Thursday, June 18, 2009

கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்

ஒருசிலர் கூட பழக ஆரம்பிச்சி ரொம்ப நாள் ஆனப்புறம், வேற எதாவது ஒரு விசயத்தைப் பத்தி பேசிட்டு இருக்குறப்போ, அவங்களுக்கும் நமக்கும் எதோ ஒரு ஒற்றுமை இருக்குறது தெரியும், ஒரே ஊரைச் சேந்தவுங்க, ஒரே காலேஜ்ல படிச்சவங்க இப்படி.. அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே அப்படின்னு நெனப்போம்.

இந்த மாதிரி வலையுலக நண்பர்கள்கிட்டயும் எனக்கு ஆச்சர்யப்படுற மாதிரி சில கோ இன்சிடன்ஸ் விசயங்கள் நடந்தது. அந்த நண்பர்களைப் பத்தியும், அவங்க பதிவுகள்ல எனக்கு புடிச்சதையும்தான் இன்னிக்கு சொல்லப்போறேன். (எங்க‌ இருந்துடா புடிக்குற‌ இப்ப‌டி ஒரு தொகுப்பெல்லாம்னு சொல்ற‌வ‌ங்க‌ளுக்கு ஒரு ஹை ஃபைவ்...ஹி..ஹி)

சஞ்சய்:
வயசானதை மறைச்சி இன்னமும் பொடியன்னே சொல்லிகிட்டு திரியுற இன்னொரு மோஸ்ட் எலிஜிபுள் வலையுலக பேச்சுலர் இவரு. இவரோட பேச ஆரம்பிச்சி கொஞ்ச நாள் கழிச்சி, இவர் தருமபுரி மாவட்டத்துல இருக்குற தன்னோட கிராமத்தைப்பத்தி எழுதியிருந்தாரு (இவரோட கிராமம்னா, இவரோடதே இல்ல, இவரு இருக்குற கிராமம்).

என்னோட சின்ன வயசு முழுக்க (நாலாவது வரைக்கும்) தருமபுரி மாவட்டத்துல பாப்பிரெட்டிப்படியிலதான். அதனால ஒரு ஆர்வத்துல இவர்கிட்ட தருமபுரியில எந்த இடம்னு கேக்க அவரும் சொன்னாரு. நானும் அவர்கிட்ட நான் பாப்பிரெட்டிப்பட்டியிலதான் இருந்தேன்னு சொல்ல அவருக்கு ஆச்சர்யம். அவங்க ஊர் பாப்பிரெட்டிப்பட்டி பக்கம்தானாம். அவரும் +1, +2 படிச்சது பாப்பிரெட்டிப்பட்டியிலதான் அப்படிங்கறது கூடுதல் ஆச்சர்யம். (அவரு +2 வரைக்கும் படிச்சதே ஆச்சர்யம்தான் அப்படிங்கறவங்க நம்ம சாதிங்கோவ்....)

இவரோட கிராமத்து நினைவுகள் எனக்கு ரொம்ப புடிக்கும். அழகான படங்களோட (சஞ்சயோட படம் இல்லீங்க) இவர் வர்ணிக்கற விதமே அருமையா இருக்கும். என்ன ஒரே பிரச்சினை, என்னை மாதிரி இவரும் அப்பப்ப காணாம போயிடுறாரு. :)) அடிக்கடி எழுதுங்க சஞ்சய்..

துக்ளக் மஹேஷ்:
என்னை ஆச்சர்யப்படுத்துன கோ இன்சிடன்ஸ் மஹேஷ் கூட நடந்தது. மஹேஷ் இப்ப இருக்குறது சிங்கப்பூர். அங்கிருந்து மனுசன் உலகம் பூரா பறந்து பறந்து வேலை பாக்குறாருங்குறது எல்லாருக்கும் தெரியும். ஒருதடவை இவர்கூட ச்சாட் பண்ணிகிட்டு இருக்கும்போது, இவர் சென்னையில வேலை செஞ்சதைப் பத்தி சொல்லிட்டு இருந்தாரு. எந்த கம்பெனின்னு நான் கேட்க அவர் சொன்ன பதில்லதான் ஆச்சர்யமே.

அவர் சென்னையில வேலை செஞ்ச கம்பெனி, அமெரிக்காவுல இருக்குற இன்னொரு கம்பெனிகூட சாஃப்ட்வேர் டெவலப் பண்ண டீல் போட்டு அந்த அமெரிக்கா கம்பெனி நான் வேலை செய்யுற கம்பெனிக்கு சப்கான்ட்ராக்ட் குடுத்து அந்த ப்ராஜக்டை நான் மேனேஜ் பண்ணிகிட்டு இருந்தேன். எவ்வளவு சிக்கலான லிங்க். ஆச்சர்யம்தானே..

புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் இப்படி பல எழுதுனாலும், இவரோட பயணக்கட்டுரைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல ரொம்ப பிடிச்சது காஷ்மீர் கட்டுரைகள். படிச்சிப் பாருங்க. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.

ச்சின்னப்பையன்:
பூச்சாண்டி அப்படின்னு பயமுறுத்துற பேர்ல வலைப்பூ வெச்சிருந்தாலும் உள்ள போற எல்லாரையும் சிரிக்க வெக்காம வெளிய அனுப்ப மாட்டாரு இந்த மனுசன். ஆபிஸ்ல இருக்குறப்ப பதிவை படிக்கலாமா வேணாமான்னு நான் யோசிக்குற ஒரு சில பதிவுல இவரோடதும் ஒண்ணு, பல தடவை படிச்சிட்டு ஆபிஸ்ல தனியா சிரிச்சிருக்கேன்.

இவரோட எனக்கு ஆன கோ இன்சிடன்ஸ், இவர் பொண்ணோட பர்த்டேவும் என் பையனோட பர்த்டேவும் ஒண்ணே (ஆகஸ்ட் 27). வருசம் வேற வேறயா இருந்தாலும் என்னை "அட" அப்படின்னு சொல்ல வெச்சது இந்த ஒற்றுமை.

இன்னொரு ஒற்றுமை இவர் பொண்ணோட பெயரும், மேல சொன்ன துக்ளக் மஹேஷ் பொண்ணோட பெயரும் ஒண்ணே: சஹானா

ச்சின்னப்பையன் பதிவுல இதைன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது, எல்லாமே டெர்ரராத்தான் இருக்கும். இருந்தாலும் இதைப் படிங்க, இது ஒரு எதிர்ப்பதிவு. கலக்கியிருப்பாரு. படிச்சி சிரிங்க..

கணேஷ்:
தன் நண்பர் ராம் சுரேஷ் அப்படின்ற பெயர்ல எழுதிட்டு இருந்த இவர், தன்னோட பெயரான‌ கணேஷ் அப்படின்ற பெயர்ல எழுத ஆரம்பிச்ச மறுவாரமே பின்னூட்டப் புயல், சூறாவளி, டிவிஸ்ட்டர் கணேஷ் வந்து இவர் பெயரை டேமேஜ் பண்ணிட்டாரு. "நான் அந்த கணேஷ் இல்லீங்கோ"ன்னு இவரு கதறுனது இன்னமும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு :))))

ஒருமுறை துணுக்ஸ்ல நான் வேலை செய்யுற கம்பெனிக்கு பக்கத்துல டீக்கடையில நடந்த ஒரு நிகழ்வைப்பத்தி எழுத, உடனே இவரு பின்னூட்டம், நீங்க வேலை செய்யுற கம்பெனியிலதான் நானும் இருக்கேன்னு. அவரோட பதிவுகளை நானும், என்னோட பதிவுகளை அவரும் படிச்சிருந்தாலும் ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை செய்யுறோம்ன்றதே தெரியாம இருந்திருக்கு.

இவரும் வலையுலகத்தோட பேச்சுலர் பதிவர்தான். ஆனாலும் காதல் செய்யுறது (ஆங்கிலமாக்கிக் கொள்ளவும்) பத்தி பதிவுகள் அதிகமா போடுறாரு. டவுட்டாத்தான் இருக்கு.

க‌டைசியில இவரு போட்டிருக்குற‌ டிஸ்கியை ப‌டிக்காம மீதிய‌ ம‌ட்டும் ப‌டிங்க. நான் சொல்ற‌து க‌ரெக்ட்னு தெரியும். :)))

நர்சிம்:
என்னாலயும் சரி, அவராலயும் சரி, நம்பவே முடியாத கோ இன்சிடன்ஸ் நர்சிம் கூடதான் நடந்தது. சில வாரங்களுக்கு முன்னால, இவர்கிட்ட பேசிகிட்டு இருக்குறப்ப சிறுகதைப் போட்டி பத்தி பேச்சு வந்தது. அப்ப அவரு, 'ஈழத்தை அடிப்படையா வெச்சி ஒரு கதை எழுதியிருக்கேன் வெண்பூ'ன்னு சொன்னாரு.

அப்படியா என்ன கதைன்னு கேக்க 'கதை ஆரம்பிக்குறதே கி.பி.2209ல் ஒருநாள் அப்படின்னுதான்'ன்றாரு. எனக்கா தூக்கிவாரிப்போட்டது. 'என்ன நர்சிம் சொல்றீங்க! இதே ஆரம்ப வரிகளோட ஒரு கதையை நான் விகடனுக்கு போன வாரம்தான் அனுப்பினேன்'ன்னு சொன்னேன். அந்த கதைதான் விகடன்ல வெளிவந்தது.

