வலைச்சரம் தொடுப்பது என்பது அவ்வளவு எளிதாக எனக்கு தோன்றவில்லை, எல்லாம் இந்த ஐந்து நாட்களில் பெற்ற அனுபவம் தான். சரி நம்மை போல மற்ற நண்பர்களின் அனுபவமும் கேட்டு தெரிந்துக்கொண்டு அப்படியே வலைச்சரத்தின் பழைய புதிய நினைவுகளை கொண்டு வரலாம் என்று ஆசைப்பட்டு அனைவரிடமும் அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன்.. இதோ...(இதுவரை அனுப்பியவர்கள் வரை,) வலைச்சரம் பற்றிய அவர்களின் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் :-
கயல்விழி முத்துலெட்சுமி :- வழக்கம்போலத்தான் நம்மளையும் நம்பி கூப்பிடறாங்களேன்னு முதலில் குஷி.. நாமபாட்டுக்கு தினம் வர பதிவுன்னு தமிழ்மணத்துல காட்டுற எல்லாமே படிச்சு குவிக்கிறோமே.. அதுல இருந்து எழுதிடலாமேன்னு தோணிச்சே தவிர.. இதைப்படிங்க ..நீங்க தவறவிட்டறாதீங்கன்னு சொல்லனும்ன்னா அதுஎப்படிப்பட்ட நல்ல பதிவா இருக்கனும்ன்னு ஒரு விதமான தடுமாற்றம் ஆகி எப்படியோ பொறுப்பை முடிச்சிட்டேன்னு தான் சொல்லனும்.. ஆனால் அதுக்கப்பறம் சொந்தப்பதிவுகளை பொறுப்பா எழுதனும்னு தோன்ற ஆரம்பிச்சது .. :)
குட்டி கண்ணம்மா (G3) :- கவிதாயினி காயத்ரிக்கும் ஜி3 காயத்ரிக்கும் குழப்பம் வந்து தான் நான் சிக்கினேன் வலைச்சரத்துல. இல்லாட்டி நம்மள எல்லாம் யாரு சீண்ட போறா... சரி.. அந்த கதைய விடுங்க. ஆனா ஒரு வாரம் போட வேண்டிய பதிவுக்காக பழைய பதிவுகள் எல்லாம் படிச்சப்போ, திரும்ப அந்த நாட்களுக்கே போன மாதிரி ஒரு அனுபவம். பதிவுகள்ல பின்னூட்டங்கள் அதை தொடர்ந்த ஜி-டாக் அரட்டைகள்னு எல்லாத்தையும் திரும்பிப்பாக்க ஒரு வாய்ப்பா இருந்துது. நான் தொகுத்த அந்த ஒரு வாரம் மத்தவங்களுக்கு எப்படி இருந்துதுனு தெரியலை (டெர்ரராத்தான் இருந்திருக்கும் :) என்ன இருந்தாலும் அதை நானே சொல்லக்கூடாதில்ல :P ) ஆனா தொகுத்த எனக்கு மனநிறைவா இருந்துது :)
ஆயில்யன் :- எழுதுவதை மட்டுமே யோசிக்க வைக்கும் பதிவுலகில்
எழுத்துக்களை வலைச்சரம் வாசிக்க வைக்கிறது !
கடந்து போன நிமிடங்களில் மலர்ந்து மறைந்த வலைப்பூக்கள்
பின் மீண்டும் மலர்ந்து வாசம் வீசச்செய்யும் வலைச்சரம்
வலைச்சரத்தில்
எழுதுபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தில் வலம் வருபவர்களுக்கும் உற்சாகம்!
எழுத்தினை வாசிப்பவர்களுக்கும் உற்சாகம்!
பழமையான வலைச்சர பக்கத்தினை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் யாவரும் வலம் வந்து வரிகள் கண்டு வாசித்து செல்ல....!
