Saturday, June 20, 2009

என்னை அசத்திய கவிஞர்கள்

வலைப்பூக்கள் முழுக்க விரவிக்கிடப்பது கதைகளும் கவிதைகளும்தான். நான் சொல்லப்போவது ஒன்றும் வித்தியாசமான கவிதைகளும் அல்ல, எனது லிஸ்ட் பின்நவீனத்துவமும் அல்ல, நான் படித்தவரை எனக்குப் புரிந்த எனக்குப் பிடித்த கவிஞர்களை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர்:
விகடனில் இவர் கவிதை வந்ததில் விகடனுக்கே கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கும். வலையுலகுக்கு வந்த புதிதில் இவர் கவிதைக்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் போட்டு இவரது சக இலக்கியவாதிகளிடம் வாங்கி கட்டிக் கொண்ட பெருமை எனக்கு உண்டு. பூடகமாக செய்திகளைச் சொல்லும் இலக்கியங்களை எழுதினாலும் அவ்வப்போது என் போன்ற பாமரனுக்கும் புரிகிறமாதிரி அற்புதமான கவிதைகளைக் கொடுப்பது இவரது பன்முகத்தன்மைக்கு உதாரணம்.

மோகன் கந்தசாமி வலைப்பூவில் இவர் எழுதிய இரண்டு கவிதைகள் என்னை அசரடித்தன என்றால் மிகையில்லை.
இவரின் இந்தக் கவிதைதான் விகடனில் பிரசுரமானது.

ஸ்ரீமதி:
"கரையோரக் கனவுகள்"ன்ற கவிதைத்தனமான பெயர்ல வலைப்பூ வெச்சிருக்குற ஸ்ரீமதி எழுதுற எல்லா காதல் கவிதைகளுமே எனக்குப் பிடிக்கும், அவங்க எழுத்துறது காதல் கவிதைகள் மட்டும்தான்கிறதும் ரொம்ப பிடிக்கும்.

ஒரு சின்ன‌ உதார‌ண‌ம்:


பொம்மையை தரமறுக்கும்
குழந்தையின்
அடத்தை ஒத்தது
என்னிதயம் திருடி
நீ செய்யும்
காதல்....


இவ‌ங்க‌ளோட‌ எல்லா க‌விதைக‌ளுமே பிடிக்கும்னாலும் இந்த‌ காத‌லும், இந்த‌ பாச‌மும் கொஞ்ச‌ம் அதிக‌மா பிடிச்ச‌து.

சென்ஷி:
உண்மையை சொல்லப்போனா சென்ஷியோட கவிதைகள் எனக்கு அவ்வளவா புரியறதில்லை. ஆனா அவர் தான் படிச்சதில் பிடிச்சதா அறிமுகப்படுத்துற கவிதைகள் அவ்வளவு அற்புதமா இருக்கும். பகிர்தலுக்கு நன்றி சென்ஷி.

அனுஜன்யா:
தீவிரமான இலக்கியவாதி. உயிரோசை, கீற்று மாதிரியான இதழ்களில் அடிக்கடி இடம் பிடிக்கும் கவிஞர். நான் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் விளக்கம் கொடுக்கும் பொறுமைசாலி. இவரது கவிதைகள் சாமான்யர்களுக்கு புரிவது கொஞ்சம் கடினமே. நான் இன்னமும் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.

என்னைக் கவர்ந்தது இவரது இந்தக் கவிதையும், இந்த கவிதையும். பிடித்ததற்கு எனக்குத் தெளிவாகப் புரிந்ததும் காரணமாக இருக்கலாம்.

வால்பையன்:
இவர் எப்படா கவிஞர் ஆனாருன்னு கேக்குறவங்களுக்கு, எந்த கவிதைக் குடுத்தாலும் உடனே அதனோட ஆல்கஹாலை கலந்து எதிர் கவுஜ எழுதற இவரை வேற எந்த லிஸ்ட்ல சேர்க்க முடியும், சொல்லுங்க.

சொல்லப்போனால் பல கவிதைகளை இவர் எதிர் கவுஜ எழுதியபின் இவர் கொடுக்கும் மூலக்கவிதை இணைப்பின் வழியேதான் வாசித்திருக்கிறேன். அதிகமாக கவிதைகளைப் படித்து எதிர்காலத்தில் நானும் எதாவது கவிதை எழுத ஆரம்பித்தால் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணியாக இருப்பார். :))))

13 comments:

  1. ஹப்பாடி! இன்னிக்காச்சும் மீ த ஃபஷ்டாகிட்டு போறேன் :)

    ReplyDelete
  2. வாங்க!! வெண்பூ!!
    வலைச்சரத்தில் மிளிர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் வெண்பூ....

    ReplyDelete
  4. சூப்பர்ல.. (அப்படியே நானும் பிரபல கவுஞர்தான் என்ற ரக‌சியத்தை மறைத்ததையும் ரசித்தேன்.. ஹிஹி..)

    ReplyDelete
  5. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  6. அவங்க கவிதைகளைப் படிச்சு அசந்து போன வேளைல நம்ம கவிதைகளை மிஸ் பண்ணீருப்பீங்க... இல்லைன்னா நானும் மறுபடி ஒரு தடவை உங்க லிஸ்ட்ல வந்திருப்பேன் :)))

    ஏங்க அடிக்க வறீங்க? பேசித் தீத்துக்கலாமே...

    ReplyDelete
  7. சென்ஷி,
    thevanmayan,
    RR
    கார்க்கி, என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு :))))
    ஆதி, என்னது நீங்களும் கவிஞரா? :))
    மங்களூர் சிவா,
    நர்சிம்,
    சுரேஷ்,
    ஸ்ரீமதி,
    மஹேஷ்.. ஹி..ஹி

    அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி...

    ReplyDelete
  8. வால்பையன் ( ?? ) உள்ளிட்ட கவிஞர்களை அறிமுகப் படுத்திய விதம் நன்று வெண்பூ

    ReplyDelete
  9. //எதிர்காலத்தில் நானும் எதாவது கவிதை எழுத ஆரம்பித்தால் அதற்கு இவரும் ஒரு முக்கிய காரணியாக இருப்பார்.//

    இப்படி பயமுறுத்துனா எப்படி?

    ரொம்ப நன்றி தல! என்னையும் கவிஞனாக ஆக்கியதற்கு!
    உண்மையில் நான் அவ்வளவு வொர்த் இல்ல!

    ReplyDelete
  10. பாராட்டுக்கு நன்றி சீனா அய்யா..

    //
    வால்பையன் said...
    ரொம்ப நன்றி தல! என்னையும் கவிஞனாக ஆக்கியதற்கு!
    உண்மையில் நான் அவ்வளவு வொர்த் இல்ல!
    //
    அட என்ன வால்!!! இப்படியெல்லாம் சொல்லிகிட்டு..

    ReplyDelete