தனியாக பெண்களுக்கு என்று ஒரு சரம் தொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. தனித்துக்காட்ட வேண்டாம் என்றாலும், என்னை உற்சாகப் படுத்தவும், பெண்கள் அவ்வளவு சுலபமாக எழுதிவிட முடிவதில்லை என்னையும் சேர்த்து என்பதாலும் இந்த மாணிக்கச்சரத்தை தொடுக்கிறேன்.
யாரைவிடுவது யாரை தொடுப்பது என்ற அளவு நம் தோழிகள் அடிச்சி ஆடறாங்க… பார்த்தவரையில் நிறைய பெண்கள் கவிதை எழுதறாங்க…. சமீபத்தில் மகளிர் தினத்தன்று நம் தோழிகளின் பதிவுகள் நிறைய விகடனில் வந்தது. பார்க்க சந்தோஷமாக மனதுக்கு நிறைவாக இருந்தது. எங்கும் எதிலும் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் நம் வலை தோழிகள் ஜொலித்துக்கொண்டு இருந்தாலும், என்னை கவர்ந்த சில மாணிக்கங்கள்
1. மங்கை : முதல் பதிவிலியே என்னை கவர்ந்தவர்'ன்னு சொல்லிவிட்டேன். இன்னொரு முறை சொல்லுங்க..!! ன்னு சொல்ல வைத்து விட்டார்கள்..(அவங்க சொல்லல என்னையே சொல்லவைத்துவிட்டார்கள்) இதிலும் அவரே முதலில்… சொல்லிவிட்டேன்..
2. தமிழச்சி : இவங்க இப்ப இருக்கற தமிழச்சி இல்லைங்க.. இவங்களோட எழுத்து நடை திருநெல்வேலி தமிழ் என்று நினைக்கிறேன்.. ஒன்னும் புரியாது.. என்ன என்னவோ எழுதுவாங்க. .ஆனா எழுதுகின்ற ஒவ்வொரு விஷயமும் சூப்பரா ரொம்ப இண்டர்ஸ்டிங்காக… மேலும் நகைச்சுவை கலந்து எழுந்துவாங்க… வெள்ளேந்தி ன்னு சொல்லுவாங்களே அப்படி இருக்கும் எழுத்து.. பேச்சும் அப்படித்தான், இப்போது எழுதுவதே இல்லை , இருந்தாலும் எனக்காக.
3. பொன்ஸ் : சொல்லனும்மா… அறிமுகமே தேவையில்லையே.. வலையுலகில் அத்தனை பேரும் அறிவார்கள், இவர்களுக்காக தனி பதிவே எழுதி இருக்கேன்.
4. உஷாஜி : சிறந்த எழுத்தாளர், எல்லாவித பிரிவுகளில் எழுதுபவர். பிரச்சனைன்னு சொன்னா போதும் முதலில் ஓடி வந்து என்னம்மா ஆச்சி அமைதியா இரு பார்த்துக்கலாம்னு சொல்வதோடு இல்லாமல் பின்னூட்டத்தில் பின்னி எடுப்பாங்க.
5. அமிர்தவர்ஷணி அம்மா : இவங்க நிஜ பெயர் தெரியவில்லை. இவர்களின் எண்ண ஓட்டம் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்ததை விடவும் என்னுடைய பதிவுகளில் இவரின் பின்னூட்டங்கள் என்னை கவர்ந்தவை.
6. பூர்ணிமா சரண் :- என்னுடைய நவீன் மாதிரி இவங்களும் ஒரு ரவுண்டு குட்டி. சூப்பரா கும்மி அடிப்பாங்க.. பல சமயம் உருகி உருகி கவிதை எழுதுவாங்க…நாம் எதிர்ப்பார்க்காத போது தீடிரென்று ரொம்ப தீரமா பேசுவாங்க.. எல்லாத்தும் மேல் பதிவுகளை போய் பாருங்க.. சீக்கிரத்தில் 1000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பிளாகர்லேடி ன்னு பேரு வாங்கினாலும் வாங்குவாங்க..
7. தூயா : முடியலைங்க..இவங்க சமையல் குறிப்பு இருக்கே…. ம்ம்.. விடமாட்டேங்கறாங்க.. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. .இல்ல சமையல் செய்து காட்டிட்டு தான் மறுவேலைன்னு சொல்றாங்க..…. நாம எல்லாம் ரொம்ப பாவம்தான்.. ஆனா அவங்களுக்கு தெரியலையே…
8. அம்மாக்கள் வலைப்பூக்கள் : மிகவும் அவசியமான ஒரு குழுவாக இதை நினைக்கிறேன். 2008-ல் சந்தனமுல்லை தொடங்கியிருக்காங்க. இந்த குழுவைப் பற்றிய விவரங்கள் இந்த பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார்கள். இதை அம்மாக்கள் படிப்பதை விடவும் அப்பாக்கள் படித்தால் இன்னும் கூடுதல் பலன் தரும் என்று நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் சொல்லலாம், கடவுள் எல்லோரிடமும் இருக்கமுடியாது அதனால் அம்மாவை கொடுத்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள், அப்படி கடவுளாக நினைக்காவிட்டாலும், ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க எத்தனை பாடுபடுகிறார்கள் என்பதற்கு இந்த குழுவில் இடப்படும் பதிவுகள் ஒரு உதாரணம்.