கோபிநாத் :- இருவர் மனதில் எப்போதும் விழா மேடைகள் பெருமையான விஷயமாக இருக்கும். ஒன்று பரிசை வாங்குபவர் மற்றொருவர் பரிசை தருபவர். அப்படி ஒரு பெருமைக்குறிய மேடை தான் நம்ம வலைச்சரம். அதில் நானும் இந்த இரண்டு நிலைகளில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மிக பெருமையான விஷயம். என்னையும் தொடர்ந்து ஏழு நாட்கள் பதிவுகள் போட வைத்தவர்கள்.அவர்கள் செய்யும் பணி மிக பெருமைக்குறிய விஷயம். தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ;) இந்த வாய்ப்பை தந்தமைக்கு கவிதா அக்காவுக்கு என்னோட மனமார்ந்த நன்றி ;)
ஜமால் :- அது நாள் வரை, வலைச்சரத்தில் அறிமுகமே செய்யப்படாத நான் ஒரு தொகுப்பாளராக, மிக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. முதல் நாள், ஒரு வித பயம் கலந்த எதிர்ப்போடு போயிற்று, வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்தடுத்த நாட்கள் இன்னும் கண் விருந்து வைக்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. முடிந்த அளவு புதியவர்களை அறிமுகம் செய்தேன். ஐந்து நாட்கள் தான் முடிந்தது பின்னர் சற்று சோர்வடைந்துவிட்டேன். மொத்தத்தில் மெத்த மகிழ்ச்சி.
கோவி கண்ணன் :- வலைச்சரம் தொகுப்பு என்பது 'படித்ததில் மனதில் பதிந்தவை' வகை, பின்னே தெரியாததை எப்படி எழுத முடியும் ? நாலு பேருக்கு நாம் என்ன என்ன மண்டையில் ஏற்றிவைத்திருக்கிறோம் என்பதாக மறைமுகமாக புரிய வைக்கும், பிடித்தவற்றை எழுதுவது எல்லோருக்கும் எளிமையானது தான். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவங்களை பதிவுல குறிப்பிடலையேன்னு யாரும் வருத்தப்படுவாங்களோ ன்னு கொஞ்சம் உறுத்தலாக இருக்கும். இந்த 'பதிவை' விட்டுட்டிங்களேன்னு சிலர் கேட்பாங்க, வலைச்சரம் விளம்பரத்துக்கானது அல்ல, அது அவரவர் பார்வையிலான தொகுப்பு என்ற எண்ணத்தில் தான் எழுதினேன்.
தருமி :- வலைச்சரத்தின் அந்த ஒரு வாரப் பொறுப்பில் நான் செய்த தவறுகள் தான் அதிகம். சரியான புரிதல் இல்லாமல் என் பதிவுகளுக்கு ஒரு முன்னோட்டம் ஏதும் முதல் பதிவில் சரியாகக் கொடுக்கவில்லை என்றே நினைக்கிறேன். தொடர்ந்த பதிவுகளிலும் முழுமையான அளவில் மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு இடம் கொடுத்ததாக நினைவில்லை. மொத்தத்தில் சரியான முன்னேற்பாடு ஏதுமின்றி ஒரு வார வலைச்சரத்தை கெடுத்த 'பெருமை' மட்டும் என்னைச் சேரும். மன்னிக்கணும்.
சென்ஷி :- வலைச்சரம் ஆரம்பித்த புதிதிலேயே அதில் ஆசிரியர் பொறுப்பு கொடுத்திருந்தார் நண்பர் சிந்தாநதி.. (இப்ப எங்க தலைவா இருக்கீங்க?). அன்றைய பதிவுகளில் இப்போது இருப்பதை போல நிறைய்ய பதிவர்கள் இல்லாது இருந்த போதும் நண்பர்கள் அல்லாது மற்றையோர் எழுதும் பதிவர்களில் ரசனைக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்று சிரமப்பட்டு போயிருந்தேன். (இப்போதும் நல்ல பதிவுகளை யாரேனும் தொடுப்பு அனுப்ப வேண்டி உள்ளது.) இப்போது வலையுலகத்தில் நிரம்பி வழியும் பதிவுகளிலும் சிறந்ததை தேர்ந்தெடுத்து தொடுத்து கொடுக்கும் பதிவர்களை பார்க்கும்போது வலைச்சரத்தின் பங்கு மற்றவர்களை விட எனக்கு மிக அதிகமாய் பயன்பட்டுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாய் உள்ளது.
வலைச்சரத்தின் அத்தனை ஆசிரியர்களுக்கும், வலைச்சரம் என்ற புதுவலையை தொடுத்து தந்த சிந்தாநதி மற்றும் இதர பொறுப்பாசிரியர் குழுவினருக்கும் ரசிகர்களின் சார்பாய் நன்றிகளை
தெகாஜி :- ம்ம்... நான் வலைச்சரம் தொடுக்கும் பொழுது ரொம்ப யோசிக்க வேண்டியதா இருந்தது யாரையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்றதுங்கிறதில. ஏன்னா, அதிகம் கவனிக்கப்படாத அதே நேரத்தில் என் மனதில் நின்றவங்கங்கிற முறையில நான் கொடுக்க முனைந்திருப்பேன். சந்தோஷத்தை கொடுத்தது! ரொம்ப எக்ஸ்சைட்டடா இருந்தேனாம் கவனிச்ச ஒரு நண்பன் சொன்னான்.
நாகைசிவா :- விடிஞ்சா கல்யாணம் பிடிடா வெத்தலை பாக்கு என்பது போல் தான் நான் வலைச்சரம் ஆசிரியர் ஆனதும். அதனால் ரொம்ப எல்லாம் ஹோம் வொர்க் பண்ணாமல் 2006ல் வந்த பதிவுகள் எவை என்று யோசித்து மனதில் சட்டேன ஞாபகம் வந்த பதிவுகளை ஒரு வாரம் சரமாக தொடுத்தேன். ஞாபகம் வந்த போதிலும் அதை தேடி எடுத்து சுட்டி தருவது என்பது ஒரு இமாலய சவால் தான். இருந்தும் அதை பிடித்து மறுபடியும் படிக்கும் போது பள்ளி காலத்து தோழனை சந்தி்த்த மகிழ்வு இதில் கிடைத்தது. சுருக்கமாக இனிமையான அசை போடலாக அமைந்தது.
அணில்குட்டி அனிதா:- ம்ம்.. எல்லாரையும் சொன்னாங்களே அம்மணியின் அனுபவத்தை சொன்னாங்களா...? சொல்ல மாட்டாங்க.. ஏன்னா.. ஹி ஹி.. பெண்டு நிமுந்து போச்சி இல்ல... ..... ..எனக்கும் ஒரு அனுபவம் கிடைச்சது.. பட்னி கிடந்த அனுபவம் தான்.... ஆனாலும்... ஓசில ஜூஸ் வாங்கி குடிக்க நானு என்ன வேணுனாலும் செய்வேனில்ல.. ! :)
பீட்டர் தாத்ஸ் :- கோமேதகச்சரம் (Sapphire)–Sapphire is the most precious of blue gemstones. It is a most desirable gem due to its color, hardness, durability, and luster. The most valuable color of sapphire is cornflower blue, known as Kashmir sapphire or Cornflower blue sapphire.
Read More About Sapphire :-
http://www.addmorecolortoyourlife.com/gemstones/sapphire.asp
http://en.wikipedia.org/wiki/Sapphire
http://www.cwjewelers.com/stonesapph.htm
நான் கேட்டதையும் மதித்து எனக்காக உங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி!!
ReplyDeleteஇவங்க என்ன கேட்பது நாம் என்ன கொடுப்பது ன்னு விட்டு விட்டவர்களுக்கும் நன்றி..
சொல்லிக்கொள்ளும் அளவு நான் எழுதவில்லை என்று ஒதுங்கி கொண்ட பதிவர்களுக்கும் என் நன்றி....
வேலையின் காரணமாக அனுப்ப இயலவில்லை என்று சொல்லிய நண்பர்களுக்கும் என் நன்றி...
தனியாக சிபிக்கு ஒரு பெரிய நன்றி!! :)))))
//ஜி-டாக் அரட்டைகள்னு //
ReplyDeleteதாயீ மகமாயீ... ஏம்மா நீங்க இந்த ஜி-டாக் பற்றி எடுத்துக்காட்டாமல் எதுவுமே எழுத மாட்டீங்களோ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
நீங்க ரொம்ப நல்லவங்க...
அனைவருக்கும் சொல்லிக்கொள்வது இந்த அம்மணி சொல்லிய ஜி-டாக் 'கிற்கும் எனக்கும் எந்த சம்மதமும் இல்லை.. அது நான் இல்லை... நான் அது இல்லை!!
