எனக்கு சில சமயம் தோன்றும் நான் ஒரு பிளவுப்பட்ட ஒருவராக தோன்றும் இருவரோ அல்லது பலரோ என்று அதானுங்க(ஸ்பிலிட் பர்சனலிட்டி). என்னடா இது விவகாரமா இருக்குன்னு தோணுதா. பின் வரும் உரையாடல்களை கவனிங்க.
"தேர் இஸ் நத்திங் கால்ட் ஃப்ரி லன்ஜ்"
"என்ன சொல்ற எல்லாம் எல்லா நேரத்திலும் பிரதிபலனை ஏதிர்நோக்கி என்றில்லை"
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை எதுவும் எதற்கும் காரணமில்லாமலில்லை"
"ஏன் அப்படி சொல்ற"
"ஆமா எந்த ஆற்றலும் ஆக்கபடுவதோ அழிவதோ இல்லை"
"என்ன ஓலற அதுக்கும் நீ மேல சொன்ன விசயத்துக்கும் என்ன சம்மந்தம்"
"ஆமா அதே போல தான் எந்த செயலும் உருவாக்க படுவதில்லை ஏதோ ஒரு காரணத்துக்காக முன்னிருந்தே தொடர்ந்து வருவது"
"புரியலை என்ன தான் சொல்ல வரே பெரிய விஞ்ஞானி வெங்காயம் போல கொளப்பற"
"ஆமா நீ செய்யும் ஒரு ஒவ்வொரு செயலும் ஏதாவது பிரதிபலனை எதிர்நோக்கியே இருக்கு"
"அப்படி எல்லாம் கிடையாது, படிக்கிறேன் எழுதறேன் இதில் எனக்கு என்ன பிரதிபலன் இருக்க போகுது"
"ஆமா பலர் படிப்பாங்க, நல்லா இருக்குன்னு புகழ்வாங்கன்னு தானே எழுதறே"
"ஆமா அப்படியே நான் எழுதினை படிச்சி..... போப்பா ஆனாலும் எழுதாமா இருக்கேனா"
"பின்னா ஏன் பின்னூட்டம் வரலைன்னு புலம்பற இரண்டு நாளைக்கு முன்ன கூட எழுதறதை நிறுத்த போறேன்னு அந்த பதிவர்ட்ட ஏன் சொன்னே"
"அப்படி எல்லாம் ஒன்னுமில்லை. அவர் சொன்னது போல எழுத்து ஒரு ஆசுவாசம், இளைப்பாறால் வடிகால்"
"ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, அப்படின்னாலும் நான் சொன்ன கருத்தை தானே நீயே சொல்ற ஆசுவாசும், வடிகால் இந்த தேவைக்காக தானே எழுதிட்டு இருக்கே"
"அப்படி சொல்ல முடியாது, சரி என்னை விடு என் எழுத்துக்கு, என் வளர்ச்சிக்கு எவ்வளவு பேர் பிரதிபலன் இல்லாமல் உதவறாங்க"
"எங்கே சொல்லேன் பார்ப்போம்"
"குறுந்தொகை உவமைகள் வேணும் என்றதும் உடனே தந்து உதவிய சித்தார்த் காயத்ரி, படிம கவிதைகள் தேடி தந்த நதியலை, எழுத்து பிழைகளை களைந்த மஞ்சூர் அண்ணா, முத்துவேல், கடவுளர் பத்தி விளக்கம் தந்த கீதாம்மா, திவ்ய ப்ரபந்தம் மற்றும் விளக்கங்கள் அளித்த பாலாண்ணா,நற்றிணை பாடலுக்கு விளக்கம் தந்த இர.வாசுதேவன் அய்யா மேலும் ஊக்கம் அளித்த பல பேர் இவங்க எல்லாம் என்ன பலன் பார்த்து எனக்கு உதவி செய்தார்கள்"
"அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும், ஒரு வேளை இதெல்லாம் அவர்களுக்கு தெரியும் என்று காட்டி கொள்ள தான்"
"அடங்கு, அவர்களுக்கு இதெல்லாம் அவர்களுக்கு தெரியும் என்று உலகத்துக்கே தெரியும் அது காரணம் இல்லை"
"அப்ப நீ சொல் என்ன காரணம்"
"அவர்களுடைய ஆத்மதிருப்திகாக உதவி செய்கின்றார். இதில் என்னிடம் இருந்து எந்த பலனும் எதிர்பார்ப்பில் இல்லை இவர்களிடம்"
"அப்ப நீ என்ன செய்ய போறே"
"ம்ம் நீ பாரு என்ன செய்ய இருக்கேன்ன்னு"
அன்பு மட்டுமே உருவான, அன்பால் மட்டுமே நிறைந்த, நல்ல உள்ளங்களே
நதியலை, சித்தார்த் காயத்ரி, மஞ்சூர் அண்ணா, கீதாம்மா, முத்துவேல், நர்சிம், அனுஜன்யா, லஷ்மண், நிலாரசிகன், ஜ்யோவ்ரம் சுந்தர், என்றென்றும் அன்புன்டன் பாலா மற்றும் பலர் உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். நன்றிகள் கோடி சமர்பிக்கின்றேன். நீங்கள் இல்லையென்றால் மின்னல் வெறும் லாவண்யா மட்டுமே.உங்களால் மட்டுமே என் எழுத்து சாத்தியம் ஆயிற்று.
