Wednesday, November 26, 2008

வாங்க எசமான்.. வந்து படிச்சுத்தான் பாருங்களேன்!

எனக்குத் தெரிந்து தற்போது வலையுலகத்தில் மனம் தளராமல் மொக்கைக்கு அதிக இடம் தராமல் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவது என்பதை சிரமேற்கொண்டு எழுதிவரும் பதிவர்களில் ஒருவர் என்று இவரைச் சொல்லலாம். (‘அதாவது உங்களை மாதிரி இல்ல-ன்னு சொல்லுங்க’ - இப்படி பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது)

அவர்தான்... பழமைபேசி
!


பெயருக்கு ஏற்றாற்போல தமிழில் வழக்கொழிந்து வரும் பழஞ்சொற்களைப் பற்றியும், நாம் அர்த்தம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் அர்த்தங்கள் என்று எல்லாப் பதிவுமே ஏதாவது ஒரு செய்தியைத் தாங்கித்தான் வருகிறது.

சோமாறி, மொல்லமாறி
, அந்தலை சிந்தலை, ஏழஞ்சு மையன், கூமட்டை இந்த மாதிரி பல வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லியிருக்காரு.

அதுபோக பாடலும் புனைகிறார்.. இதோ சாம்பிளுக்கு ஒரு பாடல்.. (ராப் நீங்க கோவிச்சுட்டு களத்துல எறங்கீடக் கூடாது.. இது வேற மாதிரி..)

பா வா மை வை,
நீ மீ ஊ ஈ,
வீ மோ கோ போ,
தீ தா ஐ ஓ!

என்ன திட்டற மாதிரித்தெரியுதா.. அதுதான் இல்ல! கவி காளமேகத்தின் அதிதீவிர ரசிகரான இவர் அவருடைய தாக்கத்தில் பல பாடல்களை எழுதிருக்காரு. அதுல ஒண்ணுதான் இது. ஓரெழுத்துலயே பொருள் தரக்கூடிய பாடல் இது! பொழிப்புரை வேணும்னா இங்கே போங்க. கவிகாளமேகத்தின் தாக்கத்தில் அவரெழுதின பதிவுகளை ஒட்டுமொத்தமாப் படிக்க இங்கே க்ளிக்குங்க.

(பாருங்களேன்.. இந்த மாதிரி தமிழ் ஆர்வலர் ஒருவருடைய பதிவை அறிமுகப்படுத்தறப்போகூட, சாம்பிளுக்கு, க்ளிக்குங்க - ன்னு ஆங்கிலம் கலந்து எழுதித் தொலைக்கறேன்!)

அதே மாதிரி இவரு யூ-ட்யூப்ல லிங்க் கொடுத்து ஒரு பதிவு போட்டாரு. அதைப் பார்த்து கணக்கில்லாம சிரிச்சேன். நீங்களும் பாருங்க அதுல வர்ற தம்பதிக கணக்கு போடற அழகை!

****************************


அடுத்தவர் நாடோடி இலக்கியன்!

தமிழ்மணத்தில் அவியல் என்ற தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து ‘யாருடா இது நம்ம தலைப்புல எழுதறது'ன்னுதான் இவரோட பதிவுக்குப் போனேன். பார்த்தா இவரு 2007லேர்ந்து எழுதறாரு. (ஆனா அவியல்ன்னு இப்போதான் எழுத ஆரம்பிக்கறாரு. அதுக்காக சீனியர்கிட்ட போய் வம்பு பண்ண முடியுமா சொல்லுங்க...)

அவியல்-ன்னு நான் எழுதறமாதிரி கலந்து கட்டி எழுதியிருந்தார். அப்புறம் சில பதிவுகளைப் படிச்சேன். கவிதைகள் நல்லா எழுதறார்.


அழகு!!!

அச்சம்,மடம்,நாணம் போன்ற
பெண்ணுக்கே உரிய
எதுவும் இல்லை உன்னிடம்,
ஆனாலும் உன்னை எனக்குப்
பிடித்திருந்தது,
வீரம்,கல்வி,கொடை போன்ற
ஆண்மைக்கே உரிய
அத்தனையும் உண்டு என்னிடம்,
ஆனாலும் உனக்கு என்னைப்
பிடிக்கவில்லை,
நான் உன்னை நேசிக்கவும்
நீ என்னை வெறுக்கவும்
இருந்தக் காரணம் ஒன்றே- அழகு!!!


இப்படி ஒரு கவிதை.


இன்னொரு கவிதையை (ஒரு கணிப்பொறியாளனின் கனவுகள்) முடிச்சிருந்த வரிகள் அருமையா இருந்தது..

என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது!!!

சூப்பர்ல?


அதே மாதிரி 2003-2004 ம் ஆண்டு தஞ்சைப் பகுதியில் நிலவிய வறட்சியால் விவசாயிகளின் துயர் கண்டு இவர் எழுதின

அன்று
வேளைக்கு உணவு
இன்று
உணவிற்கு வேலை!!