//பழமையான வலைச்சர பக்கத்தினை கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் யாவரும் வலம் வந்து வரிகள் கண்டு வாசித்து செல்ல....!
ReplyDelete//
இது சீனாஜி க்கு.... ! :))))
//இந்த வாய்ப்பை தந்தமைக்கு கவிதா அக்காவுக்கு என்னோட மனமார்ந்த நன்றி ;)
ReplyDelete//
ம்ம்ம்ம் அப்புறம்!
ஐந்து நாட்கள் தான் முடிந்தது பின்னர் சற்று சோர்வடைந்துவிட்டேன்.//
ReplyDeleteநீங்களே சோர்வாகிட்டீங்களா?? நம்பமுடியவில்லை..ல்லை..ல்லை..!!
வலைச்சரம் தொடுப்பது என்பது எளிதான வேலையல்ல! அதையும் நிறைய மெனக்கெட்டு ரத்தினங்களைச் சேர்த்து ரத்தினச் சரமாகக் கொடுத்த அல்லது தொடுத்த கவிதா, அணில்குட்டி மற்றும் பீட்டர் தாத்ஸ் ஆகியோரின் உழைப்பு இதில் தெரிகிறது!
ReplyDeleteபாராட்டுகளும் நன்றியும்!
தொடுக்கப் பட்டிருந்த வலைப்பூக்கள், அறிமுகப் படுத்தியிருந்த பதிவகள் அனைத்துமே சுவாரசியமானவை!
மிக்க நன்று!
இதென்ன கவிதா அக்காவும், அணில் குட்டியும் சேர்ந்து பின்னூட்டக் கும்மி அடிக்கிறாங்க.. :))
ReplyDeleteஆனா.. நிறைய உழைப்பு இருக்கு! ரொம்ப நன்றி!
ReplyDeleteவாங்க சிபி,
ReplyDeleteஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்??? எத்தனை பேருக்கு தான் நான் சொல்றது..
நான் கேட்டது உங்கள் வலைச்சர அனுபவத்தை, ஆனா நீங்க சொல்லியிருப்பது என் அனுபவத்தை..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! முடியல..
எப்படி இப்படி எல்லாம்..அவ்வளவு புரியாதமாதிரியா நான் மெயில் அனுப்பி இருக்கேன்...
சொல்லுங்க..சொல்லுங்க...சொல்லுங்க..!!!!
//எப்படி இப்படி எல்லாம்..அவ்வளவு புரியாதமாதிரியா நான் மெயில் அனுப்பி இருக்கேன்...//
ReplyDelete"வலைச்சர அனுபவம்" னு சொல்லி இருப்பது உங்க வலைச்சரத்தைப் படித்த அனுபவத்தை(வேதனையை)த்தான் கேக்குறீங்களோன்னு பலரும் புரிந்து கொண்டுள்ளனர். நான் உட்பட!
//எப்படி இப்படி எல்லாம்..அவ்வளவு புரியாதமாதிரியா நான் மெயில் அனுப்பி இருக்கேன்...
ReplyDeleteசொல்லுங்க..சொல்லுங்க...சொல்லுங்க..!!!!//
ரொம்ப டென்ஷன் ஆகுறதா இருந்தா சொல்லுங்க!
மறுபடியும் முதல்ல இருந்து வருவோம்! நீங்க எல்லா போஸ்டையும் அழிச்சிட்டு எழுதுங்க! பின்ன மெயில் அனுப்புங்க!
இந்த தபா எல்லாரும் கரெக்டா எழுதி அனுப்பிடுறோம்!
சிபி.. டூ மச்சூஊஊஊஊ...!! என்னோட பீட்டர் மெயிலு புரியலன்னு டீசண்டா சொல்லிறீங்க. .சரி சரி... நான் கண்டுக்கல.. !! :)))
ReplyDeleteரொம்ப டென்ஷன் ஆகுறதா இருந்தா சொல்லுங்க!
ReplyDeleteமறுபடியும் முதல்ல இருந்து வருவோம்! நீங்க எல்லா போஸ்டையும் அழிச்சிட்டு எழுதுங்க! பின்ன மெயில் அனுப்புங்க!
இந்த தபா எல்லாரும் கரெக்டா எழுதி அனுப்பிடுறோம்!
//
பிச்சிபுடுவேன் பிச்சி.. !! என்ன இது சின்னப்புள்ள தனமா இருக்கு!!
ஒருதரத்துக்கே.. எவரவர் என்னை சீனாஜிக்கிட்ட அறிமுகம் செய்து வைத்ததுன்னு தெருத்தெருவா தேடிக்கிட்டு இருக்கேன்... இதுல இன்னொரு தரமாஆஆஆஆ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் அழுதுடுவேன்.. என்னை விட்டுடுங்கோஓஓஓஓ !!
//எவரவர் என்னை சீனாஜிக்கிட்ட அறிமுகம் செய்து வைத்ததுன்னு தெருத்தெருவா தேடிக்கிட்டு இருக்கேன்...//
ReplyDeleteநானும் தேடிகிட்டிருக்கேன்!
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
//தாயீ மகமாயீ... ஏம்மா நீங்க இந்த ஜி-டாக் பற்றி எடுத்துக்காட்டாமல் எதுவுமே எழுத மாட்டீங்களோ??//
ReplyDeleteஜி-டாக் ஜி3 னு பட்டபெயர் வாங்கற அளவுக்கு ஜி-டாக் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு அதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? :( பேச்சுரிமை கூட இல்லையா இந்த வலையுலகத்துல :((
@சிபி,
ReplyDelete//
"வலைச்சர அனுபவம்" னு சொல்லி இருப்பது உங்க வலைச்சரத்தைப் படித்த அனுபவத்தை(வேதனையை)த்தான் கேக்குறீங்களோன்னு பலரும் புரிந்து கொண்டுள்ளனர். நான் உட்பட!//
அவ்வ்வ்வ்வ்.. அப்போ நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்பா பதில் அனுப்பிட்டேனா :(((
//ஜி-டாக் ஜி3 னு பட்டபெயர் வாங்கற அளவுக்கு ஜி-டாக் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு அதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? :( பேச்சுரிமை கூட இல்லையா இந்த வலையுலகத்துல :((
ReplyDelete//
உங்க பேச்சுரிமைக்கு என்னைய போட்டு குடுத்தீட்டீங்களே அம்மணி.. வறுத்துப்புட்டாங்களே!! வறுத்து.. !! :(
//அவ்வ்வ்வ்வ்.. அப்போ நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்பா பதில் அனுப்பிட்டேனா :(((
ReplyDelete//
ம்ம்... யாரு உங்களை சிபியோட பின்னூட்டத்தை எல்லாம் படிக்க சொன்னா...??
நீங்க அனுப்பினது எல்லாம் சரிதான்..
தலைவருக்கு புரியாம சவுண்டு விட்டுக்கிட்டு இருக்காரு.. கண்டுகாதீங்க.. !! :))))
குட்டிக் கண்ணம்மா (ஜி3) ?
ReplyDeleteஅட இந்த பேரு கூட நல்லா இருக்கே!
//ஜி-டாக் ஜி3 னு பட்டபெயர் வாங்கற அளவுக்கு ஜி-டாக் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு அதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? :( பேச்சுரிமை கூட இல்லையா இந்த வலையுலகத்துல :((//
ReplyDeleteஎன்னது! ஜி3 யின் பேச்சுரிமை மறுக்கப் பட்டதா?
என்ன கொடுமை மேடம் இது?
என்னது! ஜி3 யின் பேச்சுரிமை மறுக்கப் பட்டதா?
ReplyDeleteஎன்ன கொடுமை மேடம் இது?
//
:))))) வந்துட்டாருப்பா... முடிச்சிவிட..
இதே வேலையா இருங்க சிபி.. நல்லாயிருங்க... !!
/வந்துட்டாருப்பா... முடிச்சிவிட/
ReplyDeleteமுடிஞ்சி(முடிந்து) விட என்றல்லவா இருக்க வேண்டும்!
அளாவிலா ஆர்வத்துடன்,
ஃபுடர் நோட் புண்ணிய கோடி
வாழ்த்துகள்
ReplyDeleteநம்ம பேரையும் போட்டு
ரொம்ப சந்தோஷமுங்கா ...
