Sunday, March 15, 2009

டாடா பை பை

ரயில் பயணமோ காரில் செல்கிறோமோ நம்மை வழி அனுப்ப வந்தவர்களை ரயில் புறப்படும் வரை,காரில் ஏறும் வரை அல்லது எத்தனை தூரம்வரை பார்க்க இயலுமோ அது வரைத் திரும்பிப் பார்த்தவண்ணம் கை அசைப்போமே .அது போல் இன்று பத்து மணிக்கு என் வலைச்சரம் அடுத்தவர் அடுத்து வரும் பதிவாளர் கை போகும் முன் எழுதுகிறேன்
இந்த வலைச்சர வானவில் ஆசிரியர் பதவியில் என் அனுபவங்களை , கண்ட நல்ல விஷயங்களை புரிந்து கொண்ட சில பாடங்களை உங்களோடு சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

1-வலை உலகம் கடல் போல் பறந்து விரிந்து பதிவுகளே அலைகளாய் அடித்துகொண்டிருக்கும் ஆழ் கடல் .இதில் எந்தப்பக்கம் மூழ்கினாலும் தமிழ் முத்து நிச்சயம்.

2-தமிழர் அனைவரையும் குறிப்பாக தாய்மடி விட்டுத் தள்ளி வாழும் தமிழர்கள் என்று அனைவரிடமும் நான் கண்டது மெல்லத்தமிழினி சாகும் என்று பாரதியின் கூற்றை பொய்யாக்கும் ஆர்வம்.கணினி வாழ்க.

3-வாரப் பத்திரிகைகள் மாத இதழ்கள் பல, இட நெருக்கடியால் ஏற்றுக் கொள்ள இயலாமல் நிராகரிக்கப் பட்ட படைப்புகள், பிரசுரிக்க இயலவில்லை என்று திரும்பி வந்த[அந்த துண்டுச் சீட்டு ஒரு பண்டில் என்னிடம் இருக்கிறது]படைப்புகளை பலரும் அறிய வெளியிட்டால் ,அந்தந்த பத்திரிகை மீது நமக்கு “இதற்கு என்ன குறைச்சல்”என்று கேட்க வைக்கும் .பிளாக் தத்தம் திறமைகளை உலகுக்குப் பறைசாற்ற வைக்க பெரிதும் கை கொடுத்து வருகிறது.தமிழ் ஃபாண்டுக்கு நன்றி

4.ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டி தோள் கொடுத்து நிற்கும் தோழர்கள் கைகொடுக்கும் நட்புக் கரங்கள் பல இந்த ஒரு வாரம் கண்டேன். நான் பெற்றதை அப்படியே எனக்கு அடுத்துவரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்களோடு ,வழங்கக் காத்திருக்கிறேன்

5.சொடோகு போடாமல் இருக்க முடியுமா என்ற என் கேள்விக்கு இந்த ஒரு வாரம் அழகாக ப் பதில் கிடைத்தது .முடியும் என்று.
காலை எழுந்த உடன் சுடோகு,மதியம் சாப்பிட்ட பின் சுடோகு..மாலை முழுவதும் சுடோகு என்று வழக்கத்தில் வைத்துக்கொள்ளு கோமா என்று பாரதி சொன்னதாக நினைத்துக் கொண்டு ,
அந்த நவநம்பர் விளையாட்டில் புவ்வா மறந்து கிடந்தவளை ஒரு வாரம் கட்டிப் போட்டிருந்தது வலைச்சரம் .

6.பொறுப்பை நன்கு நடத்த என் ஹெளஸ் பெண்ட் [ஓய்வுபெற்ற ஊழியரென்றால் அப்படித்தானே அழைக்க வேண்டும்]எனக்கு பேராதரவு தந்து நின்றார் ,உருப்படியாக எது செய்தாலும் நானும் ஆதரவு தருவேன் என்று நிரூபித்துக்காட்டினார் அவருக்கு ஒரு நன்றி

7.மார்ச் எட்டாம் தேதிக்குமுன் இருந்த கோமாவுக்கும் 15 ஆம் தேதி நான் காணும் கோமாவுக்கும் 8 வித்தியாசங்களாவது நிச்சயம் இருக்கும் .

வானவில்லின் V I B G Y O R வழியிலேயே என் நன்றி உரையை முடித்துக் கொண்டு ,அடுத்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்து கூறிக்கொண்டு,மீண்டும் மீண்டும் சந்திபபோம் சிரிப்போம் என்று கூறி விடை பெறுகிறேன் வணக்கம்.

