Tuesday, February 10, 2009

வலைச்சர ஆசிரியராக இரண்டாம் நாள்!

குரு வணக்கம்!

குருப்பிரம்மா! குருவிஷ்ணு!

குருதேவோ மஹேஸ்வரஹ!

குருசாட்சாத் பரபிரும்மா

தஸ்மைஸ்ரீ! குருவேநமஹ!

ஒரு மனிதனின் வாழ்வில் தாய்,

தந்தையருக்கு அடுத்து குருவே

முக்கியம்!

சிற்பி சிலை வடித்து முடித்து கடைசியாக கண் வடிப்பார். அது போல் குருவே ஒருவனுக்கு அறிவுக்கண் திறக்கிறார்.

இந்த இரண்டாம் நாளில் எனக்கு வழிகாட்டிய அன்பு ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.அவர்களுக்கு என் பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

என் மனதைப்பிழிந்த கதை ஒன்று சொல்கிறேன்!

என் தம்பியின் நண்பன் அவர். வக்கீலுக்குப் படிக்கும் போதே எனக்குப்பழக்கம்! பைக்கில் ஸ்டெயிலாக சுத்துவார்.இதெல்லாம் 10 வருடம் முன்பு!திடீரென்று ஒரு நாள்என் நண்பர் ஒருவர், வக்கீல் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை! உங்களிடம் அனுப்புகிறேன்! பாருங்கள் என்றார். பார்த்தேன்!எனக்குத்தெரியாத முகம்! என்னைத்தெரியுதா?நான் உங்கள் தம்பியின் வக்கீல் நண்பன் என்றார்! என்னால் நம்ப முடியவில்லை!!எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து,நடக்க முடியாமல் வீல் சேரில் அம்ர்ந்து இருந்தார்! சோதித்ததில் அவருக்கு டி.பி.இருந்ததும்,மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது!அவரின் அலட்சியப்போக்கால் வியாதி உடலெல்லாம் பரவி இருந்தது.தினமும் என்னைக்காப்பாற்றுங்கள் என்று கேட்பார்.தீவிர சிகிச்சை செய்தும் முடியாமல் 10 நாளில் இறந்தும் போனார்.படித்தவர்களே மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பது கண் இருந்தும் குருடர் போன்றது.சரி T.B. பற்றி...

T.B. என்று நாம் அழைக்கும் காச நோய் நுரையீரல்களைத்தான் முதலில் தாக்கும்!இருமல்,சளி உடல் எடை குறைதல், பலகீனம் ஆகியவை இதில் வரும்! குழந்தைகளைத்தாக்கும் போது இதனை பிரைமரி காம்ப்ளக்ஸ் என்று சொல்வார்கள்.இது ஒரு நுண்கிருமியால் ஏற்படுகிறது! இது இருமும் போது நுண்சளித்திவலைகளால் பரவுகிறது!இந்த நோய் குழந்தைகள் நோய்தாக்கியவருடன் அருகில் இருக்கும்போதுஅவர்களின் இருமல்,தும்மல்,சளி,எச்சிலுடன் முத்தமிடுதல் ஆகியவற்றால் பரவுகிறது! இந்தியக்குழந்தைகளில் இது அதிகம்!

நடுத்தர வயதினர்,முதியோரைத்தாக்கும் போது கடுமையான இருமல்,வேகமான எடை குறவு மூச்சு விட முடியாமை,மாலையில் காய்ச்சல் காணப்படும்!நெஞ்சு நுண்கதிர்ப்படம் எடுத்தால் நுரையீரல் பாதிப்பை அறியலாம்.சளி சோதனையிலும் கிருமியைக் கண்டுபிடிக்கலாம்! இதற்கு சிகிச்சை ஆறு மாதகாலம் என்னும்போது இந்த நோய் எவ்வளவு கொடியது என்று அறியலாம். ஒரு முறை மருந்தை ஆரம்பித்துவிட்டால் நடுவில் விடாமல் 6 மாதம் சாப்பிட்டு ஆக வேண்டும்! நடுவில் உடல் தேறி நன்றாக இருக்கிறதே என்று இளம் வயதினர்கூட விட்டுவிட்டால் திரும்ப வந்துவிடும்! மறுமுறை வரும் டி.பி. மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படாது! இறக்கும் நோயாளிகளும் அதிகம்! இதற்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலத்தில் நோய் தாக்கி இறந்தவர் --கணிதமேதை ராமானுஜம்!!

சரி நம்ம ஆசிரியர் வேலையைப்பார்ப்போம்!

1.தங்கராசா ஜீவராஜ்--இவர் ஒரு மருத்துவர்.எல்லோரும் ஒரு வலைத்தளம் வைத்து இருப்போம்! ஆனால் இவர் வைத்திருப்பதோ ஏழு-7-வலை! இதில் ஜீவநதியைப்பார்த்தீர்களானால் ஏதோ இந்தியக்கோவிலுக்குள் நுழைந்தது போல் இருக்கும்!http://geevanathy.blogspot.com/

மேலே உள்ள தள்த்தில் நுழைந்தால் ஒரு மகாபாரதப்போர் நடந்து கொண்டு இருக்கு.பார்க்கக் கண் கோடி வேண்டும் http://kmoli.blogspot.com/ல் இவருடைய கவிதைகள் பாருங்கள்!

இந்த http://thanganila.blogspot.com/தளத்தில் எல்லாத்தையும் கலந்து கட்டியிருப்பார்.கட்டாயம் பார்க்கவேண்டும்!

2.வேத்தியன் நல்லா எழுதுவார்.அவர் பதிவுகளைப் படியுங்கள் இது ஒரு புதிய கீதை!!!ஜாலியா இருக்கும் http://jsprasu.blogspot.com/2009/01/blog-post_28.html

திருமணமான பெண்களின் நிலைபற்றி கூறுகிறார் கீழுள்ள பதிவில் http://jsprasu.blogspot.com/2009/01/blog-post_20.படித்தால் பெண்களின் கஷ்டம் புரியும்

நான் விரும்பும் இசைப்புயல் என்று ரஹ்மான்பற்றி படியுங்கள்! http://jsprasu.blogspot.com/2009/01/blog-post_07.html

3.அன்புமணி-சென்னைக்காரர். இவரின் பியூன் கோபால் என்ற உணர்வுகளைத்தொடும் சிறுகதையை படியுங்கள் கீழுள்ள முகவரியில் http://anbuvanam.blogspot.com/2009/02/blog-post.html

வலையில் கவிதை எழுத எல்லோருமே சிரமப்பட்டு இருப்போம். இவர் பட்ட பாட்டை எப்படி அழகாக சொல்கிறார் பாருங்கள்http://anbuvanam.blogspot.com/2009/01/blog-post_19.html

