திருச்சியைச் சேர்ந்த பெங்களூரில் இப்போது இருக்கும் மோகன்தாஸின் செப்புப்பட்டயம்!
இவர் எனக்கு அறிமுகமானது நண்பர் வெயிலான் மூலமாக. (எனக்கு நிறைய வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியவர் வெயிலான் என்பதை நன்றியோடு இங்கே குறிப்பிடுகிறேன். வலைச்சர ஆசிரியராக முழுத்தகுதியும் அவருக்கு உண்டு. ஏனென்றால் குறைவாக எழுதி, நிறைய படிக்கும் பழக்கம் உள்ளதால் நல்ல பல பதிவர்கள், வலைகளை அவர் மூலம் நண்பர்கள் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு!)
மோகன்தாஸின் பக்கத்தைத் திறந்ததுமே பிடித்துப் போனது, காரணம் சேகுவேராவின் அமர்த்தலான புகைப்படம்!
அவரது பதிவுகளின் எழுத்து வித்தியாசமான நடையில் இருக்கும். இவரும் சுஜாதாவின் ரசிகன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். செப்புப்பட்டயம் இல்லாமல் பூனையாக இல்லாமல் போன சோகங்கள் என்ற வலைப்பூவும் இவருடையதே.
அக்கா பெண்ணே அழகே! என்கிற ஒரு கதையில் வரும் வர்ணனை/உவமை மிகவும் கவர்ந்தது. படித்துவிட்டு அன்றே ஒன்றிரண்டு நண்பர்களை அழைத்து இதைப் பகிர்ந்துகொண்டேன்..
'அழும் பெண்ணின் அருகில் நிற்பது கனன்று கொண்டிருக்கும் எரிமலையில் அருகில் குடிசை போட்டு தங்குவதை விடவும் பாதுகாப்பற்றது'
'முன்னிரவு பெய்த பனியினால் கருவாகி, காலைப் பொழுதின் இளம் சூட்டில் உருகி ரோஜாவில் வழிந்தோடும் ஒற்றைத் துளியாய் கண்ணீர் கன்னத்தில் வழிய..'
அதே போல அவளை அவன் கண்விடல் என்கிற கதையின் ஆரம்ப வரிகளை ஒரு நல்ல சிறுகதைக்கான ஆரம்பம் என்பேன்...
அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.
ஒரு ஜொள்ளுப்பதிவு என்று ராப்புக்குப் போட்டியாக கவுஜயும் படைக்கிறார்..
அழகே ஜெஸ்ஸிகா!!!
உன்கையில் இருப்பதென்ன "Trash"ஆ
ஆகிப்போனனே "Nash"ஆ
குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவாபெரிது
பின்நவீனத்துவம்
..இப்படி..!
கணினி அறிவு நிரம்பப்பெற்றவர். ஓவியமும் அழகாக வரைகிறார். இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.
இவரது கணினித்துவத்திற்கு இந்தப் பதிவு ஒரு சான்று..........
//பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்
இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.
இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encrypt பண்ணியிருக்கேன்.
இதை Decrypt செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encrypted பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).//
இதைப் படிச்சுட்டு என்னான்னு சொல்லுங்கப்பா. நம்ம.. சாரி.. என் அறிவுக்கு எட்டல.
இதையெல்லாம் சொல்றதால இவர் நம்மகிட்டேர்ந்து அந்நியப்பட்டவர் என்ற எண்ணம் வேண்டாம்..
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!"
எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்..”
என்று ஆரம்பிக்கிற கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் என்ற புனைவிலும்,
கேர்ள் ஃப்ரண்ட் தேவையா என்ற மொக்கையிலும் இவர் நம்மாளுதான் என்பது தெரியவரும்.
ஆனால் இவருக்கு சாதாரண கும்மிகளோ, மொக்கைகளோ பிடிக்காது என்பது அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய ஒன்று!!!
தலைப்பு சும்மா லொள்ளுக்கு வைக்கல நண்பர்களே.. G3 ஒரு பதிவுக்கு (இந்தாங்க லிங்க்) 3211 பின்னூட்டங்கள் வாங்கறாங்க. சாட்ல சில நண்பர்கள் கூட சவால் விட்டு, நம்ம மோகன்தாஸ் 5000 பின்னூட்டம் வாங்கியிருக்காரு. (போட்டிருக்காருன்னும் சொல்லலாம்!) நமக்குநாமே திட்டம்னாலும் அதைச் செயல்படுத்தறதுல இருக்கற தொழில்நுட்ப அறிவைப் பாராட்டியே ஆகணும்!
(என்ன ராப்.... களத்துல எறங்குவோமா...)
பி.கு: சில தகவல்களுக்கு நன்றி - தொழிலதிபர் நந்து.
நான் தான் முதலாவதா
ReplyDeleteயாரு 5000மாவது ?