17 comments:

  1. பல பதிவுகளைத் தாமதமாகப் படித்தக் காரணத்தால் பின்னோட்டம் இட முடியவில்லை.

    அருமையான இடுகைகள்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  3. \\வலை உலகம் கடல் போல் பறந்து விரிந்து பதிவுகளே அலைகளாய் அடித்துகொண்டிருக்கும் ஆழ் கடல் .இதில் எந்தப்பக்கம் மூழ்கினாலும் தமிழ் முத்து நிச்சயம்.
    \\

    அழகா சொன்னீங்க ...

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. ஜெய் ஹோ
    எல்லா புகழும் வலைச்சரத்துகே

    ReplyDelete
  5. சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். சென்று வென்று வருக அக்கா.

    ReplyDelete
  6. ஏழாம்நாள் வாழ்த்துகள். நல்ல பல பதிவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த தங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. திகழ்மிளிர்.
    குறுகிய காலகட்டத்தில் பல பதிவுகளுக்கு பதிய நேரமின்மையால் பதிய இயலாமல் போனது குறித்து நான் யோசித்து கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  8. இதில் எந்தப்பக்கம் மூழ்கினாலும் தமிழ் முத்து நிச்சயம்.
    \\

    அழகா சொன்னீங்க ...

    உண்மைதானே ஜமால் ?

    நீட்டிய கரங்களில் சிக்குவதெல்லா சிறப்பானதுதான் என்றுதானே நீங்களும் கரம் நீட்டி அனைவரையும் வரவேற்கிறீர்கள்.

    ReplyDelete
  9. பதிவர்கள் அனைவரும் அனைவருக்கும் அறிமுகமானவர்கள்தான் என்றாலும் நான் என் ரசனையில் கண்டு எழுதிருந்ததால் புதியவர்களாகத் தெரிந்தார்கள்.அவ்...வ்..வளவே.
    கடையம் ஆனந்த் வென்றுவர வாழ்த்தியிருக்கிறீர்கள்.
    வென்றதெல்லாம் வலைகளுக்கே.

    ReplyDelete
  10. விவேக் பாணியில்
    ----------------
    எனக்கு திகழ்மிளிரைத் தெரியும்,கடையம் ஆனந்தைத் தெரியும்,ஜமால் தெரியும் ராமலஷ்மியைத் தெரியும் ...

    அப்...ப்டீங்களா?[ஒரு சயூட்]

    ஆனா அவங்களுக்கெல்லாம் என்னை தெரியாது........

    [மொத் மொத்....]

    ஹேய்...வெய்ட் வெய்ட்.....!!!!!
    அது அப்போ .
    இப்போ அவங்ய எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும்

    ReplyDelete
  11. அதி வேக இரயிலா இருந்தது... நல்ல பதிவுகள்.. டாடா.. பை பை!

    ReplyDelete
  12. மொத்தத்தில் அனைவருக்கும் இனிமையான தடம் புரளாத பிரயாணம் தந்த மகிழ்ச்சி இந்த எஞ்சின் டிரைவருக்கு மறக்க முடியாத அனுபவம்.

    ReplyDelete
  13. நல்லதொரு வாரமாகக் கழிந்தது கோமா.
    அன்பு மிளிர்கிறது உங்கள் எழுத்தில். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. நல்லதொரு வாரமாகக் கழிந்தது கோமா
    அன்பு மிளிர்கிறது உங்கள் எழுத்தில். வாழ்த்துகள்.
    ----
    நல்லதொரு வாரமாகக் கழித்தேன் களித்தேன் வல்லிசிம்ஹன். ஆதரவு ஜொலிக்கிறது உங்கள் அனைவரது பின்னூட்டத்தில்
    நன்றி

    ReplyDelete
  15. ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து முடிக்கும் போது அம்சமாக முடித்து விட்டீர்கள் வலைச்சர ரயிலை....

    ReplyDelete
  16. அதுவே வலைச்சரத்தின் சிறப்பம்சம்

    ReplyDelete
  17. என்னால் தொடர்ந்து வந்து படிக்கமுடியாத சூழலுக்காக வருந்துகிறேன்.

    அருமையான தொகுப்புக்களுக்கு நன்றி

    ReplyDelete