Monday, May 25, 2009

நன்றி மின்னல் - வருக வருக அமித்து அம்மா

அன்பின் அன்பர்களே

கடந்த ஒரு வார காலமாக மின்னல் ஆசிரியப் பொறுப்பேற்று பதின்மூன்று இடுகைகளிட்டு ஏறத்தாழ நூறு மறுமொழிகள் பெற்று - அருமையான பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் விடை கொடுப்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று துவங்கும் இவ்வாரத்திற்கு அமித்து அம்மா ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் தன் அருமை மகளுக்காக - பதினெட்டு மாதம் நிரம்பிய அமித்துவிற்காக - அமிர்தவர்ஷினி அம்மா என்ற பெயரில் மழை என்ற பதிவினில் ஏறத்தாழ நூறு இடுகைகள் இட்டிருக்கிறார். ஒரு நல்ல அம்மாவாக இருப்பதையே கொள்கையாகக் கொண்டு பணி ஆற்றுகிறார். பல தோழிகளுடன் இணைந்து சமையல் குறிப்புகள் பலவற்றை அளிக்கிறார். பல் இளம் தாய்மார்களுடன் சேர்ந்து அம்மாக்களின் பதிவுகள் என்ற பதிவினில் பல இடுகைகள் இட்டு வருகிறார்.

இவரை வருக வருக - பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்க - என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

சீனா

5 comments:

  1. நன்றி மின்னலே

    வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  2. நன்றி மின்னல்!
    அமித்து அம்மாவா? சொல்லவே இல்ல வாழ்த்துக்கள் சகோதரி!.. :)

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! அமிர்தவர்ஷிணி அம்மா!
    கலக்குங்க!

    ReplyDelete
  5. வாழ்த்துகள்...அமிர்தவர்ஷிணி அம்மா!

    ReplyDelete