Friday, June 5, 2009

உணர்வுகளின் வடிகால்








தமிழ்தாய்க்கு
கவிதை கீரிடம் அணிவித்தால்
கதைகளும் கட்டுரைகளும்
தமிழன்னையின் மகுடத்தில்
மேலும் சில ரத்தினக்கற்களை பதிக்கின்றது.....

கதைகளும் கட்டுரைகளும் மனித மனத்தின் உணர்வுகளின் வடிகாலாய் விளங்குகின்றது!!!!

சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திடுகின்றது!!!!

கவிதைகளில் சொல்ல முடியாதவற்றை மிக சிறப்பாய் கதைகளும் கட்டுரைகளும் சொல்லிவிடுகின்றது.....

நகைச்சுவை உண்ர்வு மிக்க கதைகள் படிக்கும் போது மனம் லேசாகின்றது....

சில பிரபல கதாசிரியர்கள்,கட்டுரையாளர்கள்!!!

ராஜேஸ்வரியின் ரசனைக்காரி

ஏனோ கவிதையின் மேல் இருக்கும் ஈர்ப்பு வலைப்பூவில் உள்ள கதைகள் மேல் எனக்கில்லை முதல் முறையாய் இவரின் மீனாட்சி அக்காவை படித்ததும் கனத்த மனதை சரி செய்ய சில நிமிடங்கள் தேவைபட்டதெனக்கு...


நசரேயனின் என் கனவில் தென்பட்டவை

இவரின் ரயிலில் மஞ்சள் அழகியுடன் படித்து முடிந்ததும் எழுந்த சிரிப்பலை அடங்க அதிக நேரம் தேவைப்பட்டது அத்தனை அருமையான நகைச்சுவை நிறைந்த கதை!!!!

ரம்யாவின் Will to Live
இவர் அதிகம் கதைகள் எழுதினாலும் இவரின் ஆதரவற்ற குழந்தைகளும்முதியவர்களும்!!! கட்டுரையை படித்தபின் நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என தோன்றியது சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரை!!!!!





பிரியமுடன் வசந்த்

புகைப்படம் மூலம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படைப்புகளுக்கு சொந்தக்காரர். இவரின் கொசுவின் கதை அருமை இவர் தளத்திற்கு சென்றவர்கள்
சிரிக்காமல் திரும்ப இயலாது!!!!



ஜெஸ்வந்தியின் மெளனராகங்கள்

புதுபெண்
கதாசிரியர் அழகான உணர்வுபூர்வமான கதைகளின் சொந்தக்காரர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!!





ஞானசேகரனின் அம்மா அப்பா

சமீபமாய்
தான் இவரின் கட்டுரைகளை வாசிக்கின்றேன் கையூட்டுக்கு எதிரான நெஞ்சே!! பொறுப்பதில்லை ஏன்??
படைப்பு
சற்றே நமை சிந்திக்க வைத்துவிட்டது!!!!!



முனைவர் இரா.குணசீலனின் வேர்களைத் தேடி

இலக்கியதரமான கட்டுரைகளை இன்றும் எழுதி வரும் இவரின் இந்த முயற்சி மிக மிக பாராட்டுக்குரிய ஒன்று இவரின்கட்டுரைகளில் நான் மிகவும் ரசித்தது புள்ளோப்புதல் எனும் கட்டுரையை...



வினோத் கெளதமின் ஜீலைகாற்றில்

இவரும் நாணல், பதின்மரக்கிளை போல் தனது வினோத் கெளதம் எனும் தளத்தை தொலைத்துவிட்டு மீண்டும் ஜீலைகாற்றில் எனும் புதிய தளத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றார் அழகான கதைகளும் கட்டுரைகளும் இவரின் சிறப்பம்சம்!!!!

32 comments:

  1. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நகைச்சுவை உண்ர்வு மிக்க கதைகள் படிக்கும் போது மனம் லேசாகின்றது....\\

    ஆம்!

    பல கவலைகளில் நம்மை மறந்து சற்றே சிரிக்க வைக்கும் நல் மருந்து

    ReplyDelete
  3. எனது பதிவினை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.........

    ReplyDelete
  4. ஐந்தாம் தின வாழ்த்துக்கள்

    அய்வா......

    இரண்டாவதுவாட்டி வலைச்சரத்துல

    நன்றிக்கா.......

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சக்தி

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் !!
    சக்தி!!

    ReplyDelete
  7. கவிதைகளில் சொல்ல முடியாதவற்றை மிக சிறப்பாய் கதைகளும் கட்டுரைகளும் சொல்லிவிடுகின்றது.....
    ///
    உண்மைதான்!! கதைக்கும் கட்டுரைக்கும் உருவங்கள் இல்லை!! எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம்!!

    ReplyDelete
  8. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் சக்தி...

    இன்று கதை ஆசிரியர்கள் மற்றும் கட்டுரை ஆசிரியர்களின் அறிமுகமா...?

    //தமிழ்தாய்க்கு
    கவிதை கீரிடம் அணிவித்தால்
    கதைகளும் கட்டுரைகளும்
    தமிழன்னையின் மகுடத்தில்
    மேலும் சில
    ரத்தினக்கற்களை பதிக்கின்றது.....//

    ம்...அழகு...

    ReplyDelete
  9. ரசனைக்காரி - ராஜேஸ்வரியின் - வலைப்பூ சென்றிருக்கிறேன் அவர் பதிவுகளை அதிகமாகப் படித்ததில்லை இனி படித்துப் பார்க்கிறேன்...

    வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி...

