Tuesday, July 14, 2009

வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-2

வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-2

வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
பதிவர்களிடையே தனித்திறமைகள் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் இருக்கதான் செய்கின்றது. அவற்றையெல்லாம் தொகுக்கவேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் நேரமும் உடல் ஒத்துழைப்பும் இல்லாததால் முடிந்தமட்டும் சில தோகுப்புகள் கொடுத்துவிடவேண்டும் எண்ணத்தில் தொகுக்கப்பட்டதுதான் இந்த தொகுப்புகள். எத்தனையோ பதிவுகள் இடுக்கைகள் படித்தாலும் ஒரு சில இடுக்கைகள் நம் மனதிற்கு பிடித்துவிடும். அப்படிப்பட்ட இடுக்கைகளின் சுட்டிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது....


1.இவரை பற்றி அறிமுகம் தேவையில்லை நல்ல துடிப்புள்ள இளைஞி. யாழ்பாணம் சொந்த இடமாக இருந்தாலும் தற்பொழுது வசிப்பு சுவிஸ்சர்லாந்து. நல்ல இடுக்கைகளை பார்த்து ஓடோடி வந்து பின்னூட்டம் இடுவார். இவரது கவிதைகள் ஆழமான கருக்களை கொண்டிருக்கும். இவரை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . ஆமாங்க அவர்தான் ஹேமா, வானம் வெளித்த பின்னும் என்ற தளத்தில் இருக்கின்றார். இவரின் மற்றொரு தளம் உப்பு மடச்சந்தி... இவரின் தளத்தைப் பார்க்க படத்தை தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.சுனாமியும் ஒரு பெண்ணும்
2.தகற்கப்பட்ட நம்பிக்கைகள்
3.நாசமாய் போக
4.வேண்டும் ஒரு சிற்பியும் உளியும்


2. இவர்
பொதிகை சாரல் வீசும் திருநெல்வேலி பக்கமிருந்து வலையில் கலக்கிகொண்டிருப்பவர். இணையத்தில் ஏற்பட்ட குழப்பதிற்கு பின் மீண்டும் வந்து கலக்கிகொண்டிருக்கும் நல்ல நண்பர். இவர் பற்றி எனக்கு பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும். இவரின் கடையம்-கோயபேடு பயணக்கட்டுரை அழகாக இருக்கும். இவர்தான் நம்மகடையம் ஆனந்த், இவரின் தளம் மனம் . இவரின் தளத்திற்கு செல்ல படத்தில் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.ரெயிலில் செல்கிறீர்களா?கவனம்.

2.கடையம் -கோயம்பேடு
3. பெண்ணே நீ
4.நீயும் குழந்தை நானும்!


3. இவரை எனக்கு பின்னூட்டங்களில் தான் பழக்கம் என்றாலும் மிகவும் பரிச்சயமான நட்பு. ஓடோடி வந்து படித்து பின்னூட்டம் இடுவார், இவரின் பின்னூட்டம் மீண்டும் எழுத ஊக்கம் கொடுக்கும். இவர் பெயரை பார்த்ததும் எனக்கு அலைபாயுதே திரைப்படம் ஞாபகம் வரும். ஆமாங்க நீங்கள் நினைப்பவரும் அவரேதான் சக்தி, இவரின் தளம் வீட்டு புறா. இவரின் தளத்திற்கு செல்ல படத்தில் மேல் தட்டுங்கள்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.உனக்காய் ஒரு அழகிய பிரபஞ்சம்
2.நெஞ்சு பொறுக்குதில்லையே
3.அவளோடன என் நாட்கள்
4.இதயம் ரணமானது


