கடந்த சில மாசங்களா விகடன் ஒரு பக்கக் கதை மற்றும் சிறுகதைகள்ல பதிவர்களோட பங்கு அதிகமாகி இருக்கு. விகடனுக்கு நன்றிகள் சொல்ற அதே நேரத்துல, பதிவர்களுக்கும் பாராட்டுகள் சொல்லணும்ல.
இதுவரைக்கும் விகடன்ல வந்த கதைகளோட தொகுப்புதான் இந்த பதிவு. விகடன் ஆன்லைன் வாசகர்களுக்காக விகடனோட லிங்க்கும் குடுத்திருக்கேன்.
லதானந்த் அங்கிள் மாதிரி எழுத்துலகுல இருந்து பதிவுலகுக்கு வந்தவங்களை நான் இந்த பதிவுல காட்டலை. பதிவுலகம் மூலமா எழுத ஆரம்பிச்சி இப்போ அச்சிற்கு முன்னேறியிருக்குறவங்களைப் பத்தி மட்டுமே இங்க குடுத்திருக்குறேன். அது மட்டுமில்லாம அவரோட அச்சுல வந்த கதைகளைத் தொகுத்தா தனியா அதுக்குன்னே பதிவு போட வேண்டிய அளவுக்கு லிஸ்ட் இருக்கும்ன்றதால இந்த் லிஸ்ட்ல அவர் எக்ஸ்க்ளூடட்.. :)))
லக்கிலுக்:
பதிவுலக சூப்பர்ஸ்டார்னு தாராளமா சொல்லலாம் இவரை. விகடன்ல நம்ம ஆட்களோட ஓட்டத்தை ஆரம்பிச்ச பெருமையும் லக்கியைத்தான் சேரும். மே 6, 2009 இதழ்ல அவர் எழுதுன 13பி அப்படின்ற கதைதான் நம்ம பதிவர்கள் எழுதி முதல்ல வந்த கதை.
அது குறித்து அதிஷா எழுதின பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு
அதிஷா:
ஏறத்தாழ நான் எழுத வந்த காலத்துலயே எழுத ஆரம்பிச்சவர் இவர். என்னோட நல்ல நண்பர் மட்டுமில்ல, என்னோட முதல் ஃபாலோயர்கள்ல ஒருத்தர் மற்றும் நான் ஃபாலோயர் ஆன முதல் சிலர்ல ஒருத்தர். லக்கியோட நெருங்குன நண்பரான இவரு லக்கியோட கதை வந்த அடுத்த வாரமே வந்தது ஆச்சர்ய சந்தோசம்.
இந்த கதை பத்தி லக்கியோட பதிவு
விகடன் இணைப்பு: கனா கண்டேனடி : மே 13, 2009
நர்சிம்:
அறிமுகமே தேவை இல்லாத கார்ப்பரேட் கம்பர். என்னோட முதல் கதை விகடன்ல வந்தப்ப என்னைவிட அதிகம் சந்தோசப்பட்ட சிலர்ல இவரும் ஒருத்தர். இதுவரைக்கும் இவரோட ரெண்டு கதைகள் விகடன்ல வந்திருக்கு. முதல் கதையே நாலுபக்க சிறுகதை அப்படின்றது இவரோட கதை சொல்ற திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த கதைகளைத் தவிர, பொதுத் தேர்தல் சமயத்துல ஜூனியர் விகடன்ல இவரோட நையாண்டியான கமென்ட்ஸ் நாலைந்து வாரங்கள் வந்தது.