//எவரவர் என்னை சீனாஜிக்கிட்ட அறிமுகம் செய்து வைத்ததுன்னு தெருத்தெருவா தேடிக்கிட்டு இருக்கேன்...//
ReplyDeleteதெரிஞ்சி போச்சு! எனக்கு தெரிஞ்சி போச்சு!
சிபி...
ReplyDeleteயாரு அது
யாரு அது?
வித்யாசமான முயற்சி!
ReplyDeleteபாராட்டுகள்!
எனக்கும் விடிஞ்சா கல்யாணம்!
பிடிடா வெத்துல பா(ப)க்கு கதைதான்!
பதிவு போட சோம்பேறித்தனம் படும் என்னை சுறுசுறுப்பாக்கியது வலைச்சரம், அந்த ஒரு வாரத்தில் மட்டும்!? ஹிஹிஹி
Back to Normal Again!
//
ReplyDeleteநாகை சிவா said...
சிபி...
யாரு அது
யாரு அது?
//
என் மாப்பியை காட்டிக் கொடுக்கச் சொல்றீங்களா புலி? மாட்டேன்!
கண்டிப்பா சொல்ல மாட்டேன்!
வலைச்சரத்திலே எழுதாத பதிவர்கள் இந்தப் பதிவுக்கு பின்னூட்டலாமா கூடாதா?
ReplyDeleteமீண்டும் ஒரு நன்றி ;))
ReplyDeleteநன்றாக தொகுத்துயிருக்கிங்க சரத்தை ;)
வாழ்த்துக்கள் ;)
\\கவிதா | Kavitha said...
ReplyDelete//ஜி-டாக் ஜி3 னு பட்டபெயர் வாங்கற அளவுக்கு ஜி-டாக் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு அதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? :( பேச்சுரிமை கூட இல்லையா இந்த வலையுலகத்துல :((
//
உங்க பேச்சுரிமைக்கு என்னைய போட்டு குடுத்தீட்டீங்களே அம்மணி.. வறுத்துப்புட்டாங்களே!! வறுத்து.. !! :(
\\
கடலையாக நீங்க இருந்தால் வறுக்க தானே செய்வாங்க....இதுக்கு எல்லாம் பீல் பண்ணக்கூடாது ;))))
இந்த பதிவுக்கு லீங்கு கொடுக்க தானே என்னோட பதிவுக்கு முதல் முதல்ல போயிருப்பிங்க. ;))))))))
ReplyDelete\\குட்டி கண்ணம்மா (G3)\\
ReplyDeleteநீங்க என்னதான் கண்ணம்மா மாரியம்மான்னனு பெயர் வச்சாலும் ஜி3 ஜி3 தான்..;)) அந்த ஜி3க்குள் இருக்கும் புகழ் உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன் ;))
//கடலையாக நீங்க இருந்தால் வறுக்க தானே செய்வாங்க....//
ReplyDeleteஆஹா.. இன்னிக்கு ஒரு நாள்ல மட்டும் கவிதாவுக்கு எத்தனை அவதாரங்கள்... :)) வேறென்னென்ன அவதாரம எடுத்தாங்கனு நான் சொல்ல மாட்டேன்... வேணும்னா அவங்களை மாதிரியே க்ளூ குடுக்கறேன் :P
//நீங்க என்னதான் கண்ணம்மா மாரியம்மான்னனு பெயர் வச்சாலும்//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபி.. ஏன் கோபி? ஏன் இம்புட்டு கொலைவெறி உங்களுக்கு என் மேல??
//அந்த ஜி3க்குள் இருக்கும் புகழ் உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன் ;))//
ReplyDeleteதெரியலைன்னா விட்டுடலாமே.. ஏன் அதை திரும்ப ஆரம்பிச்சிக்கிட்டு :P
//ஆஹா.. இன்னிக்கு ஒரு நாள்ல மட்டும் கவிதாவுக்கு எத்தனை அவதாரங்கள்... :)) வேறென்னென்ன அவதாரம எடுத்தாங்கனு நான் சொல்ல மாட்டேன்... வேணும்னா அவங்களை மாதிரியே க்ளூ குடுக்கறேன் :P
ReplyDelete//
ஏன்.. அதான் தனியா கிடைச்சேன்.. எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு முடியுமோ அவ்வளவு .பல்ப்பு கையில கொடுத்தாச்சி இன்னுமா?!!!! உங்க கொலைவெறி.. அடங்கலை.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
//உங்க கொலைவெறி.. அடங்கலை.... //
ReplyDeleteஅடங்கறதா??? இப்போ தானே ஆரம்பமே ஆகியிருக்கு :P
//அடங்கறதா??? இப்போ தானே ஆரம்பமே ஆகியிருக்கு :P//
ReplyDeleteஇது தான் ஆரம்பம்பம்மா? முடியலையா இன்னும் ????