குழுவை ஆரம்பித்த சந்தனமுல்லை பற்றிய ஒரு சிறு தகவல், மிக அற்புதமான ஒரு அம்மா, நான் வியந்துப்போய் வாய்பிளக்கும் ஒரு அம்மான்னு சொல்லலாம்..இப்போது எல்லாம் அம்மா என்றாலே எனக்கு சந்தனமுல்லை தான் நினைவுக்கு வருகிறார், (நானும் என்னை தத்து எடுத்துக்கோங்கன்னு சொல்லி பார்த்தேன்.. பப்புவை கூட மேய்பேன் உன்னை முடியாது ஓடி போ கண்மறவா!! ன்னு டிரெக்டா ரிஜெக்ட் செய்துட்டாங்க) அடுத்து விடுதலைக்காக போராடியா வீர பெண்மணி அஞ்சலை அம்மாவின் கொள்ளுபேத்தி, வாவ்… !! எழுதும் போதே மெய்சிலிர்க்கிறது !!
அணில் குட்டி அனிதா: கவிவீஈஈஈஈஈ........அவ்வ்வ்வ்வ்வ்வ்!! அவ்வளவுதானா லிஸ்ட்டு...! ஏன் எப்பவும் என் லிஸ்ட் டை செக் பண்ணவே மாட்டேன்ங்கறீங்க.. திஸ் ஈஸ் டூ பேட் !! . நான் கோச்சிக்கிட்டேன்..... அப்படி ஓரமா போயி உட்காந்து உண்ணாவிரதம் இருக்கேன்.. இந்த பக்கம் வரவங்க எல்லாரும் எனக்கு இரு டம்ளர் பிரஷ் ஜூஸ் (நோட் ஒன்லி ஃபிரஷ் ஜூஸ்) கொடுத்து உண்ணாவிரதத்தை முடிச்சி வைங்க சரியா...?!!
பீட்டர் தாத்ஸ் :- மாணிக்கச்சரம் (Ruby) :- For thousands of years, the ruby has been considered one of the most valuable gemstones on Earth. It has everything a precious stone should have: magnificent colour, excellent hardness and outstanding brilliance. In addition to that, it is an extremely rare gemstone, especially in its finer qualities.
Read More About Ruby :
http://www.gemstone.org/gem-by-gem/english/ruby.html
http://www.kamalkapoor.com/gemstones/ruby.asp
http://en.wikipedia.org/wiki/Ruby
எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு! எதுக்கு நடுவுல எனக்கு அப்படி ஒரு ஆப்பு..அவ்வ்வ்வ்வ்!
ReplyDeleteமத்தபடி, நன்றி அம்மாக்களின் பதிவை கோர்த்ததிற்கு! :-)
மாணிக்கச் சரம் வளரட்டும் இன்னும்.
ReplyDelete// தமிழச்சி : இவங்க இப்ப இருக்கற தமிழச்சி இல்லைங்க.. //
ReplyDeleteநல்லவேளை சொன்னிங்க!
நான் லிங்க் பிடிச்சி போய் இது என்னடா ப்ராண்ஸ் தமிழச்சிக்கு இப்படி ஒரு ப்ளாக்ன்னு முழிச்சிகிட்டு இருக்கேன்.
ரத்தினங்கள் ஜொலிக்கின்றன.
ReplyDeleteதாமதமா வந்து வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்து சொல்வதற்கு மன்னிக்கணும்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
மாணிக்கச்சரம் நன்றாகவே ஜொலிக்கிறது.
ReplyDeleteபெரும்பான்மையான பதிவர்கள் எனக்கும் தெரிந்தவர்கள்தான் (அவங்களுக்கு என்னை தெரியுமான்னு கேட்கப்படாது !)
நன்றி.
//@ அனானி - உங்க வாழ்த்துக்கள் வேண்டியதில்லையங்க... யாருன்னு சொல்லக்கூட தைரியம் இல்லாமல் எதுக்குங்க வாழ்த்து சொல்றீங்க.. ?!!//
ReplyDeleteI have rights to Hide my Name. :)
Wishes for All Feminine Bloggers.
Good Collection. Keep it up.
//இதை அம்மாக்கள் படிப்பதை விடவும் அப்பாக்கள் படித்தால் இன்னும் கூடுதல் பலன் தரும் என்று நினைக்கிறேன். //
ReplyDeleteஆமாங்க.. கண்டிப்பா படிக்கணும்.