முதல் கதை குறித்து இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: இன்னுமொரு காதல் கதை, மே 13, 2009
இரண்டாவது கதை கதை குறித்து இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: அஞ்சு கொலைகள்! ஜூன் 10, 2009
வடகரை வேலன்:
அண்ணாச்சின்னு எல்லோராலயும் செல்லமா அழைக்கப்படுகிற கோவைப் பதிவர். இது அவரோட புனைவா இல்லை உண்மை சம்பவமான்னு அவருதான் சொல்லணும். ஒரு வீட்டுக்குள்ள நடக்குற விசயங்களை ரொம்ப இயல்பா சொல்லியிருந்தாரு நம்ம அண்ணாச்சி. ஏற்கனவே குங்குமத்துலயும் அண்ணாச்சி வந்திருக்காருன்றது ஒரு சிறப்பு
விகடன் ஆன்லைன் இணைப்பு: நல்ல அம்மா... நல்ல பொண்ணு!, மே 20, 2009
கேபிள் சங்கர்:
சினிமாத் துறையில இருந்து பதிவுலகத்துல ஆக்டிவா இருக்குற கேபிள் சங்கர் இதுவரைக்கும் ரெண்டு முறை விகடன்ல வந்துட்டாரு. முதல்ல ஒரு பக்கக் கதையாவும், போன வாரம் நாலு பக்க சிறுகதையாவும் வந்துட்டாரு. போன வியாழக்கிழமை, ஜெயா டிவில ஒரு மணிநேரம் வாசகர்களுடனான கலந்துரையாடல்லயும் அவர் கலந்துட்டு கலக்குனாருன்றது கூடுதல் சந்தோஷம்.
முதல் ஒருபக்கக் கதை பத்தின இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: விளையாட்டு வியூகம்! மே 20, 2009
இரண்டாவது கதை பத்தின இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: எங்கிருந்தோ வந்தாள் - சிறுகதை, ஜூன் 17, 2009
பரிசல்காரன்:
கடந்த ஒருவருசத்துல பதிவுலகுல தனக்குன்னு ஒரு தனி இடத்தைப் பிடித்த திருப்பூர்க்காரர். குறுகிய காலத்துல ரெண்டு லட்சம் ஹிட் + 200 ஃபாலோயர்ஸ் அடிச்சது இவரோட குறிப்பிடத்தக்க சாதனை. என்னோட கதை விகடன்ல வந்தப்ப, முதல் முதல்ல வாழ்த்து சொன்னது இவர்தான். இதுவரைக்கும் இவரோட ரெண்டு ஒருபக்கக் கதைகள் விகடன்ல வந்திருக்கு.
விகடன் ஆன்லைன் இணைப்பு: நட்சத்திரம், மே 20, 2009
விகடன் ஆன்லைன் இணைப்பு: செவ்வரளி - ஒரு பக்கக் கதை, ஜூன் 17, 2009
ஆதிமூலகிருஷ்ணன் (அ) தாமிரா:
தங்கமணி தாமிரான்னு சொன்னா எல்லாருக்கும் "பளிச்"னு தெரியுற அளவுக்கு புகழ் பெற்றவர். தங்கமணிப் பதிவுகள்ல கலக்குற இவர் எழுதுற துறை சார்ந்த பதிவுகளும் அதே அளவு இன்ட்ரெஸ்டிங்கா இருக்குறது இவரோட திறமைக்கு எடுத்துக்காட்டு. கதை எழுதத் தெரியாதுன்னு சொல்லிகிட்டே இவரு எழுதுன கதை சூப்பர் ஹிட்.
விகடன் கதை பத்தின இவரோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: ரேஸ், மே 27, 2009
வெண்பூ:
ஹி..ஹி.. அடியேன்தான். இதுவரைக்கும் என்னோட ரெண்டு ஒருபக்கக் கதைகள் வந்திருக்கு. என்னோட ரெண்டாவது கதை வந்த வாரமே பரிசல், கேபிள் சங்கரோட கதைகளும் வந்தது கூடுதல் மகிழ்ச்சி.