அவ்வளஓ சிரிச்சீங்களே 2 பேரும் மாத்தி மாத்தி ..பத்தலையா?????
அவ்வ்வ்வ்வ்வ்வ் !
//இந்த பதிவுக்கு லீங்கு கொடுக்க தானே என்னோட பதிவுக்கு முதல் முதல்ல போயிருப்பிங்க. ;))))))))
ReplyDelete//
புத்திசாலீஈஈஈஈஈஈஈஈஈ!! கடல் கடந்து இருக்கோம் அடி கிடைக்காதுன்னு ஒரு நம்பிக்கையா?
பின்னூட்டம் போட்டு இருப்பேன் ..பாரு கண்ணா பாரு. .அதுல டேட் ஐ பாரு கண்ணா பாரு... !!
இதுக்கு மேலே நான் ப்ரூவ் பண்ணனூமா???
//அவ்வளஓ சிரிச்சீங்களே 2 பேரும் மாத்தி மாத்தி ..பத்தலையா????? //
ReplyDeleteஇன்றைய சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டாமா ;)
//இன்றைய சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டாமா ;)
ReplyDelete//
ம்ம் சரிதான் நீங்க இரண்டு பேரும் இப்படி :)))))))) இருக்கீங்க.. ஆனா
நானு :(((((( இப்படி இல்ல இருக்கேன்... !!
//ஆனா நானு :(((((( இப்படி இல்ல இருக்கேன்... !!//
ReplyDeleteஹிஹி.. அதுக்கெல்லாம் நாங்க கவலைப்படறதில்லே :)))
வேணும்னா நாயகன் டயலாக் சொல்லி உங்க மனசை தேத்திக்கோங்க :D
ஹிஹி.. அதுக்கெல்லாம் நாங்க கவலைப்படறதில்லே :)))
ReplyDeleteவேணும்னா நாயகன் டயலாக் சொல்லி உங்க மனசை தேத்திக்கோங்க :D
//
ம்ம் இதுல நிறைய கேள்வி இருக்கு எனக்கு ஆனா.. இங்க வேண்டாம் இது வலைச்சரம்... ..சோ நம்ம வீட்டில எதிலாவது கும்மியை வைத்து கொள்வோமா.. ஆனா இந்த பாயிண்ட் ல இருந்து ஸ்டார்ட் ஆகனும் !! ஒகே... டீல்!!
//ம்ம் இதுல நிறைய கேள்வி இருக்கு எனக்கு//
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மறுபடி ஒரு விளக்க உரை படலமா?? அய்யோ.. முல்லை................. எங்க இருக்கீங்க? இங்க ஒருத்தங்க இன்னிக்கு வசமா சிக்கியிருக்காங்க.. சீக்கிரம் வாங்க :)))
கவிதா, நீங்கள் இந்த வலை சரத்தை தொகுத்த விதம் மிகவும் அருமை...
ReplyDeleteஅப்டியே வீட்டுக்காரர் கிட்ட சொல்லி, முத்து, விரம், கோமேதகம்னு , ஒரு நாலு ஜோடி நகை வாங்கி போட்டுக்கோங்க...
எங்களோட பரிசா இருக்கட்டும்....
\\அப்டியே வீட்டுக்காரர் கிட்ட சொல்லி, முத்து, விரம், கோமேதகம்னு , ஒரு நாலு ஜோடி நகை வாங்கி போட்டுக்கோங்க...
ReplyDeleteஎங்களோட பரிசா இருக்கட்டும்....\\
ஆத்தா! பொன்னாத்தா!
ரொம்ப நல்ல மனசு!