"காத்திருத்தல் வரம், காத்திருத்தல் தவம், காத்திருத்தல் சுகம்" இப்படி வைரமுத்து சொல்லி இருக்காரு. எங்காவது எதற்காவது காத்திருக்க தான் செய்கின்றோம் அது ரெசனில்
மண்ணெண்ணை வாங்கவோ அல்லது வாழ்க்கை புரட்டி போடும் நேர்முக தேர்வு வளாகத்திலே. வெற்றுகாகித்தின் முன் வார்த்தைகளுக்கு காத்திருக்கும் கவிஞன் போல எப்போதும்
எங்காவது ஒரு காத்திருத்தல் இருக்கத் தான் செய்கின்றது. இங்கே தொகுக்கப்பட்டது சில் காத்திருத்தலை சார்ந்த கவிதைகள்
காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்
பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே
இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதுவும் இல்லை
- மனுஷ்ய புத்திரன்
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது
-கல்யாண்ஜி
மேலும் அய்யனார் மற்றும் முபாரக்கின் கவிதைகளும் காத்திருத்தலை வித்தியாசமாக எடுத்துரைத்துள்ளன. முபாரக் கவிதையை ஜமலான் அவர்கள் முன்னமே வலைச்சரத்தில் சிலேகித்துள்ளார்.
//காத்திருத்தல் வரம், காத்திருத்தல் தவம், காத்திருத்தல் சுகம்" இப்படி வைரமுத்து சொல்லி இருக்காரு.//
ReplyDeleteகாத்திருத்தல் வேலைவெட்டியில்லாத் தனம்னு எங்க ”பெரியம்மா” சொல்லி இருக்காங்க. :)
//வெற்றுகாகித்தின் முன் வார்த்தைகளுக்கு காத்திருக்கும் கவிஞன் போல எப்போதும்//
ReplyDeleteஎந்தக் கவிஞன் வெற்றுக் காதிகத்தின் முன் காத்திருக்கிறான். பழய கவிதைகளைப் படித்து காப்பி தான் அடிக்கிறான். :)
//பிரிவின்
ReplyDeleteமுதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே//
பிரிவு என்ன பெட்ரோலா கற்பூரமா? ஆவியாவதற்கு? :)
\\உன்னுடைய கைக்கல் பட்டு
ReplyDeleteஉடைந்தது
கண்ணாடிக்குளம். \\
அருமை ...
பொதுவாக எனக்கு சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மீதாக உள்ள கவர்ச்சி கவிதைகள் மீது செல்வதில்லை. எப்பொழுதாவதுதான் கவிதைகளை வாசிப்பேன். கல்யாண்ஜியின் கவிதை அருமையிலும் அருமை.
ReplyDeletekaththiruppathu oru sugamthaan
ReplyDeleteகாத்திருத்தல் என்பது ஒரு வகையான சுகம் தான் - எதற்காக என்பதனைப் பொறுத்தது அது.
ReplyDeleteகண்ணாடிக்குளம் கல் பட்டு சிதறியதை கல்யாண்ஜீ அழகாக விவரித்திருக்கிறார்.
நல்ல அறிமுகங்கள் இரண்டு
நல்வாழ்த்துகள்
சஞ்சய் காந்தி வாழ்க.
ReplyDeleteநன்றி நட்புடன் ஜமால்
நன்றி கிருஷ்ண பிரபு நீங்க சொல்றது சரி தான்.
வாங்க நாகேந்திர பாரதி கருத்துக்கு நன்றி.
நன்றி சீனா சார்.