கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் வெயிலான் என்ற ரமேஷ் புதுமுறையில் பதிவுகளை அறிமுகம் செய்தார். அனைத்துப் பதிவுகளையுமே ஒரு படத்துடன் துவக்கினார். பல பழைய பதிவுகளையும் புதிய பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவர் அதிகம் படிப்பவர் - அதிகம் உழைப்பவர் என்று அவரது வலைச்சரப் பதிவுகளின் மூலம் தெளிவாகிறது. பலப் பல பதிவுகள் - அதிகம் அறியப்படாத பதிவுகள் - பலவற்றை அறிமுகம் செய்தார். பல்வேறு வகையான பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவரது ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஒரு வார கால ஆசிரியர் பொறுப்பு போதாது. இன்னும் பல வாரங்கள் பொறுப்பில் அமர்த்தலாம்.
நண்பர் வெயிலான் என்ற ரமேஷிற்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினை மனமார வலைச்சரக் குழுவினர் சார்பினில் தெரிவித்து விடை அளிப்பதில் பெருமை அடைகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------
டிசம்பர்த் திங்கள் 29ம் நாள் துவங்கும் வாரத்திற்கு இனிய நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் அன்புடன், பண்புடன் போன்ற பல குழுமங்களிலும் பத்துக்கு மேற்பட்ட வலைப் பூக்களிலும் எழுதி வருகிறார். அயராது இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். கீற்று, வார்ப்பு, அதிகாலை மற்றும் திண்ணண போன்ற இணைய இதழ்களிலும் கதை கவிதை எனக் கலக்குகிறார்.
ரேடியோஸ்பதியின் சிறப்பு நேயராகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அட்லாஸ் சிங்கமாகவும் ஜொலித்திருக்கிறார். வ.வா.சவில் ஒரு மாத காலத்தில் 20 பதிவுகள் இட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றவர். கலக்கு கலக்கு என கலக்கியவர். கும்மி அடிப்பதில் சிறந்தவர் என நிரூபித்தவர்.
அவரை அதிகமாக அன்பாக வற்புறுத்தி இவ்வார ஆசிரியராகப் பொறுப்பேற்க வைத்திருக்கிறோம். அவர் இவ்வாரம் முழுவதும் கலக்க, அவரி வருக வருக என வரவேற்கிறோம்.
நல்வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்
சீனா
அன்பின் நண்பர் சீனா,
ReplyDeleteமிகப் பொறுப்பான பதவியில் அமர்த்தி, முன் வரிசையிலிருந்து கண்காணிக்கப்போகிறீர்களென எண்ணுகிறேன். :)
மகிழ்ச்சிதான்..இணையத்தடங்கலும் நேரமின்மையும் தான் பின்னால் துரத்துகின்றன.. :(
நாளை முதல் பதிகிறேன் ஒவ்வொன்றாக..!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி நண்பரே :)
பாராட்டுக்கள் வெயிலான் ரமேஷ்...
ReplyDeleteநன்றி...
வாழ்த்துக்கள் ரிஷான் கலக்குங்க...
ReplyDelete\\
ReplyDeleteஅயராது இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்.
\\
ஆமா நிச்சயமா!!!
மனுஷன் எவ்வளவு விசயத்தை எழுதுறாருப்பா...!!
வாழ்த்துக்களுக்கு நன்றி சீனா ஐயா!
ReplyDeleteஒவ்வொரு வாரமும் ஒருவரை ஆசிரியராக்கி அழகு பார்க்கும் உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி தமிழன் - கறுப்பி
ஆர்குட் நாயகன், காதல் மன்னன், கவிஞன் ரிஷான் ஷெரீப்க்கு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரிஷான்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வெயிலான்.
ReplyDelete((ஆர்குட் நாயகன், காதல் மன்னன், கவிஞன் ரிஷான் ஷெரீப்க்கு வாழ்த்துக்கள்!!!))
ஆஹா ஆஹா .
ஆர்குட் நாயகன்,காதல் மன்னன் என இத்தனை சிறப்புகளையும் கொண்ட தம்பி ரிஷானுக்கு வாழ்த்துக்கள்.
//வாழ்த்துக்கள் ரிஷான் கலக்குங்க...//
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தமிழன் - கறுப்பி :)
வாங்க வெயிலான் :)
ReplyDelete//ஆர்குட் நாயகன், காதல் மன்னன், கவிஞன் ரிஷான் ஷெரீப்க்கு வாழ்த்துக்கள்!!! //
போற போக்குல சரவெடியைக் கொளுத்திட்டுப் போறீங்களே..அவ்வ்வ்வ்..
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)
வாங்க பஹீமா அக்கா :)
ReplyDelete//ஆர்குட் நாயகன்,காதல் மன்னன் என இத்தனை சிறப்புகளையும் கொண்ட தம்பி ரிஷானுக்கு வாழ்த்துக்கள். //
இந்த அடைமொழிகளுக்கு அர்த்தமே தெரியாத தம்பிக்கு வாழ்த்துக்களை சும்மா சொன்னால் போதும். :P
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா :)