கவிஞன் உருவாக்கப்படுவதில்லை அவன் உருவாகின்றான் தன்னில் இருந்தே மற்றொன்றாய் எனும் வைரமுத்துவின் வரிகளுடன் இன்றைய அறிமுகம் படித்ததில்பிடித்த சில கவிதைகள்.....
ஷீ நிசி தன்னுடைய நிலவு களவு போனது மூலம் அனைவரின் மனதை நிறைத்த கவிஞர்.இன்றும் தூக்கத்தில் எனை எழுப்பி கேட்டாலும் என்னால் கூற முடியும் அந்த கவிதையின் வரிகளை !!!!!!
கரையோர கனவுகள் ஸ்ரீ மதியின் அம்மாவின் வாசனைஇன்னும் என் மனதை விட்டு அகலவில்லை!!!!!
திகழ்மிளிராரின் ஓசை ஒத்தப்பாக்கள் +காதலி
மேலும் படிக்க சுட்டியை தட்டுங்கள்....
சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்
புதிய அறிமுகங்கள்
நிலாமகள் அப்பச்சி காவியத்தை வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய பதிவர் ஆரம்பித்த வேகத்திலேயே இத்தனை உணர்வுபூர்வ கவிதை இயற்றிய இவரது திறமை கண்டு அதிசயிக்கிறேன் !!!!!!
கருவாச்சி காவியங்களும்
கள்ளிக்காட்டு இதிகாசமும் ஆளும்
இந்த பூமியில் நான் படைக்கிறேன்
என் தாத்தனுக்காக ஓர் அப்பச்சி காவியம்....
மேலும் படிக்க அவர் தளத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
சக்திகுமார் என் நண்பர்,சகோதரர் எனக்கு கவிதை எழுதும் முறையை சொல்லிக்குடுத்தவர் இப்பொழுது தான் தனக்கு என வலைப்பூவை ஆரம்பித்திருக்கின்றார் அவர் மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!!
இருள் சூழ்ந்த உலகில் அடிமைப் போல்
கை கால்கள் மடக்கி
விண் எது? மண் எது? தெரியாமல்
பால்வெளியில் மிதப்பவன் போல்
தலைகீழாய்
புள்ளியாய் தோன்றி அவளையும்
அவள் பெரும் மகிழ்ச்சியும் தின்று
கொஞ்சம் கொஞ்சமாய் வளர
தொலைவில் சன்னமாய் கேட்ட சப்தம்
இன்று சப்தமாய் உள்ளுக்குள்ளே
அடைப்பட்டு கிடந்தாலும் இது சிறையல்ல
திரும்ப கிடைக்க பெறா வரம்
எட்டி உதைத்தாலும் எத்தனை வலி கொடுத்தாலும்
கட்டியனைத்து கொஞ்ச காத்திருக்கும்
அவள் முகம் காண இன்னும் சில நாட்கள்.....
மறவாதே கண்மணியே லோகு காதலின் வலி மிகு கவிதைகளை இவரின் வலைப்பதிவில் காணமுடியும் சில வரிகள் மட்டும் இங்கு
அழகான நிலவு துணையாய் இருந்தும்
அமிலம் ஊற்றியதை போல்
எரியும் என் இரவுகளை
என்ன செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.
உழவனின் உளறல்கள் கதை கவிதை என இரண்டும் இயற்றும் இவரின் சிறுகதை அழகு என்றால் கவிதையில் சொல்லடுக்கும் வார்தை அமைப்பும் அருமை !!!!!
ஒரு சிறு கவி உங்களுக்காக
யார்
விதைத்த விதைகளோ
யுகம் யுகமாய்
முளைக்காமலேயே
கிடக்கின்றன !
மேகமே
மேல் நோக்கியும்
கொஞ்சம்
பொழிந்துவிடேன் !
உழவர் மென்மேலும் விளைச்சல் பெற வாழ்த்துக்கள்
உழவர் மென்மேலும் விளைச்சல் பெற வாழ்த்துக்கள்
தமிழ்பிரியா காதலின்றிஅனைத்து வகை கவிதைகளையும் எழுதிக்கொண்டிருக்கும் புதுப்பெண்பதிவர் !!!!!
தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......
நான்காம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteநடத்துங்க நாலாம் நாளையும் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நான்காம் நாள் வாழ்த்துகள் சக்தி
ReplyDeleteவாழ்த்துகள் சக்தி, பதிவர்களின் அறிமுகம் அருமை....
ReplyDeleteநன்றி ஜமால் அண்ணா
ReplyDeleteநன்றி மயாதி
நன்றி சுரேஷ்
நன்றி ஞானசேகரன்
வலை பூக்களின் அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது... நான்காவது நாள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநான்காம் நாள் வாழ்த்துக்கள் சக்தி.
ReplyDeleteசிறுமிக்கு கூட திருமணம்
ReplyDeleteஇன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்
அருமை.
இருள் சூழ்ந்த உலகில் அடிமைப் போல்
ReplyDeleteகை கால்கள் மடக்கி..............
