Friday, April 3, 2009

03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி

பவளச்சரத்தில் இன்று பழப்பச்சடி'யாக (Fruit Salad) மூன்று வித தலைப்பில் பதிவர்களை கலந்திருக்கிறேன் அவர்கள் முறையே கவிஞர்கள், கதைக்காரர்கள், புகைப்படம் பிடிப்பவர்கள்

I. கவிஞர்கள் :- ஒன்றும் சொல்லுவதற்கு இல்லைங்க… ஒவ்வொருத்தரும் எழுதற கவிதைகள் இருக்கே… மயக்கம் வருதுங்க.. நீங்களும் போங்க திரும்ப மாட்டீங்க மயங்கி அங்கேயே விழுந்துவிடுவீர்கள்

1. தமிழரசி

2. கவிதாயிணி காயத்திரி

3. இனியவள் புனிதா

4. உமா சக்தி

5. சுடர்விழி

6. நான் சித்தன் - இது வலி! அனைவரும் பார்க்க, படிக்க உகந்தது அல்ல.. !!


II. கதைக்காரர்கள் : எல்லாருமே கதை எழுதறாங்க, என்னையும் சேர்த்து, யாரையென்று குறிப்பிட்டு சொல்லுவது, எனக்கு பிடித்த, அதனால் படித்த சில கதைக்காரர்களின் கதைகள்.

1. தேவ் : ப்ளாகிற்கு வந்து முதன் முதலில் படித்தது இவருடைய கதையை தான். ரொம்ப சுவாரசியமாக இருந்தது.. கதை என்றால் என் சாய்ஸ் முதலில் தேவ்' தான், அடிச்சிக்க ஆள் இல்லை.. இதோ உங்களின் பார்வைக்கு ஒன்று

இது விச்சுவின் கதை

2. செந்தழல் ரவி :
எங்களின் நட்பை சினிமாவில் தான் பார்க்கமுடியும், அடிச்சிக்குவோம்.. கொஞ்சிக்குவோம்.. எப்போ எது நடக்குமென்று எங்களுக்கே தெரியாது. இவரின் எல்லா பதிவுகளுமே ஏதோ ஒரு கருத்தை கொண்டு இருக்கும், கும்மியாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். குறிப்பாக சமூகபார்வை ஆச்சரியப்படவைக்கும். இவரின் கதைகள் ரொம்பவும் யதார்த்தமானவாய் நம்மில் பலர் இதை அனுபவித்தவர்களாகவும் இருப்போம். எனக்கு பிடித்தவை

a. கோழித்திருடன்

b. தேங்காய்பொறுக்கி

3. ராயல் ராம் :- இவரை பற்றி என்னங்க சொல்றது.. ராயலோட கதைகள் எல்லாம் ஒரே செண்டிமென்டு டச்….. அழவச்சிடுவாரு…. அப்படி அழுத ஒன்று

மாணிக்கமலர்

4. நாமக்கல் சிபி :- நயன் நாயகன், நக்கல் மன்னன், சும்மாவே கதைக்காரர், சுட்டிக்காரர், ஆனால் பெரிய சோம்பேரி ஒரு கதையை எழுதிட்டு தொடராமல் இருக்கிறார். நல்ல விறுவிறுப்பாக போயிக்கிட்டு இருந்தது, அப்படியே நிறுத்திவைத்து இருக்கிறார், தொடருவார் என்ற நம்பிக்கையுடன்...

நாலாம்பிறை திதி 1

4. ஆதவா : இவரைப்பற்றி எனக்கு தெரியவில்லை, இவரின் மற்ற கதைகள் கூட சுவாரசியமாகவே உள்ளன. ஒரு வித்தியாசமான விஞ்ஞான கதை

யாழினியின் காதல்

5. ஜி: மிக சமீபத்தில் இவர் எழுதிய கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அட.. நம்ம ஜி'க்கு இவ்வளவு அருமையாக கதை எழுத தெரியுமா என்று வியந்தேன், ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். .நீங்கள் ரசிக்க...

மயிலிறகு பக்கங்கள்...



