Saturday, March 14, 2009

வானவில் மீண்டும் தோன்றும்

கடந்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை .கண்மூடித் திறப்பதற்குள்,அழகாக ஓடி விட்டது
நாளொரு வண்ணமும் பொழுதொரு விஷயமுமாய் பதிவுகள் இட்டு,என்னால் இயன்ற அளவு வலைச் சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுச் செய்திருக்கிறேன் .
அது அத்தனையும் உங்கள் ஆதரவிலும் நீங்கள் தந்த ஊக்கத்திலும்தான் என்பதை நன்றியுடன் கூறிக்கொள்கிறேன்.
பிளாக்ஸ்பாட் ஒரு மாபெரும் கடல் அதில் மூழ்கி அனைத்து முத்துக்களையும் அள்ளிப் பார்க்க வேண்டும் என்பது எப்படி இயலாத காரியமோ ,அதை விடக் கடினமானது,ஒரே வாரத்துக்குள் அனைத்துப் பதிவர்களையும் கண்டு எழுதுவது.
நான் வலைச்சரத்தை ஏற்று நடத்தத் தொடங்கிய நாளிலிருந்து என் கூடவே வந்து வாழ்த்தி தவறுகளை அழகாக எடுத்துக் கூறி ,உற்சாகப்படுத்தி வந்த எல்லோருக்கும் நன்றி.
மார்ச் முதல்தேதி நட்புடன் சீனா ,எனக்கு ஈமெயில் அனுப்பி கேட்ட நாளிலிருந்து இன்று மதியம் வரை வலைச்சரத்துக்காகப் பல வலைப்பூக்களைக் கண்டு வாசித்ததில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் பல.
எழுதுவதற்காக வாசித்தது குறைந்து, எனக்காக வாசிக்கத் தொடங்கினேன்.ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள், எப்படியெல்லாம் ,தங்கள் மனஓட்டத்தை வெளியிடுகிறார்கள் ,என்று பார்க்கும் பொழுது, ஆச்சரியப் பட்டுப் போனேன்.
நட்புடன் ஜமால்,ராமலஷ்மி அன்புமணி வால்பையன்,திகழ்மிளிர்,வெயிலான் ,ரம்யா என்று வரிசையாக எழுதிக் கொண்டே போகும் வண்ணம் நண்பர் கூட்டம் ஒன்று என்னை திக்கு முக்காட வைத்தது.வலைச்சரத்துக்கு நன்றி
லின்க் கொடுப்பது எப்படி என்பதிலிருந்து, தவறுகள் கண்டவுடன்,செல்லில் அழைத்து சரி செய்யச் சொல்லி , துணை இருந்த ராமலஷ்மிக்கு என் நன்றி.பலரை அறிமுகம் செய்யாததற்குக் காரணம் நேரமின்மையே.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இன்று வரை செய்திருக்கிறேன் .
அனைவருக்கும் என் அன்பு வணக்கம்
நன்றி கூறி விடை பெறுவது உங்கள் அன்பு வலைச்சரத்தின் ஒருவார முதல்வர்.கோமா

7 comments:

  1. மிக்க அழகாக தொடுத்து இருந்தீர்கள்.

    வேலை பளு காரணமாக சில பதிவுகளுக்கு பின்னூட்டம் போட இயலாமல் போய்விட்டது.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. உங்கள் தொகுப்புகளின் தொகுப்பு அருமையாகவே இருந்தது.

    இங்கே தெரிந்த வானவில்லை மீண்டும் தங்கள் வலையிலேயே சந்திக்க வருவோம்.

    பல விடயங்களை உங்கள் தொகுப்புகள் மூலம் அறியப்பெற்றோம்
    நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. வானவில் மீண்டும் தோன்றும். மீண்டும் மீண்டும் தோன்றும் உங்கள் வலைப்பூக்களில் ஜமால் சொன்ன மாதிரி.

    நான் அறிந்திராத பல பதிவர்களை அறியத் தந்துள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே நேரமின்மையால் இன்னும் சில சுட்டிகளை படிக்க இயலவில்லை. அவற்றையும் படிக்கின்றேன் விரைவில்.

    ஒவ்வொரு பதிவுக்கும் அருமையான த்லைப்புகள். அழகுத் தமிழில் ஆங்காங்கே அன்று, எங்கெங்கும் தெளிக்கப் பட்ட நகைச்சுவையும் வெகு எழில்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. நன்றி கோமா..
    நன்றி கோமா அத்தை
    நன்றி கு.மணி மாமா....என் அகராதி புரிஞ்சதா
    நன்றி க.ஆனந்த்


    நன்றி கோமா..
    நன்றி கோமா அத்தை
    நன்றி கு.மணி மாமா....என் அகராதி புரிஞ்சதா
    நன்றி க.ஆனந்த்

    அழகுத் தமிழில் ஆங்காங்கே அன்று, எங்கெங்கும் தெளிக்கப் பட்ட நகைச்சுவையும் வெகு எழில்.

    வாழ்த்துகள்

    என்று வாழ்த்திய ஜமால் இராகவன் ராமலஷ்மி திகழ்மிளிர் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  5. பலனுள்ள பல தகவல்களும் பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த வாரமாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. S.A.navasudeen
    நன்றி .எல்லாவற்றிற்கும் அனைவரது கைதட்டலும் தட்டிக் கொடுத்தலுமே காரணம் .எல்லோருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  7. எங்கெங்கும் தெளிக்கப் பட்ட நகைச்சுவையும் வெகு எழில்....நன்றி ராமலஷ்மி.

    ReplyDelete