Tuesday, November 11, 2008

மழையும் இளவேனிலும்!!

தமிழ்நதியின் பதிவுகள் என்னை மிகவும் பாதித்தவை! ஆற்றல் மிக்கவை! ஒரு மெல்லிய சோகத்தை, வாழ்வின் அனுபவங்களை, நிகழ்வுகளை அவருக்கேயுரிய மொழிநடையில் கவிதையாக மறக்கவியலாக் குறிப்புகளாக செய்து விடுவார்! மனதை கனக்கச் செய்யும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்!

ஒரு மரணம்..ஒரு தற்கொலை..நமக்குள் என்னென்ன கிளறிவிடும்..பிரியமானவர்களை இழக்கக் கொடுத்தபின் வரும் தூக்கம் கலைந்த,நினைவுகள் துரத்தும் அந்த இரவுவேளைகள் எவ்வளவு கொடுமையானவை!!

"நேற்றிரவு தூக்கமாத்திரையையும் மீறி விழிப்பு வந்தது. நீ தனியே பிணவறையில் படுத்திருப்பாய் என்பது அமானுஷ்யமான பயத்தை ஊட்டியது. எழுந்தமர்ந்து எழுதத் தொடங்குகிறேன். எழுத்தைத் தவிர வேறெவர் என்னைத் தாங்கிக்கொள்ளக்கூடும்…? அதன் தோள்கள் ஒரு பறவையினுடையதைப்போல மிருதுவானவை. புகைப்படத்தில் உன்னை முற்றிலுமாக அடைத்து விடும்முன், நீ மரணத்தின் மூலம் என்னோடு பேசியிருப்பதைச் சேமிக்க விரும்புகிறேன்."


மரணம் பற்றிய குறிப்புகளில் நீங்களே படித்து விடுங்கள்!!


"இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும்."

முகத்திலறையும் உண்மை!! என்னிடம் வார்த்தைகளிலில்லை..மீண்டும் தமிழ்நதியிடமே விட்டு விடுகிறேன்!!

ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.

மழை என்ற பதிவுவினூடாக அமிர்தவர்ஷினி அம்மா என்று அறிமுகப்படுத்தி கொள்கிற இவர் அமித்துவைப் பற்றியும், கவிதைகளையும், மனதை பாதித்தவை பற்றியும் எழுதுகிறார்! அனுபவங்களை கவிதைகளாகவும், பதிவுகளாகவும் ஆக்குகிற வித்தை கைகூடியிருக்கிறது இவரிடம்!!

அனைவராலும் இப்படி தவறை பகிரங்கமாக ஒப்புகொள்ள முடியுமா என்பது சந்தேகமே!! ஆனால் தவறென்றே அறியாத தருணத்தில் செய்தவைகளுக்கு மன்னிப்பு உண்டல்லவோ!! மனதை நெகிழ்த்தும் பதிவு இதோ!


இந்த இரு பதிவுகளின் தளங்கள் வெவ்வேறாயினும் அவைகளின் அடிநாதம் ஒன்றுதான்!

மரணங்கள் கற்றுத் தரும் பாடங்கள்...
வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்...
நாம் செய்த செய்கைகளை விட செய்யாமல் விட்டவைகள் சொல்லும் பாடங்கள்...
என்று பாடங்கள்தான் எத்தனையெத்தனை!!

11 comments:

  1. /*மரணங்கள் கற்றுத் தரும் பாடங்கள்...
    வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்...
    நாம் செய்த செய்கைகளை விட செய்யாமல் விட்டவைகள் சொல்லும் பாடங்கள்...
    என்று பாடங்கள்தான் எத்தனையெத்தனை
    */
    உண்மை முல்லை. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

    ReplyDelete
  2. மரணங்கள் கற்றுத் தரும் பாடங்கள்...
    வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்...
    நாம் செய்த செய்கைகளை விட செய்யாமல் விட்டவைகள் சொல்லும் பாடங்கள்...
    என்று பாடங்கள்தான் எத்தனையெத்தனை!!