தமிழின் நவீன சூழல் பற்றி எழுதியதை படிக்க இந்த பதிவுhttp://anbuvanam.blogspot.com/2009/01/blog-post_19.html

4.ஆதவா குழந்தை ஓவியம் என்ற பதிவில் எழுதுகிறார்.செடி ஒன்று2120ல் சொல்வதாக சுற்றுப்புற மாசு பற்றி எழுதுகிறார்http://aadav.blogspot.com/2009/02/2120.html

இவரின் காலை ஸ்வரம் உணர்வுள்ள கவிதை படிச்சுப்பாருங்கப்பாhttp://aadav.blogspot.com/2009/02/blog-post_04.html

யாருக்குத்தான் கனவுலகம் பிடிக்காது?அவரின் கனவுக்கவிதையை படியுங்கள்http://aadav.blogspot.com/2009/02/blog-post.html

5.சிந்து குழந்தைதனம் மாறாமல் எழுதுபவர்.என் மனநிலை புரிகிறதா என்று எழுதியுள்ளதை படியுங்கள்http://vsinthuka.blogspot.com/2009/02/blog-post_07.html

தாய் மண் அம்மா என்ற கவிதையில் தன் மன உணர்வுகளைக்கூறுகிறார்http://vsinthuka.blogspot.com/2009/02/blog-post.html

அம்மாவைப்பிரிந்த குழந்தையாய் இக்கவிதையில் புலம்புகிறார்http://vsinthuka.blogspot.com/2009/01/blog-post_17.html

6.பிரபா வின் எழுத மறந்த கவிதைகளில் காத்ல் பொங்குகிறது படிச்சா நிச்சயம் பிடிக்கும் உங்களுக்கு இந்த பதிவில் பாருங்கhttp://prapaslbc.blogspot.com/2009/02/blog-post.html

நாம் எப்படி நடக்கிறோம்(கால்களால்தான்!) என்பதை வைத்து இவர் இப்படி அவர் அப்படி என்று ஆரூடம்சொல்கிறார்http://prapaslbc.blogspot.com/2009/01/blog-post_29.htmlல்.

அமெரிக்கஜனாதிபதிகளுக்குள் உள்ள பெயர் ஒற்றுமை பற்றி வித்தியாசமான் பதிவு இதுhttp://prapaslbc.blogspot.com/2009/01/blog-post_20.html

7. அனந்தன் முடிவிலானின் எழுத்துக்களில் பாம்பு ஒயின் பற்றி படத்தோட சொல்கிறார் கொடுமைடா சாமி நம்ம குடிமக்களிடம் இதைக்கொடுத்தால் பாட்டில் பக்கமே வரமாட்டார்கள்.படம் பார்க்கhttp://mudivilaan.blogspot.com/2009/02/blog-post.html

உளறல் என்ற கவிதையில் எதையோதேடுகிறார்http://mudivilaan.blogspot.com/2009/01/2.html

அப்பா அம்மா வீட்டில் இல்லை என்று பாடுகிறார் இவர் ஒரு தனி பாணியில்http://mudivilaan.blogspot.com/2009/01/blog-post_21.html

8.தமிழ்தினா

கசக்கும் காதல்! இந்தப்பழம் புளிக்கும் என்கிறார்! சுவையுங்கள் கீழேhttp://thamizhdhina.blogspot.com/2009/01/blog-post_21.html

நட்பும் இவருக்கு புளிக்குதாம். நட்பிலா நட்பு என்றுசாடுகிறார்http://thamizhdhina.blogspot.com/2009/01/blog-post_17.html

கண்ணோரச்சுருக்கங்களில் காதலை அருமையாக சொல்கிறார்http://thamizhdhina.blogspot.com/2008/12/blog-post_26.html

9.பிரபு பிரியமுடன் பிரபு வில் சேலையின் பெருமை பற்றி எழுதுகிறார்http://priyamudan-prabu.blogspot.com/2009/02/02022009-104-am.html

காதல் மழை என்ற சின்ன கதை தமிழிஷில் பிரபலமாம் நாமும் படிக்கலாமேhttp://priyamudan-prabu.blogspot.com/2009/01/24-012009-845-pm.html

அப்படியே இவரின் மழை நேரம் கவிதையும் படித்து விடுங்கள்!

10.அருள்கரன் பூஞ்சோலை யில் காதல் என்னும் கவிதை சொல்லடி என்ற நகைச்சுவையான சம்பவமொன்று எழுதுகிறார்.http://arulkaran.blogspot.com/2009/01/blog-post_28.html படித்து சிரிங்கப்பா!

கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக என்று காதலை சொல்லுகிறார் கவிதையில் கீழுள்ள சுட்டியை சொடுக்கி படிக்கலாம்.http://arulkaran.blogspot.com/2009/01/blog-post_19.html

கடந்து போன காதல் ஒன்று என்று பக்கத்து வீட்டு காதலில் கரைகிறார்.http://arulkaran.blogspot.com/2009/01/blog-post_4698.html

இவர்களில் பிடித்ததை சூடாகப் படித்து அவர்களை பாராட்டி சந்தோசப்படுத்துங்கள்! படிக்க நேரமில்லையெனில் வலை முகவரியை குறித்துவைத்து பின்பு படியுங்கப்பா!

------------------------

தைரியமாக இரு!வலிமையுடன் இரு!பொறுப்பு முழுவதையும் உன் தோள்மீதேசுமந்துகொள்!உனது விதியைப்படைப்பவன் நீயே என்பதைப்புரிந்து கொள்!!

விவேகானந்தர்!

அடுத்த பதிவில் பார்ப்போம்!..

தேவா..

------------------------------

138 comments:

  1. பலரும் எனக்கு புதியவர்
    படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நான் தான் முதல் என்று உரிமை
    கொண்ட முடியாது
    :)))))))))))))))

    ReplyDelete
  3. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கட தொறந்தாச்சா.இவ்ளோ சீக்கிரமா அதுவும்..

    ReplyDelete
  5. வெற்றிகரமான ரெண்டாம் நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. //சிற்பி சிலை வடித்து முடித்து கடைசியாக கண் வடிப்பார். அது போல் குருவே ஒருவனுக்கு அறிவுக்கண் திறக்கிறார்.//

    கண்களை திறந்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. //எச்சிலுடன் முத்தமிடுதல் ஆகியவற்றால் பரவுகிறது! இந்தியக்குழந்தைகளில் இது அதிகம்!
    //

    இது கூட இன்ஃபெக்ஷனா ??? நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. //நெஞ்சு நுண்கதிர்ப்படம் எடுத்தால் நுரையீரல் பாதிப்பை அறியலாம்//

    யு மீன் எக்ஸ்ரே !!!!! நல்லதொரு தமிழ்ச் சொல்..