4. திருமணத்திற்காக காத்திருக்கும் நல்ல இளைஞர். பேராசிரியராக திருப்பூரில் வேலைச்செய்கின்றார். இவரின் திரைப்பட விமர்சனம் கலக்கலாக இருக்கும். பொதுவா எல்லா படங்களையும் பார்த்துவிடுவார் போல இருக்கின்றது. திருச்சியில் பதிவர் சந்திப்பில் நான் சந்திருக்கின்றேன். பழக்கதிற்கு நல்ல மனிதர். கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பார் என்றே நினைக்கின்றேன், மிமிக்கிரி எல்லாம் செய்கின்றார். அலைபேசியில் பல முறை பேசியுள்ளோம், அந்த நல்ல உள்ளம் கார்த்திகைப் பாண்டியன், இவரின் தளம் பொன்னியின் செல்வன். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.காணாமல் போன விளையாட்டுகள்
2.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அபத்தங்கள்
3.ஜாதிகள் இல்லையடி பாப்பா
4.கடவு-எஸ்ரா,கோணங்கி மற்றும் தமிழ்நதியின் விவாதம்


5. இவரின் கவிதை எல்லோருக்கும் புரியும்படி இருக்கும், சென்னையில் வசித்து வருகின்றார். இவரை எனக்கு பின்னூட்டங்களில்தான் தொடர்பு, இவரின் பின்னூட்டம் ஒரு சிறந்த இடுக்கைப்போல இருக்கும். இவரின் இடுக்கைகள் சமூகம் சார்ந்தே இருப்பது மிக சிறப்பு. அடிக்கடி இடுக்கை இடாவிட்டாலும் நல்ல இடுக்கைகள் வரும். அவர்தான் சில கவிதைகள் உமா, இவரின் தளம் சில கவிதைகள். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்..

அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு
2.புத்தாண்டே வருக
3.ஈழ தமிழா எழு
4.மனம்மயக்கும் மாயத் தமிழ்


6. கவிதைகளில் ஆர்வம் சமுகபார்வையில் அக்கறையும் கொண்டவர். வாசிப்பு மற்றும் எழுத்து இவரின் பொழுதுபோக்கா இருக்கின்றது. திருச்சி பதிவர் சந்திப்பின் இவருடன் பேசியுள்ளேன். இலக்கிய ஈடுபாடுமிக்க பண்பாளார், இப்படி இவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்தான் பொன். வாசுதேவன், இவரின் தளம் அகநாழிகை. இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.கூத்தாண்டவர் திருவிழா: அரவாணிகளின் வாழ்வும்.. தாழ்வும்
2.ஏசுநாதரும்... வாசுதேவனும்..
3.வன்முறையும் வாழ்க்கையும்


7. ரசனையான கவிதைகளுக்கு சொந்தக்காரர். சமீப காலமாக பதிவிடுவதை குறைத்துள்ளார். எனக்கு அவரை பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும், சில மின்னஞ்சல்கள் எனக்கு அனுப்பியுள்ளார். தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுள்ளவர் என்பது அவர் எழுத்துகளில் தெரியும். இவர் காதல் கவிதைகள், சமுக கவிதைகள் என எழிய நடையுடன் எழுதியுள்ளார். அவர்தான் நண்பர் ஷீ-நிசி, அவர் ஷீ- நிசி கவிதைகள் என்ற தளத்தில் எழுதுகின்றார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.காதல் காலம்
2.கரையோர மீன்கள்..
3.உடைந்த ஜாடி
4.அப்பா


8. குடும்பம் குடும்பம் சார்ந்த பதிவுகள், அனுபவம் அனுபவத்தின் பகிர்வுகள் என தனது தளத்தை ஒரு குடும்ப குறிப்புகளாகவும் சமுக குறிப்புகளாகவும் நம்மிடையே பகிர்ந்து கொள்ளும் நல்ல படைப்பாளி. கோவையில் வசிப்பவராக தெரிகின்றது. எனது அனேக இடுக்கைக்கு பின்னூட்டம் எழுதுவார், ஒரு எதார்த்தமான எழுத்துக்கு சொந்தக்காரர் அவர்தான் தாரணி பிரியா. இவர் ஊஞ்சல் என்ற தளத்தில் எழுதுகின்றார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.கூட்டாஞ்சோறு
2.ஞாயிற்றுக்கிழமையும் ஒரு சபதமும்
3.பூச்சியும் நானும் ஒரு ஹாஸ்பிட்டலும்
4.செல்லங்களுக்கு ஒரு பதிவு


