எட்டாம் வகுப்புக்கு முன்னர், எனக்கு முதன் முதல் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தியது யார்னா, நினைவுகளோடு கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்து பார்த்ததில் ஞாபகத்திற்கு வந்தது ஆனந்த், என் முதல் நண்பன். நான், உஷா, ஆனந்த். உஷாவும், ஆனந்தும் ஒரே காம்பவுண்ட் (வாசல்) எங்க வாசல்ல இருந்து நாலாவது வாசல் அவங்களோடது. உஷாவால தான் ஆனந்த் பழக்கம். அடிக்கடி உஷா வீட்டிற்கு போக எதிர் வீட்டிலிருக்கும் ஆனந்த் எப்பவுமே ஒரு புக்கை படிச்சுகிட்டு, சுத்தி ரெண்டு, மூணு புக்கோட தான் இருப்பான். கோகுலம், பூந்தளிர், அம்புலி மாமா, க்ரைம் நாவல் கூட சில சமயங்களில். அந்த புத்தகத்தின் மேல்
இருக்கும் ஈர்ப்பால் நானேதான் ஆனந்த்கிட்ட போய் பேசினேன், அப்பவே உஷா என்னைப் பார்த்து கண்ண காட்டுச்சு, எனக்கு அதெல்லாம் புரியல, நானே வலியப் போய் பேசி ரெண்டு பூந்தளிர கடனா வேற அவன்கிட்டருந்து வாங்கிட்டேன்.பிறகுதான் தெரிஞ்சுது, ஆனந்தே ஒரு ரொம்ப பழைய புக்குக்கு நாலணாவும், கொஞ்சம் புது புக்குக்கு எட்டணாவும் கொடுத்து வாடகை லைப்ரரியில (பழைய பேப்பர் கடை) எடுத்து படிக்கிற விஷயம். இப்படியா நானும், ஆனந்தும் ஃப்ரெண்ட் ஆகி பேப்பர் கடைக்கு ஒன்னா போய் புக் எடுக்கறது, நான் படிச்சுட்டு அவனுக்கும், அவன் படிச்சுட்டு எனக்கும் தர வழக்கமாகியது. இது இப்படியே ஓட, ஒருநாள் நான், உஷா, ஆனந்த் மூவருமே வாடகை சைக்கிள் கடைக்கு போய் சைக்கிள் எடுத்து
கத்துக்கறதா முடிவு செஞ்சோம். சைக்கிள் கடைக்கு பக்கத்துல ஒருத்தர் குள்ளமா நின்னுக்கிட்டிருந்தார். டேய் இங்க வாடா என்று ஆனந்தை கூப்பிட்டார், அவனும் போனான், அதைப் பார்த்த உஷா, என்னை இடித்து வா, நம்ம போலாம் என்றது.நான் போகலை, இரு ஆனந்த் வரட்டும் என்றேன், அவன் வருவான், நீ வா என்றாள் உஷா, நான் திரும்பி திரும்பி பார்த்துக்கிட்டே உஷாவோட டெலிபோன் குவார்ட்டர்ஸுக்கு போயாச்சு (அங்கதான் சைக்கிள் கத்துக்க வாட்டமா இருக்கும், பெரிய வண்டில்லாம் வராது) கொஞ்ச நேரம் கழித்துதான் ஆனந்த் வந்தான், நான் ஏன் இவ்ளோ நேரம், அந்தாள் ஏன் உன்ன கூப்பிட்டான் என்றேன், அதற்கு ஆனந்த் ஏதோதோ சொல்லி மழுப்ப, உஷாவோ அவங்க அம்மாகிட்ட போய் சொல்லிட்டு வர போயிருப்பான் என்றாள். அதற்கு ஆனந்த் முகம் மாறி
தலை குனிந்தான். கொஞ்ச நாள் கழித்துதான் ஆனந்தைப் பற்றி உஷா வழியாக அறிந்தேன், அதாகப்பட்டது, ஆனந்திற்கு அப்பா இல்லை, அவன் அம்மாவிற்கு ஆனந்த் உட்பட நான்கு பசங்க, முதல் மூன்றும் பெண் (மூவருமே அழகா இருப்பாங்க), ஆனந்த் தான் கடைசி, உஷாவின் கூற்றுப்படி, ஆனந்தை அழைத்த ஆள், அவன் அம்மாவை வைத்திருப்பவர் (?!). அதன் பிறகு நானும், ஆனந்தும் நிறைய முறை அவர் வீட்டின் கீழே இருக்கும் சைக்கிள் கடைக்கு போக நேரிட்டால், அவரை தூரத்திலே பார்த்த ஆனந்த், நீ முன்னாடி போய் சைக்கிள் எடுத்துக்க, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் என்று அங்கேயே சைக்கிள் இல்லாமல் ப்ரேக் போட்டுவிடுவான்.
