Monday, May 25, 2009

முன்கதை சுருக்கம்

இதனால் சக Blog ஓனர்களுக்கு அறிவிப்பதென்னவென்றால் வந்தனம் வந்தனம் வந்தனமுங்கோ - இன்னைலருந்து இன்னும் 7 நாளைக்கு நாமதான் இங்க ஆசிரியராம். சீனா ஐயா உத்தரவிட்டிருக்காரு.

என்னடா இது சக வலைப்பதிவர்கள்னு சொல்லாம Blog ஓனர்னு சொல்றாங்க அப்படின்னு நெனைக்கிறீங்களா, அதுதான் என்னோட மொதப் பதிவோட தலைப்புங்க. பழச மறக்கக்கூடாதில்லிங்களா.

பழைய ஆபீஸ்ல இருந்து புது ஆபிஸ்க்கு வந்தப்ப ஒரு ரெண்டு நாளைக்கு வேலை ஏதும் யாரும் தரலீங்க, வெறுமனே சிஸ்டம் முன்னாடி ஒக்காந்திருக்கப்புடிக்காம, நோண்டுனதுல தெரிஞ்சிக்கிட்டதுதான் இந்த வலைப்பூவுலகம். ஒரு தடவை ஆனந்தவிகடன்ல பி.கே.பி ப்லாக்ஸ்பாட் பத்தி படிச்சு அது பத்தி அப்படியே ஞாபகம் வெச்சிருந்து அத கூகில் செஞ்சேன், அவரு பதிவு வந்துது, அப்படியே உள்ள புகுந்து புகுந்து படிக்க ஆரம்பிச்சேன், விதைகள் ப்லாக்ஸ்பாட் கண்ணுல பட்டுது. நிலவு நண்பன் @ ரசிகவ் ஞானியாரோட இன்னொரு ப்லாக் தான் அது. யார் யாருக்கு உதவி தேவைப்படுதோ அத அங்க போட்டுவெச்சிருந்தாரு.
அதுல அடையார்ல இருக்குற ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யலாம்னு சொல்லி அட்ரஸெல்லாம் கொடுத்திருந்தார். சரி அதுக்கு நன்றி சொல்லி பதில் (அப்ப அது பின்னூட்டம்னு எனக்கு தெரியாது) போடலாம்னு பாத்தா நமக்கு ஒரு அடையாளம் வேணும்னு சொல்லிச்சு. அநாமதேயரா கமெண்ட் போட மனசு ஒத்து வரலை (திட்டியெல்லாம் இல்ல, நல்ல கமெண்ட்டுக்குதான்), பின்ன அவரு கொடுத்திருந்த ஈமெயில் ஐடிக்கு மெயில் போட்டேன், போட்ட மறு நாள் அவர் நன்றின்னு சொல்லி பதில் போட்டிருந்தாரு. அதுக்கு நான் பதில் போட,, பிறகு அவர் பதில் போட, சரி எனக்கு மத்தவங்களுக்கெல்லாம் பதில் போட என்ன செய்ய (நான் கொஞ்சம் சுமாரா கவிதை எழுதுவேன்னுவேற அவர்கிட்ட சொல்லியிருந்தேன்) கேட்க, அவரோட உதவியால துவங்கப்பட்டதுதான் என்னோட ப்லாக். மொதல்ல சொன்னா மாதிரி நமக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டுச்சு பாருங்க, அதுக்கு என் பொண்ணையே எனக்கு அடையாளமாக்கிகிட்டேன்.
அமிர்தவர்ஷினி அம்மா - ஒரு கணம் சொல்லிப்பார்த்துகிட்டேன்,வாழ்க்கையே அர்த்தப்பட்டா மாதிரி தோணுச்சு, அடுத்த செகண்ட் அதுதான் ப்லாக் பேரு.


அப்புறம் படத்த போட்டு ஓட்டிக்கிட்டிருந்தப்ப, ஆச்சி(சந்தனமுல்லை) வந்து உங்க பொண்ணப் பத்தி எழுதுங்களேன்னு கமெண்ட் போட
அதுவே நமக்கு டானிக் ஆகி, அங்க பிக் அப் ஆனவதான், இப்ப இங்க வந்து எழுதிகிட்டிருக்கேன்.

எழுத்து : எழுத தெரிஞ்சாலோ, இல்ல எழுதறதோ படிச்சு புரிஞ்சுக்க தெரிஞ்சாலோ அதுவே பெரிய வரப்ரசாதம். நிறைய மனமுடைஞ்ச காலங்களில் நான் செய்த ஒரே விஷயம்
எழுதியதும், வாசித்ததும் தான். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அப்ப அந்த எழுத்தை நான் அறிந்து கொள்ள பாடுபட்ட என் அம்மா தெய்வத்துக்கும் மேல.

எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர்னா, அவரு பாலகுமாரன். அதனால நான் அடிக்கடி படிக்குற ப்லாக்ல இதுவும் ஒன்னு
http://balakumaranpesukirar.blogspot.com/

அடுத்தா எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் பைரவன். (மன்னார் அண்ட் கம்பெனி பைரவன் இல்லீங்க) வலைப்பூவுலயும் அப்படி
ஒருத்தர் இருக்காரு.. இப்படித்தான்னு வரையறுக்க முடியாம எதைப்பத்தியும் எழுதுவாரு. இவரோட மாற்றாந்தாய் பதிவு,வேண்டாத குணங்கள் ?? போன்ற சிந்தனையைத் தூண்டும்
பதிவுகள் மட்டுமில்லாம, ஒரு பீரும் நாலு பேரும் அப்படின்னு தான் தண்ணியடிக்கறதப் பத்தியும் எழுதுவாரு. மனுஷன் ஜோசியரும் கூட.
அப்புறமென்னங்க. போய் படியுங்க http://pirathipalippu.blogspot.com

சில சமயம் மனசு சோர்ந்து போன காலங்களில் திடீர்னு நம் கண்ணில் படும் சில வாசகங்கள் நமக்கு டானிக் தர மாதிரி இருக்கும். உதாரணமா பைபிள் வாசகங்கள சொல்லலாம்
அதுமாதிரி ஒரு நாள், ரொம்பவும் மனசு கஷ்டமா ஃபீல் செய்துகிட்டு எதையெதையோ படிக்க ஆரம்பிச்சேன், ஆபிஸ்ல தான். ரெண்டு மூணு ப்லாக் தாண்டி,
இந்த ப்லாக்ல, இந்தப் பதிவுல இருந்த வாசகங்கள் எனக்கே எனக்குன்னு எழுதின மாதிரி இருந்துச்சு, உற்சாகமாயிட்டேன். அந்த வார்த்தைகள் இதுதான்

//ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பற்கு இடையறா செயல்பாடும்,
ஆக்கத்திறனும் தேவையாக உள்ளது. அது தானாகவே நடப்பதில்லை.
நமது விருப்பு, வெறுப்பு மற்றும் செய்கைகளாலும் அது நிர்ணயிக்கப் படுகின்றன.
ஓவ்வொரு நாளும் நமக்கு புது புது சந்தோஷங்களும், நல்ல நேரங்களும் அவற்றை செய்வதற்காக கிடைக்கின்றன.
அவற்றைப் பெற்றுக் கொண்டு நாம்தான் மேலே மேலே சென்று கொண்டு இருக்க வேண்டும்.//


இதை எழுதியவர் இவர்தான் http://raghavannigeria.blogspot.com
ஏற்கனவே இன்னிக்கு ஸ்கூல்க்கு நான் ரொம்ப லேட்,அதுக்காக மன்னிச்சுக்கோங்க.
நாளைக்கு பார்க்கலாம்.

நட்புடன்
அமித்து அம்மா

32 comments:

  1. me d firsta வாழ்த்துச் சொல்லிக்கறேன்

    ReplyDelete
  2. அமிர்தவர்ஷினி அம்மா - ஒரு கணம் சொல்லிப்பார்த்துகிட்டேன்,வாழ்க்கையே அர்த்தப்பட்டா மாதிரி தோணுச்சு, அடுத்த செகண்ட் அதுதான் ப்லாக் பேரு.

    அருமையான பெயர்

    ReplyDelete
  3. // அவரோட உதவியால துவங்கப்பட்டதுதான் என்னோட ப்லாக். மொதல்ல சொன்னா மாதிரி நமக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டுச்சு பாருங்க, அதுக்கு என் பொண்ணையே எனக்கு அடையாளமாக்கிகிட்டேன். //


    உங்கள மாதிரி ஒரு நல்ல வலைப்பதிவரை தந்த தோழருக்கு நண்றி...............




    // அமிர்தவர்ஷினி அம்மா - ஒரு கணம் சொல்லிப்பார்த்துகிட்டேன், //


    நல்ல வேல ..... , 10 டைம்ஸ் எழுதி பாக்காம இருந்தீங்களே......!!!!!!



    // ஏற்கனவே இன்னிக்கு ஸ்கூல்க்கு நான் ரொம்ப லேட்,அதுக்காக மன்னிச்சுக்கோங்க.
    நாளைக்கு பார்க்கலாம்.

    நட்புடன்
    அமித்து அம்மா //


    நண்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரி......



    " வாழ்க வளமுடன்......"

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. முதல் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    //பழச மறக்கக்கூடாதில்லிங்களா. //
    சரியா சொன்னீங்க.