9. தமிழன் மீதும் தமிழ் மீதும் ஒரு பற்றுடன் எழுதும் ஒரு படைப்பாளி. இந்திய நாட்டின் தென்கோடியில் பிறந்து மாலதீவுல் பணிபுரிகின்றார். என்னுடன் அலைபேசியில் பேசியுள்ளார். இவரின் பேச்சிலிருந்து தமிழ் பற்று தெரியும். கூடிய விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இவருக்கு வலையின் சார்பாக வாழ்த்துகள் சொல்வது மகிழ்ச்சிதான், அவர்தான் சுரேஷ் குமார். இவர் என் பக்கங்கள் சுரேஷ் என்ற தளத்தில் எழுதுகின்றார். இவர் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.கண்ணைகவரும் குமரி
2.தமிழருக்கு உணவு உடை தவிர வேறெதுவும் தேவையில்லை
3.புத்தர் உயிரோடிருந்தால் சிங்கள் இனவெறிக்கு எதிராக ஆயிதமேந்திருப்பார்
4.ரத்த தானம் செய்வோம் வாழ்கையை வசந்தமாக்குவோம்


10. சமுகம் சார்ந்த பதிவு, தொழிற்சார்ந்த பதிவு, கவிதைகள் என பட்டையை கிளப்பும் பதிவர் என்றால் அது நம்ம தேவன் மாயம் சார்தான். இவரை திருச்சி பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கேன். நல்ல பண்பாளர், எல்லோரையும் பாராட்டும் நல்ல குணம் உள்ளவர். காரக்குடியில் மருத்துவராக பணிப்புரிகின்றார். இப்படி இவரை சொல்லிக்கொண்டே போகலாம். இவரின் தளம் தமிழ்துளி சமீபத்தில் டெம்பிளேட் மாற்றியுள்ளார். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்


அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.மதுவால் என்ன ஏற்ப்படுகின்றது?-2
2.போட்டியில் வெல்லுங்க சிங்கபூர் செல்லுங்க!!
3.ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?
4.மனைவி-காதலியிடம் அன்பை வளர்க்க (5) முக்கிய வழிகள்-1

இன்னும் வரும் அதுவரை
அன்புடன்
ஆ,ஞானசேகரன்


73 comments:

  1. அருமையான தொகுப்பு தோழரே. ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம். உங்க படங்கள வரிசையா போடுறதுல ஏதாவது உள்குத்து இருக்கா? ;-)))

    ReplyDelete
  2. // ச.பிரேம்குமார் said...

    அருமையான தொகுப்பு தோழரே. ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம். உங்க படங்கள வரிசையா போடுறதுல ஏதாவது உள்குத்து இருக்கா? ;-)))//

    வணக்கம் நண்பா
    உள்குத்தா எனக்கு புரியவில்லை நண்பரே

    ReplyDelete
  3. இவ்வார வலைச்சர ஆசிரியருக்கு வணக்கமுங்கோவ்..

    அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. // सुREஷ் कुMAர் said...

    இவ்வார வலைச்சர ஆசிரியருக்கு வணக்கமுங்கோவ்..

    அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள்....//

    நன்றி நண்பா

    ReplyDelete
  5. // ச.பிரேம்குமார் said...

    அருமையான தொகுப்பு தோழரே. ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம். உங்க படங்கள வரிசையா போடுறதுல ஏதாவது உள்குத்து இருக்கா? ;-)))//

    எந்த விதமான உள்குத்தும் இல்லை தோழா! எனக்கு திருமணம் முடிந்து வ்ருகின்ற செப்டம்பரில் 10 வருடம் முடிகின்றது 8 வயதில் பையன் 4 வயதில் போண்ணு இருக்காங்க...
    சும்மா இருக்கட்டுமே என்று என் படம் போட்டேன்

    ReplyDelete
  6. எத்தனையோ பதிவுகள் இடுக்கைகள் படித்தாலும் ஒரு சில இடுக்கைகள் நம் மனதிற்கு பிடித்துவிடும். \\

    உண்மை தான் நண்பரே!

    நல்லா தொகுக்குறீங்க

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அன்பின் ஞானசேகரன்

    வலைச்சர ஆசிரியப் பணி அருமையாக - சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. உழைப்பு தெரிகிறது. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. நண்பர் கார்த்திகைப் பாண்டியன் தற்பொழுது மதுரையில் பணி புரிகிறார். அவரது வலைப்பூ இவ்வார கல்கியில் கட்டுரையாக வெளி வந்துள்ளது.