என்னோட கதையை அவரோ, அவரோட கதையை நானோ படிக்குறதுக்கு வாய்ப்பே இல்லை. ஆனா ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஒரே தளத்துல கதையை யோசிச்சது நம்பவே முடியாம இருந்தது.

அவரோட கதைக்கும், என்னோட கதைக்கும் சில ஒற்றுமைகள்:
1. வருடம் ரெண்டுமே 2209
2. என் கதையோட தலைப்பு "கி.பி.2209ல் ஒரு நாள்" அவர் கதையோட தலைப்பு "கி.பி.2209..ஒரு மழை நாள்..."
3. என் கதை நடப்பது 716 மாடிக் கட்டிடம். அவர் கதையின் நாயகன் இருப்பது 710வது மாடியில்
4. என் கதையில் (நீளம் காரணமாக விகடனால் வெட்டப்பட்டது) நாயகி தன் கணவனை இவ்வாறு திட்டுவாள் "புது மாடல் கார் வாங்குனா ஃப்ளாட்டுக்கு வெளியவே பார்க் பண்ணிகிட்டு வீட்டுகுள்ள டைரக்டா போகலாம்" என்று. அவர் கதையில் "அண்ணாநகரின் மையத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு. வாசல் வந்ததும் 710 என்ற எண்ணைத் தொட்டான். ஜிவ்வ்வ் என்று மேலேறிய கார் செதுக்கி வைத்தது போல 710 வது மாடியின் சுவரோடு சுவராக உரசி நின்று அவனைத் துப்பி விட்டு, கட்டளைப் படி சுவரோடு சுவராக படிந்து கொண்டது." என்று எழுதியிருப்பார்.

ஒரே அலைவரிசையில சிந்திக்கிறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரே விசயத்தை சிந்திக்கிறதுன்றது என்னைப் பொறுத்தவரை ரொம்ப அபூர்வம். எப்படி இந்த அளவு ஒரே மாதிரி ரெண்டு பேர் ஒரே வாரத்தில் எழுத முடியும். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்..

இவரோட எல்லா பதிவுகளுமே பிடிக்குனாலும் ஜல்லிக்கட்டு பத்தி இவரு எழுதின பதிவு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

28 comments:

  1. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிறவி.

    ReplyDelete
  3. வித்தியாசமான வகைப்படுத்துதல்...

    "கி.பி.2209ல் ஒரு நாள்...." அட நானும் அதே தலைப்புல ஒரு கதை எழுதியிருக்கேன்....

    http://thuklak.blogspot.com/2009/06/2209.html

    என்னா ஒரு கோ-இன்சிடென்ஸ்??
    :)))))))))))))))))))

    ReplyDelete
  4. நர்சிம்மோடு உங்களுக்கு ஏற்பட்ட கோ-இன்சிடன்ஸ் ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது.

    (இப்படி ஒரு தொகுப்பே இண்ட்ரஸ்டிங்காக இருந்தது)

    அப்துல்லாவும் நானும் ப்லாக்கில் இருந்ததே தெரியாமல் அவருக்கு நான் பின்னூட்டமிட - யாருடா இந்த ‘தம்பி’ என்று அவனும் வந்து பார்க்க - இது ஒரு சுவையானது ...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் வெண்பூ..
    //பரிசல்காரன் said...
    நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிறவி.
    //

    வாங்க பரிசல்.. அப்ப, இன்னிக்கு நான் தானா??

    ReplyDelete
  6. //நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிற//

    அப்போ நீங்களும் அதிசய பிறவின்னு சொல்ல்க்கிறீங்களா பரிசல்? அதானே கோ இன்சிடென்ஸ்?

    ReplyDelete
  7. நல்ல செய்திய்டன் கூடிய கட்டுரை

    ReplyDelete
  8. எல்லார் உடனுமான தற்செயல் ஒற்றுமை ஆச்சர்யமா இருக்கு. அதும் நர்சிம்மோடது. ஒரே பார்ல சரக்கடிக்காதிங்கன்னு சொன்னா கேட்டா தான? மச்சான் ஒரு கோட்ரு சொல்லேன்..:)

    ReplyDelete
  9. //கம்பெனி நான் வேலை செய்யுற கம்பெனிக்கு சப்கான்ட்ராக்ட் குடுத்து அந்த ப்ராஜக்டை நான் மேனேஜ் பண்ணிகிட்டு இருந்தேன். எவ்வளவு சிக்கலான லிங்க். ஆச்சர்யம்தானே..//

    என்ன ஆச்சர்யம்? நீங்க மெனேஜ் பன்றதா? ச்ச ச்ச.. நீ ந்க்க புத்திசாலிங்க.. வேணும்னா சண்முகப் ப்ரியா கிட்டயும் இன்னொருத்தர் யாருப்பா அது? அவங்க கிட்டயும் கேட்டுப் பாருங்க. :))

    ReplyDelete
  10. நல்ல செய்தியுடன் கூடிய கட்டுரை

    ReplyDelete
  11. ஆஹா,

    இப்படியும் நடக்குதா!!!


