Wednesday, June 17, 2009

வெண்பூவிற்கு வயது ஒன்று



இன்னியோட நான் பதிவு எழுத ஆரம்பிச்சி ஒரு வருசம் ஆச்சு.

(அப்படியே எல்லாரும் கைதட்டி ஹேப்பி பர்த்டே டூ யூ சொல்லுங்க பாக்கலாம்) :)))

பதிவுகளை படிக்க ஆரம்பிச்சு ஒரு ஆறு மாசம் கழிச்சி பின்னூட்டம் போட ஆரம்பிச்சி ஒரு ரெண்டு மாசம் கழிச்சு போன வருசம் இதே நாள்லதான் என்னோட முதல் பதிவை எழுதுனேன் (தமிழுக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சது இந்த நாள்லதான்றதால யாராவது கருப்புக் கொடி ஏத்துறதுன்னா ஏத்திக்கலாம்).

என்னோட உண்மையான பெயர் வெங்கடாஜலபதி. நண்பர்களுக்கு வெங்கட், உறவினர்களுக்கு வெங்கடேசு.

பதிவுக்கு இதுல எந்த பெயர் வெச்சாலும் ரொம்ப பொதுவான பெயரா இருக்கும்னு நெனச்சி, வலையில எழுதுறதுக்காகவே புனைப்பெயர் (டேய், இதெல்லாம் ரொம்ப அதிகமா இல்லை???) தேட ஆரம்பிச்சேன்.

முதல்ல நான் முடிவு பண்ணினதே பேருக்கு கீழ வர்ற கேப்ஷன்தான். புனைப்பெயரைப் போட்டு அதுக்குக் கீழ "வெங்கட்டின் வலைப்பூ" அப்படின்னு போட்டுடலாம்னு முடிவு பண்ணினேன். அப்புறம் யோசிச்சப்ப அதுலயே ஒரு நல்ல புனைப்பெயர் இருக்குறதா தோணினது.

வெங்கட் அப்படின்றத இங்கிலீஷ்ல எழுதி (Venkat) அதுல முதல் மூணு எழுத்தை மட்டும் எடுத்தும், "வலைப்பூ"ல இருக்குற கடைசி எழுத்தை மட்டும் எடுத்தும் "வெண்பூ (Venpu)"ன்னு வெச்சிகிட்டேன்..(ஹப்பாடா.. எப்படியோ நம்ம வரலாறு சொல்லியாச்சு)..

இந்த ஒருவருசமா என்னை எழுதுறதுக்கு ஊக்கப்படுத்திட்டும், உதவி பண்ணிட்டும் இருக்குற உங்க எல்லாருக்கும் நன்றிகள் பல.

இந்த முதல் பிறந்தநாளை கொண்டாட இடம் குடுத்து உதவின சீனா அய்யாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

ஏறத்தாழ நான் எழுத ஆரம்பிச்ச நேரத்துலயே ஆரம்பிச்ச பல பேர் கூட நல்ல நட்பு உருவானது. சொல்லப்போனா ஒரு குழுவா நாங்க இயங்குறதா குற்றச்சாட்டும் வர அளவுக்கு நட்பு அதிகமாச்சு. அதிஷா, பரிசல், நர்சிம், வடகரை வேலன், ஆதி தாமிரா இவங்களை எல்லாம் போன பதிவுலயே பாத்துட்டதுனால இன்னிக்கு மத்தவங்களைப் பத்தி..

புதுகை அப்துல்லா:
என்னோட வலையுலக‌ பார்ட்னர்.. பழகுறதுக்கு இனிமையானவர், கவிதைகள்ல பின்னுறவர், அப்படி இப்படின்னு பல விஷயங்கள் இருந்தாலும் எனக்கு இவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் இவரோட நகைச்சுவை உணர்வு. இவர்கிட்ட எப்ப பேசுனாலும் கண்டிப்பா பேசி முடிக்குறப்ப நாம ஒரு தடவையாவது வாய்விட்டு சிரிச்சிருப்போம். பின்னூட்டங்கள்ல இவரோட லூட்டிய இங்கயும், இங்கயும் பாருங்க. எனக்கு இவர் அடிச்ச டைமிங்லயே ரொம்ப புடிச்ச ரெண்டும் இது..

