந்து கண்டிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கவிஞர் சிரித்தபடியே அந்தப் பையனின் மேனரிசத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் பேசப் பேச கண்களில் நீருடன் கடைசியில் எழுந்து வந்து கட்டியணைத்துக் கொண்டது, நெகிழ வைத்தது குழந்தையுள்ளத்தை எட்டிப் பார்க்க வைத்த நிகழ்வு அது.
ReplyDeleteநன்று.
சிறந்த அறிமுகம்...
ReplyDelete