அப்போதான் உங்க கஷ்டம் அவங்களுக்கும் புரியும்.
"என் பொஞ்சாதி இவ்ளோ படுறாளா..?! அடப்பாவமே" ன்னு யோசிக்கவாச்சும் செய்வாங்க..
அணிலு பாவம்.. கொஞ்சமாச்சும் மதிங்க.. எவ்ளோ பீல் பண்ணுது.
காதுலயே விழாதே..உங்களுக்கு.
அணிலு கவலைப்படாதே.. நாங்க இருக்கொம்.
//I have rights to Hide my Name. :)
ReplyDelete//
Rights ஆ??? I just hold my tongue here bcz it is not my home.. NS!!
//NS//
ReplyDeleteNs naa நான்சென்ஸ்னு அர்த்தமா?
ஆஹா! தாய்க்குலங்களைப் பத்தின பதிவா!
ReplyDeleteவாழ்த்துக்கள்! என் மதிப்பும் மரியாதையும் ஆதரவும் என்னிக்கும் உண்டு!
ஹி ஹி ஹி கவிதா எம்ஜியாருக்கு நான் ஒரு அப்பீட்டு போட்டுக்கரேன் . ஷாரி ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன் ஹி ஹி ஹி!
ReplyDeleteஏன் இதிலே உங்க பேரை காணும் கவிதா????
ReplyDeleteஅடுத்து சின்ன சந்தேகம் ரூபின்னா சிகப்பு கல் தானே, மாணிக்கம்ன்னா ரூபியா? ஒரு டவுட் தான்!!
ReplyDelete//I just hold my tongue here bcz it is not my home.. NS!!//
ReplyDeleteIs this ur respect to the people who visit ur Posts?
I never expected this from U. :(
Anyhow.. My wishes Again. Write a Lot.
@ஜம்மு - நன்றி
ReplyDelete@ முல்ஸ் - நான் தான் நன்றி சொல்லனும் ! :)
@ ராஜநடராஜன் - நன்றி
@ வால்பையன் - நாங்க உஷாரு இல்ல இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு தான் முன்னமே சொல்லிட்டோம் இவங்க அவங்க இல்லைன்னு :)
@புதிகை தென்றல் - நன்றி
@கணினி தேசம் - நன்றி
@ ரங்கன் - நன்றி
@ சிபி,
//@ Ns naa நான்சென்ஸ்னு அர்த்தமா?
//
:) Namakal Sibi கூட சொல்லலாம்
@ எம்.ஜி, ஆர், & நம்பியார் நன்றி
@ அபிஅப்பா -
//ஏன் இதிலே உங்க பேரை காணும் கவிதா????//
!!கடவுளே !! கடவுளே !!
//அடுத்து சின்ன சந்தேகம் ரூபின்னா சிகப்பு கல் தானே, மாணிக்கம்ன்னா ரூபியா? ஒரு டவுட் தான்!!
//
!!கடவுளே !! கடவுளே !!
புதிகை தென்றல் தவறு
ReplyDeleteபுதுகைத் தென்றல் சரி.
சரி புதுகைத் தென்றல் ...:) சரி செய்துவிட்டேன் சரியா?!! :)))
ReplyDeleteசரி செய்துவிட்டேன் சரியா?!! //
ReplyDelete:))) நன்றி. ,மொதல்ல நான் அனுப்பியிருக்கற ஜூசைக் குடிச்சு உண்ணாவிரதத்தை முடிங்க.
நன்றி என்னைப் பற்றி சொல்லியமைக்கு
ReplyDeleteநான் அப்படி என்ன பின்னூட்டினேன்னு தெரியலையே உங்களுக்கு
அவ்வ்வ்வ்
யோசிச்சிஃபையிங்க்
அமித்தும்மா - கன்டினியூ யுவர் யோசிபைங்கு.... :)
ReplyDelete//இதை அம்மாக்கள் படிப்பதை விடவும் அப்பாக்கள் படித்தால் இன்னும் கூடுதல் பலன் தரும் என்று நினைக்கிறேன்.//
ReplyDeleteஹ்ம்ம் நாங்களும் அப்பாக்களின் வலைப்பதிவுகள்ன்னு ஒண்ணு ஆரம்பிக்கப் போறோம். அம்மாக்களிடம் அப்பாக்கள் எவ்ளோ கஷ்டங்களை அனுபவிக்கிறாங்கன்னு எழுதப் போறோம். பிற்காலத்திலே எங்க பசங்க எல்லாம் படிச்சி பலனடைகிற மாதிரி இருக்கும் அந்தப் பதிவு. எத்தனை அப்பாக்கள் ரெடியா இருக்கிங்க (வீட்டுக்காரம்மாவுக்கு பயப்படறவங்க அனானியாகவும் எழுதலாம்)?