    ReplyDelete
  9. //இதற்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலத்தில் நோய் தாக்கி இறந்தவர் --கணிதமேதை ராமானுஜம்!!
    //

    தான் இறக்கும் நாளை கூட கணக்கு போட்டு சரியாகச் சொன்னவர்.

    ReplyDelete
  10. //எழுதத் தொடங்கும் ஒவ்வொரு கணமும்
    ஆயிரம் கண்கள் - என் எழுத்தை
    வெறித்துப் பார்ப்பதாய் ஓர் பிரமை

    எப்படி வரும்?
    ஈட்டிகளுக்கு நடுவில்
    இயல்பான கவிதை//

    தங்கராசா ஜீவராஜ்...ஒரு வித்தியாசமான பதிவர்..கவிதைகளும் அவர் போட்டிருந்த
    மகாபாராத படஙக்ளும் அருமை.

    ReplyDelete
  11. //எதை நீ படித்தாய்
    மறந்து போவதற்கு

    எதை நீ புரிந்துகொண்டாய்
    பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

    என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
    வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு

    எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
    அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

    எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
    அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

    எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
    அது நாளை மற்றொருவனுடையதாகிறது
    மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

    இதுவே கல்லூரி நியதியும்
    ஃபிகர்களின் குணாம்சமும்.//


    ஹா..ஹா.....வேத்தியன் பதிவிட்ட "கீதா"சாரம்.

    ReplyDelete
  12. //வலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... //

    அன்புமணியும் நம்மள மாதிரி தான் கஷ்டப் பட்ருப்பார் போல..

    ReplyDelete
  13. //இன்று
    அபஸ்வரம் இல்லாத காலை
    அதிகார நெருக்கடியைக் குடித்த காலை
    பிறிதொருநாள் எழுதிவைக்கும்
    பரிவென்ற கவிதை.

    ஆயின்
    என்றேனும் ஒருநாள்
    அம்மாவின் நினைவு வரலாம்
    அழுது முடித்த பின் தோன்றும்

    "அழாமல் இருந்திருக்கலாம்..." //


    உணர்வுடன் வந்திருக்கிறது..ஆதவாவின் வார்த்தைகள்...அருமை..

    ReplyDelete
  14. //தனிமையைப் புரிய வைத்த
    அற்புத உறவு
    அழுகைக்கு ஓய்வு தந்த
    ஆலோசகர்
    உணர்வுகளைப் புரிய வைத்த
    ஆசான் நீ மட்டுமே..//

    சிந்துவின் கவிதை வரிகள்...அழகாக எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  15. //உனக்கு என்னைத் தெரியும் என்று
    வார்த்தைகளுக்கு ஒரு கடிதம் எழுது!
    அப்போதாவது அவை என்னுடன் முரண்டு பிடிக்காமல் இருக்கட்டும் .//

    பிரபா எழுத மறந்த சிலவற்றை எழுதியிருக்கிறார்...

    காதல் அங்கு கரை புரண்டு...ஓடுகிறது.பாருங்கள்...

    ReplyDelete
  16. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தேவா...

    ReplyDelete
  17. குரு வந்தனமும் டீ பி பத்திய விளக்கமும் அருமை. தகவல்களுக்கு நன்றி.

    //பலரும் எனக்கு புதியவர்
    படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

    வாழ்த்துகள்//

    மறுக்கா கூவிக்கிறேன்.

    ReplyDelete
  18. இரண்டாம் நாளுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. டி.பி குறித்து ஒரு நல்ல கட்டுரை/நிகழ்வு எழுதிய உங்களை இரண்டாம் நாள் வலைச்சரத்தில் வரவேற்கிறேன்... வாழ்த்துகள்.


    சரி, இனி அறிமுகப் படுத்திய ஒவ்வொருவரையும் சென்று காண்கிறேன்....

    ReplyDelete
  20. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தேவா. எனது பதிவை பரவலாக அறிமுகப்படுத்த உதவிய தங்களுக்கு என் நன்றிகள் பலப்பல... அறிமுகம் யாவும் எனக்கும் புதியவர்களாக இருப்பதால் படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  21. இரண்டாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது வாழ்த்துக்கள் தேவா !!!

    ReplyDelete
  22. "கிசு கிசு குசுலக்குமாரி"


    மாரிமுத்து நித்திய அனந்தன் என்கிற முடிவிலான் பக்கங்களில் சுட்டது.

    ReplyDelete
  23. //உன் கன்னக்

    கதுப்புகளில் சிகப்பு

    இன்னமும் இருக்கிறதோ..

    இருந்தால் கொடு தோழி!

    இங்கே சிலரின் இதழ்களுக்குத்

    தேவையாம் சாயம்..!
    //

    தமிழ்தினாவின் "கண்ணோரச் சுருக்கங்களில்" கிடைத்த முத்துக்கள்.

    ReplyDelete
  24. //" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "

    " மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேதான் இருக்கும் "

    " ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "

    " உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "//

    பிரியமுடன் பிரபுவின் "காதல் மழை" என்ற இந்த பதிவு, பதிவிட்ட 4 மணிநேரத்தில்
    தமிழிஷ் இணையத்தில் பிரபலமாயிருக்கிறது.

    ReplyDelete
  25. //காதல் 'சுயிங்கம்' போன்றது. ஆரம்பத்தில் இனிக்கும். போகப்போக சப்பென்று போய்விடும். காதல் கழட்டிப்போட்ட செருப்பு மாதிரி. அளவாயிருந்தா மாட்டிக்கலாம்... இது ஒவ்வொருவரும் காதலை எப்படி எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவரவர்களுக்கு அது அப்படியே இருக்கும்...
    //

    காதலைப் பற்றி கிளாஸ் எடுக்கிறார் அருள்கரன் பூஞ்சோலை..அருமையான பதிவு.

    ReplyDelete
  26. முற்றிலும் புதுமையான வித்தியாசமான பதிவர்களை தேர்ந்தெடுத்து
    அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.

    இன்று நான் பார்த்தவை அனைத்தும் குவாலிட்டி..

    நன்றி !!!!!!!!!!

    ReplyDelete

  27. தங்கராசா அவர்கள் ஏன் ஏழு வலை வைத்திருக்கிறார்..... ஏழுதான் இறைவனுக்குப் பிடித்த எண்ணாயிற்றே :D :D சும்மா குசும்பு.....

