ஒருவர்க்கு தன் கருத்தை விற்பனை செய்ய நினைக்கும் யாவரும் தன் கருத்தை எத்தனை எளிமையாக்க வேண்டுமோ அத்தனை எளிமையாக்க வேண்டும். அல்லது யாரிடம் விற்பனை செய்ய வேண்டும், அவர்க்கு புரிந்த விசயத்தைச் சொல்லி அதோடு இணைத்து இதைச் சொல்ல வேண்டும். இது பெரிய வியாபார தந்திரம். இந்த தந்திரத்தைத்தான் அந்தக்காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பல கவிதைகளில் உவமை கூறி விளக்கி உள்ளனர்.
"தொட்டணைத்தூறும் மணற்கேணி" போல சங்க காலத்தின் குறுந்தொகையிலும் சரி கம்ப ராமாயணத்திலும் சரி உவமை கொட்டி கிடக்கும். இது அவர்களின் ரசனையும் புத்தி கூர்மையும் வெளிபடுத்துவது போல இருக்கும். நான் இங்கே வியக்க வந்தது ஒரு வேறு நூற்றாண்டில் வாழும் கவிஞர்கள் ஒரே மாதிரி எப்படி சிந்தனை செய்தனர் என்று தான்.
''பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இரும்கழி ஒதம் மல்குதொறும்
கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்'' (குறுந். 9)
என்னும் பாடல் வரிகளில் திரண்ட காம்புகளை உடைய நெய்தல் மலரானது பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. மிகுந்த மீன்களும் காணப்படும் இக்குளத்தில் வெள்ளம் பெருகும்போதெல்லாம் பெரிய நீர்ச்சுழியில் சிக்கும் நெய்தல் மலர்கள் வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கின்றன. இக்காட்சியானது குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் போன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
மேலும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய,
''தாரைப் பூத்த தடாகத்திலே - முகத்
தாமரை தோன்ற மூழ்கிடுவாள்''
இந்த இரண்டு உவமைகளை டிராஜேந்தரும் "தடாகத்து மீன் இரண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ" என்ற திரைபாடலோடு ஒப்பிட இயலும். மேலும்
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.
-பரணர்.
உயர்ந்த மரத்தில் இருக்கும் பெரிய தேனடையை காணும் முடவன் தன் கைகளை வளைத்து தேனடையை சுட்டி நக்குவதை போல, அவரை சேர இயலாவிடின், அவரை கண்டுக்கொண்டிருப்பதே என் மனதுக்கு இனிதாக இருக்கும் என்ற குறுந்தொகை பாடல்
தாமரையின் "அலைகளில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்" அழகான படிமத்தோடு (படிமம் பற்றிய விளக்கமாக பின்னொரு பதிவில்) ஒப்பிடவல்லது. இந்த உவமையில் எத்தனை அழகான சோகம், அழுத்தமான உணர்வு. கொஞ்ச தூரத்திருந்து பிடித்தவர் இருத்தலை உணர்ந்தபடி அவர்களின் நினைவில் மட்டும் வாழ்தல் கொடுமையான விசயம் ஆண்டாள் முதல் இந்த கால அழகிகள் வரை பலரும் இந்த மடைமையில் இருக்கத் தான் செய்கின்றனர்.
காயத்ரி (கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல) மற்றும் நர்சிம் (குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போல) அவர்களின் பதிவில் கூறப்பட்டு இருக்கும் உவமை பற்றிய வியப்பு என்னை கவர்ந்தது. எனது ஒரு கட்டுரை சிறைவாழ்வில் வரும் உவமை(அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல) கூட மிக அருமையானது.
மிக சமீபமாக நான் ரசித்த உவமை நான் கடவுள் பட பாடலில் வரும்
"ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?"
வியப்புகள் தொடர்கின்றன.
//ஒருவர்க்கு தன் கருத்தை விற்பனை செய்ய நினைக்கும் யாவரும் தன் கருத்தை எத்தனை எளிமையாக்க வேண்டுமோ அத்தனை எளிமையாக்க வேண்டும்.//
ReplyDeleteமுதலில் இதை தமிழில் புரியற மாதிரி மொழி பெயர்க்க வேண்டும். :)
//குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் போன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார்//
ReplyDeleteஅப்போ இருந்து இப்போ வரைக்கும் இப்டி பச்சப் பொய்கள் சொல்றதை யாரும் விடலை.. :((
//காயத்ரி (கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல) //
ReplyDeleteகாயத்ரியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :((
காந்தி, ஓடிப் போய்டு.. :))
வியப்பாய் தான் இருக்கின்றன இந்த உவமைகள்.
ReplyDeleteநிறையபடிக்கிறீங்க. ஆர்வத்தோட அலசுறீங்க. நல்லா புரின்சுக்கிறீங்க.ம்ம். பொறாமையா இருக்குது.
ReplyDeletearumai
ReplyDeleteமின்னல்..உவமைக்கு நீங்கள் கூறியிருக்கும் உவமை அருமை..(வியாபாரம்தான்)
ReplyDeleteமிக நல்ல விளக்கங்கள்..
காயத்ரியின் அந்தப் பதிவு.. மிக அற்புதமான வார்த்தைகளைக் கொண்டு விளக்கப்பட்ட பதிவு.
அந்த நான் கடவுள் மேட்டர்.. அதுப் பொருட்பிழை.. ஆய்வுகள் சொல்வது : கண்கள் தெரியாதவர்கள் கனவு காண இயலாது(பிறவியிலேயே)
தொடருங்கள்..
அழகான இடுகை - அருமைஇ அருமை. உவமைகள் பற்றிய விளக்கங்கள் அருமை.
ReplyDeleteசங்க காலத் தமிழ் புரிய வேண்டும். க்டினம்தான்.
நல்வாழ்த்துகள் மின்னல்
மொக்கைக்கு நன்றி சஞ்ஜய்
ReplyDeleteநன்றி நட்புடன் ஜமால்
முத்துவேல் வேணாம் விட்டுங்க அழுதுறுவேன்.
வாங்க நாகேந்திர பாரதி கருத்துக்கு நன்றி.
நர்சிம் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் பொருட்பிழையை உணர முடிந்தது. இருந்தாலும் அந்த உவமை அருமை. அதனால் தான் இட்டேன்
நன்றி சீனா சார்.