என்னோட முதல் கதைய பத்தி நர்சிம் போட்ட பதிவு
என்னோட முதல் கதைய பத்தி கேபிள் சங்கர் போட்ட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: கி.பி. 2209-ல் ஒரு நாள், ஜூன் 3, 2009
ரெண்டாவது கதை பத்தி ஆதியோட பதிவு
விகடன் ஆன்லைன் இணைப்பு: வெடிகுண்டு முருகேசன்!, ஜூன் 17, 2009
அச்சில் வந்த பதிவர்களின் லிஸ்ட் இதோட நிக்காதுன்றது நல்லா தெரியும். இந்த வாரம் யாரோட கதைங்க?
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteமற்றும் அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வெண்பூ தொகுப்புகள் எல்லாம் SHORT AND CUTE சிறந்த பதிவாளர்கள் தேர்வு..
ReplyDelete;-) நன்றி நண்பா!
ReplyDeleteஎல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி பார்ட்னர். வெறும் பதிவாக இல்லாமல் இணைப்புகளெல்லாம் கொடுக்க நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தைக்கு என் அன்பு!
ReplyDeleteஜ்யோவ்ராம்ஜி,ரவிசங்கர், செல்வேந்திரன் இவங்களை எல்லாம் விட்டுட்டீங்களே தலைவரே...
ReplyDeletesuperppu :)
ReplyDelete// டக்ளஸ்....... said...
ReplyDeleteஜ்யோவ்ராம்ஜி,ரவிசங்கர், செல்வேந்திரன் இவங்களை எல்லாம் விட்டுட்டீங்களே தலைவரே... //
athellaam kavithai partigal...ippoo kathai mattumthaan :)
விகடன் கதைசொல்லிகள் எல்லாருக்கும் வாழ்த்து. விகடனில் கதைவந்தவர்கள் குறித்து ரமேஷ்வைத்யா பிளாக்கில் ஒரு கமெண்ட் சர்ச்சையை கிளப்பியதை யாராவது கவனீத்தீர்களா? :-(
ReplyDeleteஉண்மையில் ரமேஷ் அண்ணனுக்கு நானோ, எனக்கு அவரோ ஒரு தம் கூட வாங்கிக் கொடுத்துக் கொண்டதில்லை :-(((
வெறுமே பதிவை மட்டும் போடாமல் சுட்டியும் கொடுத்துச் செய்வன திருந்தச் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteபெருந்தலைகள் அனைவருக்கும் வாழ்த்துகள். வெயிடிங் லிஸ்டில் காத்திருக்கும் அனைவருக்கும் All the best.
ReplyDeleteஅனுஜன்யா
அனைத்து பதிவுகளும் படித்திருக்கிறேன். நல்ல தொகுப்பு.
ReplyDeleteம் நெக்ஸ்ட் பதிவு!
இதில் எல்லா கதையும் படித்த பெருமை எனக்கு உண்டு!
ReplyDeleteவாழ்த்துக்கள், நன்றி.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவித்தியாசமான, அவசியமான தொகுப்புக்கு நன்றி வெண்பூ :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
நல்ல தொகுப்பு.. வாழ்த்துகள்..
ReplyDeleteவெண்பூ, வலைச்சர விதிப்படி லேபிளில் உங்க பெயர் மட்டும் தான் வரனும். வேற எதும் போடக் கூடாது.
உண்மையில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கும் என் போன்றோருக்கு உட்சாகம் தரும் தொகுப்பு...
ReplyDeleteநன்றிகள் அண்ணா(உரிமையோடு அழைக்கலாம் என நினைக்கிறேன்)
மூன்றாம் நாளுக்கான முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
இங்க பின்னூட்டம் போட்டிருக்கும் சிலர் இப்போ தான் வலைச்சரம் பக்கமே வராங்க போல. :)
ReplyDeleteவலைச்சரத்தின் நோக்கமே லின்கு குடுக்கறது தான் சாமியோவ். :))
வலைச்சரத்தின் நோக்கமே லின்கு குடுக்கறது தான் சாமியோவ். :))\\
ReplyDeleteரிப்பீட்டிக்கிறேன் ...
வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க ஜமால், தமிழரசி, அதிஷா, ராமலக்ஷ்மி, பரிசல், சென்ஷி, டக்ளஸ் எல்லாருக்கும் நன்றி..
ReplyDelete//
எம்.எம்.அப்துல்லா said...
[[ டக்ளஸ்....... said...
ஜ்யோவ்ராம்ஜி,ரவிசங்கர், செல்வேந்திரன் இவங்களை எல்லாம் விட்டுட்டீங்களே தலைவரே... ]]
athellaam kavithai partigal...ippoo kathai mattumthaan :)
//
கரெக்டா சொன்னீங்க பார்ட்னர்.. எனக்கும் கவிதைக்கும் எல்லாம் காத தூரம்.. :)))
வாங்க லக்கி.. அந்த கமெண்டை படிக்கலை. ரமேஷ் வைத்யா எடுத்துட்டாரு..
ReplyDelete//
உண்மையில் ரமேஷ் அண்ணனுக்கு நானோ, எனக்கு அவரோ ஒரு தம் கூட வாங்கிக் கொடுத்துக் கொண்டதில்லை :(((
//
இதெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை லக்கி.. எவனோ எதாவது சொல்லிட்டு போறான்.. :(
வாங்க வடகரை வேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, மங்களூர் சிவா, வால்பையன், நர்சிம், பட்டாம்பூச்சி, பைத்தியக்காரன்.. அனைவருக்கும் நன்றி..
வாங்க வித்யா.. நன்றி..
ReplyDelete//
மயாதி said...
உண்மையில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கும் என் போன்றோருக்கு உட்சாகம் தரும் தொகுப்பு...
//
வலையுலகுக்கு நல்வரவு..
//
நன்றிகள் அண்ணா(உரிமையோடு அழைக்கலாம் என நினைக்கிறேன்)
//
தாராளமா...
//
மூன்றாம் நாளுக்கான முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
//
நன்றி
வாங்க சஞ்சய்.. ஆஹா, விதிகளை சரியா படிக்கலையா நானு :(.. அடுத்த பதிவுல இருந்து சரி செஞ்சுடறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி..
ReplyDelete//
வலைச்சரத்தின் நோக்கமே லின்கு குடுக்கறது தான் சாமியோவ். :))
//
ஹி..ஹி..
அருமையான தொகுப்புங்ணா.
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteதொகுப்பிற்கு நன்றி!
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteமற்றும் அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!!
நண்பர் வெண்பூ,
ReplyDeleteசென்ற வார ஆனந்த விகடனில் மெட்ராஸ் எடிசனில் 91 ம் பக்கத்தை படிக்கவில்லையா???
பெரிய தலைகளோடு என் தலையையும் சேர்த்து உருட்டிய வெண்பூவின் அன்புக்கு நன்றி.
ReplyDeleteஜோசப்,
ReplyDeleteசதங்கா,
டி.வி.ஆர்.ஐயா,
பாஸ்டன் பாலா,
ரம்யா,
இனியவன்,
ஆதி
அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
//
ReplyDeleteஇனியவன் said...
நண்பர் வெண்பூ,
சென்ற வார ஆனந்த விகடனில் மெட்ராஸ் எடிசனில் 91 ம் பக்கத்தை படிக்கவில்லையா???
//
இனியவன்,
நான் விகடன் ஆன்லைனை நம்பி இருப்பவன். ஆன்லைனில் உங்கள் கதை வரவில்லை. வாங்கிய ஒரே ஒரு இதழும் அலுவலக நண்பர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதனால் படிக்க இயலவில்லை. நீங்கள் பதிவிட்டு இருக்கிறீர்களா? தவறவிட்டதற்கு மன்னிக்கவும்.
மெட்ராஸ் எடிசனில் என் ஒருபக்கக் கதை வந்திருந்தது. நான் அதனை உங்களுக்கு இப்பொது மெயிலில் அனுப்புகிறேன்.
ReplyDelete