    ஜீவநதியில் நான் சென்றிருந்த பொழுது அவர் அங்கே எழுதுவதை நிறுத்தியிருந்தார்... எனினும் அவரின் நடை மிகவும் நன்றாக இருக்கிறது.


    காட்சிகளில் காலமாற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. போரின் கொடூரமும், வலியும் , வேதனைகளும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது...நிகழ்வின் கோரத்தை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், விளக்கம்சொல்கிறார்கள், இருந்தும் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது முடிவு.



    அவரது ஏக்கங்களும், மாறாமல் பொங்கி நிற்கும் சமூக உணர்வுகளும் அவ்வப்போது ஆன்மீக வடிவில் வந்து கொந்தளிக்கின்றனவோ என்று எண்ணுகிறேன்....

    அவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி... (ஏற்கனவே என் பதிவுக்கு வந்திருக்கிறார்..)

    ReplyDelete
  28. வாழ்த்துகள்...
    என்னைப் பற்றியும் எழுதியதற்கு நன்றிகள் பல...

    ReplyDelete

  29. வேத்தியனின்

    எல்லாம் சீரியஸா ஜோக்குக்குத் தான்... வாழ்க்கையே சீரியஸான ஜோக் தான்...

    என்கிற மொழியே அருமையாக இருக்கிறது

    புதிய கீதையை அறிமுகப்படுத்துகிறார்... அதோடு அறியாமை குறித்து ஒரு கேள்வியும் எழுப்புகிறார்... அவர் ஏதோ ஒரு உந்துதலின் காரணமாக எதையோ தேடுவதைப் போன்று எழுதுகிறார்.. பெண்களின் நிலையைப் பற்றி ஆதங்கப்ப்டுகிறார்,,,

    அவர் எழுதியிருக்கும் இடுகைகளை பிரிவு வாரியாக கொடுக்கவில்லை...

    ReplyDelete
  30. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. காச நோய் பற்றி அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    // ஒரு முறை மருந்தை ஆரம்பித்துவிட்டால் நடுவில் விடாமல் 6 மாதம் சாப்பிட்டு ஆக வேண்டும்! //

    நிறைய பேர்களுக்கு இது புரிவதில்லை

    ReplyDelete
  32. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தேவா
    படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  33. நம்ம கடைக்கு வாரதுக்குள்ள 50கிமீ வேகத்துலே போய்ட்டுடிருக்குப்பா

    ReplyDelete
  34. // எல்லோரும் ஒரு வலைத்தளம் வைத்து இருப்போம்! ஆனால் இவர் வைத்திருப்பதோ ஏழு-7-வலை! //

    ஒரு வலைப்பதிவுக்கு எழுதுவதற்கே மனுஷனுக்கு தாவு தீந்து போகுது...

    இதுல இவர் எப்படித்தான் 7 வலைப்பதிவெல்லாம் எழுதுகின்றாரோ !!

    ReplyDelete
  35. வேத்தியன்...

    கீதா விளக்கம் - அருமையிலும் அருமை..

    // எதை நீ படித்தாய்
    மறந்து போவதற்கு //

    மிக மிக அருமை..

    ReplyDelete
  36. அன்புமணி

    மிக அழகான நடை..

    ப்யூன் கோபால் பற்றி எழுதியதில், அந்த கடைசி வரி தான் டச்..

    ReplyDelete
  37. மற்றவர்களைப் பற்றி படித்ததில்லை..

    படித்துவிட்டு எழுதுகின்றேன்

    ReplyDelete

  38. அன்புமணியின் பியூன் சிறுகதையில் அவரது எழுத்து நடையும் சிறந்த கருவும் வெளிப்படுகிறது. அவருக்கு கதையுலகில் நல்ல

    எதிர்காலம் இருக்கிறது என்றூ நம்புகிறேன்.

    அவர் வாழ்வில் கண்ட மனிதர்களைப் பற்றி எழுதியிருப்பதாக சொன்னார்... அவரது கதைக்கான கருக்களம் எங்கே

    கிடைக்கிறது என்பதை அவரது வாழ்வே சொல்கிறதல்லவா!!

    வலைப்பதிவு எழுதும் பொழுது பட்ட பாட்டையும் நாசூக்காக சொல்லி(யழுகிறார்) நல்லவேளையாக தெரிந்துவிட்டார்...

    இல்லாவிட்டால் கவிதைகள் ஒன்றன் கீழொன்றாக கொடுக்காமல் கதைவடிவில் கொடுத்திருப்பார்... :)

    தேவன் சார், அன்புமணியின் மூன்றாவது இணைப்பு மாறியிருக்கிறது ; சரிபாருங்கள்.

    ReplyDelete
  39. 4. என் கவிதை தளம் குறித்து எழுதி, பலருக்கு அறியப்படுத்திய உங்களுக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன்....

    ReplyDelete

  40. சிந்து,

    தன் மனநிலையை சங்கீதத்திடம் காண்கிறார். நல்ல கவிதை நடை.. வித்தியாசமாக யோசிக்கிறார். தாய் அல்லது தாய்மண் குறித்த அவரின் பார்வையில் சமூக உணர்வு முன்னுக்கு நிற்கிறது. ஈழமண்ணுக்காக அவர் அழுகிறார்... பிறருக்கு அழுபவர் தெய்வமாவது போன்று...... அம்மா கவிதையில் மகள் பார்வையிலிருந்து பேசுகிறார், சற்று தடுமாறியிருப்பதாகத் தோன்றினாலும் சொல்லவந்த கரு நன்றாக இருந்தது.


    ReplyDelete
  41. ஒரு நாள் பத்தாது போலருக்கே!
    எல்லாத்தையும் படிக்க

    ReplyDelete
  42. கருத்துக்களை தெரிவித்த ராகவன்,ஆ.மு.செய்யது மற்றும் ஆதவா அவர்களுக்கு மட்டுமல்ல, தேவா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  43. எனது மற்றொரு வலைத்தளத்திற்கும் வருகை தரலாமே! முகவரி:
    namdukural.blogspot.com

    ReplyDelete
  44. அண்ணன் அன்புமணி பரிச்சியம் உண்டு

    ReplyDelete
  45. ஆதவர் சமீபத்திய பழக்கம் தான்

    ReplyDelete
  46. \\காதல் - ஒரு எளிமையான பாடம் தான்
    ஆனால் பலபேர் அதில் தோற்று போகின்றார்கள்...!\\

    பிரபாவின் வரிகள் - அழகு

    ReplyDelete
  47. நன்றி தேவா
    ஏதோ ஒரு நம்பிக்கையில் ஆரம்பித்த வலைப்பூ உங்களைப்போல் நிறைய நல்ல நண்பர்களையும், எனதுதேடலுக்கான நல்ல வாசிப்புக்களையும் தந்திருக்கிறது.. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதிற்கு எனது மனங்கனிந்த நன்றிகள்....