.........எட்டி உதைத்தாலும் எத்தனை வலி கொடுத்தாலும்
கட்டியனைத்து கொஞ்ச காத்திருக்கும்
அவள் முகம் காண இன்னும் சில நாட்கள்.....
சக்திகுமாரின் கவிதை - கருவறைக் காவியம்
அழகான நிலவு துணையாய் இருந்தும்
ReplyDeleteஅமிலம் ஊற்றியதை போல்
எரியும் என் இரவுகளை
என்ன செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.
வலியின் வரிகள் - அற்புதம்
யார்
ReplyDeleteவிதைத்த விதைகளோ
யுகம் யுகமாய்
முளைக்காமலேயே
கிடக்கின்றன !
மேகமே
மேல் நோக்கியும்
கொஞ்சம்
பொழிந்துவிடேன் !
உழவன் - சரியான பெயர்தான். விண்மீன் விதைத்து கவிதை அறுவடை
மொத்தத்தில், அறிமுகம் செய்த விதமும் மேற்கோள் காட்டிய கவிதைகளும் அருமை சக்தி
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
வாழ்த்துகள்
நான்காம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteun arimugangalum nalla iruku da
ReplyDeleteவாழ்த்துக்கள் / நல்ல அறிமுகம்
ReplyDeleteநான்காம் நாள் வாழ்த்துகள்!!
ReplyDeleteபதிவர்களின் அறிமுகம் அருமை....
ReplyDeleteநான்காம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...
ReplyDelete//கவிஞன் உருவாக்கப்படுவதில்லை அவன் உருவாகின்றான் தன்னில் இருந்தே மற்றொன்றாய் //
கவிஞர் வைரமுத்துவின் வரிகளோடு கவிஞ்ர்களின் அறிமுகமா...?
ஷீ-நிசி யின் கவிதைகள் மிகவும் எளிமையான
ReplyDeleteவார்த்தைகளுடன் வளமாய் வலம் வருபவை
அவரின் சில காதல் தூறல்களில்
நான் ரசித்த சில வரிகள்
//பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...
என் தேவதையே....
வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!//
வாழ்த்துக்கள் ஷீ-நிசி...
ஸ்ரீமதியின் கவிதைகளில் அனைத்தும் பிடிக்கும்
ReplyDeleteஎன்றாலும் நான் மிகவும் ரசித்த
துளிக் காதலில் ஒரு கவித் துளி
//அடை மழையில்
குடைப்பிடிக்கத் தெரியாத
குழந்தையெனத் திணறுகிறேன்
நீ முத்தம்
தரத்துவங்கியதும்....//
வாழ்த்துக்கள் ஸ்ரீமதி...
திகழ்மிளிர் (அழகான பெயர்) கவிதைகள்
ReplyDeleteபடித்திருக்கிறேன் என்றாலும் அவருடைய
அனேக கவிதைகள் வாசிக்கத் தவறி இருக்கிறேன்,
இனி அவரையும் தொடர்ந்து வாசிப்போம்...
வாழ்த்துக்கள் திகழ்மிளிர்...
மேலும் புதிய அறிமுகங்கள்
ReplyDeleteநிலாமகள்
சக்திகுமார்
லோகு
உழவன்
தமிழ்பிரியா
ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்...
அவர்களின் படைப்புகளையும் வாசித்து
அவர்களின் வலையில் கருத்துரைக்கிறேன்...
வலையில் வலை போட்டு கவி முத்துக்களை தேடித்
ReplyDeleteதருவதற்காக மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் சக்தி...
நான் சக்தி அவர்களின் அறிமுகத்திலா என்று எண்ணும்போது, ஆஸ்கர் வாங்கிய Pleasure எனக்கு! மிக்க நன்றி :-)
ReplyDeleteவாழ்த்திய S.A. நவாஸுதீன் அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்!
நன்றி தமிழரசி
ReplyDeleteநன்றி நவாஸ் அண்ணா
நன்றி சுப்பு
நன்றி காயத்ரி
நன்றி ரம்யா
நன்றி புதியவன் அண்ணா
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி உழவரே
வாழ்த்துக்கள் சக்தி
ReplyDeleteவலைச்சரத்திலேயும் எழுதிக்கொண்டு தன்னுடைய பதிவும் போடுறீங்க
புதியவர்கள் அறிமுகம் கலக்கல்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteதங்களின் அன்பிற்கு நன்றி தோழி
அன்புடன்
திகழ்
வாழ்த்துகள்
ReplyDeleteதங்களின் அன்பிற்கு நன்றி தோழி
அன்புடன்
திகழ்
நான்காம் நாள் வாழ்த்துக்கள் சக்தி
ReplyDeleteவாழ்த்துக்கள் நான்காம் நாளுக்கு
ReplyDeleteவலை பூக்களின் அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அபு அண்ணா
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்
நன்றி நசரேயன்
நன்றி கடையம் ஆனந்த்