III. புகைப்படக்காரர்கள்
:
நாங்களும் தான் கேமரா வைத்திருக்கிறோம், ஆனால் இங்க இருக்க படங்களை பாருங்கள்... எதுக்கு நம் கையில் கேமரா'? என்று தோன்றும்.

1. ராயல் ராம்: - இவருடைய புகைப்படங்கள் பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு என்னோட புகைப்பட அறிவு இல்லை.. இவரு வல்லவர், ரொம்ப நல்லவர், போட்டோ பாருங்க… உங்களுக்கே புரிந்துவிடும்.. ஆல்பத்திற்கு பெயர் வைக்கவில்லை அதனால் நானே வைத்துவிடுகிறேன்.

Royal Raam's Rock collections

2. மாதவன் – சொல்வதற்குவார்த்தைகள் இல்லை, இவரோட போட்டோஸ் பார்க்கவே இவர் பதிவுக்கு போவது வழக்கம். ராயல் ராம் நீங்களும் பாருங்க.. சூப்பரா இருக்கும்..

Maddy Made us Mad

3. நாகை சிவா பாம்பு படம் எடுக்கும் பார்த்து இருப்பீங்க இங்க புலி படம் எடுக்குது பாருங்க… அவரோட ப்ளாக் போட்டோ பார்த்து, வாயப்பொளந்து கிட்டு, நீங்களா எடுத்தீங்கன்னு கேட்டேன்.. இல்லைங்க.. ஆள் வைத்து எடுத்ததுங்க' ன்னு சொன்னாரு, ஆள் வைத்து எடுத்த போட்டோவை பாருங்க..
a. சிசெல்ஸ் - புகைப்படங்கள் - வாய்பிளந்து பார்த்தது
b. பொங்கலோ பொங்கல் 2009 - அடுத்தவருடம் அக்கம் பக்கம் பொங்கலையும் சேர்த்து எடுங்க.

c. பாலைவன பூக்கள் - சூப்பர்

( சிவா முடியல!! தயவுசெய்து போட்டோ ஆல்பம் தனி ப்ளாக் பண்ணுங்க.. ஒரே லிங்க்'காக கொடுக்கலாம்.. ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணக்கட்டுதே... இன்னும் நிறைய இருக்கே.. !! )

d. சாலைகள் பலவிதம் - Exclusive
e. கண்ணுக்கு விருந்து! - நிஜமான விருந்து

f..குண்டு 1 வச்சி இருக்கேன்! : Unique Collection
g. வண்ணக் கோலங்கள் - வண்ணங்கள் !



4. ஆனந்த்
: ஆஹா.. மை லென்ஸ் ன்னு ப்ளாக் பெயரோட போட்டோ பதிவிட்டு இருக்கிறார். எப்படித்தான் இப்படி போட்டோ எடுக்கறாங்களோ தெரியல..

மை லென்ஸ்

5. தீபா : முதலில் பார்த்தவுடன் பொறாமையாக இருந்தது… நாமும் தான் கேமரா வைத்து இருக்கிறோம்.. எங்க..?!! புகைப்படங்களை பாருங்க.. வகை வகையா பிரித்து ச்சும்மா கலக்கியிருக்காங்க...

Keep Watching Deepa's Collections

6. ஓவியா: இப்பத்தான் படம் எடுக்க பழகறேன் னு சொல்றாங்க.. ஆனா... புகைப்படம் எடுப்பதை தன் பொழுது போக்கில் ஒன்றாக வைத்து சரிவர எடுக்க பழகியும் வருகிறார்கள் போல் தெரிகிறது..

ஓவியாவின் கலக்ஷன்ஸ்

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்...! நான் இன்னும் உண்ணாவிரதம் முடிக்கல... ஏன்னா யாருமே என்னை கண்டுக்கல..!! அவ்வ்வ்வ்!! இப்பவாச்சும் போட்டோ பாத்துட்டு எனக்கு அப்படியே ஃபிரஷ் ஜூஸ் கொடுத்துட்டு போவிங்களாம்...!! வெக்கத்தவிட்டு சொல்றேன்........பசிக்குதுங்க...!!

