கவி - கவிதை மற்றும் கவிஞர்கள் இரண்டிலும் நான் ரசித்தவைகள் ரசித்தவர்களை அறிமுகப்படுத்துவதால்...
அதென்னவோ சிறுவயது முதலே பாடல்கள் மற்றும் கவிதைகளில் எனக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம். (எழுத இல்ல... படிக்க). நான் அதிகம் விரும்பி வாசித்த புத்தகங்களில் கவிதை புத்தகங்கள் தான் அதிகம். அந்தவகையில் புத்தகம் கிடைக்காத நாட்களில் விருந்தாக அமைந்தது வலைப்பூ கவிதைகள் தான்.
அதிகம் யாருக்கும் தெரியாத இவரின் கவி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை தேவதைகள் முட்டாள்கள் (என்ன ஒரு கொலைவெறி?? :-)) என்கிற பெயரில் வலைப்பூ எழுதிவரும் ராகவேந்திரனின் கவிதைகள் அருமை. சமீபத்திய இவரின் பூனைக்குட்டி , முதல் நாள் மற்றும் இன்றைய அரசியல்வாதிகள் பற்றி இவர் எழுதிய இந்த கவிதை என்னை மிகவும் கவர்தவை உண்மை சொல்லவேண்டுமெனின் பட்டியல் மிகப்பெரிது. :-))
அடுத்து இவர் ஒரு எதார்த்த கவிஞர்ன்னு சொல்லலாம். அதிகம் எழுதுவதில்லை. எனினும் எழுதியவற்றில் எனக்கு பிடித்த கவிதைகள் ஏராளம். TKB காந்தி தாரணை எனும் பெயரில் வலைப்பூவில் எழுதிவருகிறார். கவிதைகள் மட்டுமல்ல அழகான புகைப்படங்களும் இவரின் கைவண்ணத்தில் உருவானவை. சமீபத்திய இவரின் போதிமரம் கவிதை மற்றும் பல கவிதைகள் என்னைக் கவர்ந்தவை. வித்தியாசமான கவிதைகள் இவருடையது. இவரின் பல கவிதைகள் உயிர்மையை அலங்கரித்துள்ளது.
இவரின் கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கைப்பதிவுகளை படித்த எவரும் இவ்வளவு உருகி இவர் கவிதை எழுதுவார் என நம்புவது கொஞ்சம் கடினமே. அந்த வகையில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் ஆதி அண்ணா. முதல் முத்தம் கவிதை கொஞ்சமே எனினும் மிக எதார்த்தம் அதனினும் அதிகம் காதல். இன்னும் எழுதலாம். :-)) மற்ற கவிஞர்களை மனதுவிட்டு பாராட்டுவதிலும் முதலிடம் இவருக்கே. :-))
இவரின் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகள் மற்றும் எதிர் கவிதைகள் என்னை மிகக்கவர்ந்தவை. கவிதையும் எழுதலாம். பார்ப்போம் :-))
எனக்கு பிடித்த, நான் ரசித்த கவிதைகளின் பட்டியல் கொஞ்சம் பெரிது. எனினும் இப்பொழுது பதிவின் நீளம் கருதி இதோடு முடிக்கிறேன். நன்றி..!
இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅண்ணன் ஆதிக்கு புகழ் மாலை சூட்டிய உங்களுக்கு நன்றி.
இப்படிக்கு அகில உலக ஆதி விசிறிகள் சங்கம்
ஆதியும், ஆயில்யனும் தெரிந்தவர்கள் மற்ற இருவர்களும் புதிது.
ReplyDeleteநன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteஅண்ணன் ஆயிலையும் கவிஞர்கள் பட்டியலில் ஏற்றி வலைச்சரத்தை கொண்டாட வைத்த உங்களுக்கு என் நன்றிகள்..
ReplyDeleteகொலவெறி எதிர் கவுஜ பேரவை
சென்ஷி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநானு கவிஞரா
ஐய்யய்யோ எனக்கு தலையெல்லாம் சுத்துதே மயக்கம் மயக்கமா வருதேஏஏஏஏஏஏஏஏஏஎ
தங்கச்சி ஏம்ம்மா!ஏன்
ReplyDeleteஏனிந்த கொலவெறி சைலண்டா போஸ்ட டெலிட் கூட செஞ்சிருப்பேனே ஒரு வார்த்தை சொல்லியிருந்தீன்னா :((
//கொலவெறி எதிர் கவுஜ பேரவை
ReplyDeleteசென்ஷி//
ஐ லைக் திஸ் பேரவை
நானும் இஸ்டார்ட்டு பண்ணிக்கிட்டா எசமான்???
கொலவெறி எதிர் கவுஜ பேரவை
ReplyDeleteதோஹா கத்தார்
ஆரம்புச்சுப்புட்டோம்ல்ல்ல்ல்ல்ல :))
//இப்படிக்கு அகில உலக ஆதி விசிறிகள் சங்கம்
ReplyDelete/
அய்யோ அய்யோ..
ஆயில்யன் said...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நானு கவிஞரா
ஐய்யய்யோ எனக்கு தலையெல்லாம் சுத்துதே மயக்கம் மயக்கமா வருதேஏஏஏஏஏஏஏஏஏஎ
மீ த சேம் பீலிங்க்ஸ் அண்ணா.
நானும் ராகவேந்திரனின் கவிதைகளுக்கு பெரும் ரசிகன். ராகவேந்திரனின் வலைப்பதிவை இங்கு குறிப்பிட்டமைக்கு மகிழ்ச்சி...
ReplyDeletepresent mam. cool links. :)
ReplyDelete(pardon for english)
வலைச்சர வாழ்த்துக்கள், ஸ்ரீ.. இங்கேயும் கலக்கவும்..
ReplyDeleteநன்றி ஸ்ரீமதி.. :-)
ReplyDeleteநன்றி கிர்பால்.. :-)
வலைபூவிற்கு வந்துசென்ற அனைவருக்கும் அளவுக்கடந்த நன்றிகள்.. :-))))
பின்னூட்டத்தில் ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள். :))
ReplyDeleteஎன்னையும் ஒரு கவுஞன்னு மதிச்சு சபையில் பாராட்டியிருக்கீங்க.. ஒரே அழுவாச்சியா வருதுங்க ஸ்ரீமதி.
ReplyDeleteஅப்புறம் இங்கன வந்தும் விசிறி சங்க தொண்டர்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்வது கண்டு பில்லரிக்கிறது. தேங்ஸ் ஜானி. பாத்தீங்களா? கார்க்கிக்கு பொறாமையை.. உடக்கூடாது. சங்கம் வளரணும். அப்புறம் சங்கம் நற்பணி மன்றமா மாறணும். அப்புறம் என்னவா மாறும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.