    நிஜமாய் மரணம் கற்றுத்தரும் பாடம்
    ஒவ்வொன்றும் ரணமாய் நெஞ்சை அறுக்கும்.

    நன்றி முல்லை,

    நீங்கள் என் பதிவினைப்பற்றி பதிவிட்டதற்கு.

    ReplyDelete
  3. மரணத்தை நெருத்தை நெருங்கும் நேரத்தில் அது உணர்த்தும் பாடங்கள் வலுவானவை. ஆனால் பிராக்ட்டிகல் செய்து பார்க்க நாம் தான் இருக்க மாட்டோம்.

    ReplyDelete
  4. மரணங்கள் கற்றுத் தரும் பாடங்கள்...
    வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள்...
    நாம் செய்த செய்கைகளை விட செய்யாமல் விட்டவைகள் சொல்லும் பாடங்கள்...
    என்று பாடங்கள்தான் எத்தனையெத்தனை!!//

    ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
    அப்துல்லா சொல்லியிருக்கற மாதிரி அதை உணர நாம்தான் இருக்க மாட்டோம்.

    அருமையான தொ்குப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. சமீப காலங்களில் அதிகம் தமிழ்நதி அக்காவின் பதிவுகளை படித்திருக்கிறேன்!

    மனதினை கனக்க செய்யும் எழுத்துக்கு சொந்தக்காரர்!

    உண்மை!

    ReplyDelete
  6. நன்றி அமுதா, அமித்து அம்மா,அப்துல்லா,ஸ்ரீமதி,புதகை தென்றல்,ஆயில்யன்!

    ReplyDelete
  7. மிகவும் நெகிழ்ச்சி தர கூடிய பதிவுகள்..

    ReplyDelete
  8. மனதைக் கனக்கச் செய்யும் பதிவுகளுக்கான சுட்டிகள். நன்றி சந்தனமுல்லை. அமிர்தவர்ஷினி அம்மாவின் பதிவு படித்திருக்கிறேன் முன்னரே. தமிழ்நதியின் பதிவில் என் கருத்தைப் பதிந்தேன்.

    அமுதாவின் இந்தப் பதிவினையும் சேர்த்திருக்கலாமோ...

    http://nandhu-yazh.blogspot.com/2008/11/blog-post.html

    இங்கே அவரது பகிர்தலும் ஒரு வாழ்க்கைப் பாடம்தான். உங்கள் வார்த்தைகளிலேயே சொல்லப் போனால்:
    //நாம் செய்த செய்கைகளை விட செய்யாமல் விட்டவைகள் சொல்லும் பாடங்கள்...//

    ReplyDelete
  9. சந்தனமுல்லை,

    எழுத்தின் தடங்களில் நடந்துபோனால் பல நண்பர்களைக் கண்டடைய முடிகிறது. எழுத்தே இறுதிச் சரணாகதி என்பதைப் பல தடவைகள் உணர்ந்திருக்கிறேன். எனது பக்கத்தை இந்த வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி. அன்றைய நாளை உங்கள் பதிவின் மூலம் நினைவுபடுத்தினீர்கள். எனது கணவரின் சகோதரியின் மகள் இறந்துபோன சமயத்தில் எழுதியது. வாழ்க்கை அபத்தமாகவும் அதேசமயம் அற்புதமாகவும் இருப்பது வியப்பாகத்தானிருக்கிறது.

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவுகள் ....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  11. தமிழ்நதி அக்காவிடம் நிறையக் கதைக்க இருக்கு விரைவில அவவை நேரில சந்திக்க வேணும் எண்டு இருக்கிறன்...

    ஆரம்பத்தில் பார்த்து வியந்த எழுத்துக்களில் இவதான் முதல் ...

    ReplyDelete