Monday, May 18, 2009

வலை அறிமுகம்

தற்சமயம் என்னை வளர்ப்பது இந்த வலையுலகமே. நான் நிறைய கற்றது, இன்னும் கற்க வேண்டியது எல்லாமே கொட்டிக் கிடக்கிறது இந்த வலையுலகில். என்னை கவர்ந்த சில வலைப்பதிவர்களை இங்கே அறிமுகம் செய்ய நான் பெரும் பேறு கொள்கின்றேன்.

கூர்தலறம் என்ற பெயரிலேயே வித்தியாசம் கொண்ட இந்த பதிவர் மிகச் சிறந்த கவிதைகளைப் படைப்பவர். இவரோடு கவிதை உரையாடுதல் மிக சிறந்த அனுபவம்.

http://tkbg.wordpress.com/ or http://tkbgandhi.blogspot.com/

தூறல்கவிதைகள் என்ற இந்த வலைப்பதிவர் பற்றி அனேகம் பேர் அறிந்திருக்க கூடும் எனினும் என்னை கவர்ந்த ஒரு சிறந்த பதிவர் இவரும் ஆவார்.

http://thooralkavithai.blogspot.com/

லஷ்மிசாகம்பரி மிக அழகான மொழியில் அருமையான செம்மையான கவிதைகளை தருவதில் இவருக்கு நிகர் இவரே

http://sahambari.blogspot.com

என்னுடைய மிக சிறந்த தோழி. என்னுடைய வளர்ச்சியின் முக்கிய பங்கு வகிப்பவள். நவீன கவிதைகள் எழுதுபவள். (கண்டிப்பா பொழிப்புரை இல்லாமல் இவள் கவிதைகள் புரிவதே இல்லை)


http://nathiyalai.wordpress.com/


சகாரா தென்றல், தென்றல் போன்றே இருக்கும் இவள் கவிதைகளும் புனைவும் அழகியல் மொழி இவள் விரல்களில் அசைந்தாடும்.


http://saharathendral.blogspot.com/


மேலும் ஸீ என்று ஒரு தோழி மிக அருமையாக கதை எழுதுவார். இவருக்கு வலைப்பூ கிடையாது. sristories@gmail.com இந்த மடல் முகவரிக்கு மடலிட்டு அவர் கதைகளை வாங்கி படிக்கலாம்.


இதுவரை சொன்ன பதிவர் எல்லாம் ஒருவேளை ஏற்கனவே எல்லோருக்கும் அறிமுகம் ஆனார்களாக கூட இருக்கலாம். இனி வருபவர்கள் பற்றி...

சரி இதோ இந்த பதிவரை பத்தி நான் சொன்னா அது அந்த சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிறது போல

http://mathibama.blogspot.com/

ஆமாங்க திலகபாமாவே தான். அந்த சூரியாளை தூரத்திருந்து ரசிக்கும் சிறுமி நான்.

http://holyox.blogspot.com/

உலகின் புதிய கடவுள் பெண்ணியவாதி இவருக்கு தெரியாத விசயங்களே கிடையாதோ என்று எத்தனையோ முறை வியந்திருக்கின்றேன். இலக்கியம், கவிதை, கட்டுரை, சிறுகதை, துப்பறியும் கதை, சமூக சிந்தனை, பொருளாதாரம் எதை எடுங்கள் இவர் சொல்லும் விதம் தனித்துவம்.


http://angumingum.wordpress.com/

இவரை பத்தி நான் சொன்னா அது குறுந்தொகைக்கே உவமை சொல்வது போல.

http://thaaragai.wordpress.com/

இவர் தீவிர இலக்கியவாதி. இவரை வழிநடை குறிப்புகள் மிக அவசியம் அனைவருக்கும் உதவும் காவியங்கள்.

17 comments:

  1. கவிஞர்களின் அனிவகுப்பா

    அவசியம் படிப்போம்.

    நன்றி கவிஞரே!

    ReplyDelete
  2. சகாரதென்றல் மட்டும் அறிமுகம் உண்டு

    ஈழத்து தோழர் அவர்.

    மற்றவை படித்தேன் பின்னூட்டியிமுள்ளேன்.

    ReplyDelete
  3. எல்லாமே கவிதைகளா....படிக்க முயற்சி செய்யுறேன்!

    ReplyDelete
  4. ந‌ன்றி ந‌ட்புட‌ன் ஜமால் ம‌ற்றும் நிஜ‌மாவே ந‌ல்ல‌வ‌ன்.