இதில்லாமல் ஆனந்த் மேல் ஒரு பொதுவான குற்றச்சாட்டு, ஆனந்த் பெண்களோடே பழகுகிறான், பெண்களைப் போலவே நடக்கிறான், சில செய்கைகளும் அதைப்போலவே இருக்கிறது என்பதே, மேலும் அவன் பேருக்கு முன்னால் ....டை என்ற அடைமொழி இருந்தது, தெருவில் சில பையன்கள் அவனை அப்படி கூப்பிடுவது வழக்கம்,
என்னைப்பொறுத்தவரையில் ஆனந்திடம் அப்படி ஏதும் நான் கண்டுபிடிக்கவில்லை, இல்லை அப்போது அவன் எனக்கு நெருங்கிய தோழனாக் இருந்ததால் அவை என் கண்ணுக்கும் மனதுக்கும் படவில்லையோ என்றும் தெரியவில்லை. இப்போதும் ஆனந்த் என்ற பெயர் நினைவுக்கு வந்தால், என் மனத்திரை பிம்பம் ஒரு அரைக்கால் ட்ரவுசர், மேல் சட்டை (அது பெரும்பாலும் அவனின் ஸ்கூல் யூனிஃபார்மாகவே இருக்கும்)அதீத பவுடர் பூச்சு, குங்குமத் தீற்றல், கருகரு சுருள் முடி இவையே.
கொஞ்சநாட்களுக்கு பிறகு தெருவில் ஏதோ சண்டை, ஆனந்தின் அம்மாவை நிறைய பேர்
அசிங்க அசிங்கமாக பேசிக்கொண்டிருந்தார்கள், அழகாய் இருக்கும் அவர்கள் அக்காவையும் அது குறித்தது. அதற்குப்பிறகு ஆனந்திடம் அதிகமாக பேச்சு வெச்சுக்க வேண்டாம் என்று உஷாவின் அம்மாவும், என் அம்மாவும் எங்களைக் கண்டித்தார்கள் (?). ஆனால் நான் உஷா வீட்டிற்கு போகும் போதெல்லாம். ஆனந்த் வீட்டையே பார்ப்பேன், பெரும்பாலும் அது பூட்டியே இருக்கும், ஒரு நாள் உஷா சொன்னாள், ஆனந்த் வீட்டுல எல்லாரும் காலி பண்ணிகிட்டு போய்ட்டாங்களாம். அப்புறம் ஆனந்த் என்ற பெயர் நினைவடுக்குகளில் படிந்துவிட்டது. உஷாவிற்கு திருமணமாகி இரு பிள்ளைகள். அம்மா வீட்டிற்கு
போகும்போது சில சமயம் பார்க்க நேரிடும். ஆனந்த் என்னவானான் என்று அவளைப் பார்த்தபின் கேள்வியெழும், ஆனால் கேட்கத்தோணாது. ஆனந்த் நீ இப்போது எப்படியிருக்கிறாய்? அதை விட முக்கியமாய் என்னாவாகயிருக்கிறாய்?
இப்படியாக வாசிப்பு ஆனந்த் வழி ஆரம்பித்து, பிறகு சுதா மூலமாக அது ஸ்கூல் லைப்ரரி, ஈஸ்வரி லெண்டிங்க் லைப்ரரி என்று உருமாறிக்கொண்டே இருந்தது.
