வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Wednesday, December 24, 2008
வலைப்பதிவர்கள் தினம்
தூங்குகிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும் போதும், அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டறையைச் சுற்றி கிடப்பது போல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.
வேர்ட் பிரஸ்ல இருக்கிற பல பதிவுகள் நிறைய பேரால் படிக்கப்படுவதில்லை. நானும் வேர்ட்ப்ரஸ்க்காரன் தான்.
நனவுகள் என்ற பெயரில் மலேசியாவிலிருந்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் முன்னாள் அரசு ஊழியர்.
உழைப்பு முயற்சி, வாழைப்பழம், திருமறை
சொல்ல மறந்த கவிதை
பொங்கல் மறந்து
பீட்ஜா சாப்பிடும் பீடைகள்
பச்சை அட்டைக்காக
பலவும் துணிந்த பாவிகள்
மானமிழந்து தூதரகம் முன்னர்
விசாத் தவம் கிடந்த வீணர்கள்
நுனி நாக்கு ஆங்கிலம் பேசி
பொழுது போக்கு தமிழ் வளர்ப்பவர்கள்
தன்னையே அடகு வைத்து
டாலருக்கு சோரம்போன டாம்பீகர்கள்
கோக் பெப்சி குடித்து
காளிமார்க் தூற்றும் கபோதிகள்
திரைகடலோடி டமில் மழலைச்
செல்வங்கள் சேர்த்த ஓடுகாலிகள்
புரியாமல் வசைகள் பாடியிருப்பேனோ?
புலம் பெயரா விட்டால்...
எனக்கவிதை கூறுமிவர் முன்பு நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது எழுதுவதில்லை. அவருடைய சிறுகதை.
சாரு, திருப்பூரிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் ஆர்.பி.இராஜநாயகம், மலைவாசி போல மும்பையிலிருந்து எழுதும் இவருடைய எழுத்துக்கள் கொஞ்சம் எசகுபிசகாக இருக்கும். படித்து விட்டு எனக்கு கண்டன கடிதம் அனுப்ப வேண்டாம்.
ஆகஸ்டு 1997ல் சென்னையில் வலைப்பதிவர் பட்டறையில் இவரைப் பார்த்த போது, மிகவும் சுறுசுறுப்பாக களப்பணியிலிருந்தார். ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவரென்றாலும், பதிவர் பட்டறை என்றால் என்ன? எப்படி நடந்தது என கேட்கும் புதியவர்களுக்காக அவருடைய பதிவு - பதிவர் பட்டறை.
நந்தாவின் கிறுக்கல்கள்
வலையுலக கி.ரா என பட்டம் கொடுத்திருக்கிறேன் இவருக்கு. அடிக்கடி என்னிடம் தொலைபேசுபவர். தொழில் நிமித்தமாக எப்போது கோவைப் பக்கம் வந்தாலும், பேசுவதுண்டு.
வேறு தளத்தில் சாமிகளைப் பற்றியும், ஆடாக வாழ்தலைப் பற்றியும் இவரின் கவிதைகள்.
நந்தா, வலையுலக கிராவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. செப்டம்பர் 1 வலைப்பதிவர் தினம் என்று சொல்கிறார்கள். அதையொட்டி வந்த ஒரு பதிவில் எங்கள் மூவரின் சுட்டியும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது - வலைப்பதிவர்கள் தினம்.
"வலையுலக கி.ரா. "
ReplyDeleteநல்ல அறிமுகம் வெயிலான். நன்றி.
வெயிலான் வித்தியாசமான ரசனை உள்ளவர்னு தெரியும் சுட்டிகளும் அப்படித்தான் இருக்கிறது...
ReplyDeleteஆர் பி ராஜநாயகம் சத்தமில்லாமல் பதிவுகளை எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார் சுவாரஸ்யமான பல அனுபவங்கள் இவரிடம் இருக்கிறது பதிவுகளும் அப்படியே...
ReplyDeleteநந்தா பல் முக வாசிப்பு உள்ளவர் என்றாலும் காதல் பதிவுகளில் தான் இவரை அதிகம் சிலாகித்திருக்கிறேன் நாங்களும் காதல் கதிவுகளில்தானே பதிவுகளுக்கே வந்தோம் :)
ReplyDeleteநல்ல சுட்டிகள்...
ReplyDeleteஉலகத்தில் எங்கிருந்தாலும், முதலில் குரல் கொடுக்கும் மகேஷ் அண்ணனுக்கு நன்றிகள்.
ReplyDeleteவேற்றுக்கிரகத்தின் இளவரசா! ஒரு சுட்டிக்கொரு பின்னூட்டம் போட்டு கலக்கீட்டிங்க. நன்றி! தமிழன்.
ReplyDeleteவெயிலான்..சுட்டிகளுக்கு நன்றிகள். படித்துவிட்டு வருகிறேன்.வேர்ட்பிரஸ்-லில் எழுதுபவர்கள் பதிவுகள் நிறைய பேரால் படிக்கப்படுவதில்லைதான்.. .மன்னிக்கவும்..பதிவர் பட்டறை 2007 என நினைக்கிறேன்...
ReplyDeleteவேர்டு பிரஸில் கமெண்ட் போட்டால் மெயிலில் பெற முடிவதில்லை, அதற்கு எதாவது வழியுண்டா?
ReplyDelete// பதிவர் பட்டறை 2007 என நினைக்கிறேன்...//
ReplyDeleteஐயோ! ஆமாம் 2007. தவறாக 1997 என்று குறிப்பிட்டு விட்டேன்.
நன்றி சந்தனமுல்லை!