"வெண்பூ, நீங்க வலைச்சர ஆசிரியர் ஆயாச்சா?" என்று கேட்கும் நண்பர்களுக்கு, "இதுவரைக்கும் இல்லை" என்பதாகவே பதில் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு முறை சீனா அய்யா கேக்குறப்பவெல்லாம், 'கஷ்டம் ஐயா, இருக்குற பதிவுல போஸ்ட் போடுறதுக்கே நாக்குல நுரை தள்ளுது, இதுல ஒரே வாரத்துல நாளுக்கொரு பதிவா எப்படி போடுறது?'ன்னு நெனச்சிகிட்டு, 'ஒரு மாசம் போகட்டும் அய்யா'ன்னு தள்ளிப் போட்டுகிட்டே இருக்க, அவரும் "கண்டிப்பாக உங்களால எழுத முடியும் வெண்பூ" அப்படின்னு என்கூட விடாக்கண்டன் கொடாக்கண்டன் விளையாட்டு விளையாடி என்னை எழுத வெச்சிட்டாரு. நன்றி அய்யா.
என்னை நல்லா தெரிஞ்ச பதிவுலக நண்பர்கள் பலபேருக்கு என்னோட உண்மையான பெயரே தெரியாதுன்றதே ஆச்சர்யம்தான். அதேபோல எனக்கும் பலபேரோட நிஜப்பெயரே தெரியாது அல்லது சட்டுன்னு நினைவுக்கு வராது.
எல்லாரும் திரும்பத் திரும்பச் சொல்ற மாதிரி இந்த வலையுலகத்துல வந்ததுக்கு எனக்கு கிடைச்ச மிகப்பெரிய நன்மை நண்பர்கள்தான். சின்ன வயசுல புத்தகங்கள்ல (குமுதம்?) பேனா நட்பு அப்படின்னு ஒரு பகுதி வரும். அப்போவெல்லாம் எப்படிடா முகமே பாக்காம இப்படி பிசிராந்தையர் கணக்கா நட்பு வெச்சிக்க முடியும்னு நெனப்பேன். ஆனா இன்னிக்கு எனக்கே அந்த மாதிரி யு.எஸ், அமீரகம், சிங்கப்பூர், மலேசியா இப்படி உலகம் முழுக்க நண்பர்கள், நெறைய பேரை ஃபோட்டோல பாத்ததோட சரின்றது ஆச்சர்யமான விசயம்.
பதிவுகள் எழுத ஆரம்பிச்சப்புறம்தான் எனக்கே இந்த அளவு தமிழ் சரளமா எழுத வரும்னு தெரிய வந்தது. எழுத ஆரம்பிச்சி ஒரே வருசத்துல விகடன்ல ரெண்டு முறை என்னோட கதைகள் வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம். அதுக்கு முக்கியக் காரணம் நான் மொக்கையாவே எழுதுனாலும் "நல்லா இருக்கு, இன்னும் நிறைய எழுது"ன்னு சொல்லி ஊக்கப்படுத்துற என் பதிவுலக நண்பர்கள்.
தேங்ஸ் பதிவுலகம்.
இந்த அறிமுகத்துல என்னோட பதிவுகள்ல எனக்கு புடிச்சதை அறிமுகப்படுத்தனுமாமே.. நான் எழுதறது எல்லாமே நல்லாத்தான் இருக்கும் (சரி..சரி..) இருந்தாலும் இதுவரைக்கும் படிக்காதவங்களுக்காக ஒரு சில பதிவுகள்.
டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!
மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை): நான் எழுதுனதுலயே பர்சனலா எனக்கு ரொம்பப் பிடிச்சக் கதை இது. ஆனா கம்ப்யூட்டர் ஃபீல்ட்ல இருக்குறவங்களைத் தவிர மத்தவங்களுக்கு இது புரியறது கொஞ்சம் கஷ்டம். முடிஞ்சா பின்னூட்டங்களையும் ஒருதடவை வாசிச்சிப் பாருங்க.
கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்: அப்பப்ப நடக்குற நிகழ்வுகளை எழுதலாம்னு நெனச்சப்ப ஆரம்பிச்சது இது. இந்த பதிவுக்கப்புறம் வேற எதுவும் எழுத முடியலை. வழக்கம்போல ஆணி அதிகம் அப்படின்ற பாட்டுதான்.. :)
சரி.. இன்னைக்கு இந்த மொக்கை போதும். இந்த வாரம் முழுக்க வலைச்சரத்துல மீட் பண்ணலாம். நன்றி..
முதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபேனா நட்பு அப்படின்னு ஒரு பகுதி வரும். அப்போவெல்லாம் எப்படிடா முகமே பாக்காம இப்படி பிசிராந்தையர் கணக்கா\\
ReplyDeleteஆஹா! பழைய நினைவுகளை மீட்டெடுக்க செய்து விட்டீர்கள்.
எனக்கு நிறைய இருந்தாங்க.
பாட்னர் மீ த ஃபர்ஷ்ட்டு போடலாம்னு பார்த்தா இங்க ஒருத்தன் எப்பவும் பட்டறை போட்டு உக்காந்து இருக்கான்
ReplyDelete:((
வாழ்த்துகள்
ReplyDeleteவாரம் முழுக்க வழக்கம் போல கலக்கிட என் வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteவாழ்த்துகள் !!!
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துக்கள் !
ReplyDeleteமுதல் நாளை எப்படியோ சமாளிச்சீட்டிங்க...
வாங்க வெண்பூ வாங்க! :)
ReplyDeleteவாங்க வெண்பூ...
ReplyDeleteவாழ்த்துகள்!!!
உங்க கிட்ட நிறைய எதிர்ப்பாக்கறோம்....
ReplyDelete(இப்பிடி உசுப்பேத்தியே வலைச்சரம் வரைக்கும் கொண்டாந்து விட்டாச்சு !!)
வாழ்த்துகள் வெண்பூ :-)
ReplyDeleteதோழமையுடன்
பைத்தியக்காரன்
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteபாட்னர் மீ த ஃபர்ஷ்ட்டு போடலாம்னு பார்த்தா இங்க ஒருத்தன் எப்பவும் பட்டறை போட்டு உக்காந்து இருக்கான்\\
ஹா ஹா ஹா
பார்னர்ன்னா பப்ளிஷ் பன்றதுக்கு முன்னே வந்து இருக்கனும், அல்லது நீங்க தான் பப்ளிஷ் செய்யனும்
ஹையோ ஹையோ!
சரி போகட்டும் போ! நாளை முதல் நீயே ...
வாழ்த்துகள் :))))
ReplyDeleteவாழ்த்துக்கள் வெண்பூ.....
ReplyDeleteஎன் பெயர் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என்று சொன்னதைப் பார்த்தால் இப்ப சொல்வீங்கன்னு நினைச்சா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
வெண்பூ,
ReplyDeleteவாழ்த்துகள். ஒரு வாரம் கலக்கு.
அனுஜன்யா
வாழ்த்துகள் வெண்பூ.
ReplyDeleteவேலை பளுவா ராசா? அப்புறம் ஸ்கிரின் ஷாட் எடுத்து பதிவா போட நேரிடும் ஜாக்கிரதை!
ReplyDeleteவாழ்த்துகள் வெண்பூ :)
ReplyDeleteநானும் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன். நீங்க சொல்லியிருப்பதுல ஒரு விஷயத்துல நானும் சேம் ப்ளட். பதிவெழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கும் தமிழ் சரளமா வரும் என்பதே எனக்குத் தெரிந்தது.
ReplyDeleteவாங்க வாங்க வெண்பூ... கலக்குங்க.. மறக்காம கடைசி நாள் எனக்கு ரொம்ப புடிச்ச பதிவர்ன்னு எம்பேர போடுங்க. சரியா?
ReplyDeleteநன்றி ஜமால்..
ReplyDeleteவாங்க அப்துல்லா.. அவரு போஸ்ட் போடுறதுக்கு முன்னாலயே "மீ த பஷ்டூ" போட்டுடறாரான்னு சந்தேகமா இருக்கு :))
நன்றி திகழ்மிளிர், ராமலக்ஷ்மி, சதங்கா..
