என்னை பத்தி அதிகமா சொல்லிக்க ஒண்ணுமில்லைங்க.
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து திருமணத்திற்கு பின் தலைநகர் தில்லி அருகே உள்ள ஒரு நகரத்தில் வசிக்கிறேன்.
கொஞ்சம் படிச்சி இருக்கேன். அதனால் ஒரு நல்ல வேலையில் இருக்கேன்..
வாசிக்க ஆரம்பிச்சி ஏழு வருடங்களாகுது. கடந்த ஐந்து வருடங்களாகத்தான் ஏதோ கிறுக்கிகிட்டிருக்கேன். மேலும் அதிகமா எழுதியும் கிழிக்கலை. வாசிக்க ஆரம்பிக்கிற ஒவ்வொருத்தரும் முதலில் தொடுவது கவிதை தளத்தை தான். நான் இன்னும் அதை விட்டு இன்னும் வெளியே வரவில்லை. நான் எழுத ஆரம்பித்தது முத்தமிழ் என்ற இணைய குழுமத்தில். அங்கே தமிழ், இலக்கியம், கவிதை இன்னப்பிறவென்றும் பலதும் அலசப்படும். அங்கே கவிதையின் பன்முக அலசலாக சில கட்டுரைகள் எழுதி அதில் சில தமிழோவியத்திலும் திண்ணையிலும் பிரசுக்கப்பட்டன. சரியா ஒரு வருடத்திற்கு முன் தோழி ஒருத்தி தந்த ஆலோசனைப்படி வலைப்பூ ஆரம்பித்தேன்.
அப்படி ஆரம்பித்த வலைப்பூவிலிருந்து ஒரு கவிதை இந்த வலைச்சரத்தில் இடப்பட்டது. அதற்கு முன்பே ஜமலான் அவர்களால் வலைச்சரத்தில் கிடைத்த கவிதைகளும் வலைப்பூ அறிமுகங்களும் ஏராளம். அந்த வலைச்சரப் பதிவில் ஒரு கவிதை விடாமல் எல்லா கவிதைகளையும் வாசித்து பயனடைந்தேன். அதோடு மட்டும் அல்லாமல் அந்த வலைப்பூக்களுக்கு அடிக்கடி விஜயமும் செய்ய ஆரம்பித்தேன்.
சில மாதங்களுக்கு முன் ஷைலஜா அக்காவும், சில வாரங்களுக்கு முன் பரிசல் பின் நர்சிம் ஆசிரியர்களாக இருந்த போது நாமும் ஒரு நாள் வலைச்சர ஆசிரியர் ஆவோமா என்று நினைத்த அடுத்த நொடியே ஆமா நாமெல்லாம் என்னத்தா எழுதி கிழிச்சிட்டோம் ஆசிரியர் பொறுப்பு ஏற்குமளவு என்றும் நினைத்தேன். ஆச்சரியம் பாருங்க சீனா சார்கிட்ட இருந்து கடந்தவாரம் மடல் வந்தது ஆசிரியர் பொறுப்பேற்கும்படி அப்படிதாங்க இங்கே இப்போ. வாங்க எல்லோரும் வசமா சிக்கிட்டீங்க. விடுவேனா?
முதல் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteபடிச்சிட்டு வருகிறேன்!
ReplyDelete/என்னை பத்தி அதிகமா சொல்லிக்க ஒண்ணுமில்லைங்க./
ReplyDeleteரைட்டு..:)
/
ReplyDeleteகொஞ்சம் படிச்சி இருக்கேன். அதனால் ஒரு நல்ல வேலையில் இருக்கேன்../
கொஞ்சம் படிச்சாலே நல்ல வேலை கிடைக்குதா...:)
அழகிய கோலங்கள்
ReplyDeleteஇல்லத்தின் வாசலைத் தாண்ட
இயலாவிட்டாலும்
இதயத்தில்
இடம் பிடித்தே விடும்
அப்படியே
உங்கள் கவிதையும்
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
/வாங்க எல்லோரும் வசமா சிக்கிட்டீங்க. விடுவேனா?/
ReplyDeleteஉங்க பதிவு பக்கம் வராம எஸ்கேப்பு ஆன நாங்க இங்க மட்டும் சிக்கிடுவோமா என்ன????
வாழ்த்துக்கள். கலக்குங்க. :-)
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteவாம்மா மின்னல்!!!!
ReplyDeleteஅன்புடன் அருணா
மின்னலம்மாவோட அக்கா நான். அவ கொஞ்சம் பொய் நிறைய உண்மை சொல்லி இருக்கா.... நிறையதான் படிச்சிருக்கா..... இதுக்கு பேர்தான் தன்னடக்கமா?
ReplyDeleteஒரு வருஷ்மா வலைபூ வச்சிக்கிட்டு நேத்துதான் என்கிட்ட சொல்றா, இது நியாயம சொல்லுங்க தோழிகளே
//என்னை பத்தி அதிகமா சொல்லிக்க ஒண்ணுமில்லைங்க.//
ReplyDeleteஅதென்ன அதிகம்? ஆனாலும் நக்கலு.. :))
//தோ கிறுக்கிகிட்டிருக்கேன்//
ReplyDeleteட்ரைவ் பண்ணா ட்ரைவர்.. கிறுக்கினா? :))
//ஆச்சரியம் பாருங்க சீனா சார்கிட்ட இருந்து கடந்தவாரம் மடல் வந்தது//
ReplyDeleteகாசு குடுத்து வாங்கின மேட்டர் எங்களுக்குத் தெரியாதாக்கும்? :)
வாங்க நட்புடன் ஜமால்.
ReplyDeleteவாங்க நிஜமாவே நல்லவன்.
வாங்க திகழ்மிளிர் இப்போது எல்லாம் நம்ம கட பக்கம் வரதில்லை என்னாச்சு?
வாங்க மை ஃபிரண்ட்
வாங்க நர்சிம்.
வாங்க அன்புடன் அருணா.
வாக்கா. கொஞ்சம் அடக்கி வாசிக்கா.
வாங்க சஞ்ஜய் காந்தீஈஈஈஈ
எல்லோருக்கும் நன்றி. இந்த வாரம் முழுதும் உங்க ஒத்துழைப்பை நாடுகின்றேன்.
ஆகா ஆகா - அறிமுகம் அருமை. தில்லியில் இருந்து மின்னல் ஒளிர்கிறது. முத்தமிழில் ஆரம்பித்து, தமிழோவியம், திண்ணை என்ற வழியில் தற்போது வலைப்பூவினில் கலக்குகிறது மின்னல்.
ReplyDeleteஅக்காவினிற்கே தெரியாத மின்னலின் வலைப்பூ
ஆசிரிய பொறுப்பு கிடைக்குமா என நினைத்த உடனே பொறுப்பு வருகிறது. மின்னலின் திறமைக்குப் பாராட்டுகள்.
எல்லோரும் மின்னலின் பிடியில் வசமாகச் சிக்கிக் கொண்டோம். பார்ப்போம் ஒரு வாரத்திற்கு - கோடையில் குளிர் மழை பெய்விக்கும் மேகங்களுடன், மின்னல், இடியுடன் வருக வருக
நல்வாழ்த்துகள்
நீங்க மூத்த மூத்த மூத்த பதிவர் போலயே!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஆசிரியராய் கலக்க!
வாழ்த்துக்கள் மின்னல் !!!
ReplyDelete