அறிவுமதி, அ.வெண்ணிலா, வைரமுத்து, யுகபாரதி, நா. முத்துக்குமார் இப்படியாய் நிறைய பேரின் கவிதை புத்தகங்களை சுமந்து கொண்டிருந்தது என் அலமாரி, கூடவே அம்மாவின் வசவுகளையும் சேர்த்து. குடிக்கத் தண்ணியில்லையாம், கொப்புளிக்க பன்னீராம், எவ்வளோ புக்ஸு பாரு, இதெல்லாம் எப்புடி வாங்குன, உங்கிட்ட ஏது இவ்ளோ காசு என்ற கேள்வி அடிக்கடி அம்மாவிடமிருந்து வரும். அதுக்கெல்லாம் அனேகமாய் ஒரு முறைப்புத்தான் பதில்.
அறிவுமதியின் வலி, நட்புக்காலம், அணுத்திமிர் அடக்கு, அ.வெண்ணிலாவின் நீரிலைலையும் முகம், கனவிருந்த கூடு, வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், யுகபாரதியின் பஞ்சாரம் இன்னும் சில தொகுப்புகள், நா.முத்துக்குமாரின் பாலகாண்டம் முதற்கொண்டு அத்தனை கவிதை புத்தகங்களும் என நிறைய.
இப்படியாய் ஆரம்பித்த கவிதைகள், ஒரு கட்டத்தில் கன்னாபின்னாவென்று திசை மாறி ( ஹி. ஹி. நானே எழுத ஆரம்பிச்சேட்டேன் இல்ல) இங்குவந்து ஆரம்பத்துல சில கவிதைகளோட இருந்து, பிறகு வாசிப்போட ஒரு ப்ரேக் போட்டது.
சில கவிதைத் தளங்கள்
நிலவு நண்பன் @ ரசிகவ் வின் http://nilavunanban.blogspot.com/
நிலா ரசிகனின் http://www.nilaraseeganonline.com/
தமிழ்நதியின் http://tamilnathy.blogspot.com/
உமாஷக்தி http://umashakthi.blogspot.com/
செல்வேந்திரனின் http://selventhiran.blogspot.com/
பொன்.வாசுதேவனின் http://aganaazhigai.blogspot.com/
மண்குதிரை http://mankuthiray.blogspot.com/
ஆதவாவின் குழந்தை ஓவியம் http://aadav.blogspot.com/
அனுஜன்யா http://anujanya.blogspot.com/
ஸ்ரீமதியின் http://karaiyoorakanavugal.blogspot.com
சரவணக்குமாரின் http://msaravanakumar.blogspot.com/
ச.முத்துவேலின் http://thooralkavithai.blogspot.com/
ஜீவா http://gg-mathi.blogspot.com/
வானம் உன் வசப்படும் http://puthiyavanonline.blogspot.com/
ராமலஷ்மி http://tamilamudam.blogspot.com/
சஹாரா தென்றல் http://saharathendral.blogspot.com
இனியவள் புனிதா http://ninaivellam.blogspot.com/
நாணல் http://tamil-naanal.blogspot.com/
சென்ஷி http://senshe-kathalan.blogspot.com/
சக்தி http://veetupura.blogspot.com/
கடல் புறா http://kadalapura.blogspot.com/
ப்பா, கை வலிக்குது, இன்னும் நெறைய பேர் இருக்காங்க, கவிதைய சைட் பிஸினஸா வெச்சுக்கிட்டு, அவங்கள பகுதி இரண்டில் பார்க்கலாம்.
நட்புடன்
அமித்து அம்மா
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDelete\\நினைவுகளோடு கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்து பார்த்ததில் \\
ReplyDeleteஅருமைங்கோ
\\அதை விட முக்கியமாய் என்னாவாகயிருக்கிறாய்?
ReplyDelete\\
நல்ல அக்கறை
\\ப்பா, கை வலிக்குது, இன்னும் நெறைய பேர் இருக்காங்க, கவிதைய சைட் பிஸினஸா வெச்சுக்கிட்டு, அவங்கள பகுதி இரண்டில் பார்க்கலாம்.
ReplyDelete\\
யம்மாடி
இத்தனை கவிகளா!
அதுவும் ஒரே பதிவில்
இன்னும் வேற இருக்கா!
