இன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில் கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம் தான் அதன் சிறப்பு. இதனால் வலைப் பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறு வடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்.வலைப்பதிவுகள் பற்றி எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருக்கிறார்.
என்னை நம்பி?! வலைச்சர ஆசிரியர் பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி சீனா ஐயா!
வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தினமலர் நாளிதழ் மூலம் எனக்கு கிடைத்தது. ஏதோ ஒரு சுட்டியை அறிமுகம் செய்திருந்தார்கள். அந்த சுட்டியின் வழியாக சென்று படிக்க ஆரம்பித்து, இப்போது எந்த விசயத்திற்கும் நான் எடுக்கும் முடிவுகளை கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துமளவுக்கு மிகப்பெரிய நட்பு வட்டத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
இரண்டு நாட்கள் தொலைபேசாதிருந்தால் கூட வாஞ்சையோடு எனை அழைத்து நலம் விசாரிக்குமளவு என்னுள்ளே கலந்து விட்டார்கள்.
வலைப்பதிவால் என்ன கிடைக்கிறது? கிடைத்தது? என கேட்கும் பலர் என்ன இழந்தீர்கள்? என சொன்னால் நன்றாயிருக்கும்.
எனக்கு பல நண்பர்கள், சகோதரர்கள் கிடைத்திருக்கிறார்கள். வேறென்ன வேண்டும்?
முதலில் பின்னூட்டத்திற்காக ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்.
பின் எழுத ஆரம்பிக்கலாம் என்ற ஆசை வந்த போது, ப்ளாக்கரை கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இடையில் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் என் ஆராய்ச்சிக்காக :) தொடங்கப்பட்டது.
http://nilalpadam.blogspot.com/
http://veyilaan1.blogspot.com/
உண்மையைச் சொன்னால், பயனர் கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டேன்.
அந்த நேரம் பல வலைப்பதிவர்கள் ப்ளாக்கரிலிருந்து, வேர்ட் பிரஸ்க்கு தங்களின் தளத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். விடாத வேதாளமாக வேர்ட் பிரஸ்ஸில் ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்.
திரும்பவும் முயற்சித்ததில் ப்ளாக் ஸ்பாட் பற்றி கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. ஆனால் வேர்ட் பிரஸ் மிக இலகுவானதாக தோன்றியது. அதனால் வேர்ட் பிரஸ் தளத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
சாதாரணமாக ஒரு பதிவு எழுதி விட்டு பல தடவை எனக்கு திருப்தி ஏற்படும் வரை திருத்திக் கொண்டே இருப்பேன். அதனால் மிகவும் அரிதாகத் தான் என்னுடைய பதிவுகள் இருக்கும்.
மே 2007ல் எழுத ஆரம்பித்தேன். தொடர்பு கொண்ட, சந்தித்த முதல் வலைப்பதிவர் இவர் தான்.
என்னைப்பற்றிய அறிமுகம் இது.
எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லோரும் திருந்துங்கனு அறிவுரை சொல்லி ;) முதல் செங்கல் எடுக்கிறேன் என்று ஒரு பதிவு. இந்தப் பதிவை இப்போது படித்தாலும் அதிலுள்ள கருத்துக்கள் பொருந்தும்.
பின் தமிழ் மணத்தின் பூங்கா இதழுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்க ஆங்ஞான் என்ற பதிவு.
சற்றுமுன் செய்தித்தளம் நடத்திய செய்தி விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பதிவு கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும்.
சுருட்டுக்கடை - எனக்கு மனநிறைவளித்த ஒரு பதிவு. இப்பதிவு மதி கந்தசாமி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பின் போர்ச்சுக்கீசிய மொழியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
ஆங்கிலம் - The Cheroot Store
போர்ச்சுகீசியம் - O armazém de Charuto
ஸ்பானிஷ் - La tienda de Puro
ஆகஸ்டு 2007ல் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக இருந்த போது எழுதியதில் ஒரு பதிவு.
பிரம்மராயரும், சீராளனும்.
