அனைவருக்கும் வணக்கம்!!! வலைச்சரம் வழியாக பல அருமையான பதிவுகள் எனக்கு அறிமுகம் ஆகி உள்ளன. வலைச்சரம் தொடுக்க அழைத்து ஊக்கமளித்த சீனா அய்யா அவர்களுக்கும் வலைச்சர குழுவினருக்கும் எனது நன்றிகள். என்னைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் எனது பணியைத் தொடங்குகிறேன்.
மகிழ்ச்சியாகவோ வருத்தமாகவோ இருக்கும் பொழுது கையில் கிடைக்கும் காகிதத்தில் கிறுக்கி கவிதை/கட்டுரை என்பேன். அதையும் என் தோழியர் படித்து நன்றாக எழுதுவதாகத் தந்த ஊக்கம் தான் என் வலைப்பூவிற்கு முதல் படி. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். முல்லையின் "சித்திரக்கூடம்" கண்டு மகிழ்ந்து, அவர் உதவியோடு எனது "நட்சத்திரங்களை" பத்திரமாக மின்னச் செய்யவே "என் வானம்" உருவானது. "நட்சத்திரங்கள்", இன்றும் என்றும் எனக்குப் பிடித்த எனது பதிவு. இன்று வலை வழியாக அறிமுகமான பதிவர்கள் பலரும் கொடுக்கும் ஊக்கமே என் வலைப்பூவைத் தொடர உறுதுணையாக இருக்கின்றது; வலைச்சரம் தொடுக்கவும் ஊக்கமளித்துள்ளது. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என் பதிவுகளில் சற்றே வித்யாசமாக எனக்கு தோன்றிய பதிவுகள், என் குழந்தைகளிடம் நான் கற்றுக் கொண்டவை பற்றியது:
கற்றுக் கொடுங்கள், கற்றுக் கொள்ளுங்கள் I
கற்றுக் கொடுங்கள், கற்றுக் கொள்ளுங்கள் II
நல்ல பின்னூட்டங்கள் வந்த கவிதைகள் சில :
வெற்று எண்ணங்கள்
ஒரு திண்ணையின் கதை
மின்சாரமில்லா ஒரு பொழுதில்
மங்கையராய் பிறப்பதற்கே
என் பெண் வளர்கிறாள்
வாழ்க்கை
மழலை இன்பம் துய்த்து எழுதிய இக்கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை:
மழலை இன்பம்
மழலை சிரிப்பு
இனி இவ்வாரம் எனக்குப் பிடித்த பதிவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
நன்றி.
முதல் நாள்
ReplyDeleteமுதல்
வாழ்த்து!
சுறுக்
ReplyDeleteநறுக்
சுய-அறிமுகம்
\\அடைந்தாலும் அடையாவிட்டாலும்
ReplyDeleteபருவம் ஒரு பிரச்சனை\\
தங்கள் கவிதையிலிருந்து ...
நல்ல அறிமுகம்.. கண்டினியூ பண்ணுங்க.. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteநீங்கள் சுட்டியிருக்கும் பதிவுகள் யாவும் நாங்களும் படித்து ரசித்தவை. பிடித்துப் பாராட்டியவை. வாழ்த்துக்கள் அமுதா! தொடருங்கள்!
ReplyDeleteகற்றுக் கொடுங்கள்,
ReplyDeleteகற்றுக் கொள்ளுங்கள் என்பது வெறும்
கட்டுரையாக
கண்ணுக்கு தெரியவில்லை
------------------
வெற்று எண்ணங்கள்,
வேதனை மட்டுமல்ல
வெறுமையும் சொல்லுகின்றது.
-----------------------
திண்ணையின் கதைக்கு
பின்னால் தான் எத்தனை
உண்மைகள் ஒளிந்துக் கிடக்கின்றன.
-----------------------------
மின்சாரமில்லா ஒரு பொழுது
இருள் போனதை விட
இல்லங்களில் மகிழ்ச்சியில்
இருப்பதையும்
இழப்பதையும்
இயம்புகிறது
--------------------------
மங்கையராய் பிறப்பதற்கே
மாபெரும் குற்றமாக
மண்ணிலும்
மனத்திறகு தெரிந்தாலும்
மழலை
மடியில் தவழும்போது,குற்றமெலாம்
மறந்து போகும்
மகத்துவத்தைச் சொல்கிறது
-------------------------
This comment has been removed by the author.
ReplyDeleteஹைய்ய் அமுதா அக்காவா இந்த வார வலைச்சரம்!
ReplyDeleteகலக்கல் :)
கண்டினியூ!
கண்டினியூ!!
ஆஹா அமுதா,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
ReplyDeleteஎனது நெஞ்சார்ந்த
ReplyDeleteவாழ்த்துகள்!
1st day wishes
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் தோழி அமுதா அவர்களூக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
உழவன்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் அமுதா!
ReplyDeleteவங்க ..வங்க ...நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
ReplyDelete