பீட்டர் தாத்ஸ் : பவளச்சரம் (coral ) :- Since ancient times, Coral gemstone has been given recognition by all astrologers. It is not a mineral. Coral is kind of organic substance. Coral gemstone is prepared by non-vertebrate sea organism which are called Isis Nobiles. Coral gem is found in the shape of vine branch at about 600-700 feet deep into the sea. Scientists regard it as a component of calcium carbonate. Read More About Coral :-

http://www.rudraksha-ratna.com/coral-gemstones.html

http://www.mineralszone.com/gemstones/coral.html

http://www.addmorecolortoyourlife.com/gemstones/coral.asp

16 comments:

  1. ஆஹா!! என்னோட ப்திவுக்கும் சுட்டிக் கொடுத்திருக்கீங்க... நன்னி!!

    ReplyDelete
  2. ஃப்ரெஷ்ஷா ரெண்டு கிளாஸ் ஜில்லுன்னு தர்பூஸ் ஜூஸ் கொடுக்கறேன். உண்ணாவிரதத்தை முடிச்சிடுங்க.

    ReplyDelete
  3. அருமையான சுட்டிகளுக்கு நன்றி. அனுப்பியிருக்கற ஜீசைக் குடிச்சிட்டுதெம்பா வந்து நிறைய பதிவு போடுங்க.

    ReplyDelete
  4. BEST WISHES KAVITHA....KONJAM KONJUM KAVI THAA.....

    ReplyDelete
  5. நன்றிகள்
    மற்றவர் அறிமுகத்திற்கும்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்...

    அத்தனை சுட்டிகளும் அருமை.

    என் மாமனை வாரலைனா தூக்கம் வராதே உங்களுக்கு...

    நல்லது. நல்ல பதிவுங்கோ.

    ReplyDelete
  7. //. கோழித்திருடன் //

    both of the links are same. can i et the right link

    ReplyDelete
  8. பவளச்சரத்தில் இன்று பழப்பச்சடி'யாக (Fruit Salad) மூன்று வித தலைப்பில் பதிவர்களை கலந்திருக்கிறேன் அவர்கள் முறையே கவிஞர்கள், கதைக்காரர்கள், புகைப்படம் பிடிப்பவர்கள்//

    வாழ்த்துக்கள்...

    அருமையான அறிமுகமும்.

    ReplyDelete
  9. கவிதான்னாலே கலக்கல்தானோ! செம டக்கரான பதிவு! உங்க வலைச்சர வாரத்தில் மிகப் பிடிச்சது இந்தப் பதிவு! சூப்பர்!

    ReplyDelete
  10. ஒரே பதிவில் கவிதை, கதை, ஒளி ஓவியம்.

    இயல்,இசை,நாடகம் மாதிரி
    முக்கலையும் இந்த பதிவிலேயே

    அருமை

    ReplyDelete
  11. நம்ம பதிவையும் உள்ள இழுத்து விட்டதற்கு நன்றிங்கோ

    ReplyDelete
  12. @ ஜம்மு - நன்றி

    @ ஜி..-நன்றி

    @ புதுகைத்தென்றல் : பெயர் சரியா? நன்றி.. ஜூஸ் க்கு இன்னொரு நன்றி..:)

    @தமிழரசி :- நன்றி உங்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேன், மிக அருகில், பேசியிருப்பதாகவும் நினைவு.. ஆனா எங்கே என்று தான் தெரியல.. :) நீங்க சென்னையா?

    @ ரங்கன் - நன்றி

    @ ராயல் ராம் - நன்றி

    @ கவிகாயூ - நன்றி

    @ அண்ணன் வணங்காமுடி :- ?? என்னங்கண்ணா பேரு இது?!! மிக்க நன்றிங்கண்ணா !!

    @ முல்ஸ் - நன்றி !! :)) ஏன்ன்ன்??

    @ வாலு : நன்றி... !! :)

    @ புலி - நன்றி..

    ReplyDelete
  13. நன்றிங்க கவிதா, ஆனா அந்த வலியை நாமும் உணரனும், வரும் இந்தியத் தேர்தலிலும் உணர்த்தனும்.
    அன்புடன்,
    நான் சித்தன்.

    ReplyDelete