FYI...பதிவுலகுல அண்ணன் எனக்கு 15 நாள் சீனியர்.

இவரோட மாஸ்டர் பீஸா நான் நினைக்குறது மோகன் கந்தசாமி வலைப்பதிவுல இவர் எழுதுன அரசியல் கட்டுரைகள்.
புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும்
புதுகை அப்துல்லா: திராவிடமும் கம்யூனிசமும் - இறுதி பாகம்

கார்க்கி:
ஒன் ஆஃப் த மோஸ்ட் எலிஜிபுள் பேச்சுலர்ஸ் இன் தி வலையுலகம். இப்படித்தான் இவரு பெங்களூரு போனப்ப (சரி..சரி.. சொல்லல..)

தன் எழுத்துக்களால என்னை ஆச்சர்யப்படுத்துற பதிவர். முன்னயெல்லாம் காதல் பத்தி ரொம்ப ஃபீலிங்ஸ் ஆஃப் ஹைதராபாத்தா எழுதிட்டு இருந்த இவரு இப்பவெல்லாம் ஒரே சிக்ஸ் அடிச்சு தாக்குறாரு, ஸாரி, செவன் அடிச்சு தாக்குறாரு.. இவரோட ஏழு கேரக்டரோட தீவிர ரசிகன் நானு. பரிசலுக்கு அடுத்து 300 ஃபாலோயர்ஸை தொடப்போற அடுத்த பதிவர் இவராத்தான் இருக்கப்போறாரு. வாழ்த்துகள் கார்க்கி.

36 comments:

  1. ரொம்ப நன்றி சகா...

    வாழ்த்துகள் ஒரு வயசுக்கு

    ReplyDelete
  2. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    மற்றும்

    ஒரு வயதுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஹேப்பி பர்த்டே டூ யூ :)

    வெற்றிகரமான அடுத்த ஆண்டிற்கான எனது வாழ்த்துக்கள் வெண்பூ!

    ReplyDelete
  4. MANY MORE HAPPY RETURNS OF THE DAY VENPOO....ALSO 3RD WISHES...

    வெண்பூ பேரு வந்த கதை (ஹிஹிஹிஹி) நல்லாயிருக்குங்க....

    ReplyDelete
  5. (தமிழுக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சது இந்த நாள்லதான்றதால யாராவது கருப்புக் கொடி ஏத்துறதுன்னா ஏத்திக்கலாம்).//

    சும்மா காமடி பண்ணாதீங்க அண்ணா!

    வித்தியாசமான முறையில் அணுகி அறிமுகங்களை செய்து வைக்கின்றீர்கள்..
    வாழ்த்துக்கள்.

    ஒரு வருடம் இல்லை உங்கள் ஆயுசு முழுக்க தொடாரட்டும் பணி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்!
    புதுமையான அழகிய பெயர் 'வெண்பூ'. அதன் காரணம் தெரிந்து கொண்டோம், நன்றி:)!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் வெண்பூ.

    ReplyDelete
  8. இனியப் பதிவுக்கான பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

    நூறாண்டு வாழ்க.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் வெண்பூ!

    வலைப்பூவை வலைப்பூவாகவே பயன்படுத்தும் சொற்ப பதிவர்களில் நீங்களும் ஒருவர்.

    ReplyDelete
  10. என்னாது.... ஒரே ஒரு வருஷந்தான் ஆச்சா !!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் வெண்பு!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் வெண்பூ, கார்க்கி :)

    ReplyDelete
  13. ஹாப்பி பர்த்டே வெண்பூ

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் வெண்பூ..

    அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா..?!!

    ReplyDelete
  15. சமீபமாக வாசித்து வருகிறேன்.. நீங்கள் குறிப்பிட்டவர்களையும் தான்... சுட்டிய பதிவுகள் நல்லா இருக்குங்க!
    வாழ்த்துக்கள்... ஒரே நேரத்தில் வலைச்சரத்தில் ஆசிரியரானதற்கும், கூடவே பதிவுலகில் ஒரு வருடம் தொட்டத்தற்கும்!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் வெண்பூ!