நல்லா இருக்கு.பழைய எழுத்துக்களும் கூட.
ReplyDeleteஆனா knee jerk எமோஷனை விட்டுவிட்டு சாதாரணமாக இருக்கலாமே!
துருத்திக்கொண்டு நிற்கிறார் போல் ஒரு தோற்றம்.
வாங்க கே.ரவிஷங்கர்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
எனக்கு "knee jerk" என்ற டெக்னிக் எல்லாம் தெரியாது.
இங்கே நன்றியை நவில்திருப்பது என் அடிமனதின் எண்ணமே.
துருத்திக்கொண்டு தெரியும்படி உரைத்திருக்கின்றேனா எனக்கு விளக்கவில்லை.
பின்னூட்டத்தில் smily மட்டும் போடுவோர்க்கே நன்றி சொல்லிக்கொண்டு தானே இருக்கின்றோம்.
அப்படி இருக்க தன் நேரம் காலத்தை ஒதுக்கி எம் போன்றோர் எழுத தேவைப்பட்ட கருத்தையும், எழுதி அனுப்பினால் பிழைகளை களைவதோடு வடிவமைக்கவும் உதவும் உள்ளங்களுக்கு உளமாற நன்றி கூடவா உரைக்க கூடாது.
ஓ ஒருவேளை இத்தனை பேரா என்ற எண்ணம் வருமோ? இங்கே கோடிட்டது இந்த ஒரு வார காலத்தில் எனக்கு உதவியோர்களை பற்றி. இன்னும் சொல்லாமல் விட்டவர்கள் சில நூறுகளை தண்டலாம். அதில் ஒருவர் நீங்களாக கூட இருக்கலாம். :)
நன்றிக்கு நன்றிங்க.
ReplyDeleteஆசையை விட வேண்டுமென
ReplyDeleteஆசை பட்டார்,
புத்தர்.
அவருக்கே அப்டின்ன , நம்மை போன்றோர் எதிர் பார்ப்பு இல்லாத எந்த செயலையும் செய்வது கடினமே. ஆனால், நம் எதிர் பார்ப்புகள் மற்றவரை பாதிக்கும் விதத்தில் தான் , நம்முடைய செயல்கள் வித்தியாச படும்.,
நன்றி உங்கள் பதிலுக்கு.என்னுடைய
ReplyDeleteஉணர்வு அப்படி.உங்கள் உணர்வு இப்படி. அவ்வளவுதான்.நத்திங் சீரியஸ்.
There is no such thing as a free lunch என்பதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம்.
இனாம் என்று எதுவும் கிடையாது.எதற்கும் ஒரு விலை உண்டு.இப்பொழுதோ,நாளைக்கோ,
பின்னொரு நாளிலோ அந்த இனாம்(free lunch)க்கு விலை கொடுப்பீர்கள். உதாரணம்:
1.ஹாப்பி அவர் டிரிங்க்ஸ்2.ஓட்டுக்கு லஞ்சம் 3.ரெண்டு வாங்கினால் ஒன்று free4.கிரெட்டி கார்ட் பாயிண்ட்ஸ்
எல்லாம் hidden cost. cost to you only.என்பதுதான் சித்தாந்தம்.
ஆதி நாளில் அமெரிக்காவின் barகளில்
ஒரு டிரிங்க வாங்கினால் ஒரு free luch என்று வைத்து விற்பனை செய்து
வியாபாரத்தைப் பெருக்குவார்கள்.
நல்லவர்களுக்கு நன்றி கூறுவது நற்றமிழர் பண்பு - தவறில்லை. இக்காலத்தில் உதட்டின் நுனியிலிருந்து நன்றி கூறுகின்றனர். அது போல் இல்லாது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து கூறுகிற நன்றி உண்மையிலையே உன்னதமானது.
ReplyDeleteநல்வாழ்த்துகள் மின்னல்