அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு.
அன்புடையோர் அனைவருக்கும் முதல் வணக்கம். அப்பாவியாய் காலத்தை தள்ளிக்கொண்டிருந்த என்னை, வலைச்சரம் தொடுக்க அழைத்த போது. இனம் புரியாத பயம், மின்னலால் மூளையின் ஓர் மூலையில் தோன்றி நொடியில் மறைந்தது.
அப்பரும், சுந்தரரும், எம்பெருமான் முருகனும் வீற்று அலங்கரித்த தமிழ்ச் சங்கத்தில், மதுரையம்பதியில் திருவிளையாட்டால் தமிழ் தராசு நக்கீரனுடன், பேரவா தருமியும், அவையில் வீற்று, சொல்லால் வாதடி? தோல்வியிலும், வெற்றி!(பொற்கிழி) கண்ட வரலாறு, பெரிய புராணமாய் தமிழில் இருக்கையில்,
நவீன அப்பர்களும், சுந்தரர்களும் அலங்கரித்த வலைச்சரத்தில், நாமறிந்த மதுரையம்பதி ( சீனா ஐய்யா) –வின் திருவிளையாட்டுகளின் நாம் ஒரு பகுதியாக்கப்பட்டோம். நவீன நக்கீரர்களால் நம் அவை நிறைந்திருந்தாலும், பாராட்டு – பரிசில் ஏதும் எதிர்பார்க்காமல், தயக்கமேதும் இல்லாமல், தருமியாய் வந்திருக்கிறேன்.
நக்கீரனின் வாதம், சொல்லில்(எழுத்து) பிழை இருந்தாலும், பொருளில் பிழை இல்லாத எழுத்து!.
என்பதை எனக்கு தாரகமாக்கி, நான் எழுதும் எழுத்துகளில்(பதிவுகளில்) என்றும் கருத்து பிழை (பிறர் மனதை நோகாமை) வராமல், பல பதிவுகள் பதிந்து வந்துள்ளேன். பெரிய தாக்கத்தையோ, பாதிப்பையோ, பரபரப்புகளையோ பதிவுலகத்தில் நாட்டாவிட்டாலும்,
என்பதிவில் அறுசுவை இருக்கிறதோ?, இல்லையோ?, அன்னையின் அணைப்பைப் போல், வலி தராத நெருக்கம் இருக்கிறது என நம்புகிறேன்.
அடித்து திருத்துவது என் நோக்கமல்ல. நீங்கள் உண்மையை உணர்வது மட்டுமே என ஓடிக்கொண்டிருக்கிறேன்.
பலரைப் போலவே, பின்னூட்டம் போடவே ப்ளாக்கர் ஆரம்பிதது, மடலில் வரும் புகைப்படங்களை, பதிவுளாக்கி வந்த நேரத்தில், நண்பர் கார்க்கியின் ஆலோசனையின் பேரிலேயே சொந்த கருத்துகளை எழுத ஆரம்பத்தேன். எப்படியோ அறுபது பதிவுகளுக்கும் மேல் ஓட்டம் நிற்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
பதிவுகள் பல எழுதியிருந்தாலும், சர்ச்சையில் இதுவரை சிக்கியதில்லை. காரணம், அத்தனையும் பாதிக்கப்பட்டர்களின் பார்வைகளையே எழுதியது தான். அவற்றில் சில பதிவுகளை உஙகளோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இலங்கையிலிருக்கும் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டும் காணாத, இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்க்காக, தீக்குளித்து இறந்து போன முத்துக்குமரனின் தந்தையின் தற்போதைய மனநிலை எத்தகையதாக இருக்கும் என்பதைப் பற்றியதான பதிவு... ·
உலகில் பல நாடுகளைத் மடடுமில்லாது, ஓவ்வொரு தனிமனிதனையும் தாக்கிய பொருளாதார நெருக்கடியை கண்டு நொந்து மூலையில் முடங்காமல், அதை எந்த வகையில் நமக்கு சாதகமாக்கலாம் என எழுதிய பதிவு... ·
குடிப்பழக்கத்தால் வாழ்வை முடமாக்கிக் கொண்டவரைப் பற்றிய பதிவு. சொந்த ஊர்க்காரர் என்பதால் அவரைப் பற்றியும், போதையில் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் வந்த மாற்றங்களைப் பற்றி தெரிந்ததை முழுதாய் எழுதிய பதிவு... ·
சகமனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் கேவலமான பழக்கங்களினால் பணம் சம்பாரித்தது மட்டுமில்லாது, அடுத்தவரை கேலி பேசும் மனிதரை சாடும் பதிவு... மற்றும் பல பதிவுகள்...
பின்னூட்டங்களில் பலர் என் கருத்தை ஆதரிப்பதும், யூதஃபுல் விகடனில் எனது மூன்று பதிவுகளுக்கு இடம் கொடுத்து சுட்டி கொடுத்ததும், எனக்கே என்மேல் திருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
வலைச்சரத்தில் எனது முதல் நாளை தன்னிலை விளக்கத்தில் (நிச்சயம் தற்புகழ்ச்சி அல்ல, என்னைத் தெரியாதப்படுத்தவே) கடத்திவிட்டேன். இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த பல பதிவர்களை (உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் பலர் இருக்கலாம்), எனது பார்வையில் அறிமுகம் செய்கிறேன். பொறுமைக்கு நன்றி கூறி, தற்காலிக விடை பெறுவது,
உங்கள் அப்பாவி முரு.
நல்வரவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்பாவியாய் காலத்தை தள்ளிக்கொண்டிருந்த என்னை //
ReplyDeleteஅப்படியா! ப்படியா! படியா! டியா! யா!....
வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் முரு
ReplyDeleteஅருமையான அறிமுகப் பதிவு
நல்லதொரு தொடக்கம்
நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள்!
ReplyDeleteநல்லா அடிச்சு ஆடுங்க....
ஆரம்பமே அசத்தலா இருக்கே...உங்களுடைய பதிவுகளை அதிகம் வாசித்ததில்லை. வலைச்சரம் மூலமாக உங்களைக் கண்டத்தில் மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் முரு..
ReplyDeleteகலக்குங்க
வாழ்த்துகள் தம்பி !
ReplyDeleteமுதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள!!
ReplyDeleteஆரம்பம்பே அசத்தல், தினம் தினம் இந்த அசத்தலை ஆவலுடன் எதிர்பார்க்கும்!! ரம்யா!!
ReplyDelete//
ReplyDeleteபழமைபேசி said...
வாழ்த்துகள்!
நல்லா அடிச்சு ஆடுங்க....
//
அண்ணாவே சொல்லிட்டாறு இல்லே
பிறகென்ன ஸ்டார்ட்................
வாங்கப்பு
ReplyDeleteவாழ்த்தி வரவேற்கிறோம்
நல்லா எழுதுங்க
வாழ்த்துகள் தம்பி முரு..
ReplyDeleteஆரம்பம் அசத்தால் இருக்கு.
கருத்துக்கள் மற்றும் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteஅப்பாவி முரு
நீங்க தானா இந்த வாரம்!
ReplyDeleteவாங்க வாங்க!