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஷீ- நிசி கவிதைகள் தளமும் கல்கியால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக வடகரை வேலன் அவர்கள் பதிவில் கண்டேன். ஷீ;நிசி, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரை அதற்காகவும் வாழ்த்திடுவோம். மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் அண்ணா.,


    அருமையான தொகுப்பின் பின் பலமான வாசிப்பனுபவம் தெரிகிறது!!

    ReplyDelete
  12. வலைசர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. . இவரது கவிதைகள் ஆழமான கருக்களை கொண்டிருக்கும். இவரை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .


    ஆம் அருமையான கவிதைகளின் சொந்தகாரர்

    ReplyDelete
  14. நன்றி சேகரன் சார் பெரிய பதிவர்களுக்கு மத்தியில் எனது அறிமுகமும்

    ReplyDelete
  15. அழகான தொகுப்பு உங்கள் கடின உழைப்பு தெரிக்கின்றது தொடருங்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துகள்

    அருமை

    நல்ல தொகுப்பு

    ReplyDelete
  17. // நட்புடன் ஜமால் said...

    எத்தனையோ பதிவுகள் இடுக்கைகள் படித்தாலும் ஒரு சில இடுக்கைகள் நம் மனதிற்கு பிடித்துவிடும். \\

    உண்மை தான் நண்பரே!

    நல்லா தொகுக்குறீங்க

    வாழ்த்துகள்!//

    நன்றி நண்பா

    ReplyDelete
  18. // cheena (சீனா) said...

    அன்பின் ஞானசேகரன்

    வலைச்சர ஆசிரியப் பணி அருமையாக - சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. உழைப்பு தெரிகிறது. நல்வாழ்த்துகள்//

    நன்றி ஐயா

    ReplyDelete
  19. // cheena (சீனா) said...

    நண்பர் கார்த்திகைப் பாண்டியன் தற்பொழுது மதுரையில் பணி புரிகிறார். அவரது வலைப்பூ இவ்வார கல்கியில் கட்டுரையாக வெளி வந்துள்ளது.//

    கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. //த.ஜீவராஜ் said...

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  21. //ராமலக்ஷ்மி said...

    அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஷீ- நிசி கவிதைகள் தளமும் கல்கியால் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக வடகரை வேலன் அவர்கள் பதிவில் கண்டேன். ஷீ;நிசி, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரை அதற்காகவும் வாழ்த்திடுவோம். மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

    நன்றி நண்பா
    ஷீ;நிசி, கார்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்

    ReplyDelete
  22. //அப்பாவி முரு said...

    வாழ்த்துகள் அண்ணா.,


    அருமையான தொகுப்பின் பின் பலமான வாசிப்பனுபவம் தெரிகிறது!!//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  23. // sakthi said...

    வலைசர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி...

    ReplyDelete
  24. // sakthi said...

    . இவரது கவிதைகள் ஆழமான கருக்களை கொண்டிருக்கும். இவரை பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .


    ஆம் அருமையான கவிதைகளின் சொந்தகாரர்//நன்றி சேகரன் சார் பெரிய பதிவர்களுக்கு மத்தியில் எனது அறிமுகமும்//நன்றி சேகரன் சார் பெரிய பதிவர்களுக்கு மத்தியில் எனது அறிமுகமும்//அழகான தொகுப்பு உங்கள் கடின உழைப்பு தெரிக்கின்றது தொடருங்கள்//

    மிக்க நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  25. // திகழ்மிளிர் said...

    வாழ்த்துகள்

    அருமை

    நல்ல தொகுப்பு//

    வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  26. நன்றி நண்பரே என்னையும் அறிமுகப்படுத்தியதற்காக . அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  27. // Suresh Kumar said...

    நன்றி நண்பரே என்னையும் அறிமுகப்படுத்தியதற்காக . அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்//

    வாழ்த்துகளும் நன்றியும்

    ReplyDelete
  28. மிக அழகாக தொகுத்து வழங்கி வருகிறீர்கள். பல புதிய இணையதங்கள் தங்களால் எனக்கு அறிமுகம்- வாழ்த்துகள் ஞானசேகரன்.

