Sunday, June 21, 2009

வெண்பூவிற்கு நன்றியும் - ஸ்ரீமதிக்கு வரவேற்பும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாகக் கலக்கிய அருமை நண்பர் வெண்பூ ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ நூற்றி அறுபது மறு மொழிகள் பெற்று - பல்வேறு வகையான பதிவர்களை அறிமுகம் செய்து - ஏற்றுக் கொண்ட பொறுப்பினை மனதார நிறைவேற்றி இருக்கிறார். அவர் தனது வலைப்பூவினில் இடுகைகள் இடத்துவங்கி ஓராண்டு முடிவடைந்ததை வலைச்சரத்தினில் பெருமையுடன் கொண்டாடினார். ஓராண்டு காலமாக 34 இடுகைகளே இட்ட வெண்பூ வலைச்சரத்தினில் ஒரு வாரத்தில் ஆறு இடுகைகள் இட்டு புதிய சரித்திரம் படைத்தார்.

அவருடைய வலைப்பூவின் முதல் இடுகையிலேயே தனக்குப் பிடித்த பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். அதனடிப்படையில் வலைச்சர ஆசிரியராகக் கலக்கி விட்டார்.

அவர் மேன்மேலும் இதே வேகத்தில் இடுகைகள் இட வாழ்த்தி வழி அனுப்புகிறோம்.

அடுத்து 22ம்நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க சகோதரி ஸ்ரீமதி வருகிறார். இவர் தனது வலைப்பூவான கரையோரக் கனவுகளில் "தன் பெருமை தானறியாதவராக" பல்வேறு வகையான இடுகைகள் இட்டு வருகிறார். ஏறத்தாழ 120 இடுகைகள் அவரது வலைப்பூவினில் இட்டிருக்கிறார்.

அவரை வருக வருக - புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வாழ்த்தி வரவேற்கிறோம்.

நன்றி

நட்புடன் .... சீனா
--------------------------

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. எனக்கு வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும், படித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் நன்றி..

    நான் இரண்டு நாட்களுக்கு முன் வலைச்சரத்தில் நான் சுட்டிய ஸ்ரீமதியே என்னைத் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம்.

    ஸ்ரீமதிக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. நன்றிகள் வெண்பூ!
    வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

    ReplyDelete
  4. ஸ்ரீமதி! நேரமில்லைன்னு ஜகா எல்லாம் வாங்கக் கூடாது.. ஒழுங்கா டெய்லி ஒரு பதிவாவது போடனும்..

    கவிஞர் ஸ்ரீமதி ரசிகர் மன்றம் சார்பாக

    ReplyDelete
  5. ஸ்ரீமதி! நேரமில்லைன்னு ஜகா எல்லாம் வாங்கக் கூடாது.. ஒழுங்கா டெய்லி ஒரு பதிவாவது போடனும்..

    கவிஞர் ஸ்ரீமதி ரசிகர் மன்றம் சார்பாக


    வழிமொழிகிறேன் ஸ்ரீமதி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி வெண்பூ அவர்களே.....கலக்கிட்டீங்க.....ஆமா நீங்கள் சேலம் என்று கேள்விபட்டேன், அப்படியா?

    ReplyDelete
  7. வெண்பூவிற்கு நன்றி.

    ஸ்ரீமதிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. வெண்பூ அவர்களுக்கு நன்றி ..... !!


    ஸ்ரீ மதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....!!!!!!

    ReplyDelete
  9. நன்றிகள் வெண்பூ!
    வாழ்த்துக்கள் ஸ்ரீமதி!

    ReplyDelete
  10. கலக்கலாய் தொகுத்தளித்த நண்பர் வெண்பூவிற்கு நன்றி..

    அடுத்து வரும் ஸ்ரீமதிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. // sakthi said...

    ஸ்ரீமதி! நேரமில்லைன்னு ஜகா எல்லாம் வாங்கக் கூடாது.. ஒழுங்கா டெய்லி ஒரு பதிவாவது போடனும்..

    கவிஞர் ஸ்ரீமதி ரசிகர் மன்றம் சார்பாக//

    எத்தனையாவது மன்றமப்பா அது.. தலைமையில சொல்லி அப்ரூவல் வாங்கிட்டீங்களா இல்லையா!

    ஆயில்யா, இதைக்கூட கவனிக்காம நீ எங்க கும்மிக்கினு இருக்க. :)

    ஸ்ரீமதி கொலைவெறிகவுஜ மன்றம்
    ஷார்ஜா

    ReplyDelete
  12. //ஸ்ரீமதி கொலைவெறிகவுஜ மன்றம்//

    may i come in?

    ReplyDelete
  13. //ஸ்ரீமதி கொலைவெறிகவுஜ மன்றம்

    எதிர்காலத்தில் அரசியல்ல குதிக்கிற ஐடியா இருந்தா நானும் சேர்ந்துக்கிறேன். ;)

    ReplyDelete