வலையில் இருக்கின்ற பெரும் பிரபலங்களின் வலைப்பூக்களை நான் அறிந்திருப்போம். அவற்றுடன் இன்னும் சில அவ்வளவு பரவலாகத் தெரியாத (என்று நான் நினைக்கின்ற) சில தளங்களையும் பார்ப்போம்.
பெரும்பாலும் எல்லோர்க்கும் தெரிந்ததாக இருப்பினும், புதியவர்களும் தெரிந்து கொண்டார்கள் எனில் இன்னும் தெளிவு பெறக் கூடும். அதன் மூலம் வலைப்பதிவுகளில் எப்படி நேரம் வீணாக்காமல், உருப்படியாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பெற்றால், எனது குறிக்கோள் நிறைவேறிற்று என்று திருப்தியுறுவேன்.
நீல.பத்மநாபன்
தமிழில் ஓர் மூத்த எழுத்தாளர். இவரது முதல் நாவலான 'தலைமுறைகள்' தமிழின் முதன் முறையாக முழுக்க முழுக்க வட்டார மொழியைப் பயன்படுத்தி எழுதப்பட்டது. கேரள எல்லையில் வசிக்கின்ற தமிழ் மக்களின் மொழியில் எழுதப்பட்ட நாவல் வந்த காலங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது. இவரது 'இலையுதிர் காலம்' என்ற முதியோர் பிரச்னைகளைப் பேசும் நாவலுக்காக 2007-ம் ஆண்டு சாகித்ய ஆகாதமி விருது பெற்றார்.
தற்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.
இணையதளம் :: நீல.பத்மநாபன்
வலைப்பூ :: நீலபத்மம்
ஜெயமோகன் கூறியது :
நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
நீல.பத்மநாபன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.
பாலகுமாரன்
வணிக எழுத்துக்களில் பெரும் கவனத்தைப் பெற்ற படைப்பாளி, அவரது ரசிகரான கிருஷ்ண துளசி கேட்கும் சந்தேகங்களுக்குத் தரும் பதில்களையும், சில கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் காணலாம்.
பாலகுமாரன் பேசுகிறார்
பா.ராகவன்
சொல்லவே வேண்டாம். உலக வரலாறு, தீவிரவாதம் மேல் ஒரு தீவிரமான ஆர்வம், ஆசை கொண்டு பெரும் புத்தகங்களை எழுதும் பா.ராகவன், எழுதும் இப்போதைய ஹாட் கேக், 'யுத்தம் சரணம்'. இவரது வலைத்தளத்தில் எனக்குப் பிடித்தவை மாமி மெஸ் பற்றிய இவரது வர்ணனைகளும், வீடு மாற்றிப் போன அனுபவங்களும்!
மாலன்
எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான மாலனின் வலைத்தளம். தேர்தல் நேரங்களில் அவர் பேசுவதைத் தொலைக்காட்சிகளில் காணலாம். அதே போன்ற அமைதியான நடையில் எழுதுகிறார்.
சுதாங்கன்
இந்தப் பெயர் எனக்கு முதலில் பரிச்சயமானது, தினமணி கதிரில்! அப்போது அதில் பொறுப்பில் இருந்தாரா அல்லது ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தாரா என்று நினைவில்லை. ஆனால், ஆனந்த விகடனில் கல்லூரிப் பத்திரிக்கையாளர் திட்டத்தைக் கொண்டு வந்ததில் இவருக்குப் பெரும் பங்கு இருந்தது என்பார்கள்.
நெல்லை கண்ணன்
பட்டிமன்றங்கள் வாயிலாகப் பிரபலமான இவர் எழுதிய வெண்பாக்கள் இந்த வலைத்தளத்தில் நெருக்கியடிக்கின்றன.
சாரு நிவேதிதா
கலகக்கார எழுத்து என்று சொல்கிறார்கள். இவர் எழுதியவற்றில் படைப்புகளாக ஏதும் படித்ததில்லை என்பதால் என் கருத்து என்று எதுவும் இல்லை. வலைத்தளத்தில் எழுதியவற்றில் எனக்குப் பிடித்திருந்தன, சுஜாதா - ஒரு கலாச்சார சக்தியும், ஜெயமோகனுடனான இவரது சண்டைப் பதிவுகளும்! முன்னது தமிழ் எழுத்து சூப்பர் ஸ்டாரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தேடித் தேடிப் படிக்கும் இன்பத்திற்காகவும், பின்னது ஊரார் சண்டையை எட்டிப் பார்க்கின்ற தமிழனின் மனோபாவத்திற்காகவும்!
சுஜாதா என்ற கலாச்சார சக்தி - 1
சுஜாதா என்ற கலாச்சார சக்தி - 2
சுஜாதா என்ற கலாச்சார சக்தி - 3
சாரு - ஜெ., சண்டைகள் ஜாலியாக இருக்கும். படித்துப் பாருங்களேன் ::
போய் பணி நோக்கடா மோனே!