    ReplyDelete
  29. // குடந்தை அன்புமணி said...

    மிக அழகாக தொகுத்து வழங்கி வருகிறீர்கள். பல புதிய இணையதங்கள் தங்களால் எனக்கு அறிமுகம்- வாழ்த்துகள் ஞானசேகரன்.//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  30. குறைந்த நேரத்தில் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்குவது சிறப்பு. வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

    ReplyDelete
  31. அகநாழிகையின் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நிறைய பேர் பின்தொடர்கிறார்கள் என்ற பொறுப்பினை உணர்ந்து உபயோகமான பல பதிவுகளை இடுகிறார். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புதியவர்களே.

    ReplyDelete
  32. நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரி திருமணம் இப்போது தான் நடந்தது, அவருக்கு ரூட் கிளியர் ஆனவுடன் என்னேரமும் போனும் கையுமாக சுற்றுகிறாராம்,

    நமக்கு வேலை இருக்குன்னு நினைக்கிறேன்.

    கார்த்திகை சின்ன இடமா பாருங்க அப்போ தான் அடி கம்மியா விழுகும்!

    ReplyDelete
  33. ஷீ- நிசி கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், சில நாட்களாக அவர் எழுதுவதில்லை என்னான்னு தெரியல!

    ReplyDelete
  34. foto collectionla erunthu ononna release panenga .... நல்லாயிருக்கு சேகர் உங்கள் படம்..

    3ம் நாள் வாழ்த்துக்கள்பா...

    நல்ல பதிவர்களை தொகுத்து வழங்கிவருகிறீர்கள்...

    ReplyDelete
  35. இங்கு நான் அறியாத பதிவர்களயும் கண்டேன்...இனி தொடர்வேன் அவர்களையும் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  36. வால்பையன் said...
    நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரி திருமணம் இப்போது தான் நடந்தது, அவருக்கு ரூட் கிளியர் ஆனவுடன் என்னேரமும் போனும் கையுமாக சுற்றுகிறாராம்,

    நமக்கு வேலை இருக்குன்னு நினைக்கிறேன்.

    கார்த்திகை சின்ன இடமா பாருங்க அப்போ தான் அடி கம்மியா விழுகும்

    இப்படியா உங்க அனுபவத்தை எல்லாருக்கும் சொல்வது....

    ReplyDelete
  37. வணக்கம் ஆசிரியர் ஞானசேகரன்.
    ஓ....மூன்றாம் நாள் தொகுப்பாச்சா !

    எத்தனை சாதனையாளர்கள் மத்தியின் நானும் ஓரளவாய் இருக்கிறேனா ?ஆசிரியருக்கு நன்றி.சந்தோஷமாய் இருக்கிறது.

    இன்னும் நான் பார்க்காத பதிவாளர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.நிறைவான பதிவுகள்.

    நிறைய நேரம் ஒதுக்கி அழகாய் உங்களுக்குத் தந்த பதவியைச் சீராக்குகிறீர்கள்.வாழ்த்துக்கள் ஞானசேகரன்.

    ReplyDelete
  38. உங்கள் அழகான தொகுப்புக்கு நன்றி. பலரை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
    உங்கள் சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. மிக அழகாக தொகுத்து வழங்கி வருகிறீர்கள். பல புதிய இணையதங்கள் தங்களால் அறிமுகம்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  40. வலைச்சர ஆசிரியராக செயல் பட்டு வரும் ஞானசேகரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. நன்றி நண்பா. என்னை பற்றியும் அறிமுகமா?


    தொடரட்டும் உங்கள் பணி. நான் இன்று ஊருக்கு புறப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமை வந்து உங்களை சந்திக்கிறேன் பதிவில்....அதுவரைக்கும் அசத்துங்கள்... வந்து படிக்கிறேன்.

    ReplyDelete
  42. வலைச்சரம் ஆசிரியர் பொருப்பேற்றதற்கு இதயங்கனிந்த வாழ்த்துகள் ஞானம்...