    ReplyDelete
  48. ////படித்தவர்களே மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பது...... ////

    இங்கு காச நோய் உடையவர் கட்டாயம் அதற்குரிய வைத்தியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் இயற்றி இருக்கிறார்கள்.. தவறின் கைது செய்து வைத்தியம் செய்யப்படுகிது...மிக இலகுவாக தொற்றக்கூடிய நோயாதலால் முறைப்படி வைத்தியம் பெற்றுக்கொள்ளாமை குற்றமாக கருதப்படுகிறது.....

    ReplyDelete
  49. அனந்தன் பழக்கம் உண்டு

    ReplyDelete
  50. ///தங்கராசா ஜீவராஜ்...ஒரு வித்தியாசமான பதிவர்..கவிதைகளும் அவர் போட்டிருந்த
    மகாபாராத படஙக்ளும் அருமை.////

    நன்றி அ.மு.செய்யது
    படங்களும்,பதிவும் எங்கள் வாழ்க்கை.......

    ReplyDelete
  51. ///ஜீவநதியில் நான் சென்றிருந்த பொழுது அவர் அங்கே எழுதுவதை நிறுத்தியிருந்தார்... எனினும் அவரின் நடை மிகவும் நன்றாக இருக்கிறது.///

    நன்றி ஆதவா
    உங்கள் வரவும்,பகிர்வும் உற்சாகம் தருகிறது.. ஜீவநதியில் தற்காலிகமாக பதிவிடுவதை நிறுத்தி இருக்கிறேன்...விரைவில் சந்திப்போம்......

    ReplyDelete
  52. ///அவரது ஏக்கங்களும், மாறாமல் பொங்கி நிற்கும் சமூக உணர்வுகளும் அவ்வப்போது ஆன்மீக வடிவில் வந்து கொந்தளிக்கின்றனவோ என்று எண்ணுகிறேன்....///

    உண்மைதான் ஆதவா இருந்தும், என்னுடை பதிவில் ஆலயங்களை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் தனியே ஆன்மீகம் சார்ந்தது மட்டுமல்லாமல். எங்களது இருப்பின் அடையாளங்களை பதிவுசெய்வதையும் நோக்கமாக்க கொண்டது.....

    ReplyDelete
  53. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. யப்பாடி... லஞ்ச் முடிச்சாச்சு... இன்னும் அஞ்சு பேரு பாக்கி.....

    பார்ப்போம்...

    ReplyDelete
  55. குறிப்பிட்ட அனைவரினதும் பதிவுகள் படித்தேன்...
    அருமையான செலக்ஷன்...
    என்னுடையதை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்...

    ReplyDelete


  56. பிரபா,

    காதல் மொழிகளை நன்கு ஆராய்ந்து எழுதுகிறார்..... சில
    கவிதைகள் தனித்து நிற்கின்றன.

    காதல் - ஒரு எளிமையான பாடம் தான்
    ஆனால் பலபேர் அதில் தோற்று போகின்றார்கள்.


    இது ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

    அப்படியே மனித உணர்வுகளையும் ஆராய்கிறார். அமெரிக்க அதிபர்களைக் கூட இவர் விட்டு வைக்கவில்லை....

    ReplyDelete
  57. இரண்டாவது நாள் வலைச்சர ஆசிரியருக்கு பாராட்டுக்கள். கசநோய் பற்றிய உணர்வை வாசகர்களுக்கு பற்ற வைத்துள்ளீர்கள்.
    நானும் ஒரு வைத்தியன் என்ற முறையில் உங்கள் பதிவின் பயனை நினைந்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
  58. ஆதவா இன் குழந்தை ஓவியம், அனந்தனின் முடிவிலானின் எழுத்துக்களில் இரண்டும் நான் ஏலவே வாசிக்கத்தொடங்கி இருக்கும் வலைப்பூக்கள்.....மற்றவர்களை இப்போதுமுதல் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்....
    அறிமுகத்திற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  59. மூச்சு முட்டுகிறது தேவா சார்! இத்தனை கவிஞர்களின் வலைத்தளத்திற்கும் சென்று வருவதற்குள்... அப்பப்பா...இத்தனை நாளாய் பார்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாய் உள்ளது. உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொல்வது? (வலைத்தள பொறுப்பாசிரியர் சீனாவுக்கும் நன்றி!)

    ReplyDelete
  60. பின்னூட்டங்கள் குறைவா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா இப்பத்தான் புரியுது... எல்லாருக்கும் நீங்க வேலைகொடுத்து அனுப்பிச்சது... மீதி பதிவர்களையும் படிச்சிட்டு வர்றேன்... அப்பா... இப்பவே கண்ண கட்டுதே!

    ReplyDelete


  61. முடிவிலானின் பதிவுக்குப் போனால், அவர் மிரட்டுகிறார்... பாம்பைக் காட்டி... வித்தியாசமான செய்திகளைத் திரட்டுகிறார்.

    உளறல் கவிதையில் காதலைத் தேடுகிறார். சில வரிகள் நன்றாக இருக்கின்றன.. முடிவிலான் எனும் பெயருக்கு ஏற்ப முடிவில்லாமலே எழுதுகிறார்.......

    வில்லு பாடலை நன்கு கொல்லுகிறார்.... ரசனையான பதிவு அது... படிக்க சுவாரசியம்.....

    ReplyDelete
  62. ஆதவா மற்றும் சிந்து இவர்களுடைய பதிவுகளை படித்திருக்கிறேன் மற்றவர்கள் புதியவர்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தேவா...

    ReplyDelete
  63. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் தேவா..
    புதியர் அனைவரின் படைப்பும் அருமை..
    அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  64. வந்து வாழ்த்திக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் என் நன்றி
    தேவா..

    ReplyDelete


  65. தமிழ்தினா, நட்பு காதல் போன்றவற்றை ஆராய்கிறார்.. அவரது கவிதைகளில் இவ்வாராய்ச்சி நன்கு எதிரொளிக்கிறது. காதல் நிறைந்து வழிகிறது.. கண்ணோரச் சுருக்கம் எனும் தலைப்பே அழகாக இருந்தது.....

    ReplyDelete


  66. சேலைக்கு கவிதை எழுதியிருக்காருங்க... (ஜொள்ளு கவிதை) சில வரிகள் ரொம்ப அருமையா இருக்கு.. நல்ல வித்தியாசமான சிந்தனை... சேலையோட நிறுத்திட்டா சரி....