போன்ற வரிகள் புதுக்கவிதை ப்ரியர்களுக்குப் பிடிக்கும்!

இவர் கவிதைகளுக்கு இந்தவழியா போங்க!

'எனக்கு இலக்கியம் குறித்தெல்லாம் பெரிய பரிச்சயமோ, புரிதலோ இல்லை என்று ஒப்புக் கொள்கிறார். சமீபமாக காணாமல் போன பின்னணி பாடகர்கள்
என்ற தலைப்பில் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.என்.சுரேந்தர், அருண்மொழி பற்றியும் அவர்கள் பாடிய சில பாடல்களையும் குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பாடல்கள் அவ்வளவு Rare Songs! அந்தப் பதிவுதான் இவரைப் பற்றிய ஒரு அறிமுகம் தரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது!

இவர்கள் இருவரையும் நீங்கள் ஊக்குவித்தால் நான் மிக மகிழ்வேன்!

21 comments:

  1. //எனக்குத் தெரிந்து தற்போது வலையுலகத்தில் மனம் தளராமல் மொக்கைக்கு அதிக இடம் தராமல் உருப்படியான விஷயங்களை மட்டுமே எழுதுவது என்பதை சிரமேற்கொண்டு எழுதிவரும் பதிவர்களில் ஒருவர் என்று இவரைச் சொல்லலாம். //

    வெளிநடப்பு செய்கிறேன்:))

    ReplyDelete
  2. நன்றி பரிசலாரே,எனது பதிவிற்கு நல்ல அறிமுகம் தந்ததிற்கு,மேலும் தஞ்சையின் வறட்சி பற்றி எழுதிய கவிதைகள் அனைத்தும் உண்மையில் அனுவவிச்சு எழுதியது அந்த கவிதைகளை மேற்கோள் காட்டி எழுதியதற்கு மிக்க நன்றி.அப்புறம் இன்னொன்று வீட்டில் அவியல் என்ற வார்த்தையை கேட்டாலே உங்க பதிவுதான் ஞாபகம் வருகிறது.மிக்க நன்றி.

    இந்த தருணத்தில் ஏற்கனவே வலைச்சரத்தில் என்னைப் பற்றி சிறிய அறிமுகம் தந்த நவீன் பிரகாஷ் மற்றும் ஒற்றை அன்றில் ஸ்ரீ ஆகியோருக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. வெளி நடப்பு என்று சொன்னது அவர் பதிவுக்கு போகிறேன் என்று..

    //அழகான மகளே, வந்து கண்ணுக்கு மை இட்டுக் கொள்; பின்பு உயர்ந்த நிலை கொள்ள அன்னதானம் இட்டபின் வாசமிகு நறுமலர்களுடன் இறைவனைச் சென்று வழிபடு. அச்சம் தவிர்த்து என்றும் இனிமை கொள்வாயாக! //

    இப்படி ஒரு விளக்கமா! அவ்வ்வ் !

    ReplyDelete
  4. அழகு கவிதை அருமை.

    ReplyDelete
  5. //ராப் நீங்க கோவிச்சுட்டு களத்துல எறங்கீடக் கூடாது.. இது வேற மாதிரி..)

    //

    ராப் யார் சொன்னாலும் கேக்கமாட்டாங்க. அவங்க தலை சொன்னாக்கூட கேக்கமாட்டாங்களாம்

    ReplyDelete
  6. /*
    பெயருக்கு ஏற்றாற்போல தமிழில் வழக்கொழிந்து வரும் பழஞ்சொற்களைப் பற்றியும், நாம் அர்த்தம் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும் சில வார்த்தைகளின் அர்த்தங்கள் என்று எல்லாப் பதிவுமே ஏதாவது ஒரு செய்தியைத் தாங்கித்தான் வருகிறது
    */
    நீங்க சொல்லுறது 1000 சதவிதம் உண்மை..
    ஹும்..என்ன செய்ய சட்டியிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும், எனக்கு எல்லாம் குப்பை தான் இருக்கு, அதனாலே தான் மொக்கை யா வருது

    ReplyDelete
  7. @ குசும்பன்

    யூ த ஃபர்ஸ்ட்டுக்கு நன்றி..

    @ நாடோடி இலக்கியன்

    இதை என் கடமையாக நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது, இன்னும் எழுத வேண்டும் என்ற உங்கள் ஆர்வமும், வாசகர்கள் அதிகம் வந்தால் உங்கள் எழுத்து இன்னும் மேம்படும் என்கிற எண்ணமும் எனக்கு வருகிறது. அதனாலேயே குறிப்பிட்டேன்!

    @ ஸ்ரீமதி

    ஹி..ஹி..

    நன்றி சின்ன அம்மணி

    @ நசரேயன்

    நீங்க உங்களைச் சொல்றீகளா, என்னையா..?