பல பதிவர்களையும், பதிவுகளையும் இனி வரும் பதிவுகளில் எனக்குத் தெரிந்த வரையில் அறிமுகப்படுத்துகிறேன். ஒவ்வொரு பதிவும் கோர்வையாக இருக்காது. கரிசக்காட்டில் மனம் போன போக்கில் காலாற நடந்து போற மாதிரி இருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் வெயிலான். 'வலைச்சரம்' மின்னிதழுக்காகவாவது நீங்கள் எழுதியே ஆக வேண்டும். :)
ReplyDeleteநிறைய எதிர்பார்ப்புகளுடன்
அனுஜன்யா
வாழ்த்துக்கள் வெயிலான்! கலக்குங்க..வழக்கம் போல!!:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் வெயிலான்...
ReplyDeleteகலக்கலான ஆரம்பம்...
// 'வலைச்சரம்' மின்னிதழுக்காகவாவது நீங்கள் எழுதியே ஆக வேண்டும். :) //
ReplyDeleteஉங்களுக்கும் தெரிந்து விட்டதா? :)
வாழ்த்துக்களுக்கு நன்றி!
வாழ்த்துக்களுக்கு நன்றி முல்லை!
ReplyDeleteநன்றி மகேஷ்!
ReplyDeleteappaadi...vanthutteengala??? naan romba naalaaga eppadaa neenga valaicharam editor aaga varuveengannu yethipaarthukittu iruntheen. kaaranam periya rasanayaana padippaali neenga, nalla nalla pathiva solluveenga
ReplyDelete:)
கனியாக் கனிகள் = இன்று தான் படித்தேன்.
ReplyDeleteநல்ல பதிவு..
அடுத்தடுத்த நாட்களுக்காக
ஆவலோடு..
வாஆஆஆஆஆஆஆஆஆழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவாழ்த்துகள் வெயில்.!
ReplyDeleteவாழ்த்துக்கள் வெயிலான்!
ReplyDeleteவலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteஅம்புட்டு நம்பிக்கை வச்சிருக்கீங்களா அப்துல்லாண்ணே! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி!
ReplyDeleteதிகழ்மிளிர்,
ராசு,
பரிசல்காரன்,
தாமிரா,
நிஜமா நல்லவன்,
பிரபு.
///புதுகை.அப்துல்லா said...
ReplyDeleteappaadi...vanthutteengala??? naan romba naalaaga eppadaa neenga valaicharam editor aaga varuveengannu yethipaarthukittu iruntheen. kaaranam periya rasanayaana padippaali neenga, nalla nalla pathiva solluveenga
:)////
மறுக்கா கூவிக்கிறேன்!
வாழ்த்துக்கள் வெயிலான்!
ReplyDeleteகூவிகின தமிழ்பிரியனுக்கும், குசும்பனுக்கும் நன்றி!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே..!
ReplyDeleteஅருமையான பதிவு வெயிலான் - சுய அறிமுகம் நல்ல முறையில் செய்யப்பட்டிருக்கிறது. சுஜாதாவின் வலைப்பூவினைப் பற்றிய கருத்துடன் ஆரம்பிக்கப்பப்பட்ட பதிவு நல்ல பல பதிவுகளைச் சுட்டியது சாலச் சிறந்தது.
ReplyDeleteதொடர்க - நல்வாழ்த்துகள்
// சுஜாதாவின் வலைப்பூவினைப் பற்றிய கருத்துடன் ஆரம்பிக்கப்பப்பட்ட பதிவு //
ReplyDeleteநீங்கள் தான் இதைக் கவனித்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி சீனா ஐயா!
நன்றி! நாடோடி இலக்கியன்.
அட
ReplyDeleteநீங்க தமிழ்மணத்திலேயே நட்சத்திர பதிவரா இருந்துருக்கிங்களா!
நீங்க இப்போ தான் எழுத வந்திருப்பிங்கன்னு தவறா நினைச்சிட்டேன்
ஸாரிங்க
// நீங்க இப்போ தான் எழுத வந்திருப்பிங்கன்னு தவறா நினைச்சிட்டேன்
ReplyDeleteஸாரிங்க //
இதுல தப்பேதுமில்லையே. எதுக்கு அருண் ஸாரியெல்லாம்?