    ரொம்ப நாளைக்கு முன்னாடி (எனக்கு சுமார் பதினெட்டு வயசிருக்கும் ) பாவாடைன்னு ஒரு கவிதை எழுதினேன்... அந்த ஞாபகம்......

    காதல் மழை, ஒரு அழகான க(தை)வி....

    ReplyDelete
  67. வணக்கம்!!
    நான் ரொம்பலேட்

    ReplyDelete
  68. தேவா சார்
    வன்க்கம்

    ReplyDelete
  69. தமிழ்தினா, நட்பு காதல் போன்றவற்றை ஆராய்கிறார்.. அவரது கவிதைகளில் இவ்வாராய்ச்சி நன்கு எதிரொளிக்கிறது. காதல் நிறைந்து வழிகிறது.. கண்ணோரச் சுருக்கம் எனும் தலைப்பே அழகாக இருந்தது.//

    வழிமொழிகிரேன்

    ReplyDelete
  70. குழந்தை ஓவியம் என்ற பதிவில் எழுதுகிறார்.செடி ஒன்று2120ல் சொல்வதாக //

    ஆதவா அருமை

    ReplyDelete
  71. இயற்கை நீர் பொழியுமென
    அண்ணாந்து பார்த்து
    செயற்கை பிம்பத்தை
    புணர்ந்து துடிக்கிறேன்//

    நல்லா இருக்கு

    ReplyDelete
  72. ஏதோ சில காரணங்களால்
    என்னை இவர்கள்
    விட்டு வைத்திருக்கக் கூடும்///

    மனிதன்
    எதை விட்டான் ஆதவா/

    ReplyDelete
  73. இவ் வாக்கிரமிப்புகளுக்கு நடுவே
    எங்கோ ஒரு மூலையில்
    துடித்துக் கொண்டிருக்கும்
    மனிதத்தை எண்ணியே
    உமிழ்கிறேன் பிராணத்தை

    சூப்பர்

    ReplyDelete
  74. T.B. என்று நாம் அழைக்கும் காச நோய் நுரையீரல்களைத்தான் முதலில் தாக்கும்!இருமல்,சளி உடல் எடை குறைதல், பலகீனம் ஆகியவை இதில் வரும்! குழந்தைகளைத்தாக்கும் போது இதனை பிரைமரி காம்ப்ளக்ஸ் என்று சொல்வார்கள்.///

    நல்ல தகவல்..

    ReplyDelete
  75. இந்த இரண்டாம் நாளில் எனக்கு வழிகாட்டிய அன்பு ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.அவர்களுக்கு என் பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.///

    நல்ல மாணவன்

    ReplyDelete
  76. காலை ஸ்வரம் கேட்காத
    எழுச்சி,
    அதிகாரம் இல்லாமல்
    வீட்டை நெருக்கும்
    சூன்யம்
    பிறிதொருநாள் எழுதிவைக்கும்
    பிரிவென்ற கவிதை.

    நல்லா எழுதிய்ள்ளீர்

    ReplyDelete
  77. பச்சிளம் குழந்தையை மீறும்
    மென்மை அவளிடம்..
    சொல்ல வார்த்தை இல்லை
    உண்மை அவளிடம்..//

    கொஞச்ம் குளப்புது..

    ReplyDelete
  78. என் மனதைப்பிழிந்த கதை ஒன்று சொல்கிறேன்!///

    கதை என் மனதை பாதித்தது..

    ReplyDelete
  79. ஆயின்
    என்றேனும் ஒருநாள்
    அம்மாவின் நினைவு வரலாம்
    அழுது முடித்த பின் தோன்றும்

    "அழாமல் இருந்திருக்கலாம்..."

    அழுகை அடக்க முடியாது ஆதவா..

    ReplyDelete
  80. வக்கீலுக்குப் படிக்கும் போதே எனக்குப்பழக்கம்! பைக்கில் ஸ்டெயிலாக சுத்துவார்.இதெல்லாம் 10 வருடம் முன்பு!திடீரென்று ஒரு நாள்என் நண்பர் ஒருவர், வக்கீல் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை///

    சே படித்தும் பயன்?

    ReplyDelete
  81. லும்பும் தோலுமாக உடல் மெலிந்து,நடக்க முடியாமல் வீல் சேரில் அம்ர்ந்து இருந்தார்! சோதித்ததில் அவருக்கு டி.பி.இருந்ததும்,மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது//

    தவறான போதை பழ்க்கம் உண்டோ/

    ReplyDelete
  82. சிந்து நல்லா எழுதுகிரீர்கள்

    ReplyDelete
  83. உன்னால் மட்டும் - என்
    மனநிலையைப்
    புரிந்துகொள்ள முடிகிறதே
    எப்படி//

    நல்லா இருக்கு..

    ReplyDelete
  84. என்னாலேயே
    சமாதானப் படுத்த என்னை
    கட்டிப் போடும் - நீ
    சதாரணவளாக
    இருக்க முடியாது.//

    சூப்பர்...

    ReplyDelete
  85. தினமும் என்னைக்காப்பாற்றுங்கள் என்று கேட்பார்//

    எப்படி காப்பாற்றுவது?

    ReplyDelete
  86. தனிமையைப் புரிய வைத்த
    அற்புத உறவு
    அழுகைக்கு ஓய்வு தந்த
    ஆலோசகர்
    உணர்வுகளைப் புரிய வைத்த
    ஆசான் நீ மட்டுமே..//

    புரியலியே அக்கா..

    ReplyDelete


  87. பூஞ்சோலை அருள்கரன்

    காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்... என்று அழைப்பு விடுக்கிறார்... அவரது

    எழுத்தும் அழகாக இருக்கிறது. கொஞ்சம் வித்தியாசமான எழுத்துக்காரர்.....

    காதல் அவரது வலை முழுக்க பரவிக் கிடக்கிறதுத... பிரபஞ்சத்தைக் கூட சுத்திக் காண்பிக்கிறார்.... காணவேண்டிய பதிவு..

    பக்கத்துவீட்டு காதல் கவிதையில் இறுதி வரி பிரமாதமாக அமைந்திருந்தது..... கொஞ்சம் குசும்பும் கூட...

    ReplyDelete
  88. ஆதவா
    உங்கள்
    கவிதைகள்
    சுப்பர்

    ReplyDelete
  89. பூஞ்சோலை அருள்கரன்

    காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்... என்று அழைப்பு விடுக்கிறார்... அவரது

    எழுத்தும் அழகாக இருக்கிறது. கொஞ்சம் வித்தியாசமான எழுத்துக்காரர்.....