    ReplyDelete
  10. நசரேயனின் - என் கனவில் தென்பட்டவை - நான் விரும்பி வாசிக்கும் வலைப்பூக்களில் ஒன்று...அவர் எழுத்து முழுதும் சிரிப்பு நடை...அருமையான எழுத்தாளர்
    இப்போது தான் அவர் ”திருவிழா நாடகங்கள்” பதிவு படித்து கருத்துரைத்து வந்தேன்...

    வாழ்த்துக்கள் நசரேயன்...

    ReplyDelete
  11. Will to Live - ரம்யா - தன்னம்பிக்கையே தாரக மந்திரமாக கொண்டவர் ...இவர் வைகை புயலை என்றுமே கரை கடக்க விட்டதில்லை...உரையாடல்கள் முழுதும் நகைச்சுவை தொற்றி நிற்கும்...கவிதையிலும் நகைச்சுவையை அழகாக கலந்து விருந்து வைப்பார்...சமூகத்தின்மேல் அதீத அக்கறை கொண்ட அருமை தோழி...

    வாழ்த்துக்கள் ரம்யா...

    ReplyDelete
  12. பிரியமுடன் வசந்த் - எனக்குப் புதிய அறிமுகம்...அறிமுகத்திற்கு நன்றி சக்தி...

    ReplyDelete
  13. மெளனராகங்கள் - ஜெஸ்வந்தி - புதிய பதிவர் அழகான கதைகளை பதிவிடுகிறார்...

    வாழ்த்துக்கள் ஜெஸ்வந்தி...

    ReplyDelete
  14. அம்மா அப்பா - ஞானசேகரன் - இவரும் சமுதாயக் கருத்துள்ள கட்டுரைகளை அவருக்கே உரிய அழகிய நடையில் பதிவிட்டு நமக்குள்ளும் சமுதாய சிந்தனைகளை உணர வைத்து விடுகிறார்.

    வாழ்த்துக்கள் ஞானசேகரன்...

    ReplyDelete
  15. முனைவர் இரா.குணசீலன் மற்றும் வினோத் கெளதம் ஆகிய இருவரும் எனக்கு புதிய அறிமுகங்கள்...இனி இவர்களையும் வாசிப்போம்...அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  17. சக்தி வலைச்சரத்தில் எனக்கு ஒரு அறிமுகம் உங்களால் கிடைத்துள்ளது.

    இது மூன்றாவது முறை கிடைத்த பெரும் பாக்கியமா கருதுகின்றேன்.

    நன்றி தோழி. இதற்கு மேல் என்ன சொல்ல. சமீப காலமாகத்தான் நமக்குள் பழக்கம். அதற்குள் எனக்கு இப்படி ஒரு அறிமுகம் செய்யும் அளவிற்கு உங்கள் மனது இருக்கின்றதே அது மிகப் பெரியது.

    மறுபடியும் நன்றி நன்றி!

    மென்மேலும் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  18. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  19. வாழ்த்துகள்

    ReplyDelete
  20. வலைசரத்தில் பவனி வரும் நசரேயன், ரம்யா, ஞானசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. ஆசிரியர் சக்தி அவர்களுக்கு ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்! மற்றும் வடிகாலில் வந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் தங்கள் எழுத்துப்பணி சிறக்க இனிய வாழ்த்துக்கள்.

    ராஜேஸ்வரியின் மீனாட்சி அக்காவைப் படித்து என் மனமும் அழுதிருக்கிறது.

    ரம்யாவின் ஆதர.. கட்டுரையும் படித்துள்ளேன்.

    ஞானசேகரன் எனது இனிய நண்பர். வாழ்த்துக்கள் நண்பரே!

    மற்றோரின் வலைக்கும் விரைவில் வருவேன்.

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  23. \\ராஜேஸ்வரியின் ரசனைக்காரி

    இவரின் மீனாட்சி அக்கா\\

    நானும் இதனை படித்தேன், மிகவும் கணக்க செய்துவிட்டது

    நல்ல தேர்ந்த நடை.

    ReplyDelete
  24. ஆசிரியப் பணி அழகாய் செய்கிறீர்கள். பதிவர்கள் அறிமுகம் பாராட்டத் தக்கது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ராஜேஸ்வ‌ரி,குண‌சீல‌ன் இவ‌ர்க‌ளின் வலைத‌ள‌த்திற்கு சென்றிருக்கிறேன்.

    ர‌ம்யா டீச்ச‌ருக்கு அறிமுக‌மே தேவையில்லை...

    ம‌ற்ற‌வர்க‌ளை அங்கு சென்று பார்க்கிறேன்.ந‌ன்றி அறிமுக‌த்திற்கு ச‌க்தி அக்கா.

    ReplyDelete
  26. நல்ல அறிமுகங்கள்.. ஆமா யாரு அந்த நசரேயன்

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்
    சக்தி!!

    ReplyDelete
  28. நன்றி ஜமால் அண்ணா
    நன்றி முனைவர். குணசீலன்
    நன்றி பிரியமுடன் வசந்த்
    நன்றி அபு அண்ணா
    நன்றி தேவன் மாயம்

    ReplyDelete
  29. நன்றி புதியவன் அண்ணா
    நன்றி மயாதி
    நன்றி ரம்யா
    நன்றி சுப்பு
    நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  30. நன்றி கடையம் ஆனந்த்
    நன்றி உழவன்
    நன்றி பாலா
    நன்றி அ.மு.செய்யது
    நன்றி நசரேயன்
    நன்றி அன்புடன் அருணா

    ReplyDelete
  31. Ithai naan eppadi Miss pannen..
    Irunthalum After one month,
    Iam telling tis1..
    Thank U very Much..

    Vinoth gowtham.

    ReplyDelete