    ReplyDelete
  8. பரிசல் ஐயா, வணக்கம்! நாம வீதம்பட்டி வேலூர் பள்ளிக்கூடத்துல எட்டாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது, தலைமை ஆசிரியர் கூப்ட்டு இனி நீதான் பிரார்த்தனைக் கூட்டத்தை வழி நடத்தனும்னு சொல்ல, ஆகாயத்துல பறக்குறா மாதிரி ஒரு மகிழ்ச்சி! அன்னக்கி சாயந்தரம், பக்கத்து வீட்டு மாரிமுத்து வாத்தியார் கூப்ட்டு சொன்னர்ரு, "டேய், எப்பவும் பத்தாம் வகுப்பு சட்டாம் புள்ளை(வகுப்புத் தலைவன்)தான் இந்த வேலைய செய்யுறது. நீ, நல்லாப் படிக்குற பையங்றதால, எட்டாம் வகுப்பு படிக்குற உன்னை செய்ய சொல்லி இருக்காங்க. இனியும் மூணு வருசம், கால தாமதம் இல்லாம, நல்ல துணி மணி போட்டு, சுத்த வத்தமா பள்ளிக்கு வரணும். சரியா?"ன்னாரு. அடி மனசு "பக்"ன்னுச்சு. இப்பவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலைதான்!

    எம்பேரையும் காப்பாத்திகிடணும், கெளரவப்படுத்தின உங்க நம்பிக்கையையும் கூடுதலா இப்ப! நொம்ப நன்றிங்க, ஏற்கனவே அறிமுகப்படுத்தின சுரேகா ஐயாவிங்களுக்கும் சேத்து!!

    ReplyDelete
  9. @ பழமைபேசி

    நாடோடி இலக்கியனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்!

    நீங்க எல்லாம் தமிழ்வலையுலகின் நிரந்தர நட்சத்திரங்கள்!!!

    ReplyDelete
  10. nalla arimugam.. nandri parisal..

    ReplyDelete
  11. பரிசல் கவி.காளமேகத்திம் தாதி தூது தீது கவிதை படிச்சி இருக்கிங்களா...

    ReplyDelete
  12. //
    VIKNESHWARAN said...
    பரிசல் கவி.காளமேகத்திம் தாதி தூது தீது கவிதை படிச்சி இருக்கிங்களா...
    //

    http://maniyinpakkam.blogspot.com/2008/07/blog-post_8102.html

    http://maniyinpakkam.blogspot.com/2008/07/blog-post_7850.html

    http://maniyinpakkam.blogspot.com/2008/08/blog-post_08.html

    ReplyDelete
  13. //அதாவது உங்களை மாதிரி இல்ல-ன்னு சொல்லுங்க’ - இப்படி பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது)
    //

    I thought you are not writing mokkai!!!!!

    ReplyDelete
  14. ஆடிக் குடத்தையும்
    ஆடும்போதே யிரயும்
    மூடித் திறக்கின் முகங்காட்டும்
    உற்றிடு பாம்பெல்லனவே ஓது!

    (பாம்பையும் எள்ளையும் ஒப்பிட்டு காளமேகம் எழுதிய கவி. எனக்கு மிகவும் பிடித்தது இது)

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அருமைங்க.

    ReplyDelete
  16. பழமைபேசியாருக்கு உங்க புகழ்ச்சில இன்னும் ரெண்டு முடி கொட்டிபோச்சாம்.

    நாடோடியார் கவித நல்லாதான் எழுதுறார்.

    ReplyDelete
  17. /*
    பழமைபேசியாருக்கு உங்க புகழ்ச்சில இன்னும் ரெண்டு முடி கொட்டிபோச்சாம்.

    நாடோடியார் கவித நல்லாதான் எழுதுறார்.
    */
    சட்டியிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும்

    ReplyDelete
  18. /*
    @ நசரேயன்

    நீங்க உங்களைச் சொல்றீகளா, என்னையா..?
    */
    சத்தியமா நான் என்னை தான் சொன்னனே, உங்களை போய் அப்படியெல்லாம் என் வாயாலே சொல்லுவேனா?

    ReplyDelete
  19. வரவர ரொம்ப மோசமா.. நம்ம செட்டு தவிர பிறர் பதிவுகளுக்கு போறதேயில்லை. நேரம்தான் முக்கிய காரணமென்றாலும் சில சமயங்களில் வெளி கடைகளுக்கு செல்லும்போது அவர்கள் நம்மை கடுப்பேற்றி அனுப்பிவைப்பதும் ஒரு காரணம்தான்.. இதில் நல்ல வலைப்பூக்களை மிஸ் செய்துவிடுகிறோம். இந்த அறிமுகப்பணி சிறப்பானது. வாழ்த்துகள் பரிசல்.! இதுதான் வலைச்சரத்தின் பிரதான சேவை என்பதையும் இப்போதான் அறிகிறேன். அடிக்கடி வந்திருந்தாலும் இது புரியாத என்ன அறிவீனம்.! சீனாவின் சேவைக்கு மனப்பூர்வ வாழ்த்துகள்.!

    ReplyDelete