Wednesday, December 17, 2008

நகைச்சுவைப்போம்.!

நானெல்லாம் எழுதுவ‌தே ஒரு ந‌கைச்சுவைக்குரிய‌ விஷ‌ய‌ம்தான் எனினும், உங்க‌ளுக்குத் தருவ‌த‌ற்காக‌ த‌னியாக‌ சில‌ வ‌லைப்பூக்க‌ளைத் தேடிப்பார்த்தேன்..

அன்பு நிறைந்த அண்ணன் வடகரை வேலன் அவர்கள் மிகுந்த படிப்பாளி. தனது அனுபவங்களில் இருந்தும், வாசிப்பில் இருந்தும் அவர் தரும் படைப்புகள் ரசனைக்குரியவை. நகைச்சுவையிலும் கலக்குவார். அவரது மிக சமீபத்திய பதிவு ஒன்றில் கொசுக்க‌ளை அழிப்ப‌து எப்ப‌டி என்ப‌தை க‌ற்றுத்த‌ருகிறார். த‌வ‌றாம‌ல் போய் க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். இல‌வ‌ச‌ இணைப்பாக‌ ந‌ண்ப‌ர் சென்னிட‌ம் எறும்புக‌ளை ஒழிக்கும் வ‌ழியையும் க‌ற்றுக்கொள்ள‌லாம்.

மிக‌ அரிதாக‌ எழுதும் ந‌ண்ப‌ர் ம‌தி ச‌மீப‌த்தில் ப‌ழ‌ம்பெரும் நகைச்சுவை லெஜ‌ன்ட் தேவ‌னை நினைவூட்டி எழுதிய‌ இந்த‌ப்ப‌திவையும் காணுங்க‌ள். நண்பர் டிவிஆரின் இந்த நகைச்சுவைத் தொகுப்பையும் காணுங்கள்.

மேலும் சில‌ புதிய‌ <என‌க்குப் புதிய‌ என்று அர்த்த‌ம்> வ‌லைக‌ளையும் மேய்ந்தேன். தங்கமணி டாப்பிக்கில் ஏற்கனவே கலக்கிய பினாத்தல் சுரேஷ், புதுகைத்தென்றல் இவர்களோடு நானும் சமீபத்தில் இணைந்தேன். ஆனால் உண்மையில் இன்னும் பல ஸ்பெஷலிஸ்ட்டுகளும் இருக்கக்கூடும், குறைந்த பட்சம் தொடராக இல்லாமல் அவர்கள் சில பதிவுகளாவது எழுதியிருக்கக்கூடும். அப்படி ஒரு ஆத்திச்சூடியொன்றைக் கண்டேன். இவர் புதியவர் போலத் தெரிகிறது. சாம்பிள் : ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. தொடர்ந்து கலக்குவாரா இந்த‌ ராஜேஷ்?

மற்றொரு புதிய பதிவரான சுரேஷின் இந்த‌ க‌ல்லூரிப்போஸ்ட‌ரைப் பார்க்க‌லாம்.

பிர‌வுசிங் சென்ட‌ரிலிருந்து துர‌த்த‌ப்ப‌டுவ‌தால் பாதியிலேயே இந்தப்பதிவை முடிக்கிறேன். முடிந்தால் இதே டாபிக்கை நாளையும் தொட‌ர்வேன்.

14 comments:

  1. நான் பஷ்டு...

    ReplyDelete
  2. எனது பதிவை பார்த்து ரசித்தமைக்கும், வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் மிக்க நன்றி தாமிரா.

    ReplyDelete
  3. சுவைக்க நாங்க தயார்.. ஆனா மினி மீல்ஸ் வேலைக்காவது.. இன்றாவது ஃபுல் மீல்ஸ் ஏற்பாடு பண்ணுங்க..

    ReplyDelete
  4. Present Sir!

    (தூக்கம் வந்தா தூக்கம் வருதுன்னு சொல்லுங்கய்யா. பாவம், ப்ரௌசிங் செண்டர் காரனை எதுக்கு காரணம் சொல்லுவீங்க? சூதுன்னா என்னான்னு எங்களுக்கும் தெரியும்டி!)

    ReplyDelete
  5. :)

    வலைச்சரம் வாழ்க

    ReplyDelete
  6. //அறிவியல் பாட சம்மந்தப்பட்டது என்பதால் பிற்காலத்தில் என் வம்சத்தினர் ஒருவராவது பங்கெடுக்க முயற்சி செய்ய வைக்கிறேன்.
    //

    நான் இதை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  7. நன்றி மகேஷ்.!
    நன்றி விஜய்.!
    நன்றி SK.!
    நன்றி TVR.!
    நன்றி ச்சின்னவர்.!
    நன்றி அப்துல்.!

    நன்றி மதி.! (ஹிஹி.. அது என் கடமை!)

    நன்றி கார்க்கி.! (பிள்ளையாரே பெருச்சாளியில் போகும் போது பூசாரி புல்லட் கேட்டாராம்)

    நன்றி பரிசல்.! (உங்களை பூச்சாண்டி புடிச்சுட்டுப்போயிட்டானாமே, அப்பிடியா?)

    நன்றி வால்.! (பார்த்து ரொம்ப நாளாவுது வால்.! எப்பிடியிருக்கீங்க?)

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,

    எனது பதிவினை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete