நண்பர்கள் அனைவருக்குமான இனிய வணக்கங்களைச் சுமந்தவனாக இங்கு வந்திருக்கிறேன் !
பேராற்றல் மிக்கவர்கள் பலர் சூழ்ந்திருக்கும் 'வலைச்சரம்' எனும் மேடையில் ஏறத்தயங்கி, ஆறு மாதங்களுக்கும் மேலாகத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவனை ஒரு வார ஆசிரியரெனும் கிரீடத்தைச் சூட்டவெனத் தொடர்ந்தும் கைப்பிடித்து இழுத்து இன்று மேடையில் ஏற்றி, அன்பாய்ப் பார்த்து மகிழும் நண்பர் சீனாவுக்கு நன்றி !
வேலை செய்யும் நிறுவனத்தின் கணனியையும், இணையத்தையும் மட்டுமே நம்பிப் பதிவிட்டும், எழுதியும் வருமெனக்குப் பலராலும் பார்க்கப்படும் ஒரு இணையத்தளத்தில் ஒரு வாரம் தொடர்ந்தும் பதிவிடுவதாக வாக்குக்கொடுத்துவிட்டு மேற்சொன்ன இரண்டும் அல்லது இரண்டிலொன்றேனும் ஏமாற்றிவிடுமெனில் , வாக்குமீறிவிட்டேனெனும் தவறான புரிதல்களுக்கு ஆளாகிவிடுவேனென்ற அச்சமே ஓடி ஒளிய விதித்தது என்னை.
இருப்பினும் எத்தனை காலம்தான் மறைந்தொளிதல் இயலுமெனக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆழ் மனதின் கேள்விக்கு துணிச்சலாகப் பதிலிட முனைந்திருக்கிறேன் இன்று..!
முதல் பதிவு என்னைப் பற்றிய அறிமுகம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பெரிதாகச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை தாய்த்தேசம் இலங்கையென்பதைத் தவிர..!
நாட்டின் நிலைமையும், எதிர்காலம் குறித்த அச்சங்களும், கனவுகளும் வேறொரு நாட்டினைப் பிழைப்புக்காக நாடச் செய்திருக்கிறது . முதன்முதலாகப் பிரிய நேரிட்ட தாய்மண்ணும், வீடும் குறித்தான பால்ய மற்றும் பழைய நினைவுகள் துரத்திவர அவற்றைத் திசைதிருப்பவென எழுத்தின் கைப்பிடித்தேன். தனிமையின் கோரக் கரங்களில் நான் சிக்கிவிடாதபடி என்னை இழுத்துக்கொண்டு ஓடுகிறது இப்பொழுது அது.
கவிதைகள், சிறுகதைகள், எண்ணச் சிதறல்கள், விமர்சனக் கட்டுரைகள், புகைப்படங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, சிந்திக்கச் சில படங்கள், ஆங்கிலப்பதிவுகள் என நேரம் வாய்க்கும் தருணங்களிலெல்லாம் எழுதிவருகிறேன். அவ்வளவே !
அடுத்த பதிவு முதல் பதிவுலகில் பிடித்த பதிவுகளை அறிமுகப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். நோக்கும் திசைகளிலெல்லாம் பிடித்த பதிவர்களே நிறைந்திருக்கிறார்கள். எனது சுவாசத்தில் அவர்களது மூச்சுக்காற்றும் வற்றாதவொரு அன்பும் நிறைந்திருக்க, ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்துதல் எவ்வாறு தகும்? நேரம் வாய்க்கையில் தமிழ்மணம் காட்டும் எல்லாப்பதிவுகளுக்குள்ளும் ஓடி ஓடிப் போய்வருபவன் நான். அது போலவே எனது பதிவுகளுக்குள்ளும் எல்லா நண்பர்களும் வந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள் எனும்பொழுது இன்று பெரும் சவாலை முன்வைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன். ஏதோவொரு சங்கடம் சூழ்ந்ததாய் நெஞ்சம் துடிக்கிறது. ஒரு வார அவகாசத்துக்குள் என்னாலியன்ற பதிவுகளையெல்லாம் உங்கள் முன்வைக்கிறேன்.
ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு...
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
நல்வரவு.
ReplyDeleteபதிவில் படம் சூப்பர்.
குளிர்காலம் முழுசும் இப்படித்தான் சூரியனுக்காக ஏங்கிக்கிட்டு இருப்போம்.
வணக்கம் நண்பரே நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் ரிஷான்
ReplyDeleteஅருமையான அறிமுகப் பதிவு
ஓடி ஓடி ஒளிந்ததன் காரணம் புரிந்தது
கவலை வேண்டாம்
வாரம் இனிதே கழியும்
எடுத்த பொறுப்பினைப் பற்றிய - அறிமுகமே அருமை
அழகு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது
படிக்கப் படிக்க இன்பம்
ரசித்து மகிழ எப்பொழுதுமே ரிஷானின் பதிவுகள் தான்
தொடர்க - நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteஉங்களின் எழுத்துகளைப் படிக்கையில்
உள்ளம் உவகை அடைகிறது
மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்
தொடருங்கள்
தித்திக்கும் தமிழ்ச்சுவையைப்
படிக்க மனம் துடிக்கிறது
வந்தனம் ரிஷான். நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரிஷான் :)
ReplyDeletewellcome rishan! congrates!
ReplyDelete//நீண்ட காலமாகத் தப்பித்து ஓடவிழைந்தவன், வந்திருக்கிறேன்//
ReplyDeleteநீண்ட காலமாக நான் அடிக்க நினைத்த பையன் வந்திருக்கான்! :))
//பெரிதாகச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை தாய்த்தேசம் இலங்கையென்பதைத் தவிர..!//
ReplyDeleteதாய்த்தேசம் ஒரு மைல் அளவே ஆனாலும் அது மாபெரும் தேசம் தான்! பெரிதாகவும் சொல்லிக் கொள்ளலாம்! உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்! வாழ்க ஈழம்! வாழ்க இலங்கை! வாழ்க மானவல்லை! :)
//வேலை செய்யும் நிறுவனத்தின் கணனியையும், இணையத்தையும் மட்டுமே நம்பிப் பதிவிட்டும்//
ReplyDeleteநம்பிட்டோம்! :)
//எனது சுவாசத்தில் அவர்களது மூச்சுக்காற்றும் வற்றாதவொரு அன்பும் நிறைந்திருக்க, ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்துதல் எவ்வாறு தகும்?//
ஆரும் நம்ம ரிஷானுக்கு கொடுத்த கடனைக் கேட்காதீங்கப்பா! பாருங்க எப்படி உருகுறாரு! :))
//ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு...//
ReplyDeleteஅதான் ஏற்றுக்கொண்டாச்சே மானவல்லை மன்னா! :)
கரம் அது கோர்த்து
தரம் அது சேர்த்து
சுரம் பல பாடி
சரம் பல பின்னுவீர்கள் என்ற நம்பிக்கையோடு
என்றும் அன்புடன்,
கே.ஆர்.எஸ் :)
வாழ்த்துகள் தம்பி ரிஷானுக்கு,
ReplyDeleteமிகச்சிறந்த பதிவுகளை அடையாளப் படுத்தும் இந்த வார உன் பணி சிறக்க
வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள் ரிஷான்!
ReplyDeleteதிறமையுள்ளவர்கள் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாய்ப்பு தருபவர் தான் சீனா ஐயா! அவர் கண்ணிலிருந்து நீங்கள் தப்ப முடியுமா என்ன?
// திறமையுள்ளவர்கள் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாய்ப்பு தருபவர் தான் சீனா ஐயா! //
ReplyDeleteசீனா ஐயா, வால்பையன் என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா ;)
வாங்க டீச்சர் :)
ReplyDelete//நல்வரவு.
பதிவில் படம் சூப்பர்.//
நன்றி டீச்சர் :)
என்னோட சின்ன வயசு போட்டோன்னு பொய் சொல்ல மாட்டேன் :P
//குளிர்காலம் முழுசும் இப்படித்தான் சூரியனுக்காக ஏங்கிக்கிட்டு இருப்போம்.//
இங்க நிலைமை தலைகீழ்..எப்பவும் சூரியன் வாட்டுறதால குளிருக்கு ஏங்கிட்டிருப்போம் :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் :)
வாங்க தங்கராசா ஜீவராஜ் :)
ReplyDelete//வணக்கம் நண்பரே நல்வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
வாங்க சீனா :)
ReplyDeleteவாழ்த்துக்களுக்கும் என்னை நம்பி இவ்வளவு பொறுப்பான பதவியைக் கையளித்ததற்கும் நன்றி நண்பரே :)
வாங்க திகழ்மிளிர் :)
ReplyDelete//வாழ்த்துகள் நண்பரே
உங்களின் எழுத்துகளைப் படிக்கையில்
உள்ளம் உவகை அடைகிறது
மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்
தொடருங்கள்
தித்திக்கும் தமிழ்ச்சுவையைப்
படிக்க மனம் துடிக்கிறது //
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
வாங்க ராமலக்ஷ்மி :)
ReplyDelete//வந்தனம் ரிஷான். நல்வாழ்த்துக்கள்!!//
வருகைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
வாங்க பிரேம்குமார் :)
ReplyDelete//வாழ்த்துக்கள் ரிஷான் :)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
வாங்க அபி அப்பா :)
ReplyDelete//wellcome rishan! congrates! //
நன்றி நண்பரே :)
வாங்க கேயாரெஸ் :)
ReplyDelete//நீண்ட காலமாக நான் அடிக்க நினைத்த பையன் வந்திருக்கான்! :))//
ஏன் இந்தக் கொலைவெறி ? :)
//தாய்த்தேசம் ஒரு மைல் அளவே ஆனாலும் அது மாபெரும் தேசம் தான்! பெரிதாகவும் சொல்லிக் கொள்ளலாம்! உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்! வாழ்க ஈழம்! வாழ்க இலங்கை! வாழ்க மானவல்லை! :) //
ReplyDeleteஆஹா..அருமையான பின்னூட்டம்
கேயாரெஸ் அவர்களிடமிருந்து :)
(2011 தேர்தல்ல நிற்கப் போறீங்களா? )
//ஆரும் நம்ம ரிஷானுக்கு கொடுத்த கடனைக் கேட்காதீங்கப்பா! பாருங்க எப்படி உருகுறாரு! :))//
ReplyDeleteஆமா..அம்புட்டுப் பேரும் கொடை வள்ளலா இருக்கணும்..நம்ம கேயாரெஸ் மாதிரி :)
//அதான் ஏற்றுக்கொண்டாச்சே மானவல்லை மன்னா! :)//
ReplyDeleteஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுறாங்கப்பா :)
//கரம் அது கோர்த்து
தரம் அது சேர்த்து
சுரம் பல பாடி
சரம் பல பின்னுவீர்கள் என்ற நம்பிக்கையோடு//
ஆஹா..கவித..கவித.. :)
//என்றும் அன்புடன்,
கே.ஆர்.எஸ் :)//
நன்றிங்ணா :)
வாங்க ஷாஜி அண்ணா :)
ReplyDelete//வாழ்த்துகள் தம்பி ரிஷானுக்கு,
மிகச்சிறந்த பதிவுகளை அடையாளப் படுத்தும் இந்த வார உன் பணி சிறக்க
வாழ்த்துகள்..//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா :)
வாங்க வால்பையன் :)
ReplyDelete//வாழ்த்துக்கள் ரிஷான்! //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
வாங்க வெயிலான் :)
ReplyDelete//சீனா ஐயா, வால்பையன் என்ன சொல்கிறார் என்று தெரிகிறதா ;)//
அதானே? :)
வாழ்த்துகள் ரிஷான், குழுமத்தில் இது பத்தி ஒண்ணையும் காணோமே?? வாழ்த்துகள் மீண்டும். படம் நல்லா இருக்குனு எல்லாருமே சொல்லியாச்சு, அதே ரிப்பீஈஈஈட்டேஏஏஏ
ReplyDeleteஅன்பின் ரிஷான்
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழரே ... எழுதுங்கள் , அர்த்தமுள்ளதாயும், அழகாகவும் இருக்கும் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்..
உங்கள் அழகு தமிழுக்காய் ...
நல்லது நண்பரே....
ReplyDeleteஉங்கள் எழுத்தின் வழியே உங்கள் புகழ் சிறக்க வாழ்த்துகிறேன்..
உங்கள் தாய் தேசத்திலிருந்து
நிந்தவூர் ஷிப்லி
தல
ReplyDeleteவலைச்சரத்தில் நீங்களா, அடிச்சு ஆடுங்க ;)
அன்பின் கீதா சாம்பசிவம்,
ReplyDelete//வாழ்த்துகள் ரிஷான், குழுமத்தில் இது பத்தி ஒண்ணையும் காணோமே?? வாழ்த்துகள் மீண்டும். படம் நல்லா இருக்குனு எல்லாருமே சொல்லியாச்சு, அதே ரிப்பீஈஈஈட்டேஏஏஏ //
குழுமத்துலயா? இப்பதான் ஒரு பதிவு போட்டிருக்கேன்..அதுக்குள்ளேயா? :)
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சக்தி,
ReplyDelete//வாழ்த்துக்கள் தோழரே ... எழுதுங்கள் , அர்த்தமுள்ளதாயும், அழகாகவும் இருக்கும் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்..
உங்கள் அழகு தமிழுக்காய் ...//
இயன்றவரையில் சிறப்பாக எழுதமுயற்சிக்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)
வாங்க ஷிப்லி :)
ReplyDelete//உங்கள் எழுத்தின் வழியே உங்கள் புகழ் சிறக்க வாழ்த்துகிறேன்..