மோகன்தாஸ் அறிமுகமான பதிவர். 5000 என்பது இது வரை வந்த மொத்தப் பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டம் என்று நினைத்து, பலபேர் இந்த சாதனை செய்திருக்கலாம் என்று நினைத்தேன். ஒரே பதிவுக்கா? ஆள விடுங்க சாமி. பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்பதால், நான் 5 பின்னூட்டங்கள் வரும் அளவே பதிவு போடுகிறேன். அந்தப் புகைப்படம் அட்டகாசம்.
ReplyDeleteஅனுஜன்யா
மோகன்தாஸ் பற்றிய பதிவுகள் எவ்வளவோ இருக்க, நுனிப்புல் மேய்ந்திருக்கிறீர்கள் பரிசல்!
ReplyDeleteஉதாரணத்திற்கு சோழர் வரலாறு தலைப்பில் விரிவாக நிறைய பதிவுகள் அருமையான படங்களோடு எழுதியிருக்கிறார்.
மிகச்சிறந்த புகைப்படக்காரரும் கூட.
//வெயிலான் said...
ReplyDeleteமோகன்தாஸ் பற்றிய பதிவுகள் எவ்வளவோ இருக்க, நுனிப்புல் மேய்ந்திருக்கிறீர்கள் பரிசல்!//
ஆமாம். மோகன்தாஸ் போற்றும் பெண்ணியம், அந்த திமிரு...
இன்னும் நிறய இருக்குல்ல :P
யோவ் க்ருஷ்ணா. வெறும் நந்துன்னு போடுங்கய்யா. எதோ கெட்டவார்த்தை சொல்லி திட்ற மாதிரி இருக்கு.
ReplyDeleteஇந்தப் பதிவு படிச்சதும் அப்படியே கண்களில் நீர் கட்டிக்கிச்சி. அட உண்மையிலே தாங்க.
ReplyDeleteவலையுலக ஆணாதிக்கவாதி என்கிற பிம்பம் இப்ப இல்லைன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
இளைய தலைமுறை பதிவர்களுக்கு(நாலுவருஷம் பதிவுலகில் ஆய்ட்டா இப்படியெல்லாம் பேசலாமாம்) இப்படியான ஒரு அறிமுகம் கிடைப்பது நல்லதென்றே நினைக்கிறேன்.
//ஆமாம். மோகன்தாஸ் போற்றும் பெண்ணியம், அந்த திமிரு... //
யோவ் நீங்க சும்மாயிருக்க மாட்டீங்க, இப்பத்தான் என்னை நல்லவன்னு சொல்றாங்க அது பொறுக்கலை! :(
வெயிலான்,
என் பதிவுகளை பரிசல்காரனுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
இட்ட பணியை செவ்வனே செய்கிறீர்கள் பரிசல்.. தொடருங்கள்.. தொடர்கிறோம்
ReplyDeleteநன்றி சீனா ஐயா..
ReplyDeleteநன்றி அனுஜன்யா
@ வெயிலான்
நண்பா.. அது ஒரு டெக்னிக். எதைச் சொன்னா, நம்மாளுக உள்ள போவாங்கன்னு தெரிஞ்சுக்கணும். அவரோட சீரியஸ் பக்கங்கள் பல பிரமிக்க வைக்கும். அதை போய்ப்படிக்கறவங்க அனுபவிக்கட்டும்.
உயிரே, ஜாதிமல்லி மாதிரியான படங்கள் நல்லாயிருந்தும் ஏன் ஓடலைன்னு தெரியுமா? இந்த டெக்னிக்கை அவங்க மிஸ் பண்ணினதுதான்.
@ மோகன்தாஸ்
ReplyDelete//
இளைய தலைமுறை பதிவர்களுக்கு(நாலுவருஷம் பதிவுலகில் ஆய்ட்டா இப்படியெல்லாம் பேசலாமாம்) இப்படியான ஒரு அறிமுகம் கிடைப்பது நல்லதென்றே நினைக்கிறேன்//
தட்ஸ் இட்!
நன்றி தொழிலதிபர் நந்து!
& நர்சிம்!
மோன்தாஸ் அண்ணனை படிக்க ஆரம்பிச்சு நிறைய நாள் ஆயிட்டாலும் பின்னூட்டங்கள் போட ஆரம்பிச்சது சில காலமாகத்தான் ஒரு ஜனரஞ்சகமான பதிவர்...
ReplyDeleteவெயிலான் said...
ReplyDelete\\\
மோகன்தாஸ் பற்றிய பதிவுகள் எவ்வளவோ இருக்க, நுனிப்புல் மேய்ந்திருக்கிறீர்கள் பரிசல்!
உதாரணத்திற்கு சோழர் வரலாறு தலைப்பில் விரிவாக நிறைய பதிவுகள் அருமையான படங்களோடு எழுதியிருக்கிறார்.
மிகச்சிறந்த புகைப்படக்காரரும் கூட.