போய் பணி நோக்கடா மோனே! - 2
மம்மி ரிட்டர்ன்ஸ்
ஜெயமோகன்
தினமும் எப்படி இத்தனை எழுதுகிறார் என்பது ஆச்சாரியத்துடனான கேள்வி. இலக்கியம் தொடர்பாக எழுதுகின்ற இவரது பதிவுகளை, எழுத்தை ரசிப்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். எழுதுவதில் இருக்கும் சந்தேகங்களுக்கு பதில் தருகிறார்.
இவரும் சும்மா இல்லை..! பல இடங்களில் சாரு நிவேதிதாவைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.
திரிச்சூரில்
ஜூவியின் பதினாறாம் பக்கம்.
சாரு
இவர்களின் அடிதடியை வைத்து நான் எழுதிய ஒரு கிண்டல் பதிவு ::
ஹைய்யா... ஜாலி...!
வினவு எழுதிய கிண்டல் :: பாரு நிவேதிதா - சுயமோகன் ஒரு லடாய் !
எஸ்.இராமகிருஷ்ணன்
நேரில் பார்த்தால் இவரைக் கேட்க வேண்டும் என்று நான் வைத்திருக்கும் கேள்விப் பட்டியலில் முதல் கேள்வி, 'நீங்கள் ஏன் உங்கள் பெயரில் 'இ' சேர்த்துக் கொள்வதில்லை'? ஊர்சுற்றியான... ஓ.. ஓ.கே..ஓ.கே.. தேசாந்திரியான (:)) இவரின் எழுத்துக்கள், பல பயண அனுபவங்களைத் தருகின்றன. என் நண்பன், எனது சில கவிதைக் கட்டுரைகளில் இவரது தாக்கம் இருக்கின்றது என்பான். உலகத் திரைப்படங்களை நகநுனியில் வைத்திருக்கும் இவரிடம் இவ்வருட ஐ.எஃப்.எஃப்.கே. விழாவில் என்னென்ன படங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். பதில் அனுப்பி இருக்கிறார்.
பாமரன்
கோவைக் குசும்பரான பாமரனின் நக்கல் எழுத்துக்களின் பின்னே அவரது கருத்துக்கள் தெளிவாகப் புலப்படுகின்றன.
அ.ராமசாமி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவரான இவரின் வலைப்பூ, படிக்கப் படிக்கப் பல தகவல்களைக் கொட்டிச் செல்கிறது.
தமிழ்வாணன்
தமிழ்வாணனையோ, சங்கர்லாலையோ தமிழ் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. லேனா தமிழ்வாணனின் இணையத் தளம். அவர்களது புத்தகங்கள் போலவே எளிமையாகக் கட்டுரைகளைச் சொல்கிறார்கள்.
தமிழச்சி
'வனப்பேச்சியான' கவிஞர் தமிழச்சியின் வலைப்பூவில் அவரது பத்திரிக்கைப் பேட்டிகள் மட்டுமே இருக்கின்றன. வேறு வகையான கட்டுரைகள் இல்லை. அரசியலில் நேரடியாக இறங்கியுள்ளவர். இவரிடம், 'நீங்கள் அழகாய் இருக்கிறீர்கள்' என்று எத்தனை பேர் சொல்ல முடியும் இப்போது..?
சேதன் பகத்
மிகச் சூடான விற்பனையில் இருக்கும் மூன்று புத்தகங்களை எழுதியிருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். க்ரேஜுவேட்டான சேதன் பகத், இப்போது அடுத்த நாவலுக்கான தயாரிப்பில் ஆழ்ந்துள்ளதாகச் சொல்லியுள்ளதால், இப்போதைக்கு கொஞ்சம் பதிவிடுதலை நிறுத்தி வைத்திருக்கிறார்.
சுப்ரபாரதிமணியன்.
இவரது பெயர் எனக்குச் சட்டென நினைவுபடுத்துவது, வாத்தியார் குமுதத்தின் பொறுப்பாசிரியராக இருந்த போது வைத்த கதைப் போட்டியில், நகரம் - 90 என்று ஹைதராபாத் பற்றி எழுதி, ஐரோப்பிய டூர் சென்று வந்தார். ஏர் - இந்தியா ஸ்பான்சர். நான் கூட ஏதாவது எழுதி அனுப்புவோமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என்னால் ஏன் மறக்க முடியவில்லை என்றால், முதலில் 'கர்ஃப்பியூ' என்ற வார்த்தை அந்தக் அக்தையில் தான் அறிமுகமாயிற்று.
சத்யராஜ்குமார்.
ராஜேஷ்குமார் நாவல், கதை தலைப்புகள் (மூன்று நொடி முத்தம்!) போலவே தோன்றுகின்ற இவரது கதைகள் பல வகைப்பட்டவை. என்ன தான் யோசித்தாலும் இவரது முகம் நடிகர் சத்யராஜ் போல இருப்பதாக கற்பனை செய்ய முடிவதை தடுக்க முடிவதில்லை.
டாக்டர்.ருத்ரன்
மனோதத்துவ மருத்துவரான இவர் ஆங்கிலத்தில் எழுதும் வலைப்பதிவு.