    காதல் அவரது வலை முழுக்க பரவிக் கிடக்கிறதுத... பிரபஞ்சத்தைக் கூட சுத்திக் காண்பிக்கிறார்.... காணவேண்டிய பதிவு..///

    நானும் அப்படியே..

    ReplyDelete
  90. அண்ணா நேரம் என்பது எனக்கு எதிரியாகவே இருக்கு அது தான் ஒரு பதிவு...

    ReplyDelete
  91. என் அம்மாவுக்கு நான் இப்படி எழுதுவதெல்லாம் தெரியாது அண்ணா. அவங்களுக்கு எல்லாமே விளக்கித் தான் சொல்லணும் அது சொல்வதற்கு எனக்கு நேரம் இல்லை. நான் வலைத்தளம் எழுதுகிறேன் அதுவும் அடிக்கடி பதிவு போடுகிறேன் ஏன்டா என்ன பிள்ள அங்க படிக்காம இத பாக்கிற என்பார்..

    ReplyDelete
  92. வைத்தியர்கள் சொல்லும் மருந்து எல்லாமே கசப்பானதா இருக்கே அது தான் நாங்க மருந்து போட கஷ்ட படுறோம்.. கொஞ்சம் சுவையானதா தயாரிக்கச் சொல்லுங்க....

    ReplyDelete
  93. நான் சும்மா எழுதியதை எல்லாம் நீங்க பெருமைப் படுத்தி இருக்கிறீங்க.. நன்றி.... இதை தவிர என்ன சொல்ல...

    ReplyDelete
  94. வந்த நிமிடத்தில நீங்க சொன்னதுக்காக இத்தனை பதிவு............

    ReplyDelete
  95. படிக்கவே நேரம் இல்லை அண்ணா அது தான்...(என்னடா இவ வெட்டிக் கிழிக்கிற என்னைப் போல வைத்தியம் படித்தாலும் பரவாயில்லை எண்டு கேக்கிறீங்களா?)

    ReplyDelete
  96. வேற என்ன சொல்ல.... நான் எப்பவுமே சின்ன பொண்ணாகவே இருக்க அசப்படுபவல் அது தான் குழந்தைத் தனமா எல்லாமே வருது... ஆனாலும் அதிலையே பிழை கண்டு பிடிக்கிறாங்க.. (இந்த முட்டையில் மயிர் புடுன்கிரவங்களும் இருக்கத் தானே செய்யிறாங்க..)

    ReplyDelete
  97. இந்தாங்க வந்திட்டிது 100..................

    ReplyDelete
  98. அண்ணா நீங்க 100 போடச் சொன்னீங்க என்னால 100 வது தான் போட முடிந்தது.. வரட்டா? என்ன 100 ஆ அது தான் comment

    ReplyDelete
  99. தேவா அண்ணா உடம்பெல்லாம் புல்லரிக்குது ...... ரொம்ப நன்றி .
    நீங்கள் ஆசிரியராக எங்களுக்கு நிறைய செய்வீங்க ..... மீண்டும் நம்பிக்கையோடு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  100. தேவா அண்ணா உடம்பெல்லாம் புல்லரிக்குது ...... ///

    பிரபா நல்லா எழுதியுள்ளீர்கல்

    ReplyDelete
  101. This comment has been removed by the author.

    ReplyDelete
  102. நீங்க தெரிவு செய்த 3 பதிவுகளும் என்ன நன்கு பாதித்த விடயங்கள்...

    ReplyDelete
  103. மிக்க நன்றி இனியா அவர்களே!!!

    ReplyDelete
  104. புது புது அறிமுகங்கள்

    புது புது நபர்களின் பின்னூட்டங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  105. இன்று அதிகம் வர இயலவில்லை.

    ReplyDelete
  106. தமிழ்தினா -

    இவரது கவிதைகளை மிகவும் இரசிப்பேன்.

    ReplyDelete
  107. பிரியமுடன் பிரபு

    இவர் சினமா மெட்டுக்கு பாட்டெழுதி அசத்தி இருந்தார்.

    ReplyDelete
  108. வைத்தியர் ஐயாவின் காசநோய் அறிவிப்பு பயனுள்ள தகவல்கள். லொக்கு லொக்கெண்டு இருமித் திரியறவைக்கு கட்டாயம் சொல்கிறேன்.

    வாழ்த்துக்கள் தேவா வைத்தியரே.தேனீரை மறக்காமல் போட்டுக் கொண்டு வாருங்கள்.

    அடிக்கடி கருத்து எழுத முடிவதில்லை. ஆனால் தங்கள் வலைப்பூவை தினமும் வாசிப்போம்.

    பாராட்டுக்கள்.

    சாந்தி

    ReplyDelete
  109. \\உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ\\

    மிக அழகாக காதலை சொல்கிறார் அருள்காரன்

    ReplyDelete
  110. "
    ஆதவா said...

    சிந்து,

    தன் மனநிலையை சங்கீதத்திடம் காண்கிறார். நல்ல கவிதை நடை.. வித்தியாசமாக யோசிக்கிறார். தாய் அல்லது தாய்மண் குறித்த அவரின் பார்வையில் சமூக உணர்வு முன்னுக்கு நிற்கிறது. ஈழமண்ணுக்காக அவர் அழுகிறார்... பிறருக்கு அழுபவர் தெய்வமாவது போன்று...... அம்மா கவிதையில் மகள் பார்வையிலிருந்து பேசுகிறார், சற்று தடுமாறியிருப்பதாகத் தோன்றினாலும் சொல்லவந்த கரு நன்றாக இருந்தது."

    நன்றி.....
    பல தடவைகள் தடுமாறியிருக்கிறேன். அவைகளில் இதுவும் ஒன்று....

    ReplyDelete
  111. "அ.மு.செய்யது said...
    //தனிமையைப் புரிய வைத்த
    அற்புத உறவு
    அழுகைக்கு ஓய்வு தந்த
    ஆலோசகர்
    உணர்வுகளைப் புரிய வைத்த
    ஆசான் நீ மட்டுமே..//

    சிந்துவின் கவிதை வரிகள்...அழகாக எழுதியிருக்கிறார்."
    நன்றி என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாதவளாக..

    ReplyDelete
  112. "
    புதியவன் said...
    ஆதவா மற்றும் சிந்து இவர்களுடைய பதிவுகளை படித்திருக்கிறேன் மற்றவர்கள் புதியவர்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தேவா..."

    வந்திருக்கிறீங்கள் தான்... நன்றி..
    நேரம் ஒதுக்க முடியாமைக்கு வருந்துகிறேன்...... ஆறுதலாக வாசித்து பதில் கருத்து போடலாமா?

