Tuesday, April 21, 2009

தேனீர் கோப்பையும் உபதேசமும்

ஒரு கதை

ஒருத்தர் உபதேசம் கேட்பதற்க்காக ஒரு ஞானியிடம் சென்றார் , அவர் முகத்தை உற்று பார்த்த அந்த ஞானி “இன்று போய் நாளை வா” என்று கூறிவிடுகிறார் .மேலும் சில நாட்கள் தொடர்ந்து அவர் வந்தும் ஞானி அதே பதிலை கூறுகிறார் . அதனால் வெறுப்படைந்த அவர் ஒரு நாள் “இன்று கண்டிப்பாக உபதேசம் செய்யனும்” என்று கூறினார். உடனே ஞானி தன் சீடனை அழைத்து இருவருக்கும் தேனீர் கொண்டுவர சொன்னார் . அந்த தேனீரை ஒரு சிறு கோப்பையில் ஊற்றுகிறார் அப்போது அந்த கோப்பை நிரம்பி தேனீர் கீழே வழிகிறது . அதை பார்த்த அந்த நபர் ஞானியின் கைகளை பிடித்து “அதுதான் நிரம்பி வழிகிறதே ஏன் இன்னும் ஊற்றுகிறீர்கள்” என்று கேட்டார் . அதற்கு அந்த ஞானி “இது போலத்தான் உன் மனமென்னும் கோப்பையும் நிரம்பியுள்ளது அதில் மேலும் என் உபதேசங்களை இட்டால் அது கீழே வழிந்து வீணாகிவிடும் , எனவே உன் மனதை காலியாக்கிகொண்டு வா நான் உபதேசிக்கிறேன்” என்று கூறினார்


மற்றவர்களிடம் கருத்து கேட்கும் போதும் , நம் நலம்விரும்பிகள் நமக்கான கருத்துக்களை சொல்லும் போதும் நம் மனதை காலியாக வைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு பின்பு நம் கருத்துகளோடு ஒப்பிட்டு யோசித்து முடிவு எடுக்கலாம் அதுவே நலம் . ஒரு குழந்தையிடம் இருந்தும் நமக்கான பாடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு
…………….

அடுத்து சில அறிமுகங்கள்


நானே ஒரு அறிமுகம் , எனவே எனக்கு தெரிந்த , நான் ரசித்த பதிவுகளை இங்கே குறிப்பிடுகிறேன் . அவர்கள் “பிரபல” பதிவர்களாக கூட இருக்கலாம்

** குந்தவை http://kunthavai.wordpress.com

சின்ன சின்ன விடயங்களை கூட ஒரு பதிவாக இட்டுவிடுவார் . சற்று நகைச்சுவை உணர்வுடன் எழுத கூடியவர் . அவரின் கணவருக்கு விக்கல் வர , அதை நிருத்த குந்தவை அக்கா செய்த செயலை Shock என்ற இந்த பதிவில் பார்தால் தெரியும் (பிறகு நமக்கு விக்கலே வராது) . அப்படியே குழந்தை சொன்ன உண்மை. என்ற பதிவில் அவர் நடத்தும் அரசியலையும் கவனிக்கவும்


*** கிருஷ்ணா பிரபு
http://online-tamil-books.blogspot.com/

நிறைய புத்தகங்கள் படிப்பவர் . அந்த புத்தகங்களை பற்றி விளக்கமாக தன் கருத்துக்களை தன் வலைப்பூவில் பதிவிடுகிறார், Ezhaam Ulagam - Jeyamogan பற்றி கடைசியாக எழுதியுள்ளார் . இவற்றை படிக்கும் போது புத்தகங்களை அவர் எவ்வளவு ஆழமாக படிக்கிறார் என்பது நமக்கு புரியும் . அவரின் வலைப்பூவிற்கு முதல் பின்னூட்டம் இட்டவன் நான் என்பதை பெருமையாக சொல்வேன்
மேலும் சில புத்தகங்கள் பற்றி அவர்
நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் , இந்தியா – சீனா எல்லை பிரச்சனை , ஹிட்லர் - முதல் உலகப் போர்: சாமி நாத சர்மா , முல்லை பெரியாறு - அணையா? நெருப்பா?: ஊரோடி வீரகுமார் , இப்படி பல உள்ளது.நீங்களே சென்று படித்து பாருங்கள் பயனுள்ள வலைப்பூ

***
நவின் பிரகாஷ் http://www.naveenprakash.blogspot.com/

கொஞ்சும் காதல் கவிதைகள் நிறைந்த பகுதி . ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்டும் . தபுசங்கரின் கவிதையை போல எளிய நடையில் இருக்கும்

மீண்டும் சந்திப்போம்

*******

முதல் நாள் - மாணவன் ஆசிரியராக !!