    அருமையான தொகுப்பு, அறிமுகம்...
    புதுமை வருடிச்செல்கிறது...

    தொடர்ந்து கலக்குங்கள்...

    ReplyDelete
  43. தொகுப்பு மிக அருமை நண்பரே!1

    ReplyDelete
  44. படத்தில் படு ஸ்மாரட்டா இருக்கீங்க!!!

    ReplyDelete
  45. அறிமுகத்துக்கு நன்றி தலைவரே.. கலக்குறீங்க.. வாழ்த்துகள்..:-))))))

    ReplyDelete
  46. ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் அறிமுகமான சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் நண்பரே தொகுப்புப் பணிகள் சிறப்பாகவுள்ளன.

    ReplyDelete
  48. நல்ல தொகுப்பு..
    வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  49. அருமையான தொகுப்பு நண்பரே

    ReplyDelete
  50. // குடந்தை அன்புமணி said...

    மிக அழகாக தொகுத்து வழங்கி வருகிறீர்கள். பல புதிய இணையதங்கள் தங்களால் எனக்கு அறிமுகம்- வாழ்த்துகள் ஞானசேகரன்.//

    நன்றிங்க அன்புமணி

    ReplyDelete
  51. // S.A. நவாஸுதீன் said...

    குறைந்த நேரத்தில் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்குவது சிறப்பு. வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  52. // வால்பையன் said...

    நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரி திருமணம் இப்போது தான் நடந்தது, அவருக்கு ரூட் கிளியர் ஆனவுடன் என்னேரமும் போனும் கையுமாக சுற்றுகிறாராம்,

    நமக்கு வேலை இருக்குன்னு நினைக்கிறேன்.

    கார்த்திகை சின்ன இடமா பாருங்க அப்போ தான் அடி கம்மியா விழுகும்!//

    பொருப்புள்ள நண்பரை பற்றி இப்படியா சொல்லுவது நண்பா

    ReplyDelete
  53. // வால்பையன் said...

    ஷீ- நிசி கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், சில நாட்களாக அவர் எழுதுவதில்லை என்னான்னு தெரியல!//

    ஆமங்க நண்பா.. உங்களின் பின்னூட்டம் அவரை எழுத தூண்டலாம்

    ReplyDelete
  54. // தமிழரசி said...

    foto collectionla erunthu ononna release panenga .... நல்லாயிருக்கு சேகர் உங்கள் படம்..

    3ம் நாள் வாழ்த்துக்கள்பா...

    நல்ல பதிவர்களை தொகுத்து வழங்கிவருகிறீர்கள்...//

    நன்றிங்க தமிழ்

    ReplyDelete
  55. // தமிழரசி said...

    இங்கு நான் அறியாத பதிவர்களயும் கண்டேன்...இனி தொடர்வேன் அவர்களையும் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்....//

    உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...

    ReplyDelete
  56. // ஹேமா said...

    வணக்கம் ஆசிரியர் ஞானசேகரன்.
    ஓ....மூன்றாம் நாள் தொகுப்பாச்சா !

    எத்தனை சாதனையாளர்கள் மத்தியின் நானும் ஓரளவாய் இருக்கிறேனா ?ஆசிரியருக்கு நன்றி.சந்தோஷமாய் இருக்கிறது.

    இன்னும் நான் பார்க்காத பதிவாளர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.நிறைவான பதிவுகள்.

    நிறைய நேரம் ஒதுக்கி அழகாய் உங்களுக்குத் தந்த பதவியைச் சீராக்குகிறீர்கள்.வாழ்த்துக்கள் ஞானசேகரன்.//

    நன்றி ஹேமா

    ReplyDelete
  57. //ஜெஸ்வந்தி said...

    உங்கள் அழகான தொகுப்புக்கு நன்றி. பலரை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
    உங்கள் சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  58. // " உழவன் " " Uzhavan " said...

    மிக அழகாக தொகுத்து வழங்கி வருகிறீர்கள். பல புதிய இணையதங்கள் தங்களால் அறிமுகம்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
    நன்றி நண்பா

    ReplyDelete
  59. // Suresh Kumar said...