    எல்லாம் க‌விதையும் க‌விதை சார்ந்தும் தான்.

    என்னுடைய‌ அக்கா பெக‌ரிக‌னில் இருப்ப‌வ‌ர், அவ‌ருடைய‌ முத‌ல் ப‌டைப்பு அது க‌தையாக‌ நினைத்து தான் எழுதி இருக்கா. கொஞ்ச‌ம் க‌ட்டுரை போல‌ வ‌ந்திருக்கு சில‌ இட‌ங்க‌ளில். ஆயினும் அந்த‌ வ‌லைப்பூவில் நிறைய‌ ந‌ல்ல‌ க‌தை இருப்ப‌தாக‌ சொன்னா. ப‌டிங்க‌ உப‌யோக‌மாக‌ இருந்தால் ந‌ல்ல‌து.

    http://amutha.wordpress.com/2009/03/26/common-short-stories/

    என்னுடைய‌ அக்காவின் பெய‌ர் வ‌னிதா

    ReplyDelete
  5. :-))

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் மற்றும் சுட்டிகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. வித்தியாசமான முறையில் கதை சொல்லியிருக்காங்க அக்கா.

    பதிவிடாமல் பின்னூட்டம் வழி கதை.

    ReplyDelete
  7. நல்ல அறிமுகத்திற்கு நன்றி..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வலைச்சரம் ஆசிரியர்..

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  9. பதிவர்களின் அறிமுகம் அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  10. வாங்க‌ சென்ஷி. மீண்டும் வாங்க‌.

    ந‌ன்றி ந‌ட்புட‌ன் ஜ‌மால். அக்காவிட‌ம் க‌ருத்தை சொல்லிட‌றேன்.

    வாங்க‌ வ‌ண்ண‌த்துபூச்சியார். ந‌ன்றி மீண்டும் வாங்க‌.

    வாங்க‌ ஞான‌ சேக‌ர‌ன். மீண்டும் வாங்க‌.

    வாங்க‌ கிருஷ்ண‌ பிர‌பு. மீண்டும் வாங்க‌.

    ReplyDelete
  11. //தற்சமயம் என்னை வளர்ப்பது இந்த வலையுலகமே//

    நாங்க என்ன வண்டலூர் ஜூ ந்னா சொன்னோம்? :)

    ReplyDelete
  12. //வேண்டியது எல்லாமே கொட்டிக் கிடக்கிறது இந்த வலையுலகில்//

    ஆமா.. இது கார்பொரேஷன் குப்பை தொட்டி பாருங்க. ;)

    ReplyDelete
  13. //இவரோடு கவிதை உரையாடுதல்//

    கவிதையா உரையாடலா? ஏன் குழப்பறிங்க? :(

    ReplyDelete
  14. அன்பின் மின்னல்

    அருமை அருமை - பதிவர்கள் அறிமுகம் அருமை - அனைவருமே கவிஞர்கள் - பலராலும் அறியப்படாதவர்கள் - நன்று நன்று

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  15. நன்றி ஜமால் அவர்களே,
    நீங்கள் எந்த கதை படித்தீர்கள்? என்னுடையது சிறுகதை பிரிவில் முதல் கதை “தனியே தன்னந்தனியே” அதில் இப்போது இரண்டவதாக ஒரு கதையும் வேறு ஒருவர் எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
  16. மேலும் ஸீ என்று ஒரு தோழி மிக அருமையாக கதை எழுதுவார். இவருக்கு வலைப்பூ கிடையாது. sristories@gmail.com இந்த மடல் முகவரிக்கு மடலிட்டு அவர் கதைகளை வாங்கி படிக்கலாம்.

    இவ‌ங்க‌ மின்ம‌ட‌ல் முக‌வ‌ரி த‌வ‌றாக‌ அளிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. சரியான‌ முக‌வ‌ரி shree.stories@gmail.com

    த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌

    ReplyDelete
  17. ”கூர்தலறம் என்ற பெயரிலேயே வித்தியாசம் கொண்ட இந்த பதிவர் மிகச் சிறந்த கவிதைகளைப் படைப்பவர். இவரோடு கவிதை உரையாடுதல் மிக சிறந்த அனுபவம்.” - நன்றி லாவண்யா, வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்ததற்க்கு. உங்களின் கவிதை ரசனை மிகவும் அழகானது. உங்களுக்கு என் கவிதைகள் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    -TKB காந்தி

    ReplyDelete