*******

15 comments:

  1. நல்லவொரு கதையோடு ஆரம்பிக்கிறது பதிவு. அருமை

    வாழ்த்துகள் பிரபு

    ReplyDelete
  2. ஒவ்வொரு நாளும் என்னுடைய கிராமத்திலிருந்து சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு செல்ல மொத்தமாக நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அந்த பயண நேரத்தில் ஏதோ சிறிது படிக்கிறேன். ஆங்கிலப் புத்தகம் பற்றிய நிறைய தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது. தமிழிலுள்ள மிகச்சிறந்த நூல்களைப் பற்றி அப்படி இல்லாதது பெரிய குறையாக எனக்கு தோன்றியது. அதனால் தான் இது போல் எழுதுகிறான்.

    என்னைப் பற்றி எழுதியது குறித்து மகிழ்ச்சி பிரபு. நன்றி. உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. பிரபு!

    கதையுடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள்!!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. ஒவ்வொரு நாளும் என்னுடைய கிராமத்திலிருந்து சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு செல்ல மொத்தமாக நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அந்த பயண நேரத்தில் ஏதோ சிறிது படிக்கிறேன். ஆங்கிலப் புத்தகம் பற்றிய நிறைய தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது. தமிழிலுள்ள மிகச்சிறந்த நூல்களைப் பற்றி அப்படி இல்லாதது பெரிய குறையாக எனக்கு தோன்றியது. அதனால் தான் இது போல் எழுதுகிறான்.

    என்னைப் பற்றி எழுதியது குறித்து மகிழ்ச்சி பிரபு. நன்றி. உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

    நல்ல நோக்குடன் செயபடுகிறீர்கள்!!
    தொடருங்கள்!!

    ReplyDelete
  5. ரெம்ப நன்றி பிரபு தம்பி.
    என்னை போய்.... சரி அக்கா மேல ரெம்ப பாசம் வச்சிருக்கீங்கன்னு தெரியுது.

    ReplyDelete
  6. இரெண்டாம் நாள் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    மீதி ஆப்புறம் படிச்சிட்டு கமெண்ட் போடறேன்!

    ReplyDelete
  7. உங்க பதிவு மிக அருமை ...

    After Reading this post i have become ur follower,

    If you like my posts you can follow me ;) hope u like it

    ReplyDelete
  8. ////
    பிரேம்குமார் said...
    நல்லவொரு கதையோடு ஆரம்பிக்கிறது பதிவு. அருமை

    வாழ்த்துகள் பிரபு
    ///

    நன்றி பிரேம்குமார்

    ReplyDelete
  9. ////
    Krishna Prabhu said...
    ஒவ்வொரு நாளும் என்னுடைய கிராமத்திலிருந்து சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு செல்ல மொத்தமாக நான்கு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அந்த பயண நேரத்தில் ஏதோ சிறிது படிக்கிறேன். ஆங்கிலப் புத்தகம் பற்றிய நிறைய தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது. தமிழிலுள்ள மிகச்சிறந்த நூல்களைப் பற்றி அப்படி இல்லாதது பெரிய குறையாக எனக்கு தோன்றியது. அதனால் தான் இது போல் எழுதுகிறான்.

    ///

    தொடருங்கள் பிரபு

    ReplyDelete
  10. ///
    thevanmayam said...
    பிரபு!

    கதையுடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள்!!
    வாழ்த்துக்கள்!!
    ///

    நன்றி தேவா

    ReplyDelete
  11. ///
    kunthavai said...
    ரெம்ப நன்றி பிரபு தம்பி.
    என்னை போய்.... சரி அக்கா மேல ரெம்ப பாசம் வச்சிருக்கீங்கன்னு தெரியுது.
    ///

    ஆமாங்கா ஆமா

    ReplyDelete
  12. ////
    RAMYA said...
    இரெண்டாம் நாள் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    மீதி ஆப்புறம் படிச்சிட்டு கமெண்ட் போடறேன்!

    ////

    நன்றி ரம்யா

    ReplyDelete
  13. ///
    Suresh said...
    உங்க பதிவு மிக அருமை ...
    ///

    நன்றி சுரேஸ்

    ReplyDelete
  14. நல்ல அறிமுகம் பிரபு - மூவருமே படிக்க வேண்டியவர்கள். நன்று

    ReplyDelete
  15. கதையோடு ஆரம்பித்து சில அறிமுகம்கள்... நன்று வாழ்த்துகல் பிரபு..

    ReplyDelete