    ReplyDelete
  113. iniya said...
    சிந்து நல்லா எழுதுகிரீர்கள்

    February 10, 2009 4:52:00 PM IST

    iniya said...
    உன்னால் மட்டும் - என்
    மனநிலையைப்
    புரிந்துகொள்ள முடிகிறதே
    எப்படி//

    நல்லா இருக்கு..

    February 10, 2009 4:55:00 PM IST

    iniya said...
    என்னாலேயே
    சமாதானப் படுத்த என்னை
    கட்டிப் போடும் - நீ
    சதாரணவளாக
    இருக்க முடியாது.//

    சூப்பர்...


    நன்றி............. அப்பிடியே அங்கேயும் உங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கலாமே...

    ReplyDelete
  114. அன்பின் தேவ குமார்

    அருமையாகச் செல்கிறது - குரு வணக்கம் - காச நோய் பற்றிய ஒரு தெளிவான அறிமுகம் - பிறகு பதிவர்களின் அறிமுகம் - விவேகானந்தரின் பொன்மொழி என பதிவு கலக்கலாய் இருக்கிறது.

    நல்வாழ்த்துகள் தேவகுமார்

    ReplyDelete
  115. "
    iniya said...
    தனிமையைப் புரிய வைத்த
    அற்புத உறவு
    அழுகைக்கு ஓய்வு தந்த
    ஆலோசகர்
    உணர்வுகளைப் புரிய வைத்த
    ஆசான் நீ மட்டுமே..//

    புரியலியே அக்கா.."
    என்ன இப்படி அக்கா எண்டு கூப்பிடிரீங்க... நான் உங்களுக்கு தங்கச்சியாகத் தான் இருப்பேன்.... அண்ணா தேவா அண்ணா கொஞ்சம் இவங்களுக்கு சொல்லுங்க....
    ஏலவற்றுக்கும் ஒரே பதில் சங்கீதம் சங்கீதம் சங்கீதம் தான்....

    ReplyDelete
  116. சீனா சார், சிந்து,இயற்கை நன்றி..
    சிந்து நான் சொல்லுகிறேன்..

    ReplyDelete
  117. பலரும் எனக்கு புதியவர்
    படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  118. முடிவிலானின் பதிவுக்குப் போனால், அவர் மிரட்டுகிறார்... பாம்பைக் காட்டி... வித்தியாசமான செய்திகளைத் திரட்டுகிறார்.

    ReplyDelete
  119. அ.மு.செய்யது said...
    //தனிமையைப் புரிய வைத்த
    அற்புத உறவு
    அழுகைக்கு ஓய்வு தந்த
    ஆலோசகர்
    உணர்வுகளைப் புரிய வைத்த
    ஆசான் நீ மட்டுமே..//

    சிந்துவின் கவிதை வரிகள்...அழகாக எழுதியிருக்கிறார்

    ReplyDelete
  120. /இதற்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலத்தில் நோய் தாக்கி இறந்தவர் --கணிதமேதை ராமானுஜம்!!
    //

    தான் இறக்கும் நாளை கூட கணக்கு போட்டு சரியாகச் சொன்னவர்.///

    என்ன செய்யது உண்மையா?

    ReplyDelete
  121. //
    சிற்பி சிலை வடித்து முடித்து கடைசியாக கண் வடிப்பார். அது போல் குருவே ஒருவனுக்கு அறிவுக்கண் திறக்கிறார்.
    //

    அருமை தேவா ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க!!

    ReplyDelete
  122. அப்படிங்கிறீங்க!!!

    ReplyDelete
  123. காச நோய் பற்றி எல்லாருக்கும் பயன் படியாக எடுத்து கூறி இருக்கிறீர்கள்
    மிகவும் கொடிய வியாதி,

    அந்த காலத்தில் இந்த நோயிக்கு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை
    என்று என் பாட்டி கூறி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  124. தங்கராசா, ஜீவராஜ், வேத்தியன், அன்புமணி, ஆதவா, சிந்து, பிரபா, அனந்தன், தமிழ்தினா, பிரபு பிரியமுடன் பிரபு, அருள்கரன் பூஞ்சோலை.

    அப்பா இவ்வளவு பேரா. படிக்கவே மூச்சு முட்டுதே.

    எல்லார் வலைப் பதிவுகளையும்
    நான் கண்டிப்பா படிக்கறேன்.

    இவ்வளவு அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  125. //
    thevanmayam said...
    அப்படிங்கிறீங்க!!!

    //

    YEEEEEEEEEEEEEEEEEEEEEEEES

    ReplyDelete
  126. எல்லாரையும் அறிமுகப் படுத்தி
    இருக்கீர்கள்.

    ஆணி ரொம்ப இருக்கறதுனாலே
    தனியா டீ ஆத்த வேண்டி இருக்கிறது

    ok, better never than late.

    ReplyDelete
  127. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  128. என்னை அறிமுகம் செய்ததற்க்கு நன்றி

    ReplyDelete
  129. ///
    தைரியமாக இரு!வலிமையுடன் இரு!
    அடுத்த பதிவில் பார்ப்போம்!..
    ////

    இதுல ஏதாவது உள்குத்து இருக்கா???

    ReplyDelete
  130. கடின உழைப்பு தெரிகிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  131. \\இவர்களில் பிடித்ததை சூடாகப் படித்து அவர்களை பாராட்டி சந்தோசப்படுத்துங்கள்! படிக்க நேரமில்லையெனில் வலை முகவரியை குறித்துவைத்து பின்பு படியுங்கப்பா!\\

    அவசியம் செய்றோம் தேவா

    ReplyDelete
  132. \\தைரியமாக இரு!வலிமையுடன் இரு!பொறுப்பு முழுவதையும் உன் தோள்மீதேசுமந்துகொள்!உனது விதியைப்படைப்பவன் நீயே என்பதைப்புரிந்து கொள்!! விவேகானந்தர்!\\

    அருமையான விடயம்

    பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  133. " ஹரிணி அம்மா said...
    அ.மு.செய்யது said...
    //தனிமையைப் புரிய வைத்த
    அற்புத உறவு
    அழுகைக்கு ஓய்வு தந்த
    ஆலோசகர்
    உணர்வுகளைப் புரிய வைத்த
    ஆசான் நீ மட்டுமே..//

    சிந்துவின் கவிதை வரிகள்...அழகாக எழுதியிருக்கிறார்"

    I don't have any words except Thanks
    So Thanks........

    ReplyDelete
  134. ungal ookathuku mikkam nandri...

    _/\_

    ReplyDelete