நல்லா படிக்கிறீங்க போல
அருமை.
ReplyDeleteசுட்டியைத்தட்டினா சுட்டி நம்மை இழுத்துகிட்டு போற மாதிரி கொடுத்திருக்கலாமோ!!
அருமையான சுட்டிகளுக்கு நன்றி
வலைச்சர ஆசிரியருக்கு இரண்டாம் நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஎன்னை புத்தகம் படிக்க வைத்தது எங்க அப்பாதான். ஓய்வு நேரத்தில் படிக்க அப்பா வாங்கும் புத்தகத்தை நானும் படிக்க, அப்படியே தொடர்ந்தாச்சு.
ReplyDeleteஓ... இது கவிதை சிறப்பு அறிமுகங்களா... வாழ்த்துகள்... அனைவருக்கும்!
ReplyDeleteமலரும் நினைவுகளை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteகவிஞர்கள் அத்துணை பேருடைய கவிதைகளையும் வாசிக்க உதவியதற்கு ரொம்ப நன்றி
ReplyDeleteதேடித் தேடி வலைப்பதிவுகளை படிக்கிறீங்கன்னு தெரியுது...
ReplyDeleteஇந்தப் பதிவுல பிடிச்ச விஷயம், முன் பகுதி. ரொம்ப இயல்பா, சரளமான நடைல உங்க பால்யத்தையும், வாசிக்கிற பழக்கத்தையும் ஒரு புனைவு மாதிரி சொல்லியிருக்கீங்க.
ஒவ்வொரு ஊர்லயும் ஒரு ஆனந்த் இருக்கத்தான் செய்யறான். யாராவது ஒரு நண்பனோட அம்மா, ஆனந்தோட அம்மா மாதிரியே ஊர் மக்களோட நாக்குல புரண்டு எழுந்துக்கறாங்க.
யோசிச்சுப் பார்த்தா, 'ஆனந்த்'தை சந்திக்காம, பழகாம யாரோட பால்யமும் முற்றுப் பெறதில்லை, இல்லையா?
தோழமையுடன்
அமித்து அம்மா.. சுவாரசியமான பதிவு !
ReplyDelete// சந்தனமுல்லை said...
ReplyDeleteஅமித்து அம்மா.. சுவாரசியமான பதிவு !//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
//ப்பா, கை வலிக்குது, இன்னும் நெறைய பேர் இருக்காங்க, கவிதைய சைட் பிஸினஸா வெச்சுக்கிட்டு///
எங்களுக்கு படிக்க ரொம்ப ஜாலியா இருக்கு பாஸ் - கவிதை லிங்குகளை பாதி பேர் ஏற்கனவே தெரிஞ்சவங்கதான்:)
பை தி பை சைட் பிசினஸா கவிதை எழுதுனா பரவாயில்ல பாஸ் ஒரேடியா ஓ”ன்னு பெருங்குரலெடுத்து அழவும் வைக்கிறதுதான் பாஸ் கஷ்டமா இருக்கு :(
ஆரம்பகால வாசிப்பனுபவத்தை அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்!
ReplyDeleteநன்றி அமித்து அம்மா!
ReplyDeleteஉங்களின் பரந்த வாசிப்பு கண்டு வியக்கிறேன்.
ReplyDeleteதமிழ் புத்தகங்களே கிடைக்காத ஊரில் நான் இருக்கும் போது, உங்கள் சிறுவயது அலமாரி எனக்கு பொறாமையை தோற்று வித்தது.
உங்க சில பதிவுகள்ல ஒரு விசேஷம் என்னன்னா? பாதி படிச்சுகிட்டு இருக்கும்போதே படிக்கிறவங்களுக்கும் பழைய நினைவு வந்து யோசிக்க வைச்சிடும்!
ReplyDeleteஇந்த பதிவு அந்த வகையை சேர்ந்தது.............
இரண்டாம் நாள் தாமதமான வாழ்த்துகள்!
ReplyDeleteரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்கீங்க அமித்து அம்மா!
ReplyDeleteஅடடா...எல்லோருமே நான் படிப்பவர்கள்....
ReplyDeleteஅன்புடன் அருணா