Thursday, December 18, 2008

ஆனால், நான் அவனது பக்தன்.!

அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப்போல சிந்தனையை சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும்காட்டிய பகுத்தறிவு பகலவன்.

அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக்குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நான் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத்தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.

புதிய‌ க‌லாச்சார‌ம் இத‌ழில் வெளியான‌ ஒரு க‌ட்டுரை 'வின‌வு' வ‌லைப்பூவில் அனும‌தியுட‌ன் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆரோக்கிய‌மான‌ சிந்தனை, அதே நேர‌ம்அது வ‌ள‌மான‌ மொழிநடையில் சொல்ல‌ப்ப‌ட வேண்டும். இப்ப‌டித்தான் என‌து எழுத்துக‌ள் இருக்க‌வேண்டும் என‌ நான் விரும்புகிறேன், அதை நோக்கியே ப‌ய‌ணிப்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழல்வது குறித்த‌ ஒரு சிறு பார்வை.‌ என்னை சமீபத்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌ட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவிய‌ரின் அழ‌கான‌ ந‌டையில் லைட்டான‌, ஆனால் சிந்த‌னைக்குரிய‌ ப‌திவு ஒன்றையும் காணுங்க‌ள்.

பெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என‌ தெரிய‌வில்லை எனினும் வேறு சில பிரமாதமான விஷ‌ய‌ங்க‌ள் TBCD யின் ப‌திவுக‌ளில் அழ‌கான‌ ந‌டையில் க‌ண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு ம‌திப்புக்குரிய‌ க‌ட்டுரையை த‌மிழ் ஓவியாவின் இந்த‌ப்பக்க‌த்தில் காண‌லாம்.

மேலும் தேடிய‌றிவோம் அறிவுச்செல்வ‌த்தை.! பெண்க‌ளுக்கான‌ ச‌ம‌ உரிமையும், சுத‌ந்திர‌மும் பெரிய‌ ம‌ன‌தோடு நாம் வ‌ழ‌ங்குவ‌து என்றோ, அவ‌ர்க‌ள் போராடிப்பெற‌வேண்டிய‌து என்றோ அல்லாம‌ல் கால‌ங்கால‌மாய் அதைச்செய்த‌ ஆண்க‌ள் ம‌ற்றும் அதை ஒப்புக்கொண்ட‌ பெண்க‌ள் இருவ‌ர‌து த‌வ‌றேயென‌ அறிந்து அன்பும் ஒழுக்க‌மும் ஆன‌ அற‌வாழ்வை ச‌ம‌வாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..‌‌) வாழ்த்துக‌ள்.. நாளைக்குச்ச‌ந்திப்போமா?

9 comments:

  1. அடடா இந்த வாரம் நீங்களா வாழ்த்துக்கள் அண்ணன்...

    உண்மைதான் சுட்டிகளின் மூலம் பயணித்தலும் பின்னூட்டங்களின் வழி வாசித்தலும் வித்தியாசமான வாசிப்பனுபவங்களை தருவது...

    ReplyDelete
  2. மக்கள் அனைவரும் சமம்.
    ஆணும் பெண்ணும் சமமாக நண்பர்களாக வாழ வேண்டும்.
    மூட நம்பிக்கைகள் ஒழிந்து,அவரவர் சிந்தித்து நல்லது என்று படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும்,இல்லா விட்டால் யார் சொன்னதாக இருந்தாலும் தள்ளி விட வேண்டும்.சாமி,கடவுள்,மதம் என்பதற்காகப் பகுத்தறிவை வீணாக்காமல் சிந்தித்துப் பயனடைய வேண்டும்.
    எளிமை,ஒழுக்கம்,மனித நேயம்,குடும்பக் கட்டுப்பாடு,விஞ்ஞான வளர்ச்சிகளைப் பயன் படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுதல் என்பன வாழ்க்கை முறையாக வேண்டும்.

    இதைச் சொன்னப் புரட்சியாளருக்கு
    எதற்கு எதிர்ப்பு என்று அனைவரும் சிந்திக்க வேண்டும்.
    டிச் 24 அவரது நினைவு நாள்.

    ReplyDelete
  3. லேசா தலை சுத்துது.....
    இருங்க ஒரு மாத்திரை போட்டுட்டு வரேன் ....

    ReplyDelete
  4. //லேசா தலை சுத்துது.....
    இருங்க ஒரு மாத்திரை போட்டுட்டு வரேன்//

    ரிப்பீட்டேய்ய்ய்

    ReplyDelete
  5. வெரும் ஊருகாய வச்சி என்ன செய்ய/ புல் மீல்ஸ் எப்ப

    ReplyDelete
  6. எங்கெங்கெயோ போகச் சொல்றீங்க, என்னென்னவோ படிக்கச் சொல்றீங்க,
    படிச்சிட்டு வந்து தனியா கும்முறோம்.

    ஆனாலும் அநியாயத்துக்கு பொறுப்பா இருக்காரு நம்ம தல.

    ReplyDelete
  7. அட! நல்ல நல்ல அறிமுகங்கள்!

    நன்றி நண்பரே..!

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    (இது வலைச்சரத்துக்கான டெம்ப்ளேட் பின்னூட்டம்!) :-))))

    ReplyDelete
  8. அட! நல்ல நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete