"நீரின்றி அமையாது இவ்வுலகு" என்ற அய்யன் திருவள்ளுவர் வாக்கிற்கிணங்க நீராலானதே இவ்வுலகும், உறவும் ஏன் நம் உடலும். நீராலானது என்பது ஏன் என்றால் நீருக்கும் நீராலானதற்கும் வடிவங்களில்லை. நீராலான உறவு அல்லது உலகென்றால் உறவுகளும் வடிவமில்லை. உணர்வுகளுக்கும் வடிவில்லை. காதல், இறையணர்வு எல்லாமே உருவமற்ற, வடிவமற்ற, வாசனையற்றைவை தாம். சுகுமாரனின் "நீரின்றி அமையாது" என்ற கவிதையும் இதைத் தான் சொல்கின்றது.
திடமென்றால் இயங்குவது சிரமம்
ஆவியென்றால் அடங்குவது கடினம்
எனவே
திரவங்களால் பிணைத்தேன் உறவுகளை
ஒவ்வொரு உறவுக்கும்
ஒவ்வொரு திரவம்
இந்தக் கவிதையை முழுமையாக வாசிக்க "பூமி வாசிக்கும் சிறுமி" என்ற சுகுமாரனின் கவிதைத் தொகுப்பை வாங்கலாம்.
இதே நீராலான ஒரு உறவினை ஒரு காதலை அழகாக சொல்லி இருக்கின்றார் மனுஷ்ய புத்திரன் தனது நீராலானது என்ற தொகுப்பில், நீராலானது என்ற கவிதையில்
வெறுப்பைப்போல திடமாக
வஞ்சகம் போல சந்தேகிக்க முடியாததாக
...
இல்லை
உனதிந்தப்
பிரியங்கள்
இந்தக் கவிதையையும் இன்னும் சில சிறந்த கவிதைகளையும் வாசிக்க நீராலானது கவிதைத் தொகுப்பை வாங்கலாம்.
இந்த இரு கவிதைகளும் தந்த இன்ஸ்பிரேசனால் நானும் ஒன்னு கிறுக்கி இருக்கேன்.
நம்ம கோதையும் திருப்பாவையில் இதே போல் நீராலான உறவாக கண்ணனை உருவகப்படுத்தி பாடி இருக்காங்க. ஆழிமழை கண்ணா என்று தொடங்கும் இந்த திருப்பாவை பாடலில் கண்ணனை கோதை மழை வடிவமாக நீராலானவனாக நினைத்து போற்றியுள்ளார். சாதரண தூரல் அல்ல ஆழி மழையென்றால் பருவத்தில் பெய்யும் பெருமழை. ஆழி என்றால் கடல் என்ற அர்த்தமும் கடலாய் போல் மழை அல்லது கடலாய் மழை என்பதையே ஆழிமழையென்றாள் கோதை. மழை என்பதே காதல் அல்லது புணர்ச்சி குறியூடு தானே?
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
இவை மட்டும் அல்லாமல் நற்றினையில் ஒரு பாடல்
நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே
"நீரின்றி அமையாத உலகம் போல நான் இன்றி அவர் இல்லை" என்ன ஒரு தெளிவும் நம்பிக்கையும் பாருங்க. இந்த நற்றிணை பாடலுக்கு உரிய விளக்கமும் பொழிப்புரையும் தர நேரம் இல்லாத காரணத்தால் இப்போ எஸ்கேப். யாராவது பின்னூட்டத்தில் தருவாங்கன்னு நம்பிக்கை தான்.
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDelete\\தொடங்கவுமில்லை முடிக்கவுமில்லை
ReplyDeleteதயங்கவுமில்லை தடங்கலுமில்லை
கலக்கமுமில்லை கலங்கலுமில்லை
நீராலானது நம் உறவு\\
அழகு குறுங்கவிதை.
/நீராலானது என்பது ஏன் என்றால் நீருக்கும் நீராலானதற்கும் வடிவங்களில்லை./
ReplyDeleteஇப்படியொருக் கண்ணோட்டம் உங்கமூலமாத்தான் இக் கவிதைகளை அணுகக் கிடைத்தது.
கலக்குங்க.
Neerottam
ReplyDeleteமிக நல்ல விளக்கம் மின்னல்.
ReplyDeleteஅழகான அருமையான விளக்கங்கள் - எளிதில் புரியாது - சற்றே உயர் நிலைக் கவிதைகள் - கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
ReplyDeleteநன்றி நட்புடன் ஜமால்
ReplyDeleteநன்றி முத்துவேல்.
வாங்க நாகேந்திர பாரதி கருத்துக்கு நன்றி.
நர்சிம் வருகைக்கும் நன்றி.
நன்றி சீனா சார்.
நற்றிணை பாடலுக்கு விளக்கம்
ReplyDeleteநம் காதலர் தவறாத வாய்மையுடையவர்!
அவர் நெடிய நாளிருக்கும் இனிமை உடையவர்!
அவர் எப்போதும் என் தோள்களைப் பிரிதல் என்பதை அறியாதவர்!
தேனீக்கள், தாமரை மலரிடத்துள்ள குளிர்ந்த மகரந்தங்களையும் உயர்ந்து நின்ற சந்தன மலரின் தாதினையும் ஊதி, அச்சந்தன மரக்கிளையின் உச்சியில் கொண்டுவைக்கும்
தேன், கொண்ட சிறப்பினைப் போல, நம் காதலரின் நட்பும் உயர்ந்தது! உறுதியானது!
தண்ணீரில்லாத உலகு அமையாதது போல, நாமின்றி அவரில்லை!
(அவர் பிரிந்தால்)நம் நெற்றியில் பசலை தோன்றும். அவ்வாறு தோன்றுகின்ற பசலைக்கு அஞ்சித் தடுமாற்றம் அடைவாரோ? அடையமாட்டார்!
"தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல "
என்னவொரு ரசனை.
நறு நுதல் தீம் தேன் என்னே அழகு