    வலைச்சர ஆசிரியராக செயல் பட்டு வரும் ஞானசேகரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்//

    மீண்டும் நன்றி

    ReplyDelete
  60. // கடையம் ஆனந்த் said...

    நன்றி நண்பா. என்னை பற்றியும் அறிமுகமா?


    தொடரட்டும் உங்கள் பணி. நான் இன்று ஊருக்கு புறப்படுகிறேன். ஞாயிற்றுக்கிழமை வந்து உங்களை சந்திக்கிறேன் பதிவில்....அதுவரைக்கும் அசத்துங்கள்... வந்து படிக்கிறேன்.//

    வணக்கம் நண்பா
    வாழ்த்துகளும் நன்றியும்

    ReplyDelete
  61. // அத்திவெட்டி ஜோதிபாரதி said...

    வலைச்சரம் ஆசிரியர் பொருப்பேற்றதற்கு இதயங்கனிந்த வாழ்த்துகள் ஞானம்...

    அருமையான தொகுப்பு, அறிமுகம்...
    புதுமை வருடிச்செல்கிறது...

    தொடர்ந்து கலக்குங்கள்...///


    ம்ம்ம் வணக்கம்,

    மிக்க நன்றிங்க ஜோதி பாரதி

    ReplyDelete
  62. // தேவன் மாயம் said...

    தொகுப்பு மிக அருமை நண்பரே!1//
    // தேவன் மாயம் said...

    படத்தில் படு ஸ்மாரட்டா இருக்கீங்க!!!//

    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  63. // கார்த்திகைப் பாண்டியன் said...

    அறிமுகத்துக்கு நன்றி தலைவரே.. கலக்குறீங்க.. வாழ்த்துகள்..:-))))))//

    ந்ன்றி நன்றி

    ReplyDelete
  64. //பிரியமுடன்.........வசந்த் said...

    ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் அறிமுகமான சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  65. // முனைவர் சே.கல்பனா said...

    வாழ்த்துக்கள் நண்பரே தொகுப்புப் பணிகள் சிறப்பாகவுள்ளன.//

    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  66. // sarathy said...

    நல்ல தொகுப்பு..
    வாழ்த்துகள் நண்பரே..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  67. // நேசமித்ரன் said...

    அருமையான தொகுப்பு நண்பரே//

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  68. ஆ.ஞானசேகரன்,
    மிக சிரத்தையோடு வலைச்சர ஆசிரியப் பணியை செய்திருக்கிறீர்கள்.
    என்னால்தான் தேர்வின் காரணமாக சிறப்பாக செய்ய முடியவில்லை. என்னைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. தாமத பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன். தொடர்ந்து மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  69. // "அகநாழிகை" said...

    ஆ.ஞானசேகரன்,
    மிக சிரத்தையோடு வலைச்சர ஆசிரியப் பணியை செய்திருக்கிறீர்கள்.
    என்னால்தான் தேர்வின் காரணமாக சிறப்பாக செய்ய முடியவில்லை. என்னைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. தாமத பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன். தொடர்ந்து மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்//

    வணக்கம் வாசு..
    வாழ்த்துகளுடன் நன்றிங்க

    ReplyDelete
  70. உங்கள் தொகுப்புகள் அனைத்தும் அருமை.

    தாமதமாக வாழ்த்துக்கள் சொல்கிறேன் மன்னிக்க சேகர். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  71. அறிமுகமான சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  72. //RAMYA said...

    உங்கள் தொகுப்புகள் அனைத்தும் அருமை.

    தாமதமாக வாழ்த்துக்கள் சொல்கிறேன் மன்னிக்க சேகர். வாழ்த்துக்கள்!!//


    தாமதமாக வந்தாலும் வாழ்த்துகளுடன் வந்திருக்கின்றீர்கள் மிக்க நன்றிங்க...
    மன்னிப்பா முடியாதுங்க.. நண்பர்களுக்கு ஏதுங்க மன்னிப்பெல்லாம்...
    நன்றி மிக்க நன்றி

    ReplyDelete
  73. // RAMYA said...

    அறிமுகமான சக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!//

    உங்களுக்கும் வாழ்த்துகளுடன் நன்றியும்

    ReplyDelete