\\
பொறுங்க வெயிலான் இப்பதானே அறிமுகப்படுத்தி இருக்கறிங்க...
\மிகச்சிறந்த புகைப்படக்காரரும் கூட.\
அவருடைய படங்கள் பல நான் சேமித்து வைத்திருக்கிறேன் சந்தர்ப்பம் கிடைக்கையில் பயன் படுத்துவேன்...
g3 பற்றின தகவல் நந்து சார் சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன்...
ReplyDeleteg3 அக்கா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...!!!
ஆனா அந்த ஆட்டங்கள்ள கலந்து கிட்ட பலபேரு இப்ப எழுதறதில்லை ரொம்ப குறைவு...:(
ReplyDeleteDoes Anbumani Ramdoss read blogs?
ReplyDeleteஅப்ப 5000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வசிகாமணி ராப் இல்லையா
ReplyDeleteஇப்போ இங்க நான் பத்து கமென்ட் போடனுமா?:(:(:(
ReplyDeleteஎன்னைய பயங்கரமா வழக்கம்போல பேதலிக்க வெச்சது இவரோட பதிவுலக அரசியல் பதிவுதான்.
ReplyDelete//பிம்பம் இப்ப இல்லைன்னு நினைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
ReplyDeleteஇளைய தலைமுறை பதிவர்களுக்கு(நாலுவருஷம் பதிவுலகில் ஆய்ட்டா இப்படியெல்லாம் பேசலாமாம்) இப்படியான ஒரு அறிமுகம் கிடைப்பது நல்லதென்றே நினைக்கிறேன்//
இன்னுமா கிருஷ்ணா சார், இந்தப் பதிவுலகம் உங்களை நம்புது?:):):)
//நண்பா.. அது ஒரு டெக்னிக். எதைச் சொன்னா, நம்மாளுக உள்ள போவாங்கன்னு தெரிஞ்சுக்கணும். அவரோட சீரியஸ் பக்கங்கள் பல பிரமிக்க வைக்கும். அதை போய்ப்படிக்கறவங்க அனுபவிக்கட்டும்.//
ReplyDeleteஹா ஹா ஹா, நைஸ் ட்ரை:):):) பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்:):):)
//உயிரே, ஜாதிமல்லி மாதிரியான படங்கள் நல்லாயிருந்தும் ஏன் ஓடலைன்னு தெரியுமா? இந்த டெக்னிக்கை அவங்க மிஸ் பண்ணினதுதான்//
ReplyDeleteஉயிரே படம் மிக மிக மேலோட்டமாக கன்னத்தில் முத்தமிட்டால், ரோஜா பாணியில் எடுக்கப்பட்ட படம். அதை நல்ல படங்களின் லிஸ்ட்ல தயவுசெஞ்சு சேக்காதீங்க. அது எடுத்தவிதத்துக்காகப் பிடிக்கும்னு சொல்றவங்களுக்கு, படத்தோட நாட் நல்லா இருக்கணும்னா, முதல்ல மேலோட்டமா சிலப் பிரச்சினைகளில் அணுகிடக் கூடாதில்லயா:):):)
//அப்ப 5000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வசிகாமணி ராப் இல்லையா//
ReplyDeleteஇல்லை:(:(:(
//'அழும் பெண்ணின் அருகில் நிற்பது கனன்று கொண்டிருக்கும் எரிமலையில் அருகில் குடிசை போட்டு தங்குவதை விடவும் பாதுகாப்பற்றது'//
ReplyDeleteநீங்கதான் இங்க இதக் கொடுத்துட்டீங்களே, அப்புறம் எப்டி நிலா அப்பா அப்டி கேக்குறார், மோகன்தாஸ் சார் சந்தோஷப்படறார்:):):)
//நான் தான் முதலாவதா
ReplyDelete//
இதுனால காண்டாகி தான் இப்போ நான் இவ்ளோ பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்:):):)இருபத்தஞ்சு அடிச்சு வரலாத்துல பேர பதிச்சுரனும் இல்ல:):):)
//திருச்சியைச் சேர்ந்த பெங்களூரில்//
ReplyDeleteஇதுல ஏன் கமா விட்டீங்க கிருஷ்ணா சார்?:):):) (நீங்க மட்டும் எல்லார் பதிவுலையும் போய் ஆன்சர் ஷீட் கரெக்ட் பண்றீங்கல்ல, எப்புடி?:):):))
me the 25th:):):)
ReplyDeleteநன்றி
ReplyDeleteநீங்களும் கூடிய விரைவில் 10000 பின்னூட்டம் வாங்க வாழ்த்துக்கள்
மோகந்தாஸின் சீக்ரெட் ஆஃப் 5000 கமெண்ட்ஸ் நிறைய பதிவர்களுக்கு தெரியும் :))))
ReplyDeleteவரலாற்றுல பேரை
ReplyDeleteபதிச்சிக்கிறதுக்காக 30
ReplyDelete