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ஹாப்பி ப்ர்த்டே டு யு

    ReplyDelete
  19. அப்துல்லா அண்ணனோட அந்த கட்டுரை உண்மையிலேயே மாஸ்டர் பீஸ், இன்னும் எழுதுவார்ன்னு எதிர்பார்த்தேன்!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் வெண்பூ....

    ReplyDelete
  21. வாழ்த்துகள் வெண்பூ !

    10,000க்கும் மேற்பட்ட பதிவுகள் காண்க. (அரசியல்வாதிகள் ஸ்டைலில் ஆயிரம் பிறைகள் காண்க என்பது போல்)

    ReplyDelete
  22. இது போல் இனியும் பல பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வெங்கட்+வலைப்பூ = வெண்பூ??

    இது செல்லாது.. .செல்லாது... ஒழுங்கா இலக்கணக்குறிப்பு சொல்லுங்க.... (ஈறு கெட்ட... அந்த மாதிரி)

    ReplyDelete
  24. //(அப்படியே எல்லாரும் கைதட்டி ஹேப்பி பர்த்டே டூ யூ சொல்லுங்க பாக்கலாம்) :))) //

    ஹேப்பி பி டே 2 யு

    வாழ்துக்கள் தல

    ReplyDelete
  25. மூன்றாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  26. ஹேப்பி பர்த்டே டூ யூ :)

    ReplyDelete
  27. பெயர் காரணம் அருமை. வெண்பூ பெயர் நல்லா இருக்கு :)

    ReplyDelete
  28. ஒரு வயசுக்கு வாழ்த்துகள். பெயர்க்காரணம் அழகுதான், அப்படியே மல்லிகை மலருக்குரிய பெயரும்தானே..

    ச்சின்னவர் : ஈறு கெட்ட..// அதென்ன பல்லு போன, கண்ணு அவிஞ்ச ங்கிற மாதிரி ஏதாவதா.?

    ReplyDelete
  29. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் வெண்பூ - முதலாண்டு கொண்டாட்டங்கள் எங்கே ? எப்போது வர வேண்டும் ? சீக்கிரம் சொல்லுக !

    ReplyDelete
  30. கார்க்கி,
    ஜமால்,
    சென்ஷி,
    தமிழரசி,
    மயாதி,
    வடகரை வேலன் அண்ணாச்சி,
    ராமலக்ஷ்மி மேடம்,
    துளசி டீச்சர்,
    லக்கி,
    மஹேஷ்,
    மங்களூர் சிவா,
    வெட்டிப்பயல்,
    புதுகைத் தென்ற‌ல்,
    உண்மைத்த‌மிழ‌ன்,
    வெங்கிராஜா,
    திக‌ழ்மிளிர்,
    ப‌ரிச‌ல்,
    ந‌ர்சிம்,
    ஸ்டார்ஜ‌ன்,
    வால்,
    கும்க்கி,
    கோவி,
    வித்யா,
    சிந்துசுபாஷ்,
    உழ‌வ‌ன்,
    ச்சின்ன‌ப்பைய‌ன்,
    கார்த்திக்,
    ர‌ம்யா,
    ஆதி

    அனைவருக்கும் வருகைக்கும் வாழ்த்தியதற்கும் நன்றி, நன்றி... நேரமின்மையால் தனித்தனியாக பதிலளிக்க முடியவில்லை. புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  31. //
    cheena (சீனா) said...
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் வெண்பூ - முதலாண்டு கொண்டாட்டங்கள் எங்கே ? எப்போது வர வேண்டும் ? சீக்கிரம் சொல்லுக !
    //

    வாங்க சீனா அய்யா.. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வலைச்சரத்துலதான்.. அதுதான் நீங்க வந்தூட்டீங்களே.. :)))))

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் தோழரே.......

    ReplyDelete
  33. sorry for delay partner... i just came back from cochin. thank u dear :)

    ReplyDelete
  34. லவ்டேல் மேடி, அப்துல்லா,
    வாழ்த்துகளுக்கு நன்றி..

    ReplyDelete