டாக்டர்.ஷாலினி
இவர் எழுதிய 'ஆண்களைக் கையாள்வது எப்படி?' என்ற பதிவு எனக்கு பிடித்திருந்தது.
சின்மயி
பாடகியும், நிகழ்ச்சி நடத்துனருமான சின்மயி எனக்கெல்லாம் சீனியர். 2005-ல் இருந்து வலைப்பதிவு நடத்தி வருகிறார்.
உமர் அப்துல்லாஹ், Dr.மஹாதீர் மொஹம்மத், ஆமிர் கான் ,Big B , அனுராக் காஷ்யப் , இராம் கோபால் வர்மா ,ரேவதி என்று பல பிரபலங்கள் தனி வலைப்பதிவுகளோ, தளமோ வைத்து ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள விழைவதை வரவேற்கலாம்.
பல பிரபலங்களின் வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. நிறைய உழைத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
ReplyDelete24மணி நேரம் நடக்கும் கதை தானே 'தலைமுறைகள்' ?!! இந்த நாவல் வாசித்திருக்கிறேன். முழுமூச்சாய் வாசித்து முடித்த புத்தகம்.
வித்யாசமான பயனுள்ள தொகுப்பு, வசந்தன், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅட்டகாசமான லிஸ்ட். நன்றி.
ReplyDeleteநான் ஒண்ணு சொல்லலாமா? இன்னொரு பாலிவுட் டைரக்டர் கரன் ஜோஹரின் ப்ளாக் இது.
http://www.mynameiskaran.com/default.aspx
பல பிரபலங்களின் வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. //
ReplyDeleteரிப்பீட்டு
மற்றவை எப்படியோ....
ReplyDelete//என்ன தான் யோசித்தாலும் இவரது முகம் நடிகர் சத்யராஜ் போல இருப்பதாக கற்பனை செய்ய முடிவதை தடுக்க முடிவதில்லை//
இதை என்னாலும் தடுக்க முடியவில்லை...
புதுப்புதுத் தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்... நன்றி வசந்த்...
நொம்ப பிரயோசனமான தாக்கல் இது கண்ணு! நொம்ப சந்தோசம்!!
ReplyDeleteஎல்லாத்தையும் எம்பொட்டியில குறிச்சி வெச்சிக்கிட்டு, நேரங் கெடைக்கும் போது படிக்கோனும். நொம்ப நன்றி!!
மிகப் பயனுள்ள அறிமுகமும் சுட்டியும். நன்றி.
ReplyDeleteதொடர்ச்சியாக பதிவிடும் அனைத்துப் பிரபலங்களின் வலைப்பதிவுகளும், சங்கமத்தில் திரட்டப்படுகிறதுங்க. சின்மயி, ஆங்கிலம்கிறதனால ஆங்கில திரட்டில வருது. ஒரு மாசம் நானும் இப்படித்தான் தேடிப்புடிச்சேன்..
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுள்ள பலர் பதிவுகளை படிக்க எனக்கு ஆசை, அதற்க்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஅருமையான தொகுப்பு
ReplyDeleteமிக அருமையான, தகவல்கள் நிறைந்த பதிவு. மாலன் பதிவு எழுதுகிறார் என்பதே ஒரு செய்தி. நன்றிகள் பல வசந்த்.
ReplyDeleteஅனுஜன்யா
கடுமையான உழைப்பு தெரிகிறது வசந்த்....ஒன்றிரண்டு முன்பே தெரியும் என்றாலும் நிறைய புதியவை.நன்றி வசந்த்.
ReplyDeleteஅன்புடன் அருணா
எல்லாரையும் ரிப்பீட்டுக்கறேன். sorry for the delay
ReplyDeleteஅன்பு சதங்கா..
ReplyDeleteநன்றிகள். இன்னும் 'தலைமுறைகள்' இன்னும் முழுதாகப் படிக்காததால், 24 மனி நேரக் கதையா என்று தெரியவில்லை. :)
***
அன்பு கார்த்திக்...
நன்றிகள். கரண் ஜோஹருடைய ப்ளாக்கையும் சேர்த்துக் கொள்கிறேன்.
***
அன்பு புதுகைத் தென்றல்...
ரிப்பீட்டு நன்றிகள்...!
***
அன்பு பழமைபேசி..
நெம்ப சந்தோசமுங்க..! எல்லாத்தையும் படிச்சுப் போட்டு சும்மா உட்ராதீங்க..! அப்பப்ப உங்க ப்ளாக்குலயும் கருத்தை எழுதிப்புடுங்க..சொல்லிப் போட்டேன், ஆமா...!
***
அன்பு கிருத்திகா, தமிழ்ப்பறவை, வடகரை வேலன், இளா, கிரி, கானா பிரபா, அனுஜன்யா, அன்புடன் அருணா, கபீஷ்...
நன்றிகள்..!
நினைத்துப் பார்க்க முடியாத கடின உழைப்பு.பிரம்மித்து போனேன்.
ReplyDeletejeevaflora