வாழ்க்கை பலவகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகைல என்னை எனக்கு அழகா காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த கரையோர கனவுகள் தான். இதை தொடங்கும் போதும் சரி, என் நான் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு இன்னும் அடங்கினப்பாடில்லை. என் வலைப்பூ ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் தொடங்கினேன்.) கவிதைக்கும் எனக்குமான தொடர்பு படிப்பதோடு மட்டுமே நின்றிருந்தது. (இன்றளவும் நான் எழுதுவது கவிதை என்றெல்லாம் சொல்லி உங்களைக் கொடுமைப்படுத்தமாட்டேன்.. ;-) )
"கரையோரக் கனவுகள்" தலைப்பும் நான் தேடி அலையவில்லை.. (அப்பறம் இதுக்கு விளக்கம் தான் தேடி அலைஞ்சேன் என்கிறது ரகசியம்.. ;-))வலைப்பூ ஆரம்பிச்ச பிரமிப்பே எனக்கு அடங்கல அதுக்குள்ள முதன்முதல்ல வலைச்சரம்ல என் வலைப்பூ அறிமுகம் புதுகை தென்றல் அக்கா செய்தாங்க. நாலைந்து முறை அது நான் தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன்.. ;-)) அப்படிப்பட்ட வலைப்பூவில் இன்னைக்கு நான் எழுதறது ரொம்ப பெருமையா இருக்கு வாய்ப்பளித்த சீனா அண்ணாவுக்கு நன்றி.. :-)))
இப்படியாக என் பிரமிப்பு தொடர்ந்தாலும் நான் உருப்படியா எழுத ஆரம்பிச்சது, யாரோ நாமளும் எழுதுரோம்ன்னு படிக்கிறாங்கன்னு தெரிஞ்ச பிறகு தான். அத தெரிஞ்சிக்க உதவினவங்க நிஜமா நல்லவன் அண்ணா, தமிழ் பிரியன் அண்ணா, ஆயில்யன் அண்ணா.
இதுதான் நான் வலைப்பூ தொடங்கின கதை ;-)) (இனி தான் கொடுமையே... அதாவது நான் என்னென்ன எழுதிருக்கேன் அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லபோறேன் வித் லிங்க்கோட.. ;-))
ஊமைக்காதல் உண்மையாகவே காதலுக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ எழுதணும்ன்னு தொடங்கிட்டோமே வலைப்பூவ எழுதிதான் ஆகனும்ன்னு இத எழுதினேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது.. ;-))
இதே பாணியிலே கவிதை எழுதிட்டு போனாலும். அதிலிருந்து கொஞ்சம் தடம் மாறிய இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருந்தது, அப்பவும், இப்பவும்.
கவிதை மட்டுமே எழுதி கொடுமைப்படுத்திட்டு இருந்த நானும் கொஞ்சம் தடம் மாறி எழுதின மொக்கைகள் இப்பவும் அடிக்கடி படிச்சு பார்த்து கண்டிப்பா இதவிட இன்னும் மொக்கையா எழுதணும்ன்னு நினைச்சதுண்டு. ;-)) அந்த வரிசையில் நான் என்னோட கல்லூரி காலத்துல பண்ண இந்த விஷயம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். (இன்னும் நிறைய எழுதனும்.. கொஞ்ச நஞ்சமா பண்ணது?? ;-)))
இதே மொக்கைகள்ல தான்.. ஆனா, ஒரு சீரியசான தொடர் விளையாட்டு அது. எல்லாருக்குமே பிடிசிருந்ததுன்னாலும் அந்த தொடர்விளையாட்டுக்கு என்னை அழைத்த செந்தில் அண்ணா ரொம்ப கவலைப்பட்டுருப்பார். ;-))
ரொம்ப மொக்கையா பதிவு போட்டுக்கிட்டு, ஜாலியா கவிதை எழுதிட்டு உருப்படியா இருந்த பொண்ண புனைவு எழுத சொன்னார் சென்ஷி அண்ணா. விளைவு இதோ. :-)) இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு தான். தேங்க்ஸ் டு சென்ஷி அண்ணா.. :-))
அதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் சீரியஸா எழுத ஆரம்பிச்சேன்னு நினைக்கிறேன். கவிதை மாதிரின்னு எழுதின இந்த கவிதைகள் எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதைகள்.
