ம்ம் இது வரை பொறுமையாக நான் கொட்டிய குப்பைகளை எல்லாம் படிச்சி
முடிச்சிட்டீங்க. நானிட்ட நிறைய பதிவுகளில் என் கட்டுரை, கவிதைகளை பற்றி சொல்லியாச்சு. லாவண்யா கூட போதும்டி செல்ப் டாப்பா என்று சொல்லி கிண்டல் செய்கின்றாள். இருந்தாலும் இந்தக் கடைசிப் பதிவில் என்னை பற்றி என் எழுத்துக்களைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லிட்டு விடை பெற்றுக் கொள்கின்றேன்.
அறிமுகம் பதிவில் சொன்னது போல, தில்லியில் ஒரு சிறந்த நிறுவனத்தில் என்னுடைய எம்.டெக் படித்தேன். அங்கே படிக்கும் போது தான் நான் கவிதைகள், இலக்கியம் இதை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்த புத்தகம் ஜெமோவின் சங்க சித்திரங்கள். மிக அருமையான புத்தகம். இதை எல்லாம் அறிமுகம் செய்து விட்டு என்னோடு சிறு பிணக்காக பிரிந்து போன அந்த நட்பு வாழ்க.
அடுத்த நிலையாக கவிதை புரிதல், புரியச் செய்தது இன்னும் ஒரு நண்பர்.
"இலைகளற்ற இந்த கோடை
நீ வந்து போனதை
எந்த பூ பூத்து கொண்டாடுவது"
என்னடா மரம் சொல்றது போல இருக்குன்னு கேட்டேன் அந்த நண்பரிடம்.
அவன் சொன்னான் இல்லை மனித உணர்வை அப்படி வெளிப்படுத்தி இருக்காங்க
அது ஒரு பரவசம் நிலை. மகிழ்வை எப்படிக் காட்டுவதுன்னு தெரியாதது
போல. எனக்கும் பொறி தட்டியது. இன்னும் சிலவை புரிந்தன அதை
பற்றிய பதிவு மழை. இது எழுத்துலகில் என்னுடைய முதல் படைப்பு.
இப்படியாக கவிதை புரிதல் தொடர்ந்தது. அதை பற்றி எழுதிய கவிதை எல்லாம் முத்தமிழ் குழுமத்தில் பின் தமிழோவியம், திண்ணை என்று எல்லாம் வந்தது. பின்னர் கவிதை சார்ந்த கட்டுரைகளை மட்டுமே எழுதாதீங்க இன்னும் வேறெல்லாமும் எழுதுங்க என்றனர். அதற்காக சில சிறுகதை, இலக்கிய புராண கதைகளில் கவனிக்கப்படாத சிறந்த பாத்திரங்களை பற்றி எழுதினேன். கொஞ்சம் கவிதைகளிலும் எழுதியுள்ளேன்.
நான் எழுதிய கவிதைகளில் என்னை மிகக் கவர்ந்தது குடைக்குள் வானம். இருளில் மிதக்கும் வெயிலின் துகள்களை காற்றை மொழி பெயர்தல்(சரி சரி அடங்கு. விட்டா எல்லா பதிவுக்கும் இங்கேயே விளம்பரம் தந்துருவே). கட்டுரைகளில் கவர்ந்தது வருந்தியழைத்தால் வருவது மழையாகுமா?, சிறைவாழ்வு, ஊர்மிளையில் புலம்பலகள், யாதோசரையின் யாகம் இன்னும் சில.
ஆக பிரிய மனமின்றி பிரிகின்றேன். வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி. அதி பொறுமையோடு படித்த அனைவருக்கும் இனி படிக்க இருக்கும் அன்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
ஒரு வாரம் எங்களை மகிழச்செய்த தங்களுக்கு எங்களது நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி மின்னல்
ReplyDeleteநல்வாழ்த்துகள்
பல நல்ல இடுகை இட்டதற்கு நன்றி
ReplyDeleteநண்பரே