    // அமிர்தவர்ஷினி அம்மா - ஒரு கணம் சொல்லிப்பார்த்துகிட்டேன்,வாழ்க்கையே அர்த்தப்பட்டா மாதிரி தோணுச்சு, அடுத்த செகண்ட் அதுதான் ப்லாக் பேரு. //

    ஆஹா.. ஒரு மின்னல் அடிச்ச மாதிரி.. பேரு ரொம்ப நன்னா அமைஞ்சுடுசுங்க..

    ReplyDelete
  6. முதல் நாள் வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  7. அமித்துவின் பேரை சொல்வதில் எங்களுக்கும் அலாதி சந்தோஷம்

    ReplyDelete
  8. முதல் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!!

    ////எழுத்து : எழுத தெரிஞ்சாலோ, இல்ல எழுதறதோ படிச்சு புரிஞ்சுக்க தெரிஞ்சாலோ அதுவே பெரிய வரப்ரசாதம். நிறைய மனமுடைஞ்ச காலங்களில் நான் செய்த ஒரே விஷயம எழுதியதும், வாசித்ததும் தான். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அப்ப அந்த எழுத்தை நான் அறிந்து கொள்ள பாடுபட்ட என் அம்மா தெய்வத்துக்கும் மேல.////

    நல்லா சொல்லி இருக்கீங்க!

    ///அடுத்தா எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் பைரவன். (மன்னார் அண்ட் கம்பெனி பைரவன் இல்லீங்க) வலைப்பூவுலயும் அப்படி ஒருத்தர் இருக்காரு..////

    ஹா ...ஹா ...ஹா

    என்னை வைச்சு நல்லாத்தான் காமெடி பண்ணி இருக்கீங்க! ;;)))

    ReplyDelete
  9. முதல் நாள் வாழ்த்துக்கள்

    முதல்நாளே உங்க பிளாக் தோன்றிய வரலாறு படித்து ரசித்தேன்

    ReplyDelete
  10. வாழ்த்துகள்... :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  11. வலைச்சர பொறுப்பேற்றமைக்கு முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக்க கொள்கிறேன்!

    ReplyDelete
  12. வலையுலகிற்கு வந்த வரலாறு அறிந்து கொண்டேன். இதற்காக உங்கள் அலுவலகத்திற்கும், நிலவு நண்பனுக்கும், சந்தனமுல்லைக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  13. ஜீவனையும், ராகவன் அண்ணாவையும் தெரியும். பாலகுமார் என்ன பேசுகிறார்னு பார்த்துட்டு வர்றேன். பிளாக்கோட லிங்க் இதிலேயே கொடுத்தா நல்லாருக்கும்.

    ReplyDelete
  14. நான் வலைப்பூவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் அதிகம் பரிச்சயமானது நீங்க தான்.

    உங்கள் கவிதைகளையும் பதிவுகளையும் நானும் என் அம்மாவும் தவறாமல் படிப்பதுண்டு.

    வாழ்த்துக்கள் அமித்து அம்மா...தொடந்து கலக்குங்க இந்த வாரம்.

    ReplyDelete
  15. இத்தனை நாளாக இந்த வலையைப்பற்றி தெரியாமல் போய்வி்ட்டதே! மிகவும் நன்றி அமித்து அம்மா!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அமித்து அம்மா!

    ReplyDelete
  17. கும்முங்க எசமான் கும்முங்க :)

    வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

    ReplyDelete
  18. அமிர்த்து அம்மா

    சகோதரிக்கு அன்புடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அமித்து அம்மா.. :)

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்!

    You can intro the ladies blog you liked most!

    ReplyDelete
  21. வாழ்த்துகள் பல! :)

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் அம்மா !

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் அமித்து அம்மா!!

    ReplyDelete
  24. //அதுவே நமக்கு டானிக் ஆகி, அங்க பிக் அப் ஆனவதான், இப்ப இங்க வந்து எழுதிகிட்டிருக்கேன்.//


    ஓ இதுக்கெல்லாம் காரணம் ஆம்பூர் ஆச்சியா சரிதான்...!

    :)

    ReplyDelete
  25. வாங்க.. வாங்க.. அக்கா, வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
  26. நல்வரவு அமித்து அம்மா.

    கலக்கலா இருக்கு, கலக்குங்க:-)))))

    ReplyDelete
  27. வாழ்த்துகள் அமித்து அம்மா. இந்த வாரம் இனிய வாரம் எங்களுக்கு.;)

    ReplyDelete
  28. வாழ்த்துகள் அமித்து அம்மா. இந்த வாரம் இனிய வாரம் எங்களுக்கு.;)

    ReplyDelete
  29. ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ளே என்னென்னமோ நடந்துடுச்சே!!!
    வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

    ReplyDelete