    நான்காம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உங்களுக்கும் எனக்கும் கூட ஒரு ஆச்சரியமான ஒற்றுமை இருக்குது.. அது பிரியாணி..

    உங்களுக்கும் கார்க்கிக்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்குது.. அது.. அது.. அது.. சரி வேணாம் விடுங்க.. கலியாணம் ஆக வேண்டிய பதிவர்!

    ஹிஹி.. எப்பூடி.?

    ReplyDelete
  13. பாப்பிரெட்டிப்பட்டி...சைக்கிள் பதிவு நினைவு வந்தது வெண்பூ.
    ஆமா நீங்களும் சஞ்ஜெய் பேச்சுலர்னு நம்பரீங்களா?

    ReplyDelete
  14. வலைச்சர வாய்ப்பை முழுமையா பயன்படுத்தியதில் உங்களுக்குத்தான் முதலிடம்னு தோணுது வெண்பூ.
    நகைச்சுவை கொஞ்சம் மிஸ்ஸிங்...

    ReplyDelete
  15. ஏற்கனவே அறிமுகமான பதிவர்கள் தான் என்றாலும், உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கும் போது
    அனைவரது சிந்தனையிலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிவிகிறது.

    எனக்கும் எனது நண்பர்களுக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் ஒரே சரக்கு அடிப்பது!

    எப்பூடி!

    ReplyDelete
  16. வித்தியாசமான அறிமுகம் வெண்பூ...

    ReplyDelete
  17. Very interesting co-incidence. பின்னூட்டங்களும் செம்ம சுவாரஸ்யம். ஆனாலும் நீங்க எல்லாரும் ஒரு குருப்பாதான்யா இருக்கீங்க :)

    அனுஜன்யா

    ReplyDelete
  18. நான்காம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  19. எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத ஒற்றுமைகள் அருமை வெண்பூ :)

    நண்பர்கள் மறுபடியும் சந்தித்த அந்த முதல் நாளை நான் யோசித்தேன்.

    நண்பர்களுகிடையே அது மிகவும் சந்தோஷமான தருணம் அல்லவா?

    அருமையான நினைவு கூர்தல்.

    ReplyDelete
  20. //
    கார்க்கி said...
    //நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிற//

    அப்போ நீங்களும் அதிசய பிறவின்னு சொல்ல்க்கிறீங்களா பரிசல்? அதானே கோ இன்சிடென்ஸ்?
    //

    அப்படியா கார்க்கி :))

    ReplyDelete
  21. நெகிழ வச்சிட்டீங்க தல.

    நீங்க கூடவா நம்ப மாட்டீங்க.. நான் யாரையும் காதல் பண்ணவில்லை..

    ReplyDelete
  22. கெளம்பிட்டாங்கய்யா... கெளம்பிட்டாங்கய்யா...!

    ReplyDelete
  23. //பரிசல்காரன் said...

    நர்சிம்முடனான கோ இன்சிடென்ஸ் எனக்கும் நடந்திருக்கிறது. அவர் ஒரு அதிசயப் பிறவி

    //

    அந்தாளோட எனக்கும் நிறைய நடந்திருக்கு

    ;))

    ReplyDelete
  24. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  25. ஜமால்
    பரிசல்காரன்
    சென்ஷி
    மஹேஷ்
    நர்சிம்
    கார்க்கி
    என்.உலகநாதன்
    சஞ்சய்
    'இனியவன்' என்.உலகநாதன்
    மங்களூர் சிவா
    புதுகைத் தென்றல்
    அன்புடன் அருணா
    ஆதிமூலகிருஷ்ணன்
    கும்க்கி
    வால்பையன்
    தமிழ்ப்பறவை
    அனுஜன்யா
    ரம்யா
    கணேஷ்
    வெங்கிராஜா
    எம்.எம்.அப்துல்லா
    சுரேஷ் குமார்

    அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.. நேரமின்மையாலும் அடுத்த பதிவு எழுதவேண்டி இருப்பதாலும் தனித்தனியாக பதில் கொடுக்க முடியவில்லை. புரிதலுக்கு நன்றி....

    ReplyDelete