நாம் செய்யும் எந்த ஒரு வேலையுமே அது ரொம்ப சின்ன வேலையா இருந்தாலுமே அதுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அந்த வகைல உயிர்மை மின்னிதழில் வந்த என் இந்த கவிதைகள் Feather in my cap-ன்னு தான் சொல்லணும். :-))
இது வரை சொன்னதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தவைகள், பிடித்தவைகள் நிறைய இருக்கு. அப்பறம் என் ப்ளாக் முழுசையும் இங்க கொண்டுவர வேண்டியிருக்கும்.. ;-)) அதானால, என் சுயபுராணத்த இதோட நிறுத்திட்டு இன்னுமொரு நல்ல அறிமுகப்பதிவோட உங்கள சந்திக்கிறேன்.. :-)) நன்றி..! நன்றி..! நன்றி..!-அன்புடன்,
ஸ்ரீமதி.
மீ த பர்ஸ்டா வாழ்த்து சொல்லிக்கறேன்
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீ!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீமதியக்கா
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீ
ReplyDeleteவெல்கம் ஸ்ரீமதி மேடம்!
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்ரீமதி! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீமதி! :-) :-)
ReplyDeleteவெல்கம் ஸ்ரீமதி !
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீமதி.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்ரீமதி! :-)
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிகள் :)))
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரி
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்ரீமதி..
ReplyDeletevivek.j
வாவ்! மீண்டும் கவிஞருக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன்... :)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ் உங்க கவிதையைப் படிப்பவர்கள் இதுக்கெல்லாம் இவெங்க மூணு பேருதாய்யா காரணம்ன்னு எங்களை அடிக்க வரப் போறாங்க.. ;-))
ReplyDeletegood morning madam..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீமதி
ReplyDeleteBonsoir madame!!
ReplyDeletenaanga french la solluvomla!
Congrats!!
அன்பின் ஸ்ரீமதி
ReplyDeleteசுய அறிமுகம் அருமை
வலைப்பூ அரம்பித்து ஒரு மாத காலத்திற்குள் வலைச்சரத்தில் அறிமுகம் - ஸ்ரீமதியின் பெருமை பேசவும் பெரிதோ
ஒவ்வொரு சுட்டியுமே நல்ல இடுகைகளை அறிமுகப்படுத்துகிறது
நல்வாழ்த்துகள் ஸ்ரீமதி
வாழ்த்துகள் ஸ்ரீமதி!
ReplyDelete/வலைப்பூ அரம்பித்து ஒரு மாத காலத்திற்குள் வலைச்சரத்தில் அறிமுகம் - ஸ்ரீமதியின் பெருமை பேசவும் பெரிதோ/
ReplyDelete????????
வலைச்சரம் கோர்க்க சொன்னா முதல் பதிவுலயே ஸ்மைலி போடறேன்னு :) இப்படி ஒரு ஸ்மைலி போடாம :)) எக்ஸ்ட்ராவா 17 ஸ்மைலி போட்டிருக்கீங்களே அவ்ளோ ஆனந்தமா பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
ReplyDelete(யாருப்பா அது கை தட்றது என்னது எண்ணினது கரீக்டா இருக்கா அவ்வ்வ்வ்)
வாழ்த்துக்களுங்க அம்முனிங்கோவ்......!!!
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்ரீமதி
ReplyDeleteவாவ், வலைச்சரத்தில் நம்ம தங்கச்சி. சூப்பர் மா. இந்த வாரம் கலக்கு.
ReplyDeleteஅனுஜன்யா
ரொம்ப நாளைக்கப்புறமா வலைச்சரம் பக்கத்துக்கு பின்னூட்டம் எழுத வந்திருக்கேன்..:)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்ரீமதி...
ரொம்ப லேட்டுதான்..
ReplyDeleteஇருந்தாலும்..
வாழ்த்தத்தான் வயது தேவையே தவிர
வாழ்த்துக்கு வயதில்லையே..
ஆகவே...
வாழ்த்துக்கள்!
உங்களுக்கு பின்னூட்டம்கூட
கவிதை மாதிரிதான்
வருது...!
(இது கவிதையா?ன்னு கேட்டு கலாய்ச்சாலும் சரி) :))