உங்கள் தாய் தேசத்திலிருந்து
நிந்தவூர் ஷிப்லி //
எனது தேசத்திலிருந்து வாழ்த்துக்கள் கூறும் அன்பான உங்களுக்கு நன்றி நண்பரே :)
வாங்க கானா பிரபா :)
ReplyDelete//தல
வலைச்சரத்தில் நீங்களா, அடிச்சு ஆடுங்க ;) //
யாரை அடிச்சு ஆடணும் பாஸ் ? கேயாரெஸ்ஸையா? அவர் தான் எனக்கு அடிக்கணும்னு தேடிட்டே இருக்கார் :P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாழ்த்துக்கள் ரிஷான், பட்டைய கிளப்புங்க :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பு நண்பரே.
ReplyDeleteஉங்கள் இந்த ஆக்கத்தைப் படித்து முடித்த பிறகு உங்களுக்குள் இருக்கும் தமிழார்வம் பளிச்சிடுகிறது.
ஒரு மரபுக்கவிதையைப் படித்த சுகம் தோணுகிறது.
நன்றிகள்
ஒரு பழைய வருடம் ஒரு புதிய வருடம் என இரண்டு வருடங்களில் பதிவெழுத சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது...
ReplyDeleteகலக்குங்கோ ரிஷான் ..:)
வாழ்த்துக்கள்...!
40
ReplyDeleteஅன்பின் ரிஷான்
ReplyDeleteஅறிமுகம், பயன்படுத்தியுள்ள படம் இரண்டுமே மிக அழகாக உள்ளன.
தொடருங்கள் காத்திருக்கிறோம்.
// எனது சுவாசத்தில் அவர்களது மூச்சுக்காற்றும் வற்றாதவொரு அன்பும் நிறைந்திருக்க, ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்துதல் எவ்வாறு தகும்? //
ReplyDeleteரிஷான் தாத்தாவை எழுத தூண்டிய வலைச்சரம் ஆசிரியர்க்கு நன்றி.
தல கலக்குங்க.
அன்பின் கிரி,
ReplyDelete//வாழ்த்துக்கள் ரிஷான், பட்டைய கிளப்புங்க :-)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தமிழ்நெஞ்சம்,
ReplyDelete//வாழ்த்துக்கள் அன்பு நண்பரே.
உங்கள் இந்த ஆக்கத்தைப் படித்து முடித்த பிறகு உங்களுக்குள் இருக்கும் தமிழார்வம் பளிச்சிடுகிறது.
ஒரு மரபுக்கவிதையைப் படித்த சுகம் தோணுகிறது. //
:) மகிழ்வாக உணர்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் தமிழன்-கறுப்பி,
ReplyDelete//ஒரு பழைய வருடம் ஒரு புதிய வருடம் என இரண்டு வருடங்களில் பதிவெழுத சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது...//
ஆமாம்..இப்படியானதொரு அருமையான வாய்ப்பை எனக்களித்த நண்பர் சீனாவுக்கு மீண்டும் நன்றி :)
//கலக்குங்கோ ரிஷான் ..:)//
முயற்சிக்கிறேன் :)
//வாழ்த்துக்கள்...!//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
ReplyDelete//அன்பின் ரிஷான்
அறிமுகம், பயன்படுத்தியுள்ள படம் இரண்டுமே மிக அழகாக உள்ளன.
தொடருங்கள் காத்திருக்கிறோம். //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
வாங்க கார்த்திக் :)
ReplyDelete//ரிஷான் தாத்தாவை எழுத தூண்டிய வலைச்சரம் ஆசிரியர்க்கு நன்றி. //
தாத்தாவா? நீங்க எப்படிச் சொன்னாலும் இன்னொரு தாத்தாவைப் பேராண்டின்னு கூப்ட மாட்டேன் :P
//தல கலக்குங்க.//
கலக்கிடுவோம் தாத்தா :)
நன்றி தாத்தா :)
வாழ்துகள் ரிஷான் :)
ReplyDeleteநீண்ட நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள் ரிஷான். மெய்சிலிர்க்கவைக்கும் தனித்துவமான உங்கள் தமிழ் எழுத்து தொடரட்டும்.
அன்பின் அப்துல்லாஹ்,
ReplyDelete//வாழ்த்துகள் ரிஷான் :)//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் நிர்ஷன்,
ReplyDelete//வாழ்த்துக்கள் ரிஷான். மெய்சிலிர்க்கவைக்கும் தனித்துவமான உங்கள் தமிழ் எழுத்து தொடரட்டும். //
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
vaazththukkaL Rishu! Happy New year!
ReplyDeleteshylajakka
அன்பின் ஷைலஜா,
ReplyDelete//vaazththukkaL Rishu! Happy New year! //
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.. :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
நல்வாழ்த்துக்கள் ரிஷான்!
ReplyDeleteஅன்பின் திவ்யா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)