//
மயாதி said...
முதல் நாள் வாழ்த்துக்கள் !
முதல் நாளை எப்படியோ சமாளிச்சீட்டிங்க...
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
வாங்க சென்ஷி, வெட்டி, மஹேஷ்..
//
உங்க கிட்ட நிறைய எதிர்ப்பாக்கறோம்....
(இப்பிடி உசுப்பேத்தியே வலைச்சரம் வரைக்கும் கொண்டாந்து விட்டாச்சு !!)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
நன்றி பைத்தியக்காரன், ஜி3, தமிழரசி..
ReplyDelete//
தமிழரசி said...
வாழ்த்துக்கள் வெண்பூ.....
என் பெயர் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என்று சொன்னதைப் பார்த்தால் இப்ப சொல்வீங்கன்னு நினைச்சா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
//
புதன்கிழமை போஸ்ட்ல ரெடியாகிட்டு இருக்கு :)))
வாங்க அனுஜன்யா, பாலராஜன் கீதா, குசும்பன்,
//
குசும்பன் said...
வேலை பளுவா ராசா? அப்புறம் ஸ்கிரின் ஷாட் எடுத்து பதிவா போட நேரிடும் ஜாக்கிரதை!
//
குடும்பத்துல குண்டு வெச்சிடாத ராசா.. :))
நன்றி நிலாரசிகன்..
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்.. சேம்பிளட்?? ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே தமிழ் சரளமா வருது, பின்ன ஒரு வாரத்துக்கு 10 பதிவாவது போட்டுடுறீங்களே!!! :))))
//
கார்க்கி said...
வாங்க வாங்க வெண்பூ... கலக்குங்க.. மறக்காம கடைசி நாள் எனக்கு ரொம்ப புடிச்ச பதிவர்ன்னு எம்பேர போடுங்க. சரியா?
//
எனக்கு புடிச்ச பதிவர்னு உம்பேரையா? ஏன் சொல்ல மாட்ட... பேசிக்கிறண்டி, இருக்குது உனக்கும் ஒரு போஸ்ட் இந்த வாரத்துல..
வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் எழுத்தாளர் வெண்பூ!!!!!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆப்பீசர்!
ReplyDeleteஉங்க கடையை ஒழுங்க திறக்கவே வழியைக்காணோம். இதில் வலைச்சர ஆசிரியர் பணியா? ஒழுங்க வரலைன்னா தெரியும் சேதி.!
ReplyDeleteவாங்க வெண்பூ வாங்க!
ReplyDeleteவாழ்த்துகள் வெண்பூ!
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்கள்!
அன்புடன்,
ஜோதிபாரதி.
வாழ்த்துக்கள் வெண்பூ...தொடருங்கள் !
ReplyDelete'வெண்பூ' எனும் அழகிய புனைபெயர் யார் வைத்தது எனச் சொல்லியிருக்கலாமே? மிகவும் ரசனைக்குரிய பெயர் நண்பரே !
நன்றி அமுதா, வெயிலான், மங்களூர் சிவா, ச்சின்னப்பையன், ஜோதிபாரதி...
ReplyDeleteஆதி, என்ன செய்யுறது, நம்ம கடையில ஒண்ணும் போடலைன்னாலும் இங்க அப்படி முடியுமா, கண்டிப்பா தினமும் பதிவு கியாரண்டி...
வாங்க ரிஷான்..
//
'வெண்பூ' எனும் அழகிய புனைபெயர் யார் வைத்தது எனச் சொல்லியிருக்கலாமே?
//
அவசியம் இந்த வாரத்துலயே சொல்லிடுறேன், பதிவு ஏற்கனவே ரெடி.. :)))
முதல் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteவாங்க வாங்க!
ReplyDeleteஉங்களைத்தான் தேடிகிட்டு இருந்தோம்!
வாழ்துக்கள் தல